திங்கள், 18 ஏப்ரல், 2011

மீளாக் கனவின் மிச்சம்!வெறியேறிய கண்களும் 
குருதி ஒழுகும் பற்களுமாக 
பிணம் துழாவி 
பசியடங்காதுத் திரியும் 
நாயுரு கொண்ட பிசாசுகளின் 
நீண்ட துரத்தலின் முடிவில் 
எகிறித்துடிக்கும் 
நெஞ்சக் கூட்டின் அதிர்வில் 
நாளங்கள் வழி 
பாய்ந்தோடும் குருதியின் 
வெம்மைத் தவிப்பில் 
அனலாகிப் போன மூச்சின் 
வழி வெளியேறுகிறது, 
அமானுஷ்ய கனவின்
முடிவிலா சூனியம்..
உறக்கம் திறந்து கிறங்கிக் 
கிடந்த உடலில் முறுக்கமேற 
ஊர்ந்து அலைகிறது 
கனவிலுண்ட தீரா
தாகத்தின்  எச்சம்..
உண்ட வேட்கை 
ருசித்துக் கிடக்க 
உவகை மீண்டும் நா சுழற்ற 
இறு(க்)கித் தழுவி எனை
உள்ளிழுத்துக்  கொண்டோடுகிறது
மீளாக் கனவின் மிச்சம்!
பட உதவி : Google image


      

26 கருத்துகள்:

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ம் ...

எல் கே சொன்னது…

மிக அருமை பாலாஜி. வார்த்தை பிரயோகம் பிரமிக்க வைக்கிறது,

RVS சொன்னது…

படம் எங்கப்பா புடிச்சே! அட்டகாசம்.
ஒரே பின்நவீனத்துவ எழுத்து மாதிரி இருக்கே! சபாஷ்! ;-))

ஆனந்தி.. சொன்னது…

யப்பா...தமிழ் சொல்லாடல் சும்மா துள்ளி விளையாடுது பால்ஸ்...
//உவகை மீண்டும் நா சுழற்ற
இறு(க்)கித் தழுவி எனை//
தமிழ் புலவரே...கவிதை நாயகனே..!! செம...:))

பதிவுலகில் பாபு சொன்னது…

செம.. தமிழ் விளையாடுது..

Chitra சொன்னது…

கவிதையில் வார்த்தை பிரயோகம் கண்டு அசந்துட்டேன்.... பாராட்டுக்கள்!

சுசி சொன்னது…

அவ்ளோ நல்லாருக்கு கவிதை. வாழ்த்துகள் பாலாஜி.

ஹேமா சொன்னது…

அப்பாடி...பயமாயிருக்கு பாலா !

sakthi சொன்னது…

கனவிலுண்ட தீரா
தாகத்தின் எச்சம்..
உண்ட வேட்கை
ருசித்துக் கிடக்க
உவகை மீண்டும் நா சுழற்ற
இறு(க்)கித் தழுவி எனை
உள்ளிழுத்துக் கொண்டோடுகிறது
மீளாக் கனவின் மிச்சம்!


பிரமிக்க வைக்கும் வார்த்தையமைப்பு

Balaji saravana சொன்னது…

வாங்க ராஜசேகர் சார், நன்றி!

மிக்க நன்றி எல்.கே!

எல்லாம் Google உபயம் தான், நன்றி அண்ணா!

உங்க ரசிப்புக்கு மிக்க நன்றி ஆனந்தி சகோ!

நன்றி பாபு!

நன்றி சித்ராக்கா!

நன்றி சுசி!

இதுக்கே பயந்தா எப்படி?! இன்னும் நிறைய வரும், நன்றி ஹேமா!

மிக்க நன்றி சக்தி!

சின்னப்பயல் சொன்னது…

//உறக்கம் திறந்து கிறங்கிக்
கிடந்த உடலில் முறுக்கமேற
ஊர்ந்து அலைகிறது
கனவிலுண்ட தீரா
தாகத்தின் எச்சம்..//

கழட்டி மாட்றீஹப்பு...அருமை ,.,.!

இராமசாமி சொன்னது…

class கவிஞரே !:)

மகி சொன்னது…

அருமையான வார்த்தைகள் பாலாஜி!படமும் வித்யாசமா இருக்கு(கொஞ்சம் பயம்மா இருக்கு!:))

vanathy சொன்னது…

அருமையான கவிதை. பொறுத்தமான வரிகள்.

பெயரில்லா சொன்னது…

//நெஞ்சக் கூட்டின் அதிர்வில்
நாளங்கள் வழி
பாய்ந்தோடும் குருதியின்
வெம்மைத் தவிப்பில்
அனலாகிப் போன மூச்சின்
வழி வெளியேறுகிறது,
அமானுஷ்ய கனவின்
முடிவிலா சூனியம்..//

வார்த்தைகளின் கோர்வை அற்புதம்.
வாழ்த்துக்கள் பாலாஜி.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

கொழைச்சு கொழைச்சு அடிக்கிறீகளே மச்சி

படம் கவிதை ரெண்டும் பயமா இருந்தாலும் பொருந்தித்தான் போகுது ..!

சந்திரிகை சொன்னது…

இந்த மாதிரி தமிழ் வார்த்தைகள் எங்கேடா பிடிச்ச?

நல்லா இருக்கு

Balaji saravana சொன்னது…

நன்றி சின்னப்பயல்!

நன்றி ராமசாமி அண்ணா!

நன்றி மகி!

நன்றி வானதி!

நன்றி இந்திரா!

நன்றிடா மச்சி!

எல்லாம் உங்க கிட்ட இருந்து தான் ;)
நன்றி ஜீவாம்மா!

தோழி பிரஷா( Tholi Pirasha) சொன்னது…

பிரமிக்க வைக்கும் வார்த்தைக்கோர்வை அருமை பாலாஜி சார்

படமும் கவிதையும் சூப்பர்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மீளாக் கனவின் மிச்சம்!அருமையான கவிதை.
பாராட்டுக்கள்!

Balaji saravana சொன்னது…

நன்றி பிரஷா!

நன்றி ராஜராஜேஸ்வரி!

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

கனவிலிருந்து மீண்டீர்களா இல்லையா பாலாஜி..

ஆதவா சொன்னது…

உங்களை எப்படி தவறவிட்டேன் என்று தெரியவில்லையே....

எனக்கு இம்மாதிரி அடிக்கடி நிகழ்வதுண்டு... ஆனால் கனவின் மிச்சத்தை நான் உணர எனக்கு வெளிறிய கனவுகள் தேவைப்படாது. சொன்னால் நம்பமாட்டீர்கள், ஒரு கனவின் மீதியை மூன்றுமுறை தொடர்ச்சியாக எழுந்து உறங்கி, எழுந்து உறங்கி அனுபவித்திருக்கிறேன்!!

வார்த்தைகளின் கையாடல் அற்புதமாக இருக்கிறது!!

♔ம.தி.சுதா♔ சொன்னது…

வார்த்தை ஜாலம் ரொம்ப நல்லாயிருக்கு...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)

என். உலகநாதன் சொன்னது…

நல்லா இருக்கு.

அப்பாவி தங்கமணி சொன்னது…

உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_03.html

கருத்துரையிடுக