திங்கள், 7 மார்ச், 2011

பெயரில் என்ன இருக்கிறது?!


அன்புச்  சகோ அகிலா ஒரு சுவாரசியமான தொடர்பதிவு ஒன்றை ஆரம்பித்திருந்தார் அது "பெயர் காரணம்".   பள்ளியில் படிக்கும் போது  தமிழ் இரண்டாம் தாளில் வரும் "பெயர்ச்சொல்" விளக்கம் தருக என்பது போல கேள்வி இருந்தாலும் அதற்கு பதிலளிப்பது போல இரண்டு வரியிலா சொல்ல முடியும்? சரி சரி எதுக்கு இந்த பில்டப்? மேட்டருக்கு போயிடுவோம். அதுக்கு முன்னாடி  ஆர்விஎஸ்  அண்ணாவுக்கும், கோபிக்கும்   நன்றி சொல்லிக் கொள்கிறேன்,
என்னை இதற்கு  அழைத்ததற்கு.

என் முழுப் பெயர் பாலாஜி சரவண கணேஷ்!    அடக்கி வைத்திருந்த மூச்சை கொஞ்சம் வெளிவிடுங்கள். என்ன மூன்று பேருக்கு வைக்க வேண்டிய பெயரை என் ஒருவனுக்கேவா என நீங்கள் நினைக்கலாம், என்ன நினைக்கலாம்? அதே தான? 



இதை தொடருவதற்கு முன் ஒரு சின்ன கட். எல்லாரும் சேது படம் பார்த்திருப்பீங்க அதில் விக்ரம், அபிதாவிடம் உன் பெயருக்கு அர்த்தம் என்னவென்று கேட்டதும் அவர் அப்பாவிடம் கேட்பார் இப்படி, 

அபிதா : ஏம்ப்பா நேக்கு இந்தப் பேர் வச்சேள்?
அப்பா : எது? அபிதான்ன?
அபிதா : அபிதகுஜலாம்பாள் ன்னு
அப்பா : அது உன்னோட பாட்டியோட  பெயரோல்லியோ அதான்!. அதற்கப்புறம் சில பல காரணங்களும் சொல்லுவார்!

இதே மாதிரி நானும் என் தாத்தாவிடம் ( அம்மாவின் அப்பா ) கேட்டேன். ஏன் தாத்தாவென நினைக்கும் அன்பர்களுக்கு, நான் பிறந்தது முதல் எனக்கு எல்லாமுமாய் இருந்தது என் தாத்தா தான், அவர் தான் எனக்கு பெயரும் வைத்தவர்.

"ஏன் தாத்தா எனக்கு இந்த பெயர வச்சீங்க?"

"ஏன் இந்தப் பெயருக்கு என்ன ?"

"இல்ல மூணு பேருக்கு வைக்கிற பெயர எனக்கு மட்டுமே வச்சிருக்கீங்களே அதான், கூட படிக்கிற பையன்களெல்லாம் கேலி பண்றாங்க தாத்தா"

"கேலி பண்றவங்கள பத்தி கவலைப் படாத, கடவுளோட பெயர் தான? இதுவும் நல்ல பெயர் தான்னு சொல்லு, உன் பேரு உள்ள வேற யாரவது இருக்காங்களான்னு கேளு."

"சரி கேக்குறேன், நீங்க சொல்லுங்க எனக்கு ஏன் இந்த பேர் வச்சீங்க?"

அவர் காரணம் சொல்லத் தொடங்கினார்.

என் அம்மா தான் வீட்டில் மூத்தவர், நான் அம்மாவிற்கு முதல் குழந்தை. ஸோ அம்மாவின் வழிக் குடும்பத்தில் முதல் குழந்தை நான். என் பாட்டியின் ( அம்மாவின் அம்மா ) இஷ்ட தெய்வம் திருப்பதி பாலாஜி.  அம்மா என்னைக் கருவுற்றிருந்த நேரம் பிறக்கும் முதல் குழந்தை ஆணாக பிறக்க வேண்டுமெனவும்  அப்படிப் பிறந்தால் பாலாஜி என பெயரிடுவதாகவும் வேண்டிக்கொண்டார். வேண்டுதலோ அல்லது X Y குரோமோசோம்களின் விளையாட்டின் படியோ பிறந்தேன் நான். அதனால் பாலாஜியும் ஆனேன். 

