திங்கள், 14 பிப்ரவரி, 2011

ப்ரியங்களின் மோக விளையாட்டு..

வாசலில் உன் வருகையை கவனியாதுபோல் 
உள் வேலையில் மூழ்குகிறேன் 
திமிரும் என் மனதை கட்டியிழுத்து வந்து 
காலடியில் போடுகிறது உன் ப்ரியம்..


சாலைப் பூக்களின் அழகில் மயங்கி 
நின்று சற்று ரசிக்கிறாய் ; பூக்களின் 
மேல் நின்றாடும் பட்டாம்பூச்சிகளும் 
பறந்தாடும் தென்றலும் திகைத்துத்
திரும்புகின்றன உன்னை நோக்கி!  


வீரிட்டு அழும் எதிர் வீட்டுக் குழந்தையை
அள்ளியெடுத்து கொஞ்சி சமாதானப் படுத்துகிறாய் நீ!
குழந்தை நிறுத்தியதும் அலறத் தொடங்கியிருக்கிறது 
என் மனது..


"தட்டுங்கள் திறக்கப்படும்"
பொய்யாக்கிப் போனாய் ; ஆம்
ஒருபோதும் சாத்தப் படுவதேயில்லை 
உன் ப்ரியத்தின் வாசல்கள்! கடற்கரையில் உன் வெண் பாதக் குழிகள்
தேடித் தொடர்கிறேன் நான்
போட்டிக்கு வந்து நிற்கிறது கடலலை..

கூந்தலில் சிக்கிய துப்பட்டாவை
பூக்கள் பின்னும் நளினத்துடன்
விடுவிக்கிறாய், தீவிரமாய் முகம்
வருடுகிறது, என்னைப் போல!..பின் மாலைப் பொழுதில் நாம்
அமர்ந்திருந்த மாடிப் படிகளில்
ஏறியிறங்கி விளையாடுகிறது 
நம் காதல் நிலா!


விரல் பின்னி தோள்சாய அமர்ந்து
மெல்லப் பேசிச்  சிரிக்கும் பொழுது
பூவுதிர்க்கிறது  மரம்..
நீ சூட.. நான் சூட்டிட!.. 


நீ பரிசளித்த சட்டைகள் அணிந்த
நாட்களில் தவறாது வந்து விடுகிறது மழை
உன் முத்த ரேகைகள் கவர்ந்து கொள்ள..உட்சென்று வெளியேறவியலா
கண்ணாடி அறை போல
உன் ப்ரிய அலைகளால் பின்னப்பட்ட
பெருவெளியில் சுற்றியலைகிறேன் நான்!..


பார்வையால் பதியன் போட்டு 
புன்னகையால் செப்பனிட்டு 
அன்பால் வேர் விட்டு 
கொடி சுற்றி இதழ் விரிக்கச் செய்தாய்  
காதல் மலரை என்னுள் நீ!நாம் கட்டியணைத்து முத்தமிட்ட 
கைபிடித்து உடலுரசி 
நடந்து சென்ற இடங்களில்
இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது
நம் ப்ரியங்களின் மோக விளையாட்டு..

டிஸ்கி :  அன்பான என் பதிவுலக உறவுகளுக்குச் சமர்ப்பணம்!  ;)
படவுதவி : Google Image

39 கருத்துகள்:

கலாநேசன் சொன்னது…

//குழந்தை சமாதமானதும் அலறும் மனது//
//படிகளில் விளையாடும் நிலா //

மிக ரசித்தேன். வாழ்த்துக்கள்.

அன்பரசன் சொன்னது…

மோக விளையாட்டு நல்லாவே இருக்குங்க..
வாழ்த்துகள்.

Ramani சொன்னது…

அருமை.தொடர வாழ்த்துக்கள்

Gopi Ramamoorthy சொன்னது…

கலக்குங்க

Mahi சொன்னது…

உங்களுக்கும் காதலர்தின வாழ்த்துக்கள் பாலா! கவிதைவரிகளுடன்,போட்டோஸும் அழகா இருக்கு! :)

Kurinji சொன்னது…

கவிதையும் படங்களும் மிகவும் அருமை !

