வியாழன், 2 டிசம்பர், 2010

மயக்கும் குரல்கள் - தொடர் பதிவு

இத்தொடர் பதிவிற்கு என்னை அழைத்த அன்பு நண்பர் பாலாவிற்கு என் நன்றிகள்.

பெண்கள், பெண்களின் மனதை வெளிப் படுத்தும் பாடல்கள் எண்ணிலடங்கா.. சில பாடல்கள் பெண்குரலில் இன்னும் மெருகேறும் என்பது என் கருத்தும். அவைகளில்  எதனை கோர்க்க எதனை விட?!   
சில பாடல்கள் சில மனநிலைகளில் கேட்கும்போது இதம் தரும். சில பாடல்கள் கேட்கும் போதோ  சில மனநிலைகளையே உருவாக்கும் வலிமை படைத்தவை. அவ்வாறான பாடல்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன். உங்களுக்கும் பிடிக்குமென :)

என் இந்தத்  தொகுப்பில் வரவேண்டிய சிறந்த பாடல்கள் பலவற்றை  ஏற்கனவே நம் பதிவுலக நண்பர்கள் தொகுத்திருக்கிறார்கள். அதனால் அது தவிர்த்து சில!

ஒரு தெய்வம் தந்த பூவே - கன்னத்தில் முத்தமிட்டால்


எனக்கு எப்போதும் விருப்பமான "குரல் தேவதை"  சின்மயியின் இதமான குரலில் வைரமுத்துவின் வைர வரிகளில் ரகுமானின் பூந்தென்றல் இசையில் காதின் வழி சென்று மனதின் ஒவ்வொரு அறைகளிலும் நிரம்பும் பாடல். முன்பே சொன்னது போல் எப்போது கேட்டாலும் உயிரூடுருவும் நிலையைத் தரும் பாடல். கடைசியில் வரும் பல்லவியில் உரு(க்)கி இருப்பார் சின்மயி. எனது மிக விருப்பப் பாடல் எப்போதும்!

பேசுகிறேன் பேசுகிறேன் - சத்தம் போடாதே

கொஞ்சும் குரல் கொண்ட நேஹா பாடியது. இள மாலை வேளை, மிதமான வெயில், மொட்டை மாடி, நீல ஆகாயம், தேநீர், வருடும் தென்றல், இப்பாடல்!

கண்ட நாள் முதலாய் - கண்ட நாள் முதல் 

இது முருகனை நினைத்துப் பாடிய ஒரு பக்திப் பாடலானாலும், கேட்கும் போது மெல்லிய துள்ளல் தொடரும். சுபிக்ஷா மற்றும் பூஜா எனும் இருவர் பாடியது. யுவன் ஷங்கர் ராஜா சேர்த்திருக்கும் புல்லாங்குழல்  இசையும், இரண்டாவது சரணத்தில் வரும் சாக்ஸ போனும் துள்ளலை கூட்டும். 

காற்றின் மொழி - மொழி

சுஜாதாவின் இனிய குரலில், வித்யா சாகரின் இசையில் மிக மெல்லிய மென்னிசைப் பாடல். இந்தப் பாடல் கேட்டு முடித்தபின் பார்ப்பது எல்லாம் அழகாய்த் தோன்றும் :)

மலர்களே மலர்களே - புதுக்கோட்டையிலிருந்து சரவணன் 

வசீகர குரலுடைய பாம்பே ஜெயஸ்ரீன் தேனினிமைப் பாடல். பின்னிரவில், தூக்கம் துரத்தும் நேரத்தில், கண்மூடி,  ஹெட் போனில் இப்பாடலைக் கேட்டுப் பாருங்கள். கண்டிப்பாய் அடிமையாகி விடுவீர்கள் அவர் குரலுக்கும் இப்பாடலுக்கும் ;)

போறாளே பொன்னுத்தாயி - கருத்தம்மா 

தனிச் சிறப்பான சொர்ணலதாவின் குரலில் ஒரு சோகப் பாடல். அபலையின் வாழ்வை மிகச் சிறப்பாய் தன் குரல் வழி பிரதிபலித்திருப்பார். தேசிய விருது பெற்றுத் தந்தது  இப்பாடல்.

நான் முத்தம் தின்பவள் - குரு 

இப்படியெல்லாம் கூட சின்மயியால் பாட முடியுமாவென வியந்து போன பாடல். மிக வேகமாகவும் குரலில் சிறு பிசிறு கூட வராமல் ஆவர்த்தனம் நடத்தியிருப்பார் அந்தக் குரல் தேவதை. இப்பாடல் கேட்டவுடன் நமக்கே மூச்சு வாங்கும்.

செந்தூரப் பூவே - பதினாறு வயதினிலே 

குரல் அரசி ஜானகியம்மாவின் பல பாடல்கள் இவ்வரிசையில் தொகுக்க வேண்டும். அதுவே பல பதிவுகள் வருமாகையால் அவற்றிலிருந்து மிகப் பிடித்த மயக்கும் பாடல் ஒன்று.

