செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

ப்ரியமானவளுக்கு..என் மனத் தாளில் உன் நினைவுருக்கி வார்த்த 
ப்ரியத்தின் நேசங்களை வார்த்தையுருக் கொடுத்து 
வந்தடையச் செய்கிறேன் உன்னிடம்..

ப்ரியத்தை வார்த்தைகளால் 
வகைப்படுத்த முடியாதெனினும்
ப்ரியத்தின் புறத்தாளினையாவது
சுமந்து வரும் இவ்வார்த்தைகள்..

உனக்காக எழுதத் தொடங்கும் போது
முண்டியடிக்கும் வார்த்தைகளில்
வல்லினம் தவிர்த்து மெல்லினம் தேடி
இனிமை குழைத்து முத்த முத்திரையிடுகிறேன்..

நான் எழுதிய வார்த்தையுடல் 
உன்னைக் காண வரும்பொழுது
எப்போதும் அழகிய கவிதையுடை 
அணிந்து கொண்டு விடுகிறதே! 

நீ உச்சரிக்கும் நேரம் உயிர் கொண்டும்
உன்னைச் சுற்றியலையும் 
இதழ் பூக்கள் தேடும் பட்டாம்பூச்சிகளாய்..

சற்றே விழியுயர்த்தி ப்ரியத்தின் புன்னகையை
மெல்லிதழில் இருந்து இறக்கி விடு
காற்றிலாடும் என் வரிகள் உன் ப்ரியத்தை
பூப்பல்லக்கில் சுமந்து என்னிடம் சேர்ப்பிக்கும்..

உடல் தூரமிருந்தும் இடைவெளியில்லை நினைவிற்கு
புத்தி தெறிந்தும் உணரவில்லை மனது.
அகக் கண்களால் ஆராதனை செய்த உன் அழகை
புறக்கண்களும் கண்டு பேருவகை அடைய வரம் கொடு.

சின்னப் பார்வையால் சிந்தை சிறைப் படுத்தி
சிக்குறச் செய்யும் வித்தைக்காரியிடம்
வசமிழக்க சித்தமாயிருக்கிறேன் நான்..

நம் சந்திப்புகளின் போது அலுக்காத
ஜாலங்கள் காட்டும் ப்ரியத்தின் நடனத்தைக் காண
காத்திருக்கிறேன்; மறுமொழியிடு சீக்கிரம்!டிஸ்கி : இது இந்திரா அழைத்த தொடர்பதிவிற்காக! நன்றி இந்திரா :)


படம் உதவி : google image


            

36 கருத்துகள்:

எல் கே சொன்னது…

//நான் எழுதிய வார்த்தையுடல்
உன்னைக் காண வரும்பொழுது
எப்போதும் அழகிய கவிதையுடை
அணிந்து கொண்டு விடுகிறதே! //

அழகான வார்த்தை பிரயோகம் பாலாஜி

இராமசாமி சொன்னது…

நல்லாவே காதலிக்கீறிங்க பாலாஜி :)

வெறும்பய சொன்னது…

வார்த்தை பிரயோகம் அருமை நண்பரே...

காதல் கடிதம் கலக்குகிறது...

நாமளும் எழுதனுமே...காதலிக்கிரவங்களுக்கு கடிதம் எழுத கஷ்டமா இருக்காது, நமக்கு தான் காதல்னா என்னன்னே தெரியாதே.. ஆனாலும் முயர்ச்சிக்கணும்...

வெறும்பய சொன்னது…

உனக்காக எழுதத் தொடங்கும் போது
முண்டியடிக்கும் வார்த்தைகளில்
வல்லினம் தவிர்த்து மெல்லினம் தேடி
இனிமை குழைத்து முத்த முத்திரையிடுகிறேன்.

//

Super ines

பாலா சொன்னது…

//உனக்காக எழுதத் தொடங்கும் போது
முண்டியடிக்கும் வார்த்தைகளில்
வல்லினம் தவிர்த்து மெல்லினம் தேடி
இனிமை குழைத்து முத்த முத்திரையிடுகிறேன்..