பாலாஜி ஓகே அது என்ன சரவண கணேஷ்? வர்றேன் வர்றேன். என் அப்பா ஒரு முருக பக்தர். சரவணா என்ற பெயர் மீது அவருக்கு விருப்பம் அதிகம். சிறு  வயதில் என்னை சரவணா என்றே கூப்பிட்டுள்ளார். அப்பாவின் வழி உறவுகளுக்கு சிறுவயதில் நான் சரவணா தான். என் கசின் ஒருவனின் பெயரும் சரவணா என்பதால் குழப்பத்தை தவிர்க்க பின்பு நான் பாலாஜி ஆனேன்.

அம்மாவின் இஷ்ட தெய்வம் கணேஷ். அவருக்கு கணேஷ் என வைக்க ஆசை போல, அவர் என்னை கணேஷ் என்று கூப்பிட்டதில்லை அனால் தாத்தாவிற்கு தெரியும் அம்மாவின் விருப்பம்.

பள்ளி செல்லும் வரை அவரவர்கள் அவரவர்களுக்கு பிடித்த பெயரில் என்னை கூப்பிட்டார்களாம். பள்ளியில் சேர்க்கும் பொழுது யார் விருப்பத்தையும் ஒதுக்காமல் என் பெயரை பாலாஜி சரவண கணேஷ் என ரெஜிஸ்டரில் சேர்த்தார் என் தாத்தா. நல்ல வேலை என் தாத்தாவின் விருப்பப் பெயரான "வெங்கட் ராகவன் " என்பதை சேர்க்கவில்லை. அந்த மட்டுக்கு நான் தப்பித்தேன். இல்லாவிட்டால் "வெங்கட் ராகவ பாலாஜி சரவண கணேஷ்" ஆகியிருந்திருப்பேன்! ( உஷ் அப்பப்பா! கண்ணைக் கட்டுதே! ) என் தாத்தா ஒரு இடைநிலை ஆசிரியர் என்பது இதில் ஒரு முரண் நகை! :)

பாலாஜி, பாலாஜி சரவணா, சரவணா, சரவண கணேஷ் என அவரவர்க்கு பிடித்த பெயர்களில் என்னைக் கூப்பிடுவார்கள். இப்பொழுது என் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என்னை பாலா என அழைக்கிறார்கள். சில நட்புக்கள் இன்னும் யுனிக்காக baals, balaj, BS என அழைப்பதும் உண்டு. என் பெயரைக்  கேலி செய்யாமல் எப்படி அழைத்தாலும் எனக்கு மகிழ்ச்சியே! :)   

 இது தான் மக்களே என் பெயர்க் காரணம். படிக்கும் பொழுது என் பெயரால்  சில பிரச்சனைகளை சந்தித்திருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் என் பெயர் எனக்கு பிடித்துப் போகவும் செய்தது.  ஆங்கிலத்தில் எழுதினால் இருபது எழுத்துக்கள். சில சமயம் சில Form பூர்த்தி செய்யும் பொழுது போதுமான கட்டங்கள் இல்லாமல் நானே சில கட்டங்கள் வரைந்ததுண்டு. என் பெயரே எனக்கு சில நண்பர்களையும்  பெற்றுத் தந்துள்ளது. 

