வெள்ளி, 17 டிசம்பர், 2010

பிரிவுத் துயர், இன்னும் கொஞ்சம்..மாலைச் சூரியன் மரித்த நேரம்
பிரிவின் சிலுவை சுமக்கலானோம்
காதல் முழுங்கி கனத்தும் போனோம்
வேதனை வெம்மைகள் வெளிக் காட்டாமல்..


வெற்றுப் பார்வையில் வெந்தழியச் செய்தாய் 
கடைக்கண் தைத்த என்னிதயத்தை 
தென்றலைப் புறந்தள்ளும் கடைசிக் கையசைப்பில் 
அருவி பெருகியது  அணை போட்ட கண்களில்..


உன்  முத்தங்கள் சிந்திய என்னுதட்டுப் பிரதேசம் 
வெடிப்புகளோடிய  வெற்றுநிலமானது 
தோய்ந்த உன் நினைவுகளில் வருத்தங்கள் வடித்தெடுத்து 
நிரம்புகிறது இக்கணக்கோப்பை..


வார்த்தைகளற்று நீளும் மன வலியில்
மௌனங்களேற்றிக் கண்ணீர் சிந்தட்டும் 
உனக்கான இக்கடைசிக் கவிதையும்!   
                                                                            

55 கருத்துகள்:

LK சொன்னது…

கடைசி கவிதை அருமை..

//வெடிப்புகளோடிய வெற்றுநிலமானது இப்போது
தோய்ந்த உன் நினைவுகளில் வருத்தங்கள் வடித்தெடுத்து
நிரம்புகிறது இக்கணக்கோப்பை..///

வெடிப்புகளோடிய வெற்றுநிலமானது
தோய்ந்த உன் நினைவுகளில் வருத்தங்கள் வடித்தெடுத்து
நிரம்புகிறது இக்கணக்கோப்பை..

இப்படி வந்தால் சரியாக இருக்குமோ ?? இப்போது என்பதை நீக்கி விட்டு பாருங்கள் ?

Balaji saravana சொன்னது…

மிக்க நன்றி LK!
வழிகாட்டுதலுக்கு நன்றி பாஸ்
மாற்றிவிட்டேன்.

Balaji saravana சொன்னது…

தங்களின் மேலான கருத்திற்கும் உள்ளோடியிருக்கும் அக்கறைக்கும் மீண்டும் நன்றி LK! :)

இராமசாமி சொன்னது…

மயக்க வைக்குது மொழி.. மனச கணக்க வைக்குது கவிதை... அருமை பாலாஜி...

சந்திரிகை சொன்னது…

வார்த்தைகளற்று நீளும் மன வலியில்
மௌனங்களேற்றிக் கண்ணீர் சிந்தட்டும்
உனக்கான இக்கடைசிக் கவிதையும்!

என்ன ஆச்சு............................... ?

சந்திரிகை சொன்னது…

மனசு கனமா ஆகிடுச்சு

vanathy சொன்னது…

கவிதை ஜூப்பரு. யாரை நினைச்சு பாடினீங்க, கவிஞர் பாலாஜி.

வைகை சொன்னது…

இன்னாப்பா ஒரே சோகமாக்கீது?!!

Balaji saravana சொன்னது…

நன்றி ராமசாமி அண்ணா!

உங்க மனச ஆறுதல் படுத்திக்கங்க ஜீவாம்மா.
நன்றி!

உஸ்.. அது ரகசியம் ;)
நன்றி வானதி

Balaji saravana சொன்னது…

வாங்க வைகை!
சில சமயங்களில் சோகமும் சுகம் தான..
நன்றி வைகை

ஆமினா சொன்னது…

//வார்த்தைகளற்று நீளும் மன வலியில்
மௌனங்களேற்றிக் கண்ணீர் சிந்தட்டும்
உனக்கான இக்கடைசிக் கவிதையும்! //

கலக்கல் பாலாஜி..... ஆனா கடைசி கவிதைன்னு சொன்னது தான் இடிக்குது :(

nis சொன்னது…

ஏன் இந்த கவலை :(

ஆனந்தி.. சொன்னது…

நல்லா இருக்கு பாலாஜி...ரொம்ப அப்செட்(??!!) னால் நம்ம கலக்கல் ஊருக்கு வந்துட்டு போனால் சரியாய்டும்...ரொம்ப உணர்வு பூர்வமான கவிதை..

