புதன், 22 ஜூன், 2011

முனியாண்டிஒத்தைப் பனை முனியாண்டியைப்
பற்றிய திகில் கதைகள் கேட்டபின்
தனியே போக பயமெனக்கு..

காற்றிலாடும் பனையின் மட்டையும்
சருகுகளின் வழியூறும் ஊர்வனவும்
வெளித்தள்ளும்  பயத்தின் வியர்வைத் துளிகளை..

இரண்டாம் ஆட்டம் முடிந்து
அப்பாவுடன் திரும்பும் நேரம்
தூரத்து பனையின் உருவம்
காற்றிலோ மனதிலோ ஆடும் மெல்ல...

அடுத்த வீட்டு சரசுவும்
பக்கத்து தெரு பரமனும் 
அறை வாங்கி செத்துப் போனார்களாம்
உச்சி வெயிலில் திரும்பும் போது..

கறிச்சோறுடன் பள்ளி போகும்
நாட்களில் கரித்துண்டும்
தேய்ந்த லாடமும் துணை வரும் பையில்,
முனியாண்டியை எதிர் கொள்ள..

சிவராத்திரியும் செவ்வாய் சாத்தும்
தவிர தூரமே நிற்கச் சொல்லும்
உருவமில்லா முனியாண்டியின் பயபக்தி..

எப்போதும் காவி வேட்டியும் சிவப்புத் துண்டும்
கட்டிக் கொண்டு பூசை செய்யும்
பூசாரிக்கு மட்டும் ஒன்னுமே ஆகாதாம்..

பூசாரியின் தொடுப்பு சரசு வென்பதை
மிகத்தாமதமாக தெரிந்து கொண்டபின்
குழம்பித் தான் போனோம்,
முனியாண்டியைப் பற்றி நானும்
பூசாரியைப் பற்றி முனியாண்டியும்...16 கருத்துகள்:

RVS சொன்னது…

ரொம்பநாள் கழிச்சு வந்துருக்காப்ல... முனியாண்டியோட.... ம். நல்லாயிருக்குப்பா... ;-))

ஆனந்தி.. சொன்னது…

சூப்பர் பால்ஸ்...அட வித்யாசமான கவிதை...மணிரத்னம் படம் பார்த்துட்டு...திடிர்னு பாரதிராஜா படம் பார்த்தமாத்ரி இருக்கு...:)))))

இராமசாமி சொன்னது…

அருமை பாலாஜி :) எப்படி இருக்கீங்க.. ஊர் எப்படி இருக்கு :)

மோகன் குமார் சொன்னது…

பின் பகுதி வாசிக்கையில் கிராமம் பார்த்த பீலிங் வருகிறது.

வேலை அதிகமா பாலாஜி? அதிகம் பார்க்க முடியலியே?

மகி சொன்னது…

ஊர்லே எடுத்த போட்டோவா பாலாஜி? கவிதையைப் படிக்கும்போது வரும் பயத்தை போட்டோவின் எழில் கொஞ்சும் இயற்கை குறைத்துடுதே? :)

Priya சொன்னது…

கவிதை அருமை... நல்லா எழுதி இருக்கிங்க!

vanathy சொன்னது…

super kavithai! well written!

Balaji saravana சொன்னது…

வாங்க ஆர்விஎஸ் அண்ணா,
ஊருக்கு போயிட்டு அப்படியே முனியாண்டிய கூட்டிட்டு வந்திட்டேன். :)
நன்றி அண்ணா! :)

ஹா ஹா, மணிரத்னம், பாரதி ராஜா?!
உங்க லொள்ளுக்கு ஒரு அளவில்லாம போச்சுக்கா :)
நன்றி ஆனந்தி! :)

ஊர் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு அண்ணா, யாவரும் நலம் :)
நன்றி அண்ணா! :)

வாங்க மோகன் அண்ணா
ஊருக்கு போயிருந்தேன் அதனாலதான் :)
நன்றி அண்ணா! :)

ஃபோட்டோ நெட்ல சுட்டது தான் மகி.
ஆஹா ஃபோட்டோ ஃபீல குறைக்குதா?! அடுத்த தடவை கொஞ்சம் கவனமாவே இருக்கிறேன் மகி :).
நன்றி மகி உங்க கருத்துக்கு! :)

வாங்க ப்ரியா,
கருத்துக்கு நன்றி ப்ரியா! :)

கருத்துக்கு நன்றி வானதி! :)

சே.குமார் சொன்னது…

நல்லாயிருக்கு.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

ட்விஸ்டோட கவிதை அழகா எழுதியிருக்கீங்க பாலாஜி நல்லா இருக்கு ..!

குடந்தை அன்புமணி சொன்னது…

ஜூலை மாத இன்ப அதிர்ச்சி என்ன? http://thagavalmalar.blogspot.com/2011/07/blog-post_05.html

தோழி பிரஷா( Tholi Pirasha) சொன்னது…

கவிதை அருமை பாலாஜி

jai சொன்னது…

very very useful blog.. i just shared it with my gmail friends list.. thanks


anushka shetty

கீதா சொன்னது…

கவிதை சொல்லும் சிந்தனை சீரியது. மிகவும் நன்றாக உள்ளது.

தொடர்பதிவொன்றுக்குத் தங்களை அழைத்துள்ளேன். முடியும்போது பதிவிட்டுப் பங்கெடுத்துக்கொள்ளவும். நன்றி.

குடந்தை அன்புமணி சொன்னது…

பதிவர்களுக்காக- பதிவரால்- பதிவர் தென்றல் மாத இதழ். மேலும் விவரங்களுக்கு என் வலைத்தளம் வருக...

ஹேமா சொன்னது…

பாலாஜி...கவிதை ஒரு கதையை டமாரம் போட்டு அடிச்சுச் சொல்லுது !

கருத்துரையிடுக