செவ்வாய், 28 டிசம்பர், 2010

பத்தாண்டுகளில் பத்துப் பாடல்கள் - தொடர்பதிவு

அன்பு நண்பர் பாலா கடந்த பத்தாண்டுகளில் பிடித்த பத்து  பாடல்களை தொகுக்கும் தொடர் பதிவிற்கு அழைத்திருந்தார். அவருக்கு என் நன்றி.

தமிழ் திரையிசைப் பாடல்களை கேட்டு வரும் ஒரு சாதாரண ரசிகனாய், விமர்சனப் பார்வையில்லாது ஒரு சின்ன யோசிப்பில் விளைந்த ஒரு சிறு கணக்கீடு.

தமிழில் வருடத்திற்கு சராசரியாக சுமார் நூறு படங்கள் வெளியாகின்றன. படத்திற்கு சராசரியாக ஐந்து பாடல்கள் எனக் கணக்கிட்டால் ஐநூறு பாடல்கள் வருடத்திற்கு. அவற்றுள் ஐம்பது சதவீதப் பாடல்கள் பல்வேறு காரணங்களால்  வெளிவந்த சுவடே தெரியாமல் போய்விடுகின்றன. மீதமுள்ள ஐம்பது சதவீதத்தில் இருபது சதவீத பாடல்கள் அதாவது ஐம்பது பாடல்கள் முதல் முறை கேட்டவுடன் மக்கள் மனதில் இடம் பிடிக்கின்றன. அடுத்த பத்து சதவீதப் பாடல்கள் சேனல்களின்  இடைவிடாத நச்சரிப்பால் ( கொலைவெறியை கிளப்பும்  பாடல்களும் ) ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்து தொலைகின்றன.
அதாவது வருடத்திற்கு சுமார் எழுபத்தைந்து பாடல்கள். பத்து வருடங்களில் எழுநூற்று ஐம்பது பாடல்கள் ;)
என்ன மயக்கம் வருதா? சரி இசை கொண்டு  தெளிய வச்சுருவோம்! ;)

இப்பதிவில், மெல்லிசை, மயக்குமிசை, கிராமிய இசை, குத்துப் பாட்டுக்கள், ரீமிக்ஸ் பாடல்கள், கொலைவெறிப் பாடல்கள் தவிர்த்து துள்ளலிசை பாடல்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன். உங்களுக்கும் பிடிக்கும் என.

1.யாக்கைத் திரி, காதல் சுடர் - ஆய்த எழுத்து - 2004

மனதை மயக்கும் மெல்லிசை எவ்வளவு மகிழ்ச்சி தருமோ அதேபோல் சில துள்ளலிசைப் பாடல்களும்  குதூகலம் தருபவை, அவற்றுள் எப்போதும் முன்னால் நிற்பது இப்பாடல். ஆஸ்கர் நாயகன் ரகுமான் இசையமைத்து அவருடன் சுனிதா சாரதி சேர்ந்து  பாடிய பாடல். இப்பாடல் வைரமுத்துவின் கவிதைத் தொகுப்பிலுள்ள ஒரு கவிதையின்  சிலவரிகள் மட்டும் இடம்மாற்றி உருவாக்கப் பட்டது. மழை ஓய்ந்தபின்பும் சாரல் தொடர்வது போல பாடல் முடிந்தும் அதன் அதிர்வு தொடரும் நாளெல்லாம்.

2.ஓராயிரம் யானை கொன்றால் - நந்தா - 2001

மெல்லிசைக்கு பெயர்போன யுவன்சங்கர் ராஜாவின் ஆரம்ப கால பாடல்களுள் அதிர வைக்கும்  ஒன்று. இந்த வேகமிசைப் பாடலைப் பாடியது உன்னிக் கிருஷ்ணன் என்றால்  நம்புவது கொஞ்சம் கடினம் தான். உன்னிக் கிருஷ்ணனின் தேன்குரல், ஹை பிச்சில் செய்யும் மாயாஜாலங்களை மிஸ் செய்து விடாதீர்கள்.

3.தீபாவளி தீபாவளி - சிவகாசி - 2005

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் ஒரு வேகமிசைப் பாடல். பாடல் வரிகள் பற்றி உஹூம்..ஒன்றும் சொல்வதற்கில்லை,  பாட்டின் இசையில் இடையே  இட்டுநிரப்புவதற்காக மட்டும் தான். இப்பாடலை எழுதியது யாரென்று தெரியவில்லை அவருக்கு என் வருத்தம் கலந்த சாபங்கள்.


