திங்கள், 3 ஜனவரி, 2011

சிதறல்கள் 3

பிரியத்தின் இதம் கோர்த்த 
வார்த்தைகளின் தொட்டிலில் 
சுகமாய் உறங்குகிறது 
நம் காதல் குழந்தை! 


உன்னை அழைக்க 
உதடு வரை வந்த உன்பெயரை 
சொல்லாமல் விழுங்குகிறேன்
பெயர் கூட என்னை 
விட்டு விலகாமலிருக்க..


அதிரும் சத்தத்தில் 
வார்த்தைகள் வீசுகிறேன் 
வாகாய் முன்னேறி 
முத்தப் பூக்கள் வீசுகிறாய் 
தலை கவிழ்ந்து சரணடைகிறது 
என் கோபம்..


எனக்கெனவோ உனக்கெனவோ 
பெய்வதில்லை மழை! - எனினும் 
உன்நினைவு பொழியத் 
தொடங்குகிறது இம்மழை இரவில்..


நீண்ட மழையிரவில் 
எனைப் போர்த்தி படுத்திருக்கும் நீ
உன் விரல்களின் வழி 
எனக்குள் கடத்துகிறாய் 
ப்ரியத்தின் வெம்மையை..


தலை கோதி கண்சொருகி 
மார்பின் குறுக்கே கைபின்னி
மெல்ல இழைந்து இதழ் குவித்து 
கொஞ்சிக் கூப்பிடும் குரலில் ஒருசேர
சவால் விடுகிறாய் மயிலுக்கும் குயிலுக்கும்..


வாடிக் களைத்து வந்த நேரத்தில் 
அதிரடியாய்  ஆக்கிரமித்து 
முத்தச் சண்டை தொடங்குகிறாய், 
களைத்து ஓய்கிறது என் களைப்பு!32 கருத்துகள்:

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

vadai?

இளங்கோ சொன்னது…

//எனக்கெனவோ உனக்கெனவோ
பெய்வதில்லை மழை! - எனினும்
உன்நினைவு பொழியத்
தொடங்குகிறது இம்மழை இரவில்..//
Nice lines..

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அதிரடியாய் ஆக்கிரமித்து
முத்தச் சண்டை தொடங்குகிறாய்,
களைத்து ஓய்கிறது என் களைப்பு//
super super super

பெயரில்லா சொன்னது…

//எனினும்
உன்நினைவு பொழியத்
தொடங்குகிறது இம்மழை இரவில்..//


அட அட..
கவித.. கவித..

இராமசாமி சொன்னது…

கவிதை அருமை பாலாஜி :)

ஆமினா சொன்னது…

கவிதை சுப்பரா இருக்கு சகோ...

எங்கேயிருந்து தான் யோசிக்கிறீங்களோ ?????

சௌந்தர் சொன்னது…

உன்னை அழைக்க
உதடு வரை வந்த உன்பெயரை
சொல்லாமல் விழுங்குகிறேன்
பெயர் கூட என்னை
விட்டு விலகாமலிருக்க..////

மச்சி பெயரை சொல் நான் இருக்கேன் பயப்படாதே

சௌந்தர் சொன்னது…

கொஞ்சிக் கூப்பிடும் குரலில் ஒருசேர
சவால் விடுகிறாய் மயிலுக்கும் குயிலுக்கும்..////

அப்போ ரெண்டு பேர்னு சொல்லு

சௌந்தர் சொன்னது…

வாடிக் களைத்து வந்த நேரத்தில்
அதிரடியாய் ஆக்கிரமித்து
முத்தச் சண்டை தொடங்குகிறாய்,
களைத்து ஓய்கிறது என் களைப்பு!////

ம்ம்ம் இதுக்கு என்ன சொல்றது ஒன்னும் இல்லை நீ ரொம்ப டயர்டா இருப்பே அப்பறம் பேசுறேன்

Kousalya சொன்னது…

வருடத்தின் ஆரம்பத்தில் கவிதையுடன் அழகான வரவு...!

//உன்நினைவு பொழியத்
தொடங்குகிறது இம்மழை இரவில்.//

ம்...நல்லா நனைஞ்சி இருப்பீங்க !

சௌந்தர் வரி வரியா பிரிச்சி சொல்லிட்டான் !? தனியா நான் சொல்றதுக்கு என்ன இருக்கு பாலா ! அதே தான் என் கமெண்டும் ??!! :))

அடுத்த பதிவில் அரை சதம் போட போறீங்க...அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

Sriakila சொன்னது…

ரொமான்ஸ் தாண்டவமாடுது..

எஸ்.கே சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!

RVS சொன்னது…

சிதறல்கள் அப்படின்னு தலைப்பு வச்ச சிதறி போயிடறோம்.
முத்தச் சண்டை எவ்ளோ சூப்பர் டைட்டில். மிஸ் பண்ணிட்டியேப்பா..
மத்தபடி கவிதை நல்லா இருக்கு.. வீட்ல பொண்ணு பாக்கறாங்களா ... நீங்க பொண்ணு பாக்குறீங்களா.. சரி..சரி.. ;-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

//உன்னை அழைக்க
உதடு வரை வந்த உன்பெயரை
சொல்லாமல் விழுங்குகிறேன்
பெயர் கூட என்னை
விட்டு விலகாமலிருக்க.//

வாவ்....அழகான கவிதை...
இந்த லைன் உண்மையில் ரொம்ப பிடிச்சிருக்கு...! :-)

தொடர்ந்து எழுதுங்க..

Mahi சொன்னது…

/பிரியத்தின் இதம் கோர்த்த
வார்த்தைகளின் தொட்டிலில்
சுகமாய் உறங்குகிறது
நம் காதல் குழந்தை/

வார்த்தைகளை அழகாகக் கோர்த்திருக்கீங்க பாலாஜி!அருமையான கவிதை!

