வியாழன், 6 ஜனவரி, 2011

சில நினைவுகள் - 2010

ஆண்டுகள் கடந்தாலும் சில நிகழ்வுகள் நிழல்களாய் நினைவுகளாய் படிந்து போகும் மனதில். அன்புச் சகோ கௌசல்யா கடந்த வருடத்தின் முக்கிய நிகழ்வுகள் பற்றி எழுத ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்கள். அவர்களுக்கு என் நன்றி!
தனித்தனி தலைப்புகள் இல்லாவிடினும், சகோ ஆமினா தொகுத்தது போல் மாதவாரியாக பட்டியல் இடாவிட்டாலும்  சில மறக்க முடியாத நிகழ்வுகள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள எனக்கும் மகிழ்ச்சி தான்.

இந்திரா மற்றும் மகி அழைத்திருந்த தொடர் பதிவுகள் எழுத சற்று தாமதமாகுவதால் அவர்கள் என்னை மன்னிக்க! வெகு சீக்கிரம் எழுதிவிடுகிறேன்.
பலவகை வானவெடிகள் வெடிப்பதை கழுத்து வலிக்க திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருக்கும் போது பிறந்தது கடந்த வருடத்தின் புத்தாண்டு நாள். அதனால் தான் இப்போது தலை திரும்பாமல் நினைவுகள் மட்டும்  திரும்பி சம்பவங்கள் கோர்க்கிறேன்! 
கடந்த ஆண்டு நிகழ்வில் முதலாய் நினைவில் வருவது தங்கையின் திருமணம். ஒரு பொறுப்பான அண்ணனாக ( தங்கை ப்ளாக் படிக்க மாட்டா, அதனால என்ன வேணா சொல்லிக்கலாம்  ;) ) ஜூன் மாதம் அவள் திருமணம். ஆல் இன் ஆல் அழகு ராணியான என் சந்திரா அத்தை ( அப்பாவின் தங்கை ) திருமணத்திற்கு தேவையான எல்லா விஷயங்களையும் தேவைகளையும் ஒற்றை ஆளாய் இருந்து கவனித்துக் கொண்டார். பத்திரிகை கொடுக்கவும் சில பண பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே என் இருப்பு அங்கே தேவைப் பட்டது!  அதற்கே எனக்கு பெண்டு கலண்டுடுச்சு ;) குறைகள் பெரிது படுத்தப்படாமல் திருமணம் இனிதே நடந்தேறியது. அன்புள்ளங்களின் ஆசியுடன் தங்கையின் மணவாழ்வு மகிழ்ச்சியாய் தொடர்கிறது.
திருமணத்திற்கு எடுத்த முப்பது நாள் விடுப்பு உள்ளங்கை மூடிய தண்ணீராய் வழிந்து போனது சந்தோசக் குளுமையும் தவிப்பின் வெம்மையும்  கொடுத்து! திருமணத்திற்கு பின் நடந்த ஒரு நிகழ்வில் மிகவும் மன உளைச்சல் அடையப் பெற்றேன்.  அந்த நிகழ்வின் வழி அன்பின் வார்த்தைகளும், சுற்றத்தின் உள்முகங்களும் அறியப் பெற்றேன். அந்நிகழ்வைப் பற்றி மேலும் விவரிக்க தயங்குவதால் விவரம் வேண்டாம்.என் பிரிவு கவிதைகளுக்கும், வலி மிகும் நினைவுகளுக்கும் அந்த நிகழ்வே  காரணம். அதிலிருந்து மெல்ல மீண்டெழுந்து கொண்டிருக்கிறேன்.  பதிவுலகம் அந்த நிகழ்வை மெல்ல மறக்கச் செய்து கொண்டிருக்கிறது என்பது உண்மை.