4.ஆல் டே ஜாலி டே - மனதை திருடி விட்டாய் - 2001

யுவன் ஷங்கர் ராஜாவின் மற்றொரு பாடல். ஷங்கர் மகாதேவன் மற்றும் யுவன் சேர்ந்து பாடியது.  கல்லூரிப் பருவத்து கவலையில்லா நாட்களின் நினைவுகள் இப்பாடல். Life is  a game show :)5.உயிரின் உயிரே - காக்க காக்க - 2003

ஹாரிஸ் ஜெயராஜின் ஆல் டைம் பேவரிட் இப்பாடல். தாமரை வரிகள் இன்னும் இன்னும் என கேட்கத் தூண்டும். படத்தின் தொடக்கத்திலே இப்பாடல் வந்துவிட்டதால் படம் முழுவதும் அந்த அதிர்வு இருந்து கொண்டே இருந்தது.6.சரோஜா சாமான் நிக்காலோ - சென்னை 600028 -  2007

மறுபடியும் யுவன். இம்முறை ஷங்கர் மகாதேவனுடன் பிரேம்ஜி அமரனும் அதிர வைத்திருப்பார்கள். எப்போதும் வெற்றிக் கூட்டணியான  யுவன் - வெங்கட் பிரபு கூட்டணியின் "மங்காத்தா"வுக்கு ஆவலோடு காத்திருக்கிறேன்.  இப்பொழுதெல்லாம் யுவனின் இசையில் மெல்லிசைப் பாடல்களே மிக அதிகமாய் வருகின்றன. அவர் ஒரு பேட்டியின் போது குறிப்பிட்டார், மெல்லிசைப் பாடல்கள் தான் காலங்கள் கடந்து நிற்குமென்று. அதனால் தான் அவர் இப்பொழுது வேகமிசைப் பாடல்கள் அதிகமாக உருவாக்குவதில்லையோ என்னவோ?7.சம்போ சிவா சம்போ - நாடோடிகள் - 2009

சுந்தர் சி பாபுவின் இசையில்  ஷங்கர் "மஹா" தேவன் பின்னிப்  பெடலெடுத்திருக்கும் வேகமிசைப் பாடல். கேட்கும் போதே உடம்பில் ஒரு வீறு எழுமே! அப்பப்பா!8.மாரோ மாரோ - பாய்ஸ் - 2003

ரஹ்மானின் மற்றொரு பாடல். ஆரம்பத்திலும் இடையிலும்  வரும் ட்ரம்ஸ் துள்ளவைக்கும் மனதை ;) ஷங்கர் தன்னுடைய படங்களில் கண்டிப்பாக ஒரு துள்ளலிசைப் பாடலாவது வருமாறு பார்த்துக் கொள்வார். அதை அவரது முதல் படத்திலிருந்து சமீபத்திய படம் வரை தொடர்ந்து  கொண்டிருக்கிறார்.9. பைவ் ஸ்டார் பைவ் ஸ்டார் - 5 ஸ்டார் - 2002


சிறகடித்துத் திரிந்த கல்லூரி பருவத்து நாட்களின் நட்பின் கைகோர்ப்பு இப்பாடல். அனுராதா ஸ்ரீ ராம் பாடியது. இப்பாடலுக்கு இசை பரசுராம் ராதா.

பாடல்கள் கேட்டாச்சா? கால்கள் தாளம் போடுதா இன்னும். என்ன, பத்து என்று சொல்லிவிட்டு  மேலே மொத்தம் ஒன்பது பாடல்கள் தான் இருக்குன்னு நினைக்கிறீங்களா? அந்த பத்தாவது பாடல் நீங்க சொல்வதற்காகத்தான். நான் குறிப்பிட இந்த மாதிரி துள்ளலிசை (அ) வேகமிசைப் பாடல்களில் கடந்த பத்தாண்டுகளில்  உங்களுக்குப் பிடித்த பாடல் ஒன்றை பின்னூட்டத்தில் சொல்லிவிட்டுப் போங்கள் அன்புள்ளங்களே!

பிறக்கும் புத்தாண்டு எல்லோருக்கும், எல்லாவகையிலும் கொண்டாட்டமாய் அமைய என் வாழ்த்துக்கள்!   Happy New Year :)


    

35 கருத்துகள்:

ஆனந்தி.. சொன்னது…

10 ஆண்டு 10 பாட்டு..கொஞ்சம் கஷ்டமான வேலை தான்...அனைத்துமே நல்ல பாட்டுகள்...Happy New Year Balaji! :))

ஆமினா சொன்னது…

//என்ன மயக்கம் வருதா? சரி இசை கொண்டு தெளிய வச்சுருவோம்! ;)//

கேப்டனுக்கு தம்பியா நீங்க?? :))

ஆமினா சொன்னது…

//இப்பொழுதெல்லாம் யுவனின் இசையில் மெல்லிசைப் பாடல்களே மிக அதிகமாய் வருகின்றன//

சோகமா இருந்தா மெல்லிசை அமைப்பாங்களோ என்னவோ

வெறும்பய சொன்னது…

அனைத்தும் நல்ல பாடல்கள் தான் .. இனாலும் இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஆயுத எழுத்து படத்திலுள்ள பாடல் தான்..

