வெள்ளி, 1 ஏப்ரல், 2011

தேவதை விளையாட்டு..

அம்மாவின் அரட்டலை அனுமதியாது
வீழும் நீர்த்துளிகளை
பிஞ்சுக் கைகளால் சிதறடித்து 
தேங்கும் நீரை திசையெங்கும் 
கால்வீசி திருப்பி விட்டு 
சின்னக் கூந்தல் காற்றில் சுழற்றி
கேட்கும் இடியின் தாளத்திற்கு 
குதித்தாடும் ப்ரிய மகளின்
நடனத்தின் பார்வையாளனாக 
மாறிப் போனோம் நானும், 
கொட்டுமிந்த மழையும்!

**********************************************************************************நீர்த் தொட்டியில் விளையாடி 
வெளிறிய கைகளும் 
ஈரமேறிய உடையும் 
குறும்புச் சிரிப்புமாக 
நிமிடக் குதூகலம் கொண்டு 
எனை சுற்றி ஓடி விளையாடி 
கைகளால் கன்னங்கள் 
தாங்குகிறாள் என் பிரிய மகள்.. 
விரல்களின் குளுமை கன்னத்திற்கும் 
பிரியத்தின் குளுமை மனதிற்கும் 
கடத்துகிறாள் ஒருசேர..

**********************************************************************************பொம்மை விளையாட்டில் 
குளிப்பாட்டி சோறூட்டி 
தாலாட்டி தூங்க வைக்கும் 
பிரிய மகளின் செய்கையை 
ஆர்வமுடன் கவனிக்கிறேன் நான்.. 
அவள் தூங்கியதும் முடியொதுக்கி 
கன்னத்தில் நான் பதிக்கும் 
முத்தச் செய்கையை 
பொம்மைக்கும் செய்கிறாள் 
எனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே..


  

29 கருத்துகள்:

♔ம.தி.சுதா♔ சொன்னது…

ஃஃஃஃவிரல்களின் குளுமை கன்னத்திற்கும்
பிரியத்தின் குளுமை மனதிற்கும்
கடத்துகிறாள் ஒருசேர..ஃஃஃஃ

படிக்கையிலேயே ஒரு குளிர்மை தெரிகிறது அருமையாயிருக்குங்க...


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்

இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

மூன்றுமே அசத்தல்...

தோழி பிரஷா சொன்னது…

3ம் சுப்பர்

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

மூன்றாவது கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு மச்சி!!

Chitra சொன்னது…

அனைத்தும் அருமை. ரசித்தேன்.

Chitra சொன்னது…

lovely photos too

Sriakila சொன்னது…

அசத்தலா இருக்கு...

சந்திரிகை சொன்னது…

விரல்களின் குளுமை கன்னத்திற்கும்
பிரியத்தின் குளுமை மனதிற்கும்
கடத்துகிறாள் ஒருசேர..

அருமையா இருக்கு பாலாஜி

lovely photos

சுடர்விழி சொன்னது…

மூன்று கவிதையும் பிரமாதம்..வாழ்த்துக்கள் !!

ஆனந்தி.. சொன்னது…

என்ன ஒரே குட்டிபாப்பா ஸ்பெஷல் பால்ஸ்..:))) எனி விசேஷம்..? ஹ ஹ ஹா..வழக்கம்போலே cute ஆ..ரசனை செம தூக்கலாய் ரம்மியமாய் இருந்தது...அதுவும் எனக்கு மூணாவது பாப்பாவின் செய்கை கவிதை கலக்கலோ கலக்கல்..:)) எல்லா அழகு குட்டி தேவதைகளும் அழகோ அழகு உங்களின் கவிதையை போலே...:))

இராமசாமி சொன்னது…

wonderful....

vanathy சொன்னது…

மூன்றுமே அழகான கவிதைகள் & அழகான படங்கள்.

Kousalya சொன்னது…

ஒரு தந்தையின் இடத்தில் கற்பனை செய்து அழகான உணர்வுடன் எழுதி இருக்கீங்க பாலா ! மூன்றும் அருமை.

துரோணா சொன்னது…

அவள் தூங்கியதும் முடியொதுக்கி
கன்னத்தில் நான் பதிக்கும்
முத்தச் செய்கையை
பொம்மைக்கும் செய்கிறாள்
எனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே..\\
ரசணையான வரிகள்.வாழ்த்துக்கள் நண்பரே

RVS சொன்னது…

படமும் கவிதைகளும் அற்புதம். முடியொதிக்கி இடும் இச்சுக்கு அவளும் பொம்மைக்கு இடும் இச்சு ஒரு நச். வாழ்த்துக்கள். ;-))

சிவகுமாரன் சொன்னது…

ஆகா ஆகா ஆகா
குட்டிப் பாப்பாவுக்கு எனது முத்தங்கள்.
பெண் குழந்தைகள் பெற்றவர்களை பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கும். இந்தக் கவிதை இன்னும் அதிகப் படுத்தி விட்டது அந்த உணர்வை

ஹேமா சொன்னது…

குழந்தைகளின் இயல்பு.கள்ளமில்லாத தருணங்களின் வெளிப்பாடு.உங்கள் குழந்தையைப் பார்த்துகொண்டேயிருக்கலாமே.
அத்தனை அழகுச் சிரிப்பு !

மதுரை சரவணன் சொன்னது…

munrum asaththal...vaalththukkal

Priya சொன்னது…

மிக அருமை... படங்களும் கொள்ளை அழகுடன் இருக்கிறது.

Gopi Ramamoorthy சொன்னது…

வழக்கம் போலவே சிறப்பாக இருக்கிறது

சுசி சொன்னது…

பெண் குழந்தைகள் வீட்டின் தேவதைகள்.

அழகா இருக்கு பாலாஜி.

sakthi சொன்னது…

மூன்றுமே அழகு கவிதைகள்

அன்னு சொன்னது…

ee appppppppppppppppppppaaa!!!
:)))

கீதா சொன்னது…

குட்டித்தேவதைகளின் குறும்புகள் அனைத்தும் கவிமொழியில் அசத்தல். அழகிய தருணங்களை சுமக்கும் அழகுக் கவிதைகள்.

malathi in sinthanaikal சொன்னது…

இடுகைக்கு பாராட்டுகள். தேவையான செய்திகள் இடுகையை தொடர்க

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மூன்றும் முத்துக்கள். பாராட்டுக்கள்.

அன்பரசன் சொன்னது…

//குதித்தாடும் ப்ரிய மகளின்
நடனத்தின் பார்வையாளனாக
மாறிப் போனோம் நானும்,
கொட்டுமிந்த மழையும்!//

அழகு...

அப்பாவி தங்கமணி சொன்னது…

//விரல்களின் குளுமை கன்னத்திற்கும்
பிரியத்தின் குளுமை மனதிற்கும் //
காட்சியை கண் முன் கொண்டு வந்த வரிகள்... simply superb ....

//அவள் தூங்கியதும் முடியொதுக்கி
கன்னத்தில் நான் பதிக்கும்
முத்தச் செய்கையை
பொம்மைக்கும் செய்கிறாள்
எனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே//
No words to express...great...:)

மோகன்ஜி சொன்னது…

தாமதத்திற்கு மன்னிக்கவும்.. மிகவும் ரசித்தேன் நறுக்கென்று தெறித்த கவிதைகளை பாலா !

கருத்துரையிடுக