பணிக்கு திரும்பிய பின் ஒரு வெயில் தாழ்ந்த மாலையில் ஆரம்பித்தது தான் இந்த வலை பூ! அன்றைய நாள் ஜூலை ஒன்று! 
கடந்த ஒரு வருடமாக அவ்வப்போது வலை மேய்ந்தாலும், அப்போது தமிலிஷ் வழி பிரபல இடுகைகளும், எழுத்துலக  மும்மூர்த்திகள் வலை பக்கமும் அவ்வப்போது சென்று வருவது மட்டுமே நிகழ்ந்து கொண்டிருந்தது.  எழுத வேண்டுமென்கிற உத்வேகம் ஏனோ வரவேயில்லை அதற்கு காரணம் இரண்டு. முதலாவது என்ன எழுதுவது?! எவ்வளோவோ பேர் சிறப்பாக எழுதிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களை திரும்பிப் பார்க்க வைக்க இயலாவிடினும்,  உப்புக்குச் சப்பாணியாய் "நானும் இருக்கிறேன்" என்கிற நிலையிலாவது இருக்க வேண்டாமா என்கிற நினைப்பு!  
இரண்டாவது, பிறந்தது முதல் கவச குண்டலமாய் இருக்கும் என் சோம்பேறித் தனம்! ( ஆறு மாதத்தில் இதுவரை ஐம்பது பதிவுகள் தான் ) சரி ஆரம்பித்தாயிற்று என்ன எழுத? ஏதோ கொஞ்சம் நமக்குத் தெரிந்த, கவிதை என்று சொல்லுவதற்கு அரைமனதுடன் ஒப்புக்கொள்ளும் நிலையில் இருக்கும் வார்த்தை கோர்வைகளை எழுத ஆரம்பித்தேன்!  மெல்லச் சேரும் துளிகளென நட்புகள் சேரத் தொடங்கினார்கள்! 
ஆரம்பத்தில் பல நண்பர்களை ( என் பதிவுகள் படிப்பவர்களும், படித்து பின்னூட்டமும் இடுபவர்கள், வாக்கிடுபவர்கள் என அனைவரும் ) மெயிலில் கூட நான் தொடர்பு கொண்டதில்லை. இப்போது தான் ஒரு சிலரை மெயிலின்  வழியும் சாட்டின் வழியும் தொடர்பு கொள்கிறேன். ஆரம்பத்தில் நான் ஒருமுறை கூட தொடர்பு கொள்ளாத தேவா அண்ணா என் ஒரு கவிதையை படித்துவிட்டு நான் அவரது ரத்தம் என எண்ணியதாக பின்பு பேசுகையில் குறிப்பிட்டார். எனக்குள் மகிழ்ந்த அந்த தருணம் இன்னும் நினைவில். நன்றி தேவா அண்ணா!
பிரபலங்களுடன் இதுவரை பேசிய பழகிய அனுபவம் இல்லாததால் தான் நண்பர்கள் பலரை தொடர்பு கொள்ளாததற்கு காரணமேயன்றி வேறொன்றும் இல்லை. புரிந்த நட்புகள் அனைவரையும் என் நட்பு வட்டத்திற்குள் வைக்க ஆசை!  வரும் ஆண்டு அந்த ஆசையை பூர்த்தி செய்யும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

வாழ்க்கை தேவைகளுக்கும் வசதிகளுக்கும் சொந்த ஊரை விட்டு மதுரையில் குடியேறினோம் பிப்ரவரியில் . மதுரை எனக்குப் புதிதில்லை, நான் பிறந்த மிஷன் மருத்துவ மனையும் , சொந்தங்களும், நட்புகளும், கோவிலும், என் கல்லூரியும், ஒரு வருடம் (ஆறாம் வகுப்பு மட்டும்) படித்த செயின்ட் மேரிஸ் பள்ளியும்,  எப்போதும் என் மனதின் ஓட்டத்தில் ஆழப் படிந்திருக்கும்.

ஒன்பது ஆண்டுகள் கழித்து சந்தித்த பதின்ம வயதின் நண்பனும், அன்று பின்னிரவு வரை நீண்டிருந்த பேச்சுக்களும் என்றும் நினைவில் இருக்கும். நெருங்கிய நட்புக்களின் திருமணங்களும், சில நட்புகள் கிடைக்கப் பெற்ற குழந்தைகளும், சில நட்புகளின் பிரிதல்களும் கடந்த  ஆண்டின் நிகழ்வுகளில் சில. மெல்ல அவிழும் மொட்டைப் போல சில நினைவுகள் பூக்கும் தருணங்களும், நினைத்து வருந்தும் நிகழ்வுகளும் நடந்த கடந்த ஆண்டு ஒரு படிப்பினையை விட்டுச் சென்றுள்ளது. இந்தப் படிப்பினை வரும் ஆண்டுகளின் நிகழ்வுகளை எதிர் கொள்ள உதவும் என்ற நம்பிக்கையுடன் இதை நிறைவு செய்கிறேன்.