இளங்கோ சொன்னது…

//உனக்கான இந்தக் கவிதையும்!//
Nice one..

ரஹீம் கஸாலி சொன்னது…

nice

பெயரில்லா சொன்னது…

நல்லா இருக்கு பாலா.....ஆனா ஏன் இவ்வளவு பீலிங்க்ஸ்

அருண் பிரசாத் சொன்னது…

பிரிவு துயர் என்றைக்குமே கஷ்டமதான் பாலாஜி... நல்லா சொல்லி இருக்கீங்க

பாரத்... பாரதி... சொன்னது…

கவிதை நல்லா இருக்குங்க... கடைசி வரிகள் வலி...

பார்வையாளன் சொன்னது…

beautiful

பிரவின்குமார் சொன்னது…

கவிதை வலிகள் நிறைந்த முடிவுகளின் யதார்த்தமா இருக்கு..!!

Chitra சொன்னது…

சோக கவிதையில் - வார்த்தை வளம் - ரசிக்க வைத்தது.

கோமாளி செல்வா சொன்னது…

செம செம ..!!

sakthi சொன்னது…

வார்த்தைகளற்று நீளும் மன வலியில்
மௌனங்களேற்றிக் கண்ணீர் சிந்தட்டும்
உனக்கான இக்கடைசிக் கவிதையும்

முடித்து உள்ள விதம் நன்று

பிரிவுத்துயர்

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

துயரம் கணக்கிறது.

பதிவுலகில் பாபு சொன்னது…

பினிஷிங் நச்..

சுசி சொன்னது…

அருமையா இருக்குங்க..

RVS சொன்னது…

என்னப் பிரிவுத் துயரமா? வாட்டுதா.. நல்லா இருக்குப்பா.. ;-)

கலாநேசன் சொன்னது…

அருமை.....அருமை

ஹேமா சொன்னது…

ஏன் கடைசிக் கவிதைன்னு சொல்லணும் பாலா.முற்றுப்புள்ளிக்குப் பக்கத்தில இன்னும்
2-3 புள்ளி வையுங்க.அது தொடராயிடும்.
கவிதை கனம் !

LK அழகாத் திருத்தித் தந்திருக்கார் !

Mahi சொன்னது…

கவிதை அருமை!பிரிவின் வலியும்,பிரியத்தின் ஆழமும் உணர்த்தும் அழகான வார்த்தைகள்!

பிரஷா சொன்னது…

கவிதை அருமை...வலிநிறைந்த கவிதைகள்

ஆதிரா சொன்னது…

பிரிவுத்துயர் கசிந்துருகச் செய்கிறது. தங்கள் வலைத்தளம் அமைப்பு அழகாக உள்ளது. அந்தத் திருக்குறள் கீழே போட்டுள்ளது அழகு மட்டுமல்ல பயனுள்ளதாக உள்ளது..

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

இக்கணத்தின் துயரம் வலி.. பாலாஜி

சுந்தரா சொன்னது…

காதல் பிரிவின் வலி, கனமாக வெளிப்பட்டிருக்கிறது கவிதையில்...அருமை.

பாலா சொன்னது…

மறுபடியும் ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள். நன்றி

http://balapakkangal.blogspot.com/2010/12/blog-post_21.html

siva சொன்னது…

நீண்ட நாட்கள் கழித்து
நல்ல கவிதை
வாசித்த ஒரு உணர்வு

ஒரு ஒரு வரிகளும் மிக அழுத்தமாய்...
அருமையா இருக்கு அண்ணா

Tamil cinema சொன்னது…

I enjoy reading tamil cinema news!!