ஒரு முறை நான் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் போது என்னைகான வந்த பாட்டியும் தாத்தாவும் நான் எங்கிருக்கிறேன் என அருகில் இருந்த பையனிடம் (அவன் பார்வைத் திறன் இல்லாதவன் )  என் முழுப் பெயரையும் சொல்லாமல் வெறும் பாலாஜி என்று சொல்லி  கேட்டிருக்கிறார்கள். அவன் என் முழுப் பெயரையும் சொல்லி, நான் எங்கிருக்கிறேன் என்பதையும் சொல்லியிருக்கிறான். அவன் என் ஹாஸ்டல் தான் ஆனாலும் முன்பு அவனிடம் நான் பேசியதேயில்லை. இந்த நிகழ்விற்கு அப்புறம் அவன் என் நண்பனானான். என் பெயர் அவனுக்கு பிடித்திருப்பதாகவும் சொன்னான். 


சில இடங்களில் என் அப்பாவின் பெயரையும் ( சீதா ராமன் )  சேர்த்து எழுதவேண்டியிருப்பதால், என்னைக் அழைக்கும் போது அவர்கள் படும் சிரமம் சொல்லிமாளாது! ( எதோ நம்மளால முடிஞ்சது :) ) சில கம்பெனிகளில் முழுப் பெயர் மற்றும் அப்பாவின் பெயர் சேர்த்துத்தான் மெயில் ஐடி உருவாக்குவார்கள் என நண்பன் சொல்லியிருக்கிறான். அதை எனக்குப் பொருத்திப் பார்க்க, ஐயோ! முடியல! :) 

என் பெயரின் நீளம் மற்றும் பாலாஜி என்பதை வைத்து நான் ஆந்திராவைச் சேர்ந்தவனா  எனவும் கேட்டிருக்கிறார்கள். # தமிழன்டா நான் :)
எனக்கு தெரிந்து இந்தப் பெயர் கொண்டுள்ள இன்னொருவரை  நான் இதுவரை  கேள்விப் பட்டதில்லை. என்னைச் சந்திக்கும் பல பேர் முதலில் கேட்பது,  "நீங்க நியூமராலாஜி படி பெயர் வச்சிருக்கீங்களா?" என்பது தான். பின்பு அவர்களிடம் விளக்குவேன் மேற்கூறிய கதையை! :) என்னதான் சில சில சங்கடங்கள் இருந்தாலும், என் பெயரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் என் பாட்டி மற்றும் தாத்தாவின் நினைவு வருமே என் வாழ்நாள் முழுவதும், அதற்காகவே இந்தப் பெயர் இன்னும் பிடிக்கிறது!

இதைத் தொடர நான் அழைப்பது 

தேனம்மை அக்கா  ( எவ்வளவு இனிமையான பெயர்! )





அனைவரும் என் அழைப்பை ஏற்று எழுதவேண்டுகிறேன்!  ( "மாட்டிவிட்டுட்டு வேண்டுறியா நீ?!"   அப்படின்னு நீங்க கேக்குறது என் காதுல விழல ) :)



படம் உதவி : கூகிள்



 




33 கருத்துகள்:

vanathy சொன்னது…

இம்பூட்டு இருக்கா உங்க பெயரில். நான் உங்க அப்பாவின் பெயரை சேர்த்து எழுதுறீங்களோன்னு நினைப்பதுண்டு.

Gopi Ramamoorthy சொன்னது…

நானும் இந்த மாதிரி சில பேர் பாத்திருக்கேன். உதாரணம் பாலாஜி ஈஸ்வரன், சுப்ரமணிய பாலாஜி

ஆனந்தி.. சொன்னது…

பால்ஸ்...:)) நானும் யோசிச்சிருக்கேன்...என்னடா பெருமாள் பெயரும்,முருகன் பெயரும் சேர்ந்து வித்யாசமா இருக்கேன்னு...அட இதுல முருகன் அண்ணன் பேருமா?? ஏன் பா...நம்ம சிவன் சாமி பேரு விட்டாங்க உங்க தாத்தா...ஹ ஹ...நல்லா சுவாரஸ்யமா இருந்தது பால்ஸ்...:)))

இராமசாமி சொன்னது…

தம்பி நலமா ! தொடர் பதிவா.. நானும் வாரேன் .. கொஞ்ச நாள் அவகாசம் கொடுங்க எழுதிரலாம் :)