வழக்கம் போல தொடர் பதிவைத்  தொடர நட்புக்களை அழைக்க வேண்டுமென்கிற விதிமுறையால் நான் அழைக்க விரும்புவது:

சுபத்ரா 
சுசி
கல்பனா
"ஹைக்கூ அதிர்வுகள்"  ஆனந்தி 
இந்திரா 
சித்ராக்கா
ஆர்விஎஸ் அண்ணா
பாலா
நல்லநேரம் சதீஷ் 
அருண்பிரசாத் 

அனைவரும் என் அழைப்பை மறுக்காமல் ஏற்று எழுத வேண்டுகிறேன் :)


  

50 கருத்துகள்:

கலாநேசன் சொன்னது…

நினைவலைகள்...உங்கள் கவிதைகளின் ரசிகன் நான். தொடர்ந்து எழுதவும்.

எல் கே சொன்னது…

இந்த ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சியை மட்டுமே தரட்டும்

இராமசாமி சொன்னது…

நினைவலைகள் நன்று....

RVS சொன்னது…

பாலாஜி!!
ஆபிசில்
ஆணிகளின்
ஆக்கிரமிப்பில் இருக்கிறேன்..
கொஞ்சம் கால அவகாசம் தேவை.. நிச்சயம் செய்கிறேன்.
கட்டுரை நன்றாக வருகிறது உங்களுக்கு.. கவிதை மட்டும் இல்லாமல் இதுபோன்றும் நிறைய எழுதுங்கள்... புத்தாண்டு எழுத்தாண்டாய் மாறட்டும் உங்களுக்கு.. வாழ்த்துக்கள்..

Gopi Ramamoorthy சொன்னது…

நல்லா இருக்கு பாலாஜி

Chitra சொன்னது…

ஆஹா.... மலரும் நினைவுகளில் உலா வந்து விட்டு பார்த்தால், என் பெயரும் இருக்கிறதே..... இந்த மாத இறுதிக்குள் எழுத இருக்கிறேன்.
அழைத்தமைக்கு நன்றிங்க....

ஆமினா சொன்னது…

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ!!!

ஆமினா சொன்னது…

சுவாரசியமா இருந்தது உங்க டைரி!!!

என்னையும் கோர்த்துவிட்டதுக்கு நன்றிங்க

ஆனந்தி.. சொன்னது…

பாலா...ரொம்ப டச்சிங் ...அந்த கசப்பான விஷயத்தை படிப்பினை னு பாசிடிவ் ஆ எடுத்துக்கிட்ட உங்க apporach க்கு பல பூங்கொத்து....இந்த ஆண்டு எல்லா காயங்களுக்கும் உங்களுக்கு மருந்தா இருக்கும் பால்ஸ்..நிறைய கவிதை எழுதுங்க...எப்பவும் போலே நல்லா புள்ளையா இருங்க...

ஆனந்தி.. சொன்னது…

பாலா...டெய்லி பதிவு போட்டால் தான் சுருசுறுப்புன்னு இல்ல:))...கொஞ்சம் உருப்படியா, குறைச்சலா பதிவு போட்டாலும் பெஸ்ட் தான் என்னை பொறுத்தவரை...(ஹீ..ஹீ..என்னை இந்த உருப்படி லிஸ்ட் இல் சேர்த்துக்காதிங்க:))) ) நான் இப்ப தான் 25 வந்துருக்கேன் செப்டம்பர் இல் ஆரம்பிச்சு:)...அப்போ நான் எவளவு சோம்பேறின்னு பார்த்துக்கோங்க.....ஹ ஹ...வரலாறு முக்கியம் சகோ..:))) ok..it s the time for 50'th post celebration...:)) Congrats brother...keep rock.....:))

வித்யா சொன்னது…

Well written..

பெயரில்லா சொன்னது…

ஆஹா...
என்னையும் மாட்டிவிட்டுட்டீங்களா????

நினைவலைகளுக்கா பஞ்சம்??
கட்டாயம் எழுதுகிறேன் நண்பரே.