தேவதை வம்சம் நீயோ - சிநேகிதியே 

சின்னக் குயில் சித்ராவும், சுஜாதாவும் இணைந்து பாடிய துள்ளலிசைப் பாடல்.
இரு பெண்களின் நட்பின் வடிவம் பாட்டில்.

தாலாட்டும் பூங்காற்று - கோபுர வாசலிலே 

ஜானகியம்மாவின் மற்றொரு பாடல். சரணத்தில் வரும் புல்லங்குழல் இசையும் அதையொத்த ஜானகியம்மாவின் குரலும் அற்புதம்.

மயில் போல பொண்ணு ஒன்னு / இது சங்கீதத் திருநாளோ  - பாரதி / காதலுக்கு மரியாதை  
மயில் தோகை கொண்டு வருடியது போலிருக்கும் பவதாரிணியின் குரல். இன்னும் அவரது குரலில் சில பாட்டுக்கள் இருந்தாலும் இவையிரண்டும் மிகச் சிறப்பு.

இது போல இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். உங்களின்  நலம் கருதி இப்பொழுது இதை முடித்து, பிறிதொரு சந்தர்ப்பத்தில் இன்னும் சொல்கிறேன்.

                                                                                                                                                  

39 கருத்துகள்:

ஹரிஸ் சொன்னது…

good collection..


//உங்களின் நலம் கருதி இப்பொழுது இதை முடித்து, பிறிதொரு சந்தர்ப்பத்தில் இன்னும் சொல்கிறேன்.
//
ரொம்ப ரொம்ப நன்றி..:)...

Gopi Ramamoorthy சொன்னது…

பாலாஜி சரவணா, எல்லாப் பாட்டும் எனக்கும் பிடிக்கும். தாலாட்டும் பூங்காற்று இன்னைக்குப் பூராக் கேட்டுக்கிட்டே இருக்கலாம்.

தொகுப்பிற்கு மிக்க நன்றி

சந்திரிகை சொன்னது…

செந்தூரப் பூவே ..........................


பழைய நினைப்புடா மகனே பழைய நினைப்புடா

எல்லா பாடல்களுமே மனதில் நின்றவை

வைகை சொன்னது…

அனைத்துமே நல்ல பாடல்கள்!! அதுவும் பவதாரிணியின் "மயில் போல" பாடல் வாவ்!!!!

சௌந்தர் சொன்னது…

அனைத்து பாடல்களும் மிகவும் அழகான பாடல்கள்...

ஆமினா சொன்னது…

நல்ல தொகுப்பு பாலாஜி!!!!

கவிதை நயத்துடன் சொன்ன விமர்சனம் மிக அருமை!!!

மொத்தத்தில் சூப்பர்!!!!

nis சொன்னது…

நல்ல collection
சின்மயி பாடியவற்றில் நீங்கள் கூறிய 'ஒரு தெய்வம் தந்த பூவே' , மருதாணி பாடல்கள் அருமை.

ஆனந்தி.. சொன்னது…

superb selection and collection..

Chitra சொன்னது…

அருமையான தேர்வுகள்.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

மச்சி சின்மயிக்காக நமக்குள்ள சண்டை வரும் போல ம்ம்...! பார்த்திடலாம்!

அருண் பிரசாத் சொன்னது…

நல்ல தொகுப்பு பாலாஜி....

மோகன் குமார் சொன்னது…

Most of the songs in this list are my favourite too!

பெயரில்லா சொன்னது…

அருமையான தொகுப்பு பாலா

பெயரில்லா சொன்னது…

இனிமையான பாடல்களின் தேர்வு.
எப்போது கேட்டாலும் நம்மை லயிக்க வைத்திடும் குரல்கள் இவை.
பகிர்விற்கு நன்றி.

இளங்கோ சொன்னது…

//ஒரு தெய்வம் தந்த பூவே - கன்னத்தில் முத்தமிட்டா// my mobile ring tone. :)

sakthi சொன்னது…

my favourite songs !!

பதிவுலகில் பாபு சொன்னது…

நல்ல தொகுப்பு..

ப.செல்வக்குமார் சொன்னது…

எல்லாப் பாட்டுமே செம அண்ணா .,
அதிலும் எனக்கு அந்த கன்னத்தில் முத்தமிட்டால் பட்டு நான் தினமும் ஒரு தடவையாவது கேட்டுர்வேன் ..!

எஸ்.கே சொன்னது…

பாடல்கள் எல்லாமே சூப்பர்!

ரிஷபன் சொன்னது…

நல்ல கலெக்‌ஷன்

அன்பரசன் சொன்னது…

நண்பா கையக்குடுங்க...
எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்கள்.

Priya சொன்னது…

அருமையான தேர்வுகள்.
அதிலும் உங்க தேர்வில் உள்ள முதல் பாடலை பற்றி என்ன சொல்வது... வைர வரிகளா, இனிமையான குரலா, மயக்கும் இசையா எதுவென்று சொல்ல முடியல....ஏதோ ஒன்று உள்ளது அந்த பாடலில்! கேட்டும் ஒவ்வொருமுறையும் நீங்க சொன்னது போல மனதின் ஒவ்வொரு அறைகளிலும் நிரம்பும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

என்ன தல நம்ம பிரிக்வென்சியிலேயே போறீங்க, விட்டுட்டு அங்கிட்டு இங்கிட்டு போக முடியல!!

