செவ்வாய், 7 டிசம்பர், 2010

வெயில்

வட்டமாய் சுற்றி நின்று
குவிலென்சை குவித்து
காகிதம் எரிக்கும்  நேரம்
சோதனைச் சாகசம் பற்களில்..

செய்து வைத்த களிமண் வண்டியும்
ஈரம் சேர்ந்த சட்டையும்
காய்ந்து போயிருக்கும் சட்டென..

ஓட்டடுக்கின் இடையில் நுழைந்து
வெண்புள்ளிக் கோலம் போடும்
தாழ்வாரக் கடையில்..

தலை துண்டோடு வாடிவரும்
வண்டிக் காரனுக்குத் தரும்
வடித்த கஞ்சியிலும் வண்ணம் தெறிக்கும்..

பனைநுங்கும் தென்னை விசிறியுமாய்
புழக்கடை போகும்
சட்டையில்லா அம்மத்தாக் கிழவி..

மதியக் கண்ணுறக்கம் மறந்த
வாசல் விளையாட்டில் ஒரு
நண்பனாய் சேரும் வெயில்..

அந்நிய தேசத்தில் ஏசிக் குளிரில்
ஜன்னல் காட்சியின் நினைவில்
வெயிலேறி விளையாடும் வீடு...


                                                          

47 கருத்துகள்:

வெறும்பய சொன்னது…

வட்டமாய் சுற்றி நின்று
குவிலென்சை குவித்து
காகிதம் எரிக்கும் நேரம்
சோதனைச் சாகசம் பற்களில்..

//

நினைவூட்டுகிறது சிறு வயது சாகசங்களை..

பார்வையாளன் சொன்னது…

நினைவுகளை தாலாட்டும் கவிதை

Chitra சொன்னது…

மதியக் கண்ணுறக்கம் மறந்த
வாசல் விளையாட்டில் ஒரு
நண்பனாய் சேரும் வெயில்..

அந்நிய தேசத்தில் ஏசிக் குளிரில்
ஜன்னல் காட்சியின் நினைவில்
வெயிலேறி விளையாடும் வீடு...


.....ஒவ்வொரு பத்தியிலும், காட்சியின் விவரம் - அசத்துது.

வைகை சொன்னது…

ம்ம்ம்ம்............... ஏம்ப்பா ஊர் ஆசைய கெளர்ரீங்க!!!

Kousalya சொன்னது…

அழகான சூழ்நிலை அப்படியே கண்முன்னால்....

அருமையான விவரிப்பு...

இளங்கோ சொன்னது…

Nice :)

மோகன் குமார் சொன்னது…

அருமை

அருண் பிரசாத் சொன்னது…

சிறு வயது நினைவுகளை கிளறிட்டீங்க பாலாஜி...

கிரேட்...

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

கிராமத்து வசந்தங்கள்..மறக்கவே முடியாத நினைவுகள்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

நினைச்சாலும் பிடிக்க முடியாத காலம் தாண்டி போய்கிட்டு இருக்கோம்

RVS சொன்னது…

வெயிலேறி விளையாடும் வீடு... வெயிலோடு உறவாடிய தருணங்களின் அணிவகுப்பு நன்று. ;-)

சுந்தரா சொன்னது…

//அந்நிய தேசத்தில் ஏசிக் குளிரில்
ஜன்னல் காட்சியின் நினைவில்
வெயிலேறி விளையாடும் வீடு...//

எவ்வளவு அழகா சொல்லியிருக்கீங்க சரவணன்!

இங்கேயும் நினைவுகள் விரிகிறது.

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

வெயிலோடு விளையாடி இருக்கீர்கள்! இதம்.

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

//மதியக் கண்ணுறக்கம் மறந்த
வாசல் விளையாட்டில் ஒரு
நண்பனாய் சேரும் வெயில்..

உண்மை... அருமை.. வாழ்த்துக்கள்...

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

தேசங்கள் கடந்தபின்னும் மனதில் ஆடும் கிராமங்கள் ...

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி சொன்னது…

//பனைநுங்கும் தென்னை விசிறியுமாய்
புழக்கடை போகும்
சட்டையில்லா அம்மத்தாக் கிழவி..//

அருமை அண்ணா .!

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி சொன்னது…

//அந்நிய தேசத்தில் ஏசிக் குளிரில்
ஜன்னல் காட்சியின் நினைவில்
வெயிலேறி விளையாடும் வீடு...//

ரொம்ப கலக்கலா சொல்லி இருக்கீங்க ..!!

சௌந்தர் சொன்னது…

பழைய விளையாட்டை எல்லாம் நினைவு படுத்தி விட்டது

Balaji saravana சொன்னது…

பெரிய சாகசக்காரன் தானப்பா நீ!
முதல் பின்னூட்டத்திற்கு நன்றி ஜெயந்த் :)

நன்றி பார்வையாளன் :)

நன்றி சித்ராக்கா :)

எதோ நம்மால முடிஞ்சது..
நன்றி வைகை :)

நன்றி சகோ

நன்றி இளங்கோ

நன்றி மோகன் அண்ணா

நன்றி அருண்

Balaji saravana சொன்னது…

ஆமா பாஸ்
நன்றி சதீஷ் :)

நன்றி ஆர்விஎஸ் அண்ணா

நன்றி சகோ

நன்றி சைகொப

நன்றி ரமேஷ்

நன்றி செந்தில் அண்ணா

நன்றி செல்வா

நன்றி சௌந்தர்

சே.குமார் சொன்னது…

//அந்நிய தேசத்தில் ஏசிக் குளிரில்
ஜன்னல் காட்சியின் நினைவில்
வெயிலேறி விளையாடும் வீடு...//

Correct.
பழைய விளையாட்டை எல்லாம் நினைவு படுத்தி விட்டது .