மோகன் குமார் சொன்னது…

நல்லாருக்கு. எல்லா வருடமும் சந்தோசம், துக்கம் ரெண்டும் சேர்ந்து தான் வரும். சந்தோசம் நிறைய இருந்தா ரைட்டு

அருண் பிரசாத் சொன்னது…

நான் செண்டிமெண்டாக டைரி எழுதும் பழக்கத்தை விட்டேன்... ஆனால் நினைவலைகளை தானே பகிர சொல்கிறீர்கள். தாராளமாக செய்யலாம்

கவிதைகளில் கலக்கும் உங்களுக்கு கட்டுரைகளும் நன்றாக வருகிறது. இந்த வருடம் எல்லா வெற்றிகளும் பெற வாழ்த்துக்கள்

தக்குடு சொன்னது…

//பாலா...டெய்லி பதிவு போட்டால் தான் சுருசுறுப்புன்னு இல்ல:))...கொஞ்சம் உருப்படியா, குறைச்சலா பதிவு போட்டாலும் பெஸ்ட் தான் என்னை பொறுத்தவரை//

well said anandhi madam, quantityla illai qualityla irukku, moreover we have to give some time for our readers to read our post(mokkai'snum vasikalam). Great year ahead. (srry for english, no tamil font in my office system)

அமைதிச்சாரல் சொன்னது…

உங்க டைரியில் எழுதப்பட்ட நினைவலைகள் நல்லாருக்கு..

Harini Nathan சொன்னது…

நினைவலைகள் நல்லாருக்கு :)

பாலா சொன்னது…

என்னையும் அழைத்தமைக்கு நன்றி நண்பரே. கண்டிப்பாக எழுதுகிறேன்.

அன்புடன் அருணா சொன்னது…

பூங்கொத்து!

Mahi சொன்னது…

நினைவுகளை அழகாகக் கோர்த்துட்டீங்க..சரளமான எழுத்துநடை உங்களுக்கு. ரசித்துப் படித்தேன்.

வீட்டுக்கு வீடு வாசப்படி பாலா! கல்யாணம் பண்ணிப்பார் என்று சும்மாவா சொன்னாங்க? :)

/கொஞ்சம் உருப்படியா, குறைச்சலா பதிவு போட்டாலும் பெஸ்ட் தான் என்னை பொறுத்தவரை../நானும் இதை ரிபீட் பண்ணிக்கறேன்.தக்குடு சொன்னது போல quantity-யை விட quality-க்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதே என் எண்ணமும்! ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் த ரேஸ்! :) :)

சுபத்ரா சொன்னது…

நன்றி BS :-)

அழகா கோர்வையா எழுதிருக்கீங்க. எனக்கு எதுவுமே நியாபகம் வர மாட்டேங்குது. இருந்தாலும் நினைவுபடுத்தி எழுதுறேன்.. :-)

Sriakila சொன்னது…

நல்ல அனுபவங்கள். தொடரட்டும் உங்கள் பயணம்...

சௌந்தர் சொன்னது…

என்ன மச்சி அந்த பொண்ணு பத்தி சொல்லவே இல்லை சரி விடு இந்த வருடம் எல்லாம் சந்தோசமா நடக்கும்

சுசி சொன்னது…

தங்கைக்கு இனிய வாழ்த்துக்கள் இப்போதும் சொல்லலாம்னு நினைக்கிறேன்..

இந்த ஆண்டு உங்களுக்கு நிறைவை தரட்டும்.

ரொம்ப நன்றி பாலாஜி.. இந்த வருடத்துக்கான முதல் தொடர் பதிவு.. கண்டிப்பா எழுதறேன். கொஞ்சம் டைம் குடுங்க :)

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி

வெறும்பய சொன்னது…

என்ன நண்பா இப்படி சட்டுன்னு எழுதிட்டே ... நாங்களும் எழுத வேண்டாமா...

நல்ல பகிர்வு...

அன்பரசன் சொன்னது…

நினைவுகள் பலவிதம்.
ஒவ்வொன்றும் ஒருவிதம்.

dheva சொன்னது…

தம்பி

செமயான நினைவுகளின் தொகுப்பு.........!

என்ன தம்பி நன்றி எல்லாம்..........யூ ஆர்.....கிரியேட்டிவ் பெர்சன் பா...!

வாழ்த்துக்கள் தம்பி....!

ஹேமா சொன்னது…

அழகான நெகிழ்வான நினைவலைகள்.என்னையும் கௌசி கூப்பிட்டிருக்கா.எனக்கு என் மக்களின் சோகம் தவிர வேறெதுவும் வரல.என்ன எழுதப்போறேனோ.கலக்கிட்டீங்க பாலா !

