புதன், 26 ஜனவரி, 2011

தரிசனம்..


நெற்றித் திருநீறுடன் புத்தகப் பை தோளாட
குறையேதுமிருக்குமோவென மீண்டும்
கோவில் நோக்கி கும்பிட்டு
கையிலிருந்த ஜாமென்ட்ரி பாக்ஸை
பற்களால் மெல்லத் திறந்து
மயிலிறகிற்கிடையே இருந்தெடுத்த
நாணயமொன்றை திரும்பி
அமர்ந்திருந்த வயதான
பிச்சைக்காரியிடம் கொடுத்து
எனைக் கடக்கும் நேரம்
அழைத்துப்  பெயர் கேட்டேன்
சீருடையணிந்த சிறுமியிடம்..
மெல்லச் சிரித்து தலை நிமிராமல்
ஜடையாடியபடியே ஓடிச் சென்றாளவள்
என்ன பெயரேனும் இருந்து விட்டு போகட்டும்
அன்பின் தேவதைகளுக்கு!


                                                  

30 கருத்துகள்:

எல் கே சொன்னது…

நல்லா இருக்கு பாலாஜி

Chitra சொன்னது…

என்ன பெயரேனும் இருந்து விட்டு போகட்டும்
அன்பின் தேவதைகளுக்கு!

...How sweet!!!! :-)

அமைதிச்சாரல் சொன்னது…

தேவதைகளுக்கு எதற்கு பெயர்... அழகாயிருக்கு கவிதை.

Gopi Ramamoorthy சொன்னது…

என்ன பேரா இருந்தா என்ன? அது இந்தக் கவிதையைவிட நிச்சயம் அழகாக இருக்கும் அப்படின்னு முடிங்க பாலாஜி:)

ரிஷபன் சொன்னது…

நிச்சயம் அவள் தேவதைதான்

தோழி பிரஷா சொன்னது…

நல்லாயிருக்கு....

Mahi சொன்னது…

அந்த குட்டி தேவதையை அப்படியே கண்முன்னால கொண்டுவந்துட்டீங்க! :)

மோகன் குமார் சொன்னது…

Nice.

சே.குமார் சொன்னது…

நல்லா இருக்கு.

இளங்கோ சொன்னது…

தேவதைகளுக்கு பெயர் எதற்கு..

கவிதை அருமைங்க.. :)

RVS சொன்னது…

அனானி தேவதை! நல்லாயிருக்கு.. ;-)

Kousalya சொன்னது…

இயல்பான நடையில் நெகிழ்வான ஒன்றை கவிதையாகி இருப்பது மிக ரசிக்க வைக்கிறது பாலா...

அன்பின் தேவதை அழகு !

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//அன்பின் தேவதைகளுக்கு!///

பஸ்சுக்கு காத்திருக்கும் போது கண்டதா ஹா ஹா ஹா ஹா அருமையான கவிதை....

அருண் பிரசாத் சொன்னது…

உங்களை பார்த்து பூச்சாண்டினு நினைச்சி பயந்து ஓடி இருக்கும்ங்க....ஹா ஹா ஹா

கவிதை நல்லா இருக்கு...:)

எம் அப்துல் காதர் சொன்னது…

கவிதையில் ஒரு தேவதை தரிசனம்!! ம்ம் நல்லா இருக்கு சரவணா!!

Harini Nathan சொன்னது…

//என்ன பெயரேனும் இருந்து விட்டு போகட்டும்
அன்பின் தேவதைகளுக்கு!//
நல்லா இருக்கு சரவணா :)

Raja சொன்னது…

பால்யகால நினைவுகளை வருடிச் செல்கின்றன ஆரம்ப வரிகள்...இறுதியில் வெளிப்படும் எழில், கவிதையை இன்னும் உயர்த்திவிட்டது சிகரத்திற்கு ... வாழ்த்துக்கள் பாலாஜி ...

இராமசாமி சொன்னது…

அருமை பாலாஜி :)

Priya சொன்னது…

//என்ன பெயரேனும் இருந்து விட்டு போகட்டும்
அன்பின் தேவதைகளுக்கு!//....மிக அருமை. ரொம்ப இயல்பா நல்லா எழுதியிருக்கிங்க.

அன்பரசன் சொன்னது…

ரசனை பிரமாதம் போங்க..

சுசி சொன்னது…

அழகு பாலாஜி.

டக்கால்டி சொன்னது…

Arumai

ஆனந்தி.. சொன்னது…

மீண்டும் ஒரு சூப்பர் கவிதை...இயல்பான ஒரு விஷயத்தை எவளவு அழகா கவி படுத்திருக்கிங்க பாலா...கிரேட் ...எனக்கு அன்பின் தேவதைன்னு முடிச்சது தான்ரொம்ப ,ரொம்பவே பிடிச்சிருக்கு...அழகான பினிஷிங் பாலா...

பாலா சொன்னது…

சூப்பர் என்று டெம்ப்லேட் கமெண்ட்தான் போட முடியும். உண்மையிலேயே சூப்பர்.

கோமாளி செல்வா சொன்னது…

//கையிலிருந்த ஜாமென்ட்ரி பாக்ஸை
பற்களால் மெல்லத் திறந்து
//

என்னோட சின்ன வயசு பள்ளிக்கூட நியாபங்கள் வருது அண்ணா ..
ரொம்ப இயல்பா இருக்கு ..

துரோணா சொன்னது…

"அன்பின் தேவதைகள்" சொற்றொடர் மூலம் -மனுஷ்யபுத்திரன்(அதீதத்தின் ருசி).அதை பயன்படுத்தியிருக்கும் விதம் அழகு நண்பரே.

சுந்தரா சொன்னது…

அழகு!

Balaji saravana சொன்னது…

எல்.கே
சித்ராக்கா
அமைதிச்சாரல்
கோபி
ரிஷபன்
பிரஷா
மகி
மோகன் அண்ணா
குமார்
இளங்கோ
ஆர்விஎஸ் அண்ணா
கௌசல்யா சகோ
நாஞ்சில் மனோ
அருண்
அப்துல்
ஹரிணி
ராஜா
ராமசாமி அண்ணா
ப்ரியா
அன்பரசன்
சுசி
டகால்டி
ஆனந்தி
பாலா
செல்வா
துரோணா
சுந்தரா
அனைவருக்கும் மிக்க நன்றி! :)

ஹேமா சொன்னது…

அவள் பெயர்தான் மனிதம் நிறைந்த மனிஷி.

பெயரில்லா சொன்னது…

மீனவற்காக எனக்கு தெரிந்ததை எழுதியிருக்கேன்.வாருங்கள்...

கருத்துரையிடுக