ஆனந்தி.. சொன்னது…

இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ ...(எந்திரன்..) இது என்னோட சாய்ஸ் பாலாஜி...:))

சே.குமார் சொன்னது…

அனைத்துமே நல்ல பாட்டுகள்.

சங்கவி சொன்னது…

அனைத்து பாடல்களும் அருமை...

அருண் பிரசாத் சொன்னது…

நல்ல தொகுப்பு


(டெம்பிளேட் கமெண்ட்தான் இதுக்கு போட முடியும் பாலாஜி)

சந்திரிகை சொன்னது…

எல்லாமே அருமை . என் சாய்ஸ் உயிரின் உயிரே

பாலா சொன்னது…

முதலில் என் அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.

துள்ளலிசை பாடல்களில் மன்மதராசா பாடல் மிகப்பெரிய ஹிட்டாக இருக்கலாம்.

தீபாவளி பாடல் தாகூர் என்ற தெலுங்கு படத்தில் வரும் பாடல் ஒன்றை கொஞ்சம் வேகமாக அமைத்தது போல தோன்றுகிறது

http://www.youtube.com/watch?v=r5pSLWY9Nd4

Balaji saravana சொன்னது…

வாங்க ஆனந்தி!
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உங்களோட பாட்டு எனக்கும் பிடிக்கும் :)
நன்றி ஆனந்தி

ஆஹா.. ரைட்டு! கிளம்பிட்டீங்களா? ;)
நன்றி ஆமினா.

நன்றி ஜெயந்த்

Balaji saravana சொன்னது…

@குமார்
@சங்கவி
@அருண்

உங்களுக்கு பிடிச்ச பாட்ட சொல்லாம போறீங்களே பாஸ்?!
வருகைக்கு நன்றி :)

Balaji saravana சொன்னது…

வாங்க ஜீவாம்மா.
நன்றி

வாங்க பாலா.
மன்மத ராசா பாடல் தான் பட்டி தொட்டியெங்கும் பட்டய கிளப்புச்சே :)
அந்த தெலுங்கு பாடல் கேட்டதில்ல. கேட்டுர்றேன்.
நன்றி பாஸ்!

ரஹீம் கஸாலி சொன்னது…

நல்லதொரு கலைவையான பாடல் தொகுப்பு

கோமாளி செல்வா சொன்னது…

அட இதுல சில பாட்டு மட்டும் தான் எனக்குப் பிடிக்கும் ..
ஹி ஹி ஹி ..

vanathy சொன்னது…

10 ஆண்டுகளில் 10 பாட்டுகள்... யாருப்பா இப்படியெல்லாம் கஷ்டமா யோசிச்சு தொடர்பதிவுக்கு கூப்பிடுறது. நான் இதில் தேறமாட்டேன்.
உங்கள் தெரிவுகள் சூப்பர்.

பெயரில்லா சொன்னது…

பாலா ரொம்ப அருமையான collection
சூப்பர் !!!!

ஹேமா சொன்னது…

வித்தியாசமான ரசனை பாலா.
ஓராயிரம் யானைகள்...எனக்கு மிகவும் பிடிச்சது !

இராமசாமி சொன்னது…

good collections balaji :)

அஹமது இர்ஷாத் சொன்னது…

Your View Very Different Balagi.. good..

Mahi சொன்னது…

நிறையப் பாடல்கள் எனக்கு புதுசா இருக்கு பாலாஜி! :)
யாக்கை திரி...-அடிக்கடி கேட்போம்.ஆயுத எழுத்தில் எல்லாப் பாடல்களும் பிடிக்கும்.

பத்தாவது பாடல்...ம்ம்ம்ம்ம்,யோசிச்சிட்டு வரேன். :):)

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

துள்ளலான தொகுப்பு! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பாலாஜி.

சௌந்தர் சொன்னது…

10 ஆண்டு....10 பாட்டு சூப்பர்...எல்லாம் பாட்டும் எனக்கும் பிடிக்கும்

சுசி சொன்னது…

அனைத்தும் நல்ல பாடல்கள் பாலாஜி.