Priya சொன்னது…

அழகிய நினைவுகள்...படிக்கும்போதே கண்முன்னே காட்சிகளாகும் வரிகள், வாழ்த்துக்கள்.

nis சொன்னது…

//பனைநுங்கும் தென்னை விசிறியுமாய்
பழக்கடை போகும்
சட்டையில்லா அம்மத்தாக் கிழவி..///
மிகவும் பிடித்த வரிகள்

super

ஆமினா சொன்னது…

சிறு வயதில் செய்தவைகளை நினைவுபடுத்திவிட்டது!!

மிக்க நன்றி

பெயரில்லா சொன்னது…

அந்நிய தேசத்தில் ஏசிக் குளிரில்
ஜன்னல் காட்சியின் நினைவில்
வெயிலேறி விளையாடும் வீடு..//

எப்பிடி இப்பிடி .....
ரொம்ப அருமை பாலா .....
எழுத்துக்கள் அழகை வார்க்கப்பட்டுள்ளன !!!!

மோகன்ஜி சொன்னது…

பாலா! பால்யநினைவுகள் என்றுமே சுகம் தான்!நுணுக்கமாய் கோர்த்திருக்கிறீர்கள்

அன்பரசன் சொன்னது…

//தலை துண்டோடு வாடிவரும்
வண்டிக் காரனுக்குத் தரும்
வடித்த கஞ்சியிலும் வண்ணம் தெறிக்கும்..//

நல்ல நினைவுகள்

Gopi Ramamoorthy சொன்னது…

நல்லா இருக்கு பாலாஜி சரவணா

ஹேமா சொன்னது…

பாலா...பெருமூச்சுமட்டும்தான் !

ஏன் குவிலென்ஸ் என்று சொல்லியிருக்கிறீர்கள் ?குவிவா(யா)டி என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன் !

Balaji saravana சொன்னது…

வாங்க குமார்
நன்றி :)

மிக்க நன்றி ப்ரியா :)

நன்றி nis

நன்றி ஆமினா :)

நன்றி கல்பனா :)

மிக்க நன்றி மோகன் சார் :)

நன்றி அன்பரசன் :)

என்னை பாலா அப்டின்னே கூப்பிடலாம் :)
நன்றி கோபி.

அந்தச் சமயத்தில் நினைவில் வரவில்லை ஹேமா.
மிக்க நன்றி தோழி :)

எம் அப்துல் காதர் சொன்னது…

// வடித்த கஞ்சியிலும் வண்ணம் தெறிக்கும்..//

நல்லா இருக்கு நண்பா!!

பதிவுலகில் பாபு சொன்னது…

எதார்த்தங்களை சொல்லியிருக்கீங்க.. நல்லாயிருக்குங்க..

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வெய்யிலேறி விளையாடும் வீடு.. மண்வாசனை பாலாஜி

Balaji saravana சொன்னது…

நன்றி அப்துல்

நன்றி பாபு

நன்றி தேனக்கா

சந்திரிகை சொன்னது…

அந்நிய தேசத்தில் ஏசிக் குளிரில்
ஜன்னல் காட்சியின் நினைவில்
வெயிலேறி விளையாடும் வீடு...

எதையோ இழந்து எதையோ பெற்று இருக்கிறோம்

பெயரில்லா சொன்னது…

சிறுவர்களின் விளையாட்டுக்களில் வெயிலும் ஒரு அங்கம் தான். ஆனால் வளர வளர அதைப் புறக்கணிக்க ஆரம்பித்து விடுகிறோம்.
இப்போதெல்லாம் இப்படி வெயிலில் சுற்றும் சிறுவர்களைக் காண்பதே அரிதாகிவிட்டது.
என்ன செய்வது.. எல்லோருமே சொகுசாக வாழ ஆரம்பித்துவிட்டோமே..

பிரஷா சொன்னது…

அருமை.....

இளம் தூயவன் சொன்னது…

அழகிய நினைவுகள்...அருமை

sakthi சொன்னது…

அழகான பொருள் பொதிந்த கவிதை பாலாஜி தொடருங்கள்:)

sakthi சொன்னது…

ஓட்டடுக்கின் இடையில் நுழைந்து
வெண்புள்ளிக் கோலம் போடும்
தாழ்வாரக் கடையில்

அருமையான உவமை

tamil blogs சொன்னது…

தமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://tamilblogs.corank.com/

ஆனந்தி.. சொன்னது…

வெயிலின் பரிமாணங்களை ரொம்ப அழகா வடிச்சு இருக்கீங்க...:)

siva சொன்னது…

நல்லா இருக்கு நண்பா!!

சிவகுமாரன் சொன்னது…

அம்மாத்தா என்ற
சொல் இறந்துபோன என் அப்பத்தாவை நினைவு படுத்தியது. உங்கள் வெயிலைப் போல

Balaji saravana சொன்னது…

உண்மைதான் ஜீவாம்மா!
நன்றி

மிகச் சரியாய் சொன்னீர்கள் தோழி !
நன்றி இந்திரா.

நன்றி பிரஷா

நன்றி இளம் தூயவன்

நன்றி சக்தி

நன்றி ஆனந்தி

நன்றி சிவா

நன்றி சிவகுமாரன்

சுபத்ரா சொன்னது…

செம கவிதை!!! அப்படியே காட்சிகளைக் கண்முன் கொண்டுவந்தது.. Impressed :-)

Balaji saravana சொன்னது…

மிக்க நன்றி சுபா :)

கருத்துரையிடுக