செவ்வாய், 1 மார்ச், 2011

பகை வளர்ந்த காலம்

முதிராப் பேச்சுக்களில் புரிந்த 
பாதி உண்மைகளும், சொல்லாத சொற்களில் 
தெரிந்த பாதி ப்ரியங்களும்
கண்ணாமூச்சியாடின அப்பருவத்தில்..

சிறு நிகழ்வில் கிழித்துப் போட்ட 
அமைதியும், தூரமாகிப் போன நட்பும் 
இன்னும் அலைந்து கொண்டிருக்கிறது
நம் தெருக் காற்றில்..

அடிபட்ட பொழுதில் நான் சிந்திய
இரத்தத்துளிகளில் சேர்ந்து 
மண்ணில் வீழ்ந்தது நம் புரிதல்..

தவிர்த்த சந்திப்புக்களிலும் 
தவறிய அழைப்புக்களிலும்
தவறாது வளர்ந்து கொண்டிருந்தன 
நம் இடைவெளிகள்..

சேர்ந்த தகவல்களின் வழி 
நிலை தெரிந்து திரை கிழிக்கிறது 
காலமும் பக்குவமும்..

காலத்தின் வேகத்தில் காயங்கள் காய்ந்தாலும்
முகம் நோக்கும் நாட்களில்
பார்வை திரும்பிக் கொள்கிறது
சலனங்கள் ஊமையாகி நிற்கும்போது.. 
   

33 கருத்துகள்:

கலாநேசன் சொன்னது…

//தவறாது வளர்க்கும் இடைவெளி//

நல்கவிதை

அன்பரசன் சொன்னது…

//தவிர்த்த சந்திப்புக்களிலும்
தவறிய அழைப்புக்களிலும்
தவறாது வளர்ந்து கொண்டிருந்தன
நம் இடைவெளிகள்..//

ரொம்ப சரி..

vanathy சொன்னது…

கவிதை அருமையா இருக்கு.

Gopi Ramamoorthy சொன்னது…

//தவிர்த்த சந்திப்புக்களிலும்
தவறிய அழைப்புக்களிலும்
தவறாது வளர்ந்து கொண்டிருந்தன
நம் இடைவெளிகள்..//

சூப்பர்

எல் கே சொன்னது…

அருமை பாலாஜி

இராமசாமி சொன்னது…

பல நட்புகள் விரிசல் விடுவது இப்படித்தானே பாலாஜி.. எப்படி இருக்கீங்க :)

Ramani சொன்னது…

இழந்த பல நட்புகளை மிக லேசாக
ஞாபகப்படுத்திப்போகிறது
உங்கள் படைப்பு.
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

ஆனந்தி.. சொன்னது…

//தவிர்த்த சந்திப்புக்களிலும்
தவறிய அழைப்புக்களிலும்
தவறாது வளர்ந்து கொண்டிருந்தன
நம் இடைவெளிகள்..//

உண்மை பாலா...இது தான் இப்ப நடக்குது...
கடைசி வரியில் சொன்னது போலே...""சலனங்கள் ஊமையாகி நிற்கும்போது.. ""பலவாட்டி ஊமையாகி போகிறோம்...காலம் தான் அப்படி ஆக்குதாணு தெரியலை....

ரேவா சொன்னது…

காலத்தின் வேகத்தில் காயங்கள் காய்ந்தாலும்
முகம் நோக்கும் நாட்களில்
பார்வை திரும்பிக் கொள்கிறது
சலனங்கள் ஊமையாகி நிற்கும்போது..
... பதிவு சூப்பர் தொடர வாழ்த்துக்கள்

Chitra சொன்னது…

தவிர்த்த சந்திப்புக்களிலும்
தவறிய அழைப்புக்களிலும்
தவறாது வளர்ந்து கொண்டிருந்தன
நம் இடைவெளிகள்..


.....ஆழமான கருத்துடன் கூடிய வரிகள். சரியாக சொல்ல வேண்டியதை, கவிதை வடிவில், அழகாய் தர உங்களால் முடிகிறது. பாராட்டுக்கள்!

மோகன் குமார் சொன்னது…

Welcome back after a break.

சே.குமார் சொன்னது…

கவிதை அருமை.

Kousalya சொன்னது…

பாலா அப்படியே என் உணர்வுகள் போல இருக்கிறது...

மிக ரசித்து படித்தேன்...மீள இயலவில்லை...படித்து வெகு நேரம் சென்றபின்னும் !!

சுந்தரா சொன்னது…

பிரிவையும் அதனால் வரும் மனப்போராட்டத்தையும் இவ்வளவு அழகாக யாரும் சொல்லிவிடமுடியாது சரவணன். பாராட்டுக்கள்!

துரோணா சொன்னது…

சலனங்கள் ஊமையாகி நிற்கும்போது..\\
அருமையான வார்த்தை பிரயோகம்,வாழ்த்துக்கள்

Priya சொன்னது…

மிக அருமையான கவிதை, வாழ்த்துக்கள் பாலா.

இளங்கோ சொன்னது…

//தவிர்த்த சந்திப்புக்களிலும்
தவறிய அழைப்புக்களிலும்
தவறாது வளர்ந்து கொண்டிருந்தன
நம் இடைவெளிகள்..//
Hmmmmm...