எனக்கு புலி உறுமுது பிடிக்கும்ங்க.

எம் அப்துல் காதர் சொன்னது…

"உயிரின் உயிரே", "மாரோ மாரோ", மை ஆல் டைம் ஃபேவரிட். பதிவு சூப்பர்!!

ஆதிரா சொன்னது…

இதுவரை கேட்டிராத பாடல் “யாக்கைத் திரி காத்ல சுடர்” இசையால் ஒரு வேளை பாடல்வரிகள் மக்களால் ரசிக்கப்படாமல் போனதோ.. அவ்வளவு அழகான
பாடல் ஒலிபரப்பில் அடிக்கடி இடம் பெற்றதாகத் தெரியவில்லை..

நல்ல தொகுப்பு... நன்றி..

ஆதிரா சொன்னது…

ஆய்த எழுத்து ரிலீஸ் ஆனவுடனே நான் பார்த்த படம் வேறு..

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

director சொன்னது…

வணக்கம் தம்பி, இந்த பத்து வருசத்துல ஒரு இளையராஜா படம்கூட பாக்கலயாப்பா?

Balaji saravana சொன்னது…

வாங்க கஸாலி
நன்றி :)

நன்றி செல்வா! :)

ஆமா வானதி. யாரு இந்த தொடர் பதிவ ஆரம்பிச்சாங்கன்னே தெரியல!
நன்றி :)

நன்றி கல்பனா :)

நன்றி ஹேமா :)

நன்றி ராமசாமி அண்ணா :)

நன்றி அஹமத் :)

யோசிச்சு சொல்லுங்க மகி :)
நன்றி

நன்றி சைகொப :)

நன்றி சௌந்தர் :)

அந்தப் பாட்டும் செம பீட் தான் :)
நன்றி சுசி

நன்றி அப்துல் :)

வாங்க ஆதிரா!
ஆமாம் அது அவ்வளவு அழகான பாடல்! மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் இசை, வரிகள்!
நன்றி :)
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)

Balaji saravana சொன்னது…

வணக்கம் அண்ணா ( Director ),
உங்கள் கேள்வி என்னை ஏதோ இளையராஜா பாடல்கள் கேக்காத அல்லது இளையராஜா பாடல்கள் பிடிக்காதவனாக காட்டும் தொனியில் உள்ளது அண்ணா. இளையராஜா பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சரி உங்கள் கேள்விக்காக, கடந்த பத்தாண்டுகளில் இளையராஜா இசையமைத்த பாடல்கள் பல. அவற்றுள் பெரும்பான்மையான பாடல்கள் எனக்குப் பிடிக்கும், இந்தப் பதிவில் நான் தொகுத்திருப்பது துள்ளலிசை ( அ ) வேகமிசைப் பாடல்கள் மட்டும் தான் அதுவும் வெறும் ஒன்பது பாடல்கள் தான். இளையராஜா இசையமைத்த பாடல்கள் பெரும்பாலும் மெல்லிசை மட்டும் லேசான துள்ளல்கள் கொண்ட பாடல்கள் தான் அதிகம் ( கடந்த பத்து வருடங்களில், நான் கேட்ட பாடல்களில் ) அதனால் தான் இந்தத் தொகுப்பில் இளையராஜா பாடல்கள் வரவில்லை. இப்போது புரிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்தப் பத்தாண்டுகளில் உங்களுக்குப் பிடித்த, இளையராஜாவின் துள்ளலிசை (அ ) வேகமிசைப் பாடல்கள் சிலவற்றை கூறலாமே அண்ணா! :)
உங்கள் வருகைக்கு நன்றி அண்ணா!

பிரஷா சொன்னது…

தங்களுக்கு எனது புது வருட வாழ்த்துக்கள் ...

அப்பாவி தங்கமணி சொன்னது…

Lovely selections... I like most of them too.. happy new year

சிவகுமாரன் சொன்னது…

இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய்
மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

எனக்கு பிடிச்ச பாஸ்ட் சாங்க்ஸ்-ல ஒண்ணு...
டாடி மம்மி வீட்டில் இல்ல... சாங்..
பகிர்வுக்கு நன்றிங்க.. :)

Balaji saravana சொன்னது…

நன்றி பிரஷா! உங்களுக்கும் வாழ்த்துக்கள்! :)

நன்றி அப்பாவி தங்கமணி :)

நன்றி சிவகுமாரன் :)

அந்த பாட்டும் நன்றாக இருக்கும் ஆனந்தி!
நன்றி :)

கருத்துரையிடுக