இந்த மாதிரி எல்லாம் எனக்கு சிந்திக்க தெரியாது. உங்க கவிதையை எதிர்காலத்துல காப்பி அடிக்க வேண்டியதுதான்.

உங்களின் சொல்லாடல் பிரமிக்க வைக்கிறது. நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்? (அவளை என்று சொல்லாதீர்கள்)

//நம் சந்திப்புகளின் போது அலுக்காத
ஜாலங்கள் காட்டும் ப்ரியத்தின் நடனத்தைக் காண
காத்திருக்கிறேன்; மறுமொழியிடு சீக்கிரம்!

அவர் கமெண்ட் போடுவார் என்று காத்திருக்கிறீர்களா? வாழ்த்துக்கள்.

RVS சொன்னது…

பிப்ரவரி பதினாலுக்கு இதைவிட ஸ்பெஷல்-ஆ எதிர்பார்க்கிறோம்.. வெரி குட்!! ;-)

பெயரில்லா சொன்னது…

கடிதமாக ஒரு கவிதையா??? அழகாக இருக்கிறது.

செல்லப்பெயரைக் குறிப்பிடவில்லையே..

அவ்வளவு ரகசியமோ???

ஆனந்தி.. சொன்னது…

பாலா...ஐயோ...சூப்பர் ஆ இருக்கு...கவிதை வரிகள் மட்டுமில்லாமல்...அந்த பொருத்தமான படம்...கவிதை வரிகளின் அழகான வடிவமைப்பு னு செம ஜோர் ஆ இருக்கு...உற்சாகமான கவிதை வரிகள் பாலாவிடம் இருந்து கொஞ்சநாள் கழிச்சு...:))) குட் பால்ஸ்..:)))

சுந்தரா சொன்னது…

//உனக்காக எழுதத் தொடங்கும் போது
முண்டியடிக்கும் வார்த்தைகளில்
வல்லினம் தவிர்த்து மெல்லினம் தேடி
இனிமை குழைத்து முத்த முத்திரையிடுகிறேன்..//

அருமை :)

கவிதைக்குத் தேர்ந்தெடுத்த படம் இன்னொரு கவிதை.

Mahi சொன்னது…

சூப்பர் கவிதை பாலா! உருகி உருகி வந்து விழுந்திருக்கு வார்த்தைகள்! நல்லா இருக்கு! :)

அமைதிச்சாரல் சொன்னது…

சூப்பர் கவிதை.. சூப்பர் படம்.

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

காத்திருக்கிறேன்; மறுமொழியிடு சீக்கிரம்//
காதலியிடமும் இதே வாசகம்தானா

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

படம் அருமை

Chitra சொன்னது…

சின்னப் பார்வையால் சிந்தை சிறைப் படுத்தி
சிக்குறச் செய்யும் வித்தைக்காரியிடம்
வசமிழக்க சித்தமாயிருக்கிறேன் நான்..


...lovely!

கோமாளி செல்வா சொன்னது…

//உனக்காக எழுதத் தொடங்கும் போது
முண்டியடிக்கும் வார்த்தைகளில்
வல்லினம் தவிர்த்து மெல்லினம் தேடி
இனிமை குழைத்து முத்த முத்திரையிடுகிறேன்.//

அவுங்களுக்கு கடிதம் எழுதினா கூட வன்மையா அதாவது வல்லினம் இருக்ககூடாதுன்னு சொல்லுறீங்க பாருங்க , எப்படி அண்ணா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க ?

சே.குமார் சொன்னது…

வார்த்தை பிரயோகம் அருமை.

இளங்கோ சொன்னது…

//சின்னப் பார்வையால் சிந்தை சிறைப் படுத்தி
சிக்குறச் செய்யும் வித்தைக்காரியிடம்
வசமிழக்க சித்தமாயிருக்கிறேன் நான்..//
Nice.. :)

Gopi Ramamoorthy சொன்னது…

உனக்குக் கடிதம் எழுத எண்ணிப் பிள்ளையார் சுழி போட்டேன். ஆத்திகம் பிடிபட்டது.

