புதன், 19 ஜனவரி, 2011

பின்னொரு பொழுதில்..
உன் மௌனத்தோடு பேசிக்கொண்டிருக்கிறேன்
தீராத சொற்கள் இன்னும் மீதமிருக்கின்றன..

உன் புன்னகையோடு போரிட்டுக் கொண்டிருக்கிறேன்
எப்போதும் சரணடைகிறவனாகையால்
வெற்றி தோல்விகளில் கவனமில்லை எனக்கு..

சுற்றியலையும் உன் பேச்சுக்களோடு
கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறேன்
நான் பிடிபட்டுவிடும் தூரம் தான்..

பிம்பத்தின் அணைப்புகளில் சொக்கிக் கிடக்கிறேன்
தேகமெங்கும் உன் முத்த மணங்கள்..

உன் தேகமிசை பரவுகிறது எங்கும்
கவர்ந்து செல்ல காத்திருக்கிறது காற்று..

அசையாத திரைச் சீலை பின்னே
அரங்கேறுகிறது காதல் நிழலின் நடனம்..

வீடெங்கும் சிதறிய ப்ரியத் துண்டுகள்
சேகரித்துக் கொண்டிருக்கிறேன் எப்படியாவது
உன்னுருவம் படைத்துவிட!                        

31 கருத்துகள்:

ஆமினா சொன்னது…

கவிதை அருமையா இருக்கு சகோ

ஆனந்தி.. சொன்னது…

மீண்டும் மீண்டும் படிச்சுட்டே இருக்கேன் பாலா...எவ்வளவு அழகான நடை..அழகான தலைப்பு...வார்த்தை பிரயோகம்..காதல் உருக்கம்...ம்ம்..என்ன சொல்றதுன்னே தெரியலை...உங்களோட பெஸ்ட் கவிதையா இதை சொல்றேன் பால்ஸ்...அருமை..அற்புதம் ன்னு வார்த்தையை விட வேற இன்னும் உயர்ந்த வார்த்தை ஏதாவது இருந்தால் போட்டுக்கோங்க...

ராம்ஜி_யாஹூ சொன்னது…

பகிர்ந்தமைக்கு நன்றிகள்

Chitra சொன்னது…

http://konjamvettipechu.blogspot.com/2011/01/2010.html

உங்கள் தொடர் பதிவு அழைப்பை ஏற்று எழுதி விட்டேன்.... வாசித்து விட்டு, நோ bad words , ப்ளீஸ். ஹா,ஹா,ஹா,ஹா....

வித்யா சொன்னது…

நல்லாருக்கு.

Harini Nathan சொன்னது…

//அசையாத திரைச் சீலை பின்னே
அரங்கேறுகிறது காதல் நிழலின் நடனம்//
அருமை

சே.குமார் சொன்னது…

கவிதை அருமை.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சூப்பர்................

ஜெ.ஜெ சொன்னது…

கவிதை அருமை..

Kousalya சொன்னது…

சிதறிய பிரிய துண்டுகளின் சேகரிப்பு என்று முடியுமோ ?!

நல்லா இருக்கு பாலா...மிக ரசித்தேன்.

இராமசாமி சொன்னது…

சரிதான் :)

dheva சொன்னது…

அது சரி....

டைட்டில்லயே.. விழுந்துட்டேன்..போ தம்பி...!

கோமாளி செல்வா சொன்னது…

//உன் புன்னகையோடு போரிட்டுக் கொண்டிருக்கிறேன்
எப்போதும் சரணடைகிறவனாகையால்
வெற்றி தோல்விகளில் கவனமில்லை எனக்கு.//

//உன் தேகமிசை பரவுகிறது எங்கும்
கவர்ந்து செல்ல காத்திருக்கிறது காற்று..//

எனக்கு இதுக்கு கமெண்ட் எப்படி போடுரதுனே தெரியல அண்ணா .
அவ்ளோ பிடிச்சிருக்கு .! மறுபடியும் படிக்கணும்னு தோணுது ..
நீங்க உண்மைலேயே கவிஞர் ..

RVS சொன்னது…

கவிதைக்கு ஏற்ற கவித்துவமான படம்..
படம் கிடைத்த பின் கவிதை புனைந்தீர்களா.. அல்லது கவிதை புனைந்து படம் தேடினீர்களா.. எப்படியிருந்தாலும் சூப்பர். ;-) ;-)

மங்குனி அமைச்சர் சொன்னது…

நல்லா இருக்குங்க

Priya சொன்னது…

வரிகள் மிக அருமையா இருக்கு...மிகவும் ரசித்து படித்தேன்...!

Gopi Ramamoorthy சொன்னது…

\\வீடெங்கும் சிதறிய ப்ரியத் துண்டுகள்\\

அதை எப்படி அடுக்கினாலும் அவளுடைய உருவம் வந்துவிடும்!

எம் அப்துல் காதர் சொன்னது…

// உன் புன்னகையோடு போரிட்டுக் கொண்டிருக்கிறேன்//

ம்ம்ம்ம்... யாரது சொல்லவே இல்லையே!!

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

இன்னும் கொஞ்சம் எடிட் செய்தால் டாப் ....

Mahi சொன்னது…

கவிதை அருமையாக இருக்கு பாலாஜி.ஒவ்வொரு வார்த்தையாய் ரசித்தேன்,எழுதிய மனதின் வலி புரிகிறது..பிரிவின் வலி விரைவில் ஆறி மீண்டும் வசந்தம் வர வாழ்த்துக்கள்!

ஹேமா சொன்னது…

ப்ரியத் துண்டுகளும் போராட்டமுமாய் கவிதை அற்புதம்.பாராட்டலாம் பாலா !

vanathy சொன்னது…

சூப்பர் கவிதை. very touching lines.

S Maharajan சொன்னது…

//பிம்பத்தின் அணைப்புகளில் சொக்கிக் கிடக்கிறேன்
தேகமெங்கும் உன் முத்த மணங்கள்//

கவிதை அற்புதம் பாலா

சுசி சொன்னது…

ரொம்ப நல்லாருக்கு பாலாஜி.

Sriakila சொன்னது…

//வீடெங்கும் சிதறிய ப்ரியத் துண்டுகள்
சேகரித்துக் கொண்டிருக்கிறேன் எப்படியாவது
உன்னுருவம் படைத்துவிட! //
பிரமாதம்! என்று ஒரு வார்த்தையில் முடித்துவிட முடியாது. அதுக்கும் மேல...

அமைதிச்சாரல் சொன்னது…

அழகான கவிதை.. தலைப்பைப்போலவே!

தோழி பிரஷா சொன்னது…

அருமையான கவிதை...

Maheswaran.M சொன்னது…

கவிதை அருமை.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வீடெங்கும் சிதறிய ப்ரியத் துண்டுகள்
சேகரித்துக் கொண்டிருக்கிறேன் எப்படியாவது
உன்னுருவம் படைத்துவிட! //

அற்புதம்.. பாலாஜி சரவணா

சுந்தரா சொன்னது…

//வீடெங்கும் சிதறிய ப்ரியத் துண்டுகள்
சேகரித்துக் கொண்டிருக்கிறேன் எப்படியாவது
உன்னுருவம் படைத்துவிட! //

மிகமிக அழகான வரிகள்!

பாராட்டுக்கள் சரவணன்!

Kavi சொன்னது…

உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

கருத்துரையிடுக