சுபத்ரா சொன்னது…

//வார்த்தைகளற்று நீளும் மன வலியில்
மௌனங்களேற்றிக் கண்ணீர் சிந்தட்டும்
உனக்கான இக்கடைசிக் கவிதையும்!//

உணர்வுகளை வெளிப்படுத்தத் தெரிந்த கவிதை உள்ளத்தில் எளிதாக இடம்பிடிக்கும். அதுதான் எந்த ஒரு படைப்பின் வெற்றியாகவும் நான் நினைக்கிறேன் :-)

வலி நிறைந்த உணர்வினை அழகாக வடித்து வைத்துள்ளீர்கள் இக்கவிதையில். வாழ்த்துக்கள்.

குட்டிப்பையா|Kutipaiya சொன்னது…

//வார்த்தைகளற்று நீளும் மன வலியில்
மௌனங்களேற்றிக் கண்ணீர் சிந்தட்டும்
உனக்கான இக்கடைசிக் கவிதையும்//

அருமை!!

Mahi சொன்னது…

பாலாஜி,இந்த அவார்டை பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
Be prepared!! :))))))

http://mahikitchen.blogspot.com/2010/12/blog-post_22.html

கமலேஷ் சொன்னது…

வலி பேசும் கவிதை ரொம்ப நல்லா இருக்கு தோழரே..

பாரத்... பாரதி... சொன்னது…

//தோய்ந்த உன் நினைவுகளில் வருத்தங்கள் வடித்தெடுத்து
நிரம்புகிறது இக்கணக்கோப்பை..//

Balaji saravana சொன்னது…

ஆமினா
நிஸ்
ஆனந்தி
இளங்கோ
கஸாலி
கல்பனா
அருண்
பாரத் பாரதி
பார்வையாளன்
பிரவீன்குமார்
சித்ரா
செல்வா
சக்தி
சைகொப
பாபு
சுசி
ஆர்விஎஸ்
கலாநேசன்
ஹேமா
மகி
பிரஷா
ஆதிரா
தேனக்கா
சுந்தரா
பாலா
சிவா
தமிழ் சினிமா
சுபத்ரா
குட்டிப் பையா
கமலேஷ்

அனைத்து அன்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி :)

அப்பாவி தங்கமணி சொன்னது…

Nice one Balaji...thoughtful

பெயரில்லா சொன்னது…

ungalai thodar padhivukku alaiththullen.
thavaraamal eludhavum.

பெயரில்லா சொன்னது…

enanu therila.. tamil font vara matingudhu

சௌந்தர் சொன்னது…

என்ன ஒரே சோகமா இருக்கு மச்சி கமான் டா

எம் அப்துல் காதர் சொன்னது…

உங்களுக்கு விருது கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

சிவகுமாரன் சொன்னது…

\\\என்னுதட்டுப் பிரதேசம்
வெடிப்புகளோடிய வெற்றுநிலமானது///

...பனிக்காலம்-ல அப்படித்தான் இருக்கும் .
காதலின் வலியை அழகாய் சொல்லி இருக்கீங்க.

Balaji saravana சொன்னது…

நன்றி அப்பாவி தங்கமணி :)

கண்டிப்பா எழுதுறேன் இந்திரா
நன்றி :)

நன்றி மச்சி :)

உங்கள் விருதுக்கு நன்றி அப்துல் :)

நன்றி சிவகுமாரன் :)

Jobschennai சொன்னது…

மிக அருமையான பதிவு நன்றி :)

ரிஷபன் சொன்னது…

வலிமையான வார்த்தைகள்.. அழகான கவிதையாக்கி விட்டது.

Balaji saravana சொன்னது…

நன்றி ரிஷபன் :)

Trisha Tamil Actress சொன்னது…

I'm from chennai and i love this blog

Trisha actress சொன்னது…

good content and thanks for sharing:)

கருத்துரையிடுக