மோகன் குமார் சொன்னது…

நன்றி பாலாஜி; நம்ம பேரில் அவ்ளோ விஷயங்கள் இல்லையே! யோசித்து/ முயன்று பார்க்கிறேன்; ஒரு வேளை விஷயம் அதிகம் இல்லையென எழுதா விடில் கோபிக்க வேண்டாம்

எல் கே சொன்னது…

பாலாஜி சரவண கணேஷ் ரொம்ப அருமை. அய்யம்பேட்டை அறிவுடை நம்மை கலியப்பெருமாள் சந்திரம் மாதிரி

Chitra சொன்னது…

என் பெயரின் நீளம் மற்றும் பாலாஜி என்பதை வைத்து நான் ஆந்திராவைச் சேர்ந்தவனா எனவும் கேட்டிருக்கிறார்கள். # தமிழன்டா நான் :)


.....ha,ha,ha,ha,ha.... hilarious!

Chitra சொன்னது…

ரொம்ப interesting ஆக எழுதி இருக்கீங்க...

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

அட அருமை எழுதிடலாம் சரவணா..:))

நன்றி அழைத்தமைக்கும் என் பெயர் இனிமை என்று கூறியமைக்கும்..:))

மோகன் குமார் சொன்னது…

பதிவை காலை முழுசாய் படிக்க முடியலை. இப்போ தான் வாசித்தேன். சுவாரஸ்யம்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு...

இந்திரா சொன்னது…

ரொம்ப நாளாச்சு இந்தப் பக்கம் வந்து..


ஆஹா... இங்கயும் ஒரு தொடர்பதிவா????

சுந்தரா சொன்னது…

பேர்பெற்ற கதை பெரிய கதையாகத்தான் இருக்குது.

சுவாரசியமாகச் சொல்லியிருக்கீங்க சரவணன் ((அப்பா வழி :) ))

பாலா சொன்னது…

உங்க பேருக்கு பின்னாடி இவ்வளவு பெரிய வரலாறு இருக்கா?

RVS சொன்னது…

பெயர் வரலாறு சூப்பர். சீதா ராமன் பாலாஜி சரவணா கணேஷ் ..... ;-)

ஹேமா சொன்னது…

நிறைய அழகா விரிவா சொல்லியிருகீங்க பாலா உங்க பெயர்ப் புராணத்தை.மனசில சின்னதா ஆதங்கமும் அடிக்குது.ஆனாலும் உங்க பெயர் அழகுதான் !

இளங்கோ சொன்னது…

//வெங்கட் ராகவ பாலாஜி சரவண கணேஷ்//
:)

//கம்பெனிகளில் முழுப் பெயர் மற்றும் அப்பாவின் பெயர் சேர்த்துத்தான் மெயில் ஐடி உருவாக்குவார்கள் என நண்பன் சொல்லியிருக்கிறான். //
konjam kastamthaan :)..

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

பாலாஜி சரவண கணேஷ் ! நல்லா இருக்கு பெயரும் பதிவும்.. எனக்கென்னவோ நீ பாலா தான்.

வருணன் சொன்னது…

நண்பா எனக்கு பாலா என்றே அழைத்து பழகிவிட்டது!:)

சுசி சொன்னது…

//எனக்கு தெரிந்து இந்தப் பெயர் கொண்டுள்ள இன்னொருவரை நான் இதுவரை கேள்விப் பட்டதில்லை.//

ஆஹா.. குடுத்து வச்சவர் நீங்க.

அருண் பிரசாத் சொன்னது…

Interesting.....

Mahi சொன்னது…

பாலாஜி சரவணா என்பதுதான் முழுப்பெயர்னு நினைத்தேன்,பின்னால கணேஷும் இருப்பது இப்பதான் தெரிந்தது. இன்ட்ரஸ்டிங்கா எழுதிருக்கீங்க பாலா! என் பேருக்கு பின்னால இப்படி எழுத இன்ட்ரஸ்டிங் மேட்டரெல்லாம் தேறாது,தக்கி முக்கி ஒரு பாரா எழுதலாம்.மீதி போஸ்ட்டுக்கு என்ன பண்ணன்னு ஐடியா குடுத்தீங்கன்னா எழுதுவேன்.டீலா??!!