குறிஞ்சி குடில்

சௌந்தர் சொன்னது…

கூந்தலில் சிக்கிய துப்பட்டாவை
பூக்கள் பின்னும் நளினத்துடன்
விடுவிக்கிறாய், தீவிரமாய் முகம்
வருடுகிறது, என்னைப் போல!///

செம மச்சி....என்னாமா பில் பண்ணி எழுதுறே ....

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்

Sriakila சொன்னது…

Super!

vinu சொன்னது…

nalaaakeethu paaa

ஆனந்தி.. சொன்னது…

வருடி கொடுக்கும் தென்றல் மாதிரி..உங்கள் கவிதை காதல் வரிகள் ,படிக்கிற எல்லார் மனசையும் கட்டாயம் தென்றல் மாதிரி இதமாய் வருடிட்டு போயிருக்கும்...அவ்வளவு காதல் தெறிக்கும் வித்தைகளை மென்மையா போட்டு தெளிச்சிருக்கிங்க ஒவ்வொரு வரியிலும்...எனக்கு இந்த லைன் தான் சூப்பர் னு பிரிச்சு சொல்லவே முடியல இந்த கவிதையில்..எல்லா வரிகளுமே அட்டகாசம் சகோ...அருமையான ரசனை என் அருமை சகோதரா உங்களுக்கு ...செம ட்ரீட் தான் இந்த காதலர் தின கவிதை..ரொம்ப நல்லா இருக்கு...so lovely ..

மோகன் குமார் சொன்னது…

Photoes thedi thedi pidichirukkeengalae!! Adadaa!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//பார்வையால் பதியன் போட்டு
புன்னகையால் செப்பனிட்டு
அன்பால் வேர் விட்டு
கொடி சுற்றி இதழ் விரிக்கச் செய்தாய்
காதல் மலரை என்னுள் நீ!//


அருமை அருமை.....

கோமாளி செல்வா சொன்னது…

காதல் ரசத்தை பிழிந்து எடுத்த கவிதை இதுதானோ ?
இன்னிக்கு நான் படிக்கும் நான்காவது கவிதை இது ..
இதுவும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா .. வழக்கம் போல உங்கள் கவிதை கலக்கல் தான் ..

//பூவுதிர்க்கிறது மரம்..
நீ சூட.. நான் சூட்டிட!.. //

//"தட்டுங்கள் திறக்கப்படும்"
பொய்யாக்கிப் போனாய் ; ஆம்
ஒருபோதும் சாத்தப் படுவதேயில்லை
உன் ப்ரியத்தின் வாசல்கள்! //

இன்னும் நிறைய வரிகள் ,...

ஜெ.ஜெ சொன்னது…

காதலர் தின வாழ்த்துக்கள்

ஆதவா சொன்னது…

தலைப்பின் வசீகரம்தான் தளத்திற்குள் அழைத்து வந்தது!!! கவிதைகள் நன்றாக இருக்கின்றன... குறிப்பாக

"தட்டுங்கள் திறக்கப்படும்"
பொய்யாக்கிப் போனாய் ; ஆம்
ஒருபோதும் சாத்தப் படுவதேயில்லை
உன் ப்ரியத்தின் வாசல்கள்!

இந்த கவிதை பிரமாதம்!! எனக்குத் தெரிந்து காதலர் தினத்தில் நல்ல கவிதை படித்திருக்கிறேன் என்றால் அது இங்கேதான்!!

ஆதவா சொன்னது…

நீ பரிசளித்த சட்டைகள் அணிந்த
நாட்களில் தவறாது வந்து விடுகிறது மழை
உன் முத்த ரேகைகள் கவர்ந்து கொள்ள..

அருமையான கற்பனைங்க. கவிதைத்தனம் நிறைய இருக்கு

சுசி சொன்னது…

ரசனையான கவிதை.. படங்களோடு சேர்ந்து அழகாகவும்..

//"தட்டுங்கள் திறக்கப்படும்"
பொய்யாக்கிப் போனாய் ; ஆம்
ஒருபோதும் சாத்தப் படுவதேயில்லை
உன் ப்ரியத்தின் வாசல்கள்! //

ரொம்பப் பிடிச்ச வரிகள்.

Priya சொன்னது…

அருமையான வரிகளில் அழகான கவிதை, ரசித்து படித்தேன்!படங்களும் மிக அழகு!

Part Time Jobs சொன்னது…

Latest Google Adsense Approval Tricks 2011

Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

New google adsense , google adsense tricks , approval adsense accounts,

latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,

Quick adsense accounts ...