குட்டிப்பையா|Kutipaiya சொன்னது…

:) காதல் முத்தம் மழை
செம காம்பினேஷன் :)

பிரஷா சொன்னது…

கவிதை அருமை சகோ...

ஹேமா சொன்னது…

அன்பின் ஆழம்...களப்பைக்கூடக் கலைத்துக் களைக்கவைக்கிறது காதலும் கவிதையும்.
காதல் அழகு பாலா !

வித்யா சொன்னது…

நல்லாருக்கு..

Balaji saravana சொன்னது…

நீங்க தான் முதல்!
நன்றி சதீஷ்! :)

நன்றி இளங்கோ :)

நீங்க சொன்னா சரிதான்..
நன்றி இந்திரா :)

நன்றி ராமசாமி அண்ணா :)

நன்றி ஆமினா :)

மச்சி நீ இருக்கும் போது என்ன கவலை?
ரெண்டு பேரா? ஏன் மச்சி இப்பிடி? ;)
நன்றி சௌந்தர் :)

நன்றி கௌசல்யா :)

நன்றி அகிலா :)

நன்றி எஸ்.கே :)

அந்த தலைப்புலையும் எழுதிடுவோம்..
அப்படியெல்லாம் இல்லை அண்ணா!
நன்றி அண்ணா :)

நன்றி ஆனந்தி :)

நன்றி மகி :)

நன்றி குட்டிப்பையா :)

நன்றி பிரஷா :)

நன்றி ஹேமா :)

ஆனந்தி.. சொன்னது…

/எனக்கெனவோ உனக்கெனவோ
பெய்வதில்லை மழை! - எனினும்
உன்நினைவு பொழியத்
தொடங்குகிறது இம்மழை இரவில்..//

ஹாய் பால்ஸ்..welcome back :)(கவிதை மீண்டும் எழுதியதை சொன்னேன் ) எனக்கு இந்த வரிகள் ரொம்ப ரொம்ப பிடிச்சது...ரொம்ப ரசிச்சு..உணர்ந்து...உருகி உருகி எழுதின மாதிரி இருக்கே...ம்...நடக்கட்டும்..:)))))

Balaji saravana சொன்னது…

நன்றி வித்யா :)

வாங்க ஆனந்தி, நீங்க மிகவும் உருகி உருகி அதை படிச்ச மாதிரி இருக்கே.. ;)
ரசிச்சு படிச்சதற்கு ரொம்ப நன்றி ஆனந்தி :)

கோமாளி செல்வா சொன்னது…

//உன்னை அழைக்க
உதடு வரை வந்த உன்பெயரை
சொல்லாமல் விழுங்குகிறேன்
பெயர் கூட என்னை
விட்டு விலகாமலிருக்க..
//

ஆஹா , எப்படி அண்ணா இப்படியெல்லாம் .. ரொம்ப அருமையா இருக்கு ..!

சிவகுமாரன் சொன்னது…

\\\அதிரும் சத்தத்தில்
வார்த்தைகள் வீசுகிறேன்
வாகாய் முன்னேறி
முத்தப் பூக்கள் வீசுகிறாய்///
....
Love All என்று சொல்லி இறகுப் பந்து விளையாடுவது போல் இருக்கிறது. அருமை.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

சண்டைய.. நடக்கட்டும் .. நடக்கட்டும்..:))

Chitra சொன்னது…

கவிதையிலேயே அப்படியே உருகிட்டீங்களே ....... அசத்தல்!


////தலை கோதி கண்சொருகி
மார்பின் குறுக்கே கைபின்னி
மெல்ல இழைந்து இதழ் குவித்து
கொஞ்சிக் கூப்பிடும் குரலில் ஒருசேர
சவால் விடுகிறாய் மயிலுக்கும் குயிலுக்கும்..////


.... super!!!

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

நீண்ட மழையிரவில்
எனைப் போர்த்தி படுத்திருக்கும் நீ
உன் விரல்களின் வழி
எனக்குள் கடத்துகிறாய்
ப்ரியத்தின் வெம்மையை..

இப்படி இந்த பத்தி அமைந்திருந்தால் இன்னும் மிக சிறப்பாக இருக்கும் எந் தோன்றுகிறது ..

ஒரு முழுமையான தாம்பத்திய கவிதை இது ... மிக அபாரம் ... பாராட்டுக்கள் ...

சே.குமார் சொன்னது…

ஒரு முழுமையான தாம்பத்திய கவிதை.

எம் அப்துல் காதர் சொன்னது…

கவிதை அருமையா இருக்கு நண்பா! ஏன் ஆன்-லைன்ல வரமாட்டேங்கிறீங்க பாஸ்!!

Balaji saravana சொன்னது…

நன்றி செல்வா :)

நன்றி சிவகுமாரன் :)

நன்றி தேனக்கா :)

நன்றி சித்ராக்கா :)

நீங்கள் சொன்னபடி மாற்றிவிட்டேன்!
உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி செந்தில் அண்ணா :)

நன்றி குமார் :)

இனிமேல் வருவேன் நண்பா..
நன்றி அப்துல் :)

சுபத்ரா சொன்னது…

ஹைய்யோ... செம :-) சோ ரொமாண்டிக் அண்ட் லவ்லி லைன்ஸ்..

//நீண்ட மழையிரவில்
எனைப் போர்த்தி படுத்திருக்கும் நீ
உன் விரல்களின் வழி
எனக்குள் கடத்துகிறாய்
ப்ரியத்தின் வெம்மையை..//

என்ன ஒரு ப்ரியம்...!!

Balaji saravana சொன்னது…

நன்றி சுபா! :)

கருத்துரையிடுக