Balaji saravana சொன்னது…

நன்றி கலாநேசன் :)
நன்றி எல்.கே :)
நன்றி ராமசாமி அண்ணா :)
நன்றி ஆர்.வி.எஸ் அண்ணா :)
நன்றி கோபி :)
நன்றி சித்ராக்கா :)

Balaji saravana சொன்னது…

நன்றி ஆமினா :)

உங்களோட ஊக்கம் எனக்கு வலிமை! :)
மிக்க நன்றி ஆனந்தி.

நன்றி வித்யா :)

நன்றி இந்திரா :)

நன்றி மோகன் அண்ணா :)

நன்றி அருண் :)

Balaji saravana சொன்னது…

வாங்க தக்குடு!
நன்றி :)

நன்றி அமைதிச்சாரல் :)

நன்றி ஹரிணி :)

நன்றி பாலா :)

நன்றி அருணா :)

நன்றி மகி :)

Balaji saravana சொன்னது…

நன்றி சுபா :)

நன்றி மச்சி :)

உங்க ஆசி எப்பவும் தங்கையுடன் இருக்கட்டும்.
மிக்க நன்றி சுசி :)

நன்றி சதீஷ் :)

நன்றி ஜெயந்த் :)

நன்றி அன்பு :)

நன்றி தேவா அண்ணா :)

நன்றி ஹேமா :)

பெயரில்லா சொன்னது…

தங்கை ப்ளாக் படிக்க மாட்டா, அதனால என்ன வேணா சொல்லிக்கலாம் //
ஆனா நான் படிப்பேனே .... எனக்கு தெரியுமே..

[ma]நீ ரொம்ப ரொம்ப பொறுப்பான அண்ணா ,, அக்கா கல்யாணத்த ஜாம் ஜாம் னு நடத்துனேயே[/ma]

திருமணத்திற்கு பின் நடந்த ஒரு நிகழ்வில் மிகவும் மன உளைச்சல் அடையப் பெற்றேன்//
யாரு அது ? அப்பிடி என்ன விஷயம்

முதலில் தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி அருமை நண்பா!!
என் ப்ராஜெக்ட் ஆணி நிமித்தமாக சிறு கால இடைவேளை வேணும் நண்பா !
ஆனால் நிச்சயம் எழுதுகிறேன் இம்மாத முடிவுக்குள்

Kousalya சொன்னது…

ரொம்ப தாமதமாக வந்ததிற்கு பொறுத்து கொள்ளவும்...வோட் மட்டும் போட்டு விட்டு வேலை காரணமாக கமெண்ட்ஸ் போட நேரம் இல்லாமல் போய் விட்டது.

என் அழைப்பை ஏற்று தொடர் பதிவை எழுதியதுக்கு நன்றி பாலா...

பொறுப்புள்ள அண்ணனாக தங்கையின் கல்யாணத்தை பொறுப்பாக நடத்திய அந்த இனிய நிகழ்வை படித்து சந்தோசமாக இருந்தது...

அதன் பின் நடந்தவை எதுவும் இனியும் மனதில் இருப்பது, உங்களின் இன்றைய வாழ்வை மகிழ்ச்சி அற்றதாக மாற்றி விடும்...! 'இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம்' என்று ஒவ்வொரு நாளையும் நினைத்து கொள்ளுங்கள்........இனி எல்லாம் சுகமே.......

பதிவுலகதிற்க்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பை தெரிந்து கொண்டேன்.

//இந்தப் படிப்பினை வரும் ஆண்டுகளின் நிகழ்வுகளை எதிர் கொள்ள உதவும் என்ற நம்பிக்கையுடன் இதை நிறைவு செய்கிறேன்.//

இத்தகைய திட மனதின் முன் மாமலையும் சிறு கடுகு அளவு தானே ...!!

:))

vanathy சொன்னது…

நல்லா இருக்கு. இப்படி ஞாபகம் வைச்சு எழுத எனக்கு ஒண்ணுமே வரமாட்டேன் என்கிறது. பொறுப்பான அண்ணாவா தங்கைக்கு திருமணம் நடத்தி இருக்கிறீங்க. அதுவே பெரிய சாதனை தான். உங்கள் திருமணம் எப்ப???