சுசி சொன்னது…

நல்ல பாடல்கள் :))

vanathy சொன்னது…

இப்படியே எல்லா பாடல்களையும் நீங்களே எழுதினா நான் எங்கிட்டு போறது, தல. தொடர்பதிவுக்கு கூப்பிட்டு இருக்காங்க அதான் புலம்ப வேண்டியதா போச்சு.

எல்லா பாடல்களும் சூப்பர். சின்மயி பாடிய ஒரு தெய்வம் தந்த பூவே பாடல் கேட்டால் என் கண்கள் கலங்கி விடும்.

சிவகுமாரன் சொன்னது…

செந்தூரப்பூவே & பேசுகிறேன் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. அருமையான தொகுப்பு.

Riyas சொன்னது…

எல்லா பாடல் தெரிவுகளும் அருமை..

//பேசுகிறேன் பேசுகிறேன் - சத்தம் போடாதே
மலர்களே மலர்களே - புதுக்கோட்டையிலிருந்து சரவணன்
இது சங்கீதத் திருநாளோ// இந்த மூன்று பாடல்கள் மிக பிடிக்கும்.

ஹேமா சொன்னது…

முதல் பாட்டு முதல் எல்லாமே மிகவும் மிகவும் மனதில் பதிந்த பாடல்கள் பாலா !

சுந்தரா சொன்னது…

அத்தனையும் இனிமையான பாடல்கள்...எனக்கும் மிகவும் பிடித்தவை.

கலாநேசன் சொன்னது…

என் ரசனைக்கு மிக நெருக்கமான பாடல்கள். நல்ல தொகுப்பு.

Ananthi சொன்னது…

உங்கள் தொகுப்பில் உள்ள எல்லா பாடலுமே.. அருமை தான்..

இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிச்சது...

"ஒரு தெய்வம் தந்த பூவே...."

"கண்ட நாள் முதலாய்...."

"காற்றின் மொழி....."

"போறாளே பொன்னுத்தாயி..."

"செந்தூரப் பூவே...."

"தாலாட்டும் பூங்காற்று..."

ஹா ஹா ஹா... அல்மோஸ்ட் உங்க செலெக்ஷன் எல்லாமே சொல்லிட்டேனோ...??


அப்போ நா வரேங்க... !! :-))

sivatharisan சொன்னது…

போறாளே பொன்னுத்தாயி..."நல்ல தொகுப்பு

Mahi சொன்னது…

நல்ல பாடல்களை நினைவுபடுத்தும் இந்தத் தொடர் பதிவு ரொம்ப நல்லா இருக்கு.:)

தாலாட்டும் பூங்காற்று,போறாளே பொன்னுத்தாயி,ஒருதெய்வம் தந்த பூவே,செந்தூரப்பூவே..இதெல்லாமே எனக்குப் பிடித்த பாடல்கள்!

நல்ல தொகுப்புங்க பாலாஜி!

சே.குமார் சொன்னது…

எல்லா பாடல்களுமே மனதில் நின்றவை என்பதைவிட எப்போதும் மனதில் நிற்பவை.

Balaji saravana சொன்னது…

வாங்க ஹரிஸ்
நன்றி

ஆமா கோபி :)
நன்றி

பத்திரமா பாத்துக்கங்க
நன்றி ஜீவாம்மா

வாங்க வைகை
நன்றி

நன்றி சௌந்தர்

வாங்க ஆமினா
மிக்க நன்றி

நன்றி nis

நன்றி ஆனந்தி

Balaji saravana சொன்னது…

நன்றி சித்ராக்கா

ஹா ஹா. பார்த்திடலாம் மச்சி
நன்றி வசந்த்

நன்றி அருண்

நன்றி மோகன் குமார் அண்ணா

நன்றி கல்பனா

நன்றி இந்திரா

நன்றி இளங்கோ

நன்றி சக்தி

நன்றி பாபு

நன்றி செல்வா

Balaji saravana சொன்னது…

நன்றி எஸ்.கே

நன்றி ரிஷபன்

நன்றி அன்பரசன்

மிக்க நன்றி ப்ரியா

நன்றி அப்துல்

நன்றி சுசி

ஹா ஹா.. இன்னும் நிறையப் பாட்டு இருக்கு வானதி
தேடிக் கண்டு பிடிங்க :)
மிக்க நன்றி

வாங்க சிவக்குமரன்
நன்றி

நன்றி ரியாஸ்

நன்றி ஹேமா

நன்றி சுந்தரா

வாங்க கலாநேசன்
நன்றி

ஹா ஹா..
நன்றி ஆனந்தி

வாங்க சிவா
நன்றி

வாங்க மகி
நன்றி

நன்றி குமார்

சுபத்ரா சொன்னது…

பத்துப் பாடல்களும் அருமையான பாடல்கள்! எனக்குப் பிடித்தவை.. :-)

Balaji saravana சொன்னது…

நன்றி சுபா :)

கருத்துரையிடுக