ஹேமா சொன்னது…

உடைந்த நட்பு மனதையும் உடைய வைத்திருக்கிறது.பாலா காலம் சிலசமயம் உணர்ந்து சேரவைக்கும்.கவலைப்படவேணாம் !

Mahi சொன்னது…

கவிதை நல்லா இருக்கு பாலா! சில நட்'பூ'க்கள் உதிர்ந்தாலும்,புது நட்'பூ'க்கள் பூக்கும். :)

BTW,கவிதைகள் எல்லாம் கற்பனையா, உங்க அனுபவமான்னு சொன்னீங்கன்னா கமெண்ட் போட வசதியா இருக்கும்.:)

சி.கருணாகரசு சொன்னது…

புரிதலற்ற தருணங்களை தவறவிட்ட பின் ... காலம் கடந்த புரிதல் மனதை பிசையத்தான் செய்யும்.

கவிதை உணர்வா இருக்கு.

Sriakila சொன்னது…

//காலத்தின் வேகத்தில் காயங்கள் காய்ந்தாலும்
முகம் நோக்கும் நாட்களில்
பார்வை திரும்பிக் கொள்கிறது
சலனங்கள் ஊமையாகி நிற்கும்போது..
//
மனிதனின் இயல்பான குணம் பலநேரங்களில் இப்படித்தான் வெளிப்படுகிறது.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

சேர்ந்த தகவல்களின் வழி
நிலை தெரிந்து திரை கிழிக்கிறது
காலமும் பக்குவமும்//

திரை விலகி விட்டதா..

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

அசத்தல்...

பிரியம் சுழித்தோடும் நதியாயான வாழ்வு சமயங்களில் இப்படியும் ஆகும்..

அப்பாவி தங்கமணி சொன்னது…

கவிதை அருமையா இருக்கு

அன்னு சொன்னது…

இப்படித்தான் நிறைய நட்பு விட்டுப்போயிருக்கு, விட்டுப்போகிறது, சிலதை நாம் காரணமாய் தவிர்த்தாலும் மனதில் அதன் வடு ஆறுவதில்லை, சில நட்பு என்ன காரணம் என்று தெரியாமலே பிரிந்தாலும் தேடிக்கொண்டே இருக்கிறது கண்கள்.... ஹ்ம்ம் பழைய நட்புக்களை தேட வைத்து விட்டீர்கள் மீண்டுமொரு முறை :(

கவிதையும் மிக அருமைண்ணா.

மோகன்ஜி சொன்னது…

/தவிர்த்த சந்திப்புக்களிலும்
தவறிய அழைப்புக்களிலும்
தவறாது வளர்ந்து கொண்டிருந்தன
நம் இடைவெளிகள்../

கவிதை இந்த வரிகளில் மையம் கொண்டு சிலிர்க்கிறது..

Balaji saravana சொன்னது…

நன்றி கலாநேசன்

நன்றி அன்பு

நன்றி வானதி

நன்றி கோபி

நன்றி எல்.கே

ரொம்ப நல்லாயிருக்கேன். நன்றி ராமசாமி அண்ணா!

நன்றி ரமணி சார்

நீங்கள் சொல்வது மிகச் சரி சகோ! நன்றி ஆனந்தி

வாங்க ரேவா, நன்றி!

நன்றி சித்ராக்கா

நன்றி மோகன் அண்ணா

Balaji saravana சொன்னது…

நன்றி குமார்

நன்றி கௌசல்யா சகோ

நன்றி சுந்தரா சகோ

நன்றி துரோணா

நன்றி ப்ரியா

நன்றி இளங்கோ

நன்றி ஹேமா

கற்பனையும் அனுபவமும் சரிவிகிதத்தில் கலந்தது தான் இது மகி! ;) நன்றி!

வாங்க கருணாகரசு. நன்றி

நன்றி அகிலா

திரை விலகிடுச்சு தேனக்கா! நன்றி :)

Balaji saravana சொன்னது…

நன்றி செந்தில் அண்ணா

நன்றி அப்பாவி

உங்களுக்கும் அதே ஃபீலிங் ஆ?! நன்றி சகோ

நன்றி மோகன் அண்ணா

மாணவன் சொன்னது…

சிறப்பான வரிகளுடன் அசத்தல் வரிகள் :)

பகிர்வுக்கு நன்றி நண்பரே

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

//காலத்தின் வேகத்தில் காயங்கள் காய்ந்தாலும்
முகம் நோக்கும் நாட்களில்
பார்வை திரும்பிக் கொள்கிறது//

.....ஹ்ம்ம்ம்ம்ம்ம்.. ரொம்ப நல்லா இருக்குங்க.. ரசித்துப் படித்தேன். :-))

ரிஷபன் சொன்னது…

தவிர்த்த சந்திப்புக்களிலும்
தவறிய அழைப்புக்களிலும்
தவறாது வளர்ந்து கொண்டிருந்தன
நம் இடைவெளிகள்..

கவிதை அருமையா இருக்கு

Gopi Ramamoorthy சொன்னது…

தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன்

http://ramamoorthygopi.blogspot.com/2011/03/blog-post_06.html

கருத்துரையிடுக