செவ்வாய், 22 மார்ச், 2011

பின்னிரவிற்குப் பின்..

தனிமையிரவில் துணையாய் எரிந்த
மெழுகுவர்த்தி விட்டுச் சென்றது 
நினைவுகளின் படிமங்களை...

அவசரத் தேவைக்கோ அந்தப்புரத்திற்கோ
விளக்குகள் ஒளிர்ந்து அணைகின்றன
எதிர்வீட்டில்..

மின்னும் நட்சத்திரங்களுக்கிடையே 
துள்ளி யோடி விளையாடுகிறது 
வால் முளைத்த ஒன்று.. 

ஒன்றின் பின் ஒன்றாக, பின் 
ஒன்றாக ஒன்றின் பின், கூவ 
காத்திருக்கின்றன பறவைகள் 
மேகமோ வானமோ சிவக்க..

வழியும் வியர்வைகளில் எரிச்சலோடு 
வெளியேறுகிறது நேற்றைய நிகழ்வுகளின்
வெறுப்பின் எச்சங்கள்..

இருட்டில் தாழ் திறந்து தலை கவிழ்ந்து 
அமைதியாய் வெளியேறுகிறது, 
காத்திருந்து நிகழாத கனவொன்று.. 21 கருத்துகள்:

இராமசாமி சொன்னது…

வார்த்தைகளே இல்லை பாலாஜி.. என்னமா எழுதறீங்க.. சுகமா இருக்கு உங்க தமிழ வாசிக்க.. தொடருங்க :)

எல் கே சொன்னது…

கவிதை கிளாஸ்

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//இருட்டில் தாழ் திறந்து தலை கவிழ்ந்து
அமைதியாய் வெளியேறுகிறது,
காத்திருந்து நிகழாத கனவொன்று.. //

அருமைப்பா..!

ரேவா சொன்னது…

பின்னரவுக் கவிதை அருமை....
நான் ரசித்த வரிகள்..
********அவசரத் தேவைக்கோ அந்தப்புரத்திற்கோ
விளக்குகள் ஒளிர்ந்து அணைகின்றன
எதிர்வீட்டில்..**********

****இருட்டில் தாழ் திறந்து தலை கவிழ்ந்து
அமைதியாய் வெளியேறுகிறது,
காத்திருந்து நிகழாத கனவொன்று..*********.

வாழ்த்துக்கள்...:-)

Sriakila சொன்னது…

என்ன ஒரு கவிதை? சான்ஸே இல்ல...பாராட்ட வார்த்தையும் இல்ல..

மோகன் குமார் சொன்னது…

பதிவுலகில் இருந்து அடுத்த கவிதை தொகுப்பை விரைவில் எதிர் பார்க்கலாம்.

கவிஞர் பாலாஜி சரவணா !

சே.குமார் சொன்னது…

இருட்டில் தாழ் திறந்து தலை கவிழ்ந்து
அமைதியாய் வெளியேறுகிறது,
காத்திருந்து நிகழாத கனவொன்று...//

பாராட்ட வார்த்தையும் இல்ல....

Prasanna சொன்னது…

என்ன உங்க வீட்ல கரண்ட்டு போய் அந்த கடுப்புல எழுதிட்டீங்களா (no no bad words)
:)

Thirumalai Kandasami சொன்னது…

ஒரு அரசியல்வாதி உருவான கதை

Balaji saravana சொன்னது…

வாங்க ராமசாமி அண்ணா, உங்க ஊக்கம் அளப்பரியது.
நன்றி!

மிக்க நன்றி எல்.கே!

நன்றி வசந்த்!

வாங்க ரேவா, உங்களோட ரசிப்புக்கு என் வணக்கங்கள்.
நன்றி!

மிக்க நன்றி அகிலா!

மோகன் அண்ணா, என்ன வச்சு காமெடி ஏதும் பண்ணலையே?! :)
நன்றி அண்ணா!

நன்றி குமார்!

ஹா ஹா.. என்னா வில்லத்தனம்? :)
நன்றி பிரசன்னா!

வாங்க திருமலை, உங்க லின்க் கண்டிப்பா பார்க்கிறேன்.
நன்றி!

பாலா சொன்னது…

மொட்ட மாடில படுத்துக்கிட்டே யோசிச்சுருக்கீங்களா?

நல்லா இருக்கு

எம் அப்துல் காதர் சொன்னது…

தல.. ம்ம்ம்.. கொல்லுங்க எங்களை உங்க கவிதையால!!

Mahi சொன்னது…

வழக்கம்போல அழகான கவிதை பாலாஜி! :)

ஹேமா சொன்னது…

பாலா...படம் மிக மிக அழகு.அதற்கேற்ற வரிகள்.தூக்கம் வராத இரவொன்றில் காத்திருந்த கனவு...பாவம் !

பெயரில்லா சொன்னது…

வரிகள் அனைத்துமே அருமை..
குறிப்பாக

//வழியும் வியர்வைகளில் எரிச்சலோடு
வெளியேறுகிறது நேற்றைய நிகழ்வுகளின்
வெறுப்பின் எச்சங்கள்..//

மீண்டும் படிக்க வைத்தது.

அந்தக் கருப்பு வெள்ளைப் புகைப்படம் கொள்ளை அழகு.
வாழ்த்துக்கள் பாலாஜி.

சுசி சொன்னது…

நல்லா இருக்கு பாலாஜி.

வலிகளுக்கு இதமான வார்த்தைகள்.

Gopi Ramamoorthy சொன்னது…

மோகன்குமாருக்கு ரிப்பீட்டு

அப்பாவி தங்கமணி சொன்னது…

Simply Superb...!!!

மோகன்ஜி சொன்னது…

காத்திருந்து நிகழாத கனவொன்று..
அழகான கவிதை பாலா..
விடியலை நோக்கிய எதிர்பார்ப்பு தானே வாழ்க்கை...
படமே இன்னொரு கவிதையாய் மிளிர்கிறது பாலா. மிக ரசித்தேன்.

குட்டிப்பையா|Kutipaiya சொன்னது…

அருமையான பின்னிரவு!!!

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அருமையான கவிதை முத்துக்கள்..படிக்க சுவையா இருக்கு

கருத்துரையிடுக