புதன், 11 மே, 2011

தேநீர் நேரம்வடிகட்டிய நரசுஸ் காப்பி
இல்லையென்றால் காலை 
விடியாது தாத்தாவிற்கு...
ஃப்ரூ போட்டு நுரைத்து 
ஆடையுடன் மித சூட்டில் 
வேண்டும் அண்ணனுக்கு...
"காப்பி கடும் விஷம், டீ கொடு" வென 
கேட்டு முடிப்பதற்குள் 
கிடைக்கும் அப்பாவிற்கு...
இருமித்தீர்க்கும் பாட்டிக்கு 
பாலோடு பனங்கற்கண்டும்...
தங்கைக்கும் எனக்கும் என்றும்
தவறியதேயில்லை  ஹார்லிக்ஸ்...
சுவை பார்க்க யாவற்றையும் 
குடித்துப் பார்ப்பாள்  கொஞ்சமாக...
இன்று வரை தெரியவில்லை,
நரசுஸா, ஃப்ரூவா
டீயா, பாலா, ஹார்லிக்ஸா 
என்ன பிடிக்கும் அம்மாவிற்கென?.


  

26 கருத்துகள்:

தோழி பிரஷா( Tholi Pirasha) சொன்னது…

அனைவருக்கும் என்ன பிடிக்குமென அன்னை அறிவாள்.. ஆனால் அன்னைக்கு என்ன பிடிக்குமென நாம் அறிவது கடினம்...

அருமை

கலாநேசன் சொன்னது…

அதாங்க அம்மா....அருமையான் வெளிப்பாடு.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

தம்பிக்கு ஒரு டீ சொல்லுங்க...

பாலா சொன்னது…

ஆமாம் நண்பரே எனக்கு இது பிடிக்கும் என்று என் அம்மாவுக்கு தெரியும் என்று சொல்லும் நமக்கு, அம்மாவுக்கு என்ன பிடிக்கும் என்று தெரியாது. அன்னையின் தியாகத்தை எளிய வரிகளில் விளக்கி விட்டீர்கள்.

பாலா சொன்னது…

என்ன கோடை விடுமுறையா? ரொம்ப நாளா ஆளையே காணோம்?

Balaji saravana சொன்னது…

வாங்க பிரஷா.
நம்மில் பலர் ( நானும் தான் ) அம்மாவிற்கு என்ன பிடிக்கும் என்பதே தெரியாமல் இருக்கிறோம். :(
நன்றி பிரஷா.

நன்றி கலாநேசன்

அண்ணா எனக்கு ஹார்லிக்ஸ் ;)
மிக்க நன்றி செந்தில் அண்ணா.

வாங்க பாலா.
நீங்களும் என்னை மாதிரி தானா? ரைட்டு ;)
விடுமுறையெல்லாம் இல்ல பாஸ், கொஞ்சம் ஆணி அதான்.
உங்க அன்புக்கு மிக்க நன்றி பாஸ்!

குடந்தை அன்புமணி சொன்னது…

http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள். ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

மோகன் குமார் சொன்னது…

உண்மை சுடுகிறது

அருமை பாலாஜி

Mahi சொன்னது…

நிறைய வீடுகளில் இது நடக்கிறது. ஒழுங்கா போன் போட்டு அம்மாகிட்ட இப்பவாவது என்ன பிடிக்கும்னு கேளுங்க,சரியா? :)

பெயரில்லா சொன்னது…

உண்மை...நிச்சயமாக இது ஒரு மனதை தொடும் படைப்பு தான்...

Chitra சொன்னது…

இன்று வரை தெரியவில்லை,
நரசுஸா, ஃப்ரூவா
டீயா, பாலா, ஹார்லிக்ஸா
என்ன பிடிக்கும் அம்மாவிற்கென?.


....Really, a caring mother is precious. :-)

சுசி சொன்னது…

அம்மாக்களே இப்படித்தாங்க :)

அழகா சொல்லி இருக்கீங்க.

Balaji saravana சொன்னது…

வருகைக்கு நன்றி குடந்தை அன்புமணி

மிக்க நன்றி அண்ணா

கண்டிப்பா செய்யறேன் மகி!
மிக்க நன்றி!

மிக்க நன்றி தூயா

அம்மாக்கள் எல்லாமே கேரிங் தான சித்ராக்கா! :)
மிக்க நன்றி அக்கா.

ஆமா சுசி, உண்மை தான்
மிக்க நன்றி சுசி!

சிநேகிதி சொன்னது…

//சுவை பார்க்க யாவற்றையும்
குடித்துப் பார்ப்பாள் கொஞ்சமாக...
இன்று வரை தெரியவில்லை,
நரசுஸா, ஃப்ரூவா
டீயா, பாலா, ஹார்லிக்ஸா
என்ன பிடிக்கும் அம்மாவிற்கென?.// அருமையாக சொல்லியிருக்கிங்க

vanathy சொன்னது…

சிலர் அப்படி இருக்கலாம். என் அம்மாவிற்கு என்ன பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். ஆண்கள் பற்றித் தெரியவில்லை. ஆனால், பெண்கள் பெரும்பாலும் அப்படி இல்லை என்பதே என் கருத்து.

மோகன்ஜி சொன்னது…

கைய நீட்டு பாலா! இந்தக் கவிதை எழுதினதிற்காய் ஒரு முத்தம் தரவேண்டும் அதற்கு.

அழகு...அழகு...

சிவகுமாரன் சொன்னது…

நமக்கு அம்மாவைப் பிடிக்கும் . அவளுக்கு என்ன பிடிக்குமென்று தெரியாது .
அருமையான கவிதை பாலாஜி .

ஆனந்தி.. சொன்னது…

beautiful and touching poem baals..

ஹேமா சொன்னது…

எல்லா அம்மாக்களும் ஒரேமாதிரித்தானோ !

அப்பாவி தங்கமணி சொன்னது…

Wow...what a thought? I'm thinking now... "ammavukku enna pidikkum..."

மிருணா சொன்னது…

நல்லாருக்குங்க கவிதையும், உணர்வும்.படமும் நல்ல தேர்வு.

சுடர்விழி சொன்னது…

ரொம்ப இயல்பாக அம்மாவின் மனதை வெளிப்படுத்தி இருக்கிறது கவிதை...அருமை பாலாஜி !

vidivelli சொன்னது…

நல்ல கவிதை
உண்மையை அப்படியே சொல்லியிருக்கிறீங்க
இதுவரைக்கும் நினைச்சே பார்த்ததில்லை
அன்னையை அவ்வளவிற்கு நேசிக்கிறீங்க ....
புரியுது கவிதையில்...

நம்ம பக்கமும் உங்க கருத்தை எதிபார்க்கிறேன்

Kousalya சொன்னது…

அழகான கவிதை...உங்க மன உணர்வுகள் வரிகளாக...!

ஆள காணுமேனு வந்தேன்...நல்ல கவிதையை படித்தேன். நன்றிகள் பாலா.

Mahi சொன்னது…

உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்,தொடருங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

http://mahikitchen.blogspot.com/2011/06/blog-post_17.html

Sathiya Balan M சொன்னது…

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News

கருத்துரையிடுக