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

vanathy சொன்னது…

நல்லா இருக்கு.
super photos.

dheva சொன்னது…

//வீரிட்டு அழும் எதிர் வீட்டுக் குழந்தையை
அள்ளியெடுத்து கொஞ்சி சமாதானப் படுத்துகிறாய் நீ!
குழந்தை நிறுத்தியதும் அலறத் தொடங்கியிருக்கிறது
என் மனது..//

என்னடா பாலா...........இப்டி கிளம்பிட்ட....? செம தம்பி.........வரிக்கு வரி உணர்வுகளை அள்ளித் தூவுது கவிதை..........கிரேட்பா............கீப் ஹிட்......அண்ட் ராக்....தம்பி!

பாலா சொன்னது…

வரிக்கு வரி காதல் ரசம் சொட்டுகிறது. மற்றபடி என்ன சொல்வதென்று தெரியவில்லை.

இளங்கோ சொன்னது…

காதல் வரிகள் அழகோ அழகு..

சே.குமார் சொன்னது…

கவிதையும் படங்களும் மிகவும் அருமை.

எம் அப்துல் காதர் சொன்னது…

// நீ பரிசளித்த சட்டைகள் அணிந்த நாட்களில் தவறாது வந்து விடுகிறது மழை உன் முத்த ரேகைகள் கவர்ந்து கொள்ள..//

அடடா எப்படி இதெல்லாம்.. ## டவுட்டு!!

ஹேமா சொன்னது…

அழகு அழகு அழகு.
காதல் எப்பவுமே அழகுதான் பாலா !

அப்பாவி தங்கமணி சொன்னது…

ரெம்ப நல்லா இருக்குங்க...ஒண்ணு ஒன்ணத்துக்கும் ஏற்ற படங்கள் போட்டது இன்னும் சிறப்பு...

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//நீ பரிசளித்த சட்டைகள் அணிந்த
நாட்களில் தவறாது வந்து விடுகிறது மழை
உன் முத்த ரேகைகள் கவர்ந்து கொள்ள..//

மச்சி என்னடா இப்படி காதல் கவிதையிலும் அசத்த ஆரம்பிச்சுட்ட ம்ம்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அருமையான கற்பனை

மோகன்ஜி சொன்னது…

அழகான காதல் உணர்ச்சிகளை மென்மையாய் வெளிப்படுத்தும் கவிதை.. அழகு அழகு

தோழி பிரஷா சொன்னது…

அழகான கவிதை ரசித்து படித்தேன்...சூப்பர்

ம.தி.சுதா சொன்னது…

நல்லாத் தான் விளையாடினா போங்க..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

Gayathri சொன்னது…

உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

சுந்தரா சொன்னது…

ஒவ்வொரு வரியிலும் காதல் வழியுது.

வாழ்த்துக்கள் சரவணன்!

சுபத்ரா சொன்னது…

Hii Bala,
Slide Show பார்த்த மாதிரி ஒவ்வொரு சீனா வந்துட்டுப் போச்சு.. கலக்கல் கவிதை !! மிக ரசித்தேன்..
Then, Belated Valentines Day Wishes..

மதுரை சரவணன் சொன்னது…

//நாம் கட்டியணைத்து முத்தமிட்ட
கைபிடித்து உடலுரசி
நடந்து சென்ற இடங்களில்
இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது
நம் ப்ரியங்களின் மோக விளையாட்டு..//

அருமையாக கவிதையில் வரிகள் விளையாடி உள்ளன. வாழ்த்துக்கள்

அன்னு சொன்னது…

//விரல் பின்னி தோள்சாய அமர்ந்து
மெல்லப் பேசிச் சிரிக்கும் பொழுது
பூவுதிர்க்கிறது மரம்..
நீ சூட.. நான் சூட்டிட!.. ///

ஒவ்வொரு வரியின் ஆழத்தையும் அன்பையும் அடுத்த வரி தோற்கடிக்குது... கலக்குங்ண்ணா :)

RVS சொன்னது…

இப்பத்தான் பார்த்தேன்.. ரொம்ப லேட்டு.. ஆனா அட்டகாசம் பாலாஜி.. பேர்லயே ஜி இருக்கே.. ;-))))))

Rathnavel சொன்னது…

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

கருத்துரையிடுக