உன் பெயரை விளித்து எழுத ஆரம்பித்தேன். கவிதை பிடிபட்டது.

எழுதி முடித்ததும் கடித இலக்கியம் பிடிபட்டது.

அழகை வர்ணித்து எழுத ஆரம்பித்ததில் காவியம் பிடிபட்டது.

இப்படி சொல்லிக்கிட்டே போலாம் போலயே:)

மோகன் குமார் சொன்னது…

//பிப்ரவரி பதினாலுக்கு இதைவிட ஸ்பெஷல்-ஆ எதிர்பார்க்கிறோம்.. //

Yes.

மோகன்ஜி சொன்னது…

முண்டியடிக்கும் வார்த்தைகள்....அழகு! வாழ்த்துக்கள் காதல் பாலா! நலம் தானே?

Priya சொன்னது…

ரசனையான வார்த்தைகள்... கவிதை மிக அழகு!

அன்னு சொன்னது…

ம்..ம்ம்...ம்ம்ம்...கவிதையெல்லாம் பலமா இருக்குங்ண்ணா... பதிலெல்லாம் வந்ததா?? :))

ஹேமா சொன்னது…

அருமையான கவிதை பாலா.படத்திற்காகக் கவிதையா.இல்லை கவிதைக்காகப் படமான்னு இருக்கு.

ப்ரியத்தை புறத்தாளில் அனுப்பிவிட்டுக் காத்திருக்கிறீர்கள் தவிப்போடு.அழகுதான் !

vanathy சொன்னது…

பாலாஜி, கவிதை சூப்பரோ சூப்பர்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

//நான் எழுதிய வார்த்தையுடல்
உன்னைக் காண வரும்பொழுது
எப்போதும் அழகிய கவிதையுடை
அணிந்து கொண்டு விடுகிறதே! //

இதுதான் ரொம்ப பிடிச்சது பாலாஜி

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

படமும், கவிதையும் அபாரம் ...

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

ப்ரியத்திற்க்கு மௌனத்தை தவிர்த்து வேறு ஏதடா மறுமொழி?

//சின்னப் பார்வையால் சிந்தை சிறைப் படுத்தி
சிக்குறச் செய்யும் வித்தைக்காரியிடம்
வசமிழக்க சித்தமாயிருக்கிறேன் நான்..//

சூப்பர்டா மச்சி ...!

நன்றி,..

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

ரொம்ப அருமையா இருக்குங்க.. காதல் கடித கவிதை... அதற்கு ஏற்ற படம்... சூப்பர்..

அவங்களுக்கு மெசேஜ் போயிருச்சா.. மறுமொழி இட வந்தாச்சா? :-))

வாழ்த்துக்கள்..

சிவகுமாரன் சொன்னது…

மறுமொழி கிடைத்ததா?
அந்தப் படமும் கவிதையும் அருமை

அப்பாவி தங்கமணி சொன்னது…

நல்ல கவிதைங்க...அதுக்கு பொருந்தும் படமும் கூட

மதுரை சரவணன் சொன்னது…

pukaippataththudan kavithai arumai. vaalththukkal

பாரத்... பாரதி... சொன்னது…

வணக்கங்களும், வாழ்த்துக்களும்.

sakthi சொன்னது…

பாலாஜி காதல் கவி மொழி உங்களுக்கு நல்லாவே வருது அதனால் இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன்...

Prasanna சொன்னது…

நலமா.

//வல்லினம் தவிர்த்து மெல்லினம் தேடி//
ஆஹா.. உண்மை தான்னு நினைக்கிறேன் :)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை...
யோசிக்காதீங்க...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/07/blog-post_24.html) சென்று பார்க்கவும்...

நன்றி... திண்டுக்கல் தனபாலன்

கருத்துரையிடுக