அப்பாவி தங்கமணி சொன்னது…

//"பெயர்ச்சொல்" விளக்கம் தருக என்பது போல கேள்வி இருந்தாலும் அதற்கு பதிலளிப்பது போல இரண்டு வரியிலா சொல்ல முடியும்//
நெஜமாவே அந்த கொஸ்டின்க்கு நீங்க எக்ஸாம்ல ஆன்சர் எழுதினீங்களா பாஸ்... மனசாட்சிய தொட்டு சொல்லுங்க... அப்படியே எழுதி இருந்தாலும் டீச்சர் மார்க் போட்டாங்களா...மறுபடி மனசாட்சிய தொட்டு சொல்லுங்க...:)))

//பாலாஜி சரவண கணேஷ்//
போதுமா? நாட்டுல பேரு தட்டுபாடு வர்றதே உங்களால தான் போல...ஜஸ்ட் கிட்டிங்..:))

//வெங்கட் ராகவ பாலாஜி சரவண கணேஷ்//
சோடா ப்ளீஸ்...:))))

//என் பெயரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் என் பாட்டி மற்றும் தாத்தாவின் நினைவு வருமே என் வாழ்நாள் முழுவதும், அதற்காகவே இந்தப் பெயர் இன்னும் பிடிக்கிறது//
கடைசீல டச்சிங்ஆ முடிச்சுட்டீங்க பிரதர்...சூப்பர்...:)))

Sriakila சொன்னது…

அட...சூப்பரா இருக்கே... உங்க தாத்தா, அப்பா, அம்மா எல்லாரோட விருப்பத்தையும் சுமக்கும் உத்தமரா நீங்கள்? அப்படியென்றால் அவர்களின் ஆசியும் உங்களுடன் சேர்ந்தே வரும். கொடுத்து வைத்தவர் நீங்கள் ஒருவர்தான். உங்கள் பெயரால் உங்களுக்குப் பெருமைதான்.

என் பதிவை மதித்து எழுதியதற்கு நன்றி பாலாஜி சரவண கணேஷ் (அழ‌கான பெயர்)

sakthi சொன்னது…

பாலாஜி என் மகன் பெயரும் பாலாஜி தான் ::)))

sakthi சொன்னது…

பாலாஜி சரவண கணேஷ்

மூன்றும் சுவாமிகளின் பெயர்

Part Time Jobs சொன்னது…

No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

பதிவுலகில் பாபு சொன்னது…

ஓகே... தொடர்பதிவு போயிட்டு இருக்கா.. நல்லது..

நல்ல சுவாரஷ்யமாக இருந்தது.. உங்களுடைய பெயர் விளக்கம்..

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

good

ரிஷபன் சொன்னது…

உங்களை யாராச்சும் முழுப் பேரோட கூப்பிடணும்னா
ஒரு மைல் தொலைவுல ஆரம்பிச்சு வந்தாத்தான் நீங்க திரும்பிப் பார்ப்பீங்க போல.. இப்படி என் ஸ்கூல் மேட்டை வம்பிழுத்திருக்கோம். அவன் பேரும் இப்படித்தான்.. சந்தான கோபால கிருஷ்ணன்.. இப்ப நீங்க எழுதினதும் ரொம்ப சுவாரசியம்..

எம் அப்துல் காதர் சொன்னது…

தல! முழு நீள தொடர் போல (அருமையா) எழுதிப்புட்டு எங்கே போய் ஒரு வாரமா ஒளிஞ்சிகிட்டீங்க! வாங்க அதுபோலவே ஃபிரெஷ்ஷா!

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

its intresting man..!

கருத்துரையிடுக