( லேட்டா வந்ததற்கு பனிஷ்மென்ட் தர வேண்டாம் )
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தோழி பிரஷா சொன்னது…

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்
http://pirashathas.blogspot.com/2011/01/blog-post_07.html

கோமாளி செல்வா சொன்னது…

//கடந்த ஆண்டு நிகழ்வில் முதலாய் நினைவில் வருவது தங்கையின் திருமணம். ஒரு பொறுப்பான அண்ணனாக ( தங்கை ப்ளாக் படிக்க மாட்டா, அதனால என்ன வேணா சொல்லிக்கலாம் ;) //

நீங்க உண்மைலேயே ரொம்ப நல்லவர் !

கோமாளி செல்வா சொன்னது…

//அவர்களை திரும்பிப் பார்க்க வைக்க இயலாவிடினும், உப்புக்குச் சப்பாணியாய் "நானும் இருக்கிறேன்" என்கிற நிலையிலாவது இருக்க வேண்டாமா என்கிற நினைப்பு!/

ஹி ஹி ஹி , என்னைய மாதிரி !

Priya சொன்னது…

அழகான நினைவுகள்!

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

ஹையா தப்பிச்சிட்டேன்.. தப்பிச்சிட்டேன்..:))

விக்கி உலகம் சொன்னது…

உங்கள் நினைவலைகளின் தொகுப்பு நல்லா இருக்கு.

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ சொன்னது…

நேர்த்தியான எழுத்து நடை மிகவும் ரசிக்க வைக்கிறது வார்த்தை தேர்ந்தெடுப்பு . கடந்த அனுபவங்களை மிகவும் அழகாக புதிப்பித்திருக்கும் விதம் ரசிக்க வைக்கிறது . பகிர்வுக்கு நன்றி

Balaji saravana சொன்னது…

நன்றி கல்பனா :)

நன்றி சகோ :)

நன்றி வானதி :)

விருதுக்கு நன்றி பிரஷா :)

நன்றி செல்வா :)

நன்றி ப்ரியா :)

நன்றி தேனக்கா :)
அடுத்த முறை தப்ப முடியாது ;)

நன்றி விக்கி உலகம் :)

நன்றி பனித்துளி சங்கர் :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. :-)

உங்கள் எண்ண அலைகளின் பகிர்வில் உள்ள, சந்தோசம், மன வருத்தம்.. எல்லாம் படித்தேன்..
உங்க மனம்,... மீண்டு வருவதில் சந்தோசம்.. அதிலும்.. பதிவுலகும் அதற்கு ஒரு காரணம்னு,
சொல்லிருக்கீங்க. சந்தோசங்க.. :-)

நிறைய எழுதுங்க.. எதிர்ப்பார்ப்புடன்.. நட்பு.. :-))

மங்குனி அமைச்சர் சொன்னது…

சரவணன் ....... நல்ல ஸ்டைல்ல சொல்லி இருக்கீங்க ,,,, நல்லா இருக்கு

கவிதை காதலன் சொன்னது…

எல்லா நிகழ்வுகளும் ஏதோ ஒன்றை மனதில் சுவடுகளாகத்தான் நிறுத்திப்போகின்றன.. இந்திரா அழைத்த தொடர்பதிவை சீக்கிரம் எழுதுங்க.. வெய்ட்டிங்..

சிவகுமாரன் சொன்னது…

கனவுகள் நனவாக வாழ்த்துக்கள்

எம் அப்துல் காதர் சொன்னது…

தல நான் வந்து பின்னூட்டம் போடலேன்னு தானே அடுத்தப் பதிவ போடாம வச்சிருக்கீங்க. எனக்குத் தெரியும். நண்பன்னா இப்படி தான் இருக்கோணும். ஹா..ஹா...

எல்லா வாழ்த்துகளும் சேர்த்து சொல்லிவிட்டு, பதிவு நல்லா இருக்குன்னு சொல்லிபுட்டு, அடுத்தப் பதிவ சீக்கிரம் போடுங்கன்னு சொல்லிப்புட்டு மீ எஸ் ஆகிறேன். ரைட்டா. நல்ல பிள்ளைல :-)))

சே.குமார் சொன்னது…

நல்லா இருக்கு.
நிறைய எழுதுங்க.

கருத்துரையிடுக