வெள்ளி, 26 நவம்பர், 2010

ரஜினியும் நானும் பின்ன கொஞ்சம் கற்பனையும்

அன்பு நண்பர் சதீஷ் என்னை இத்தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார், முதலில் அவருக்கு நன்றி!
ஏற்கனவே தீவிர ரஜினி ரசிகர்கள், கமல் ரசிகர்கள், அஜித்தின் அன்புத் தம்பிகள் அவர்களின் பார்வையில் ரஜினியின் "டாப் டென்" படங்கள் தொகுத்திருந்தார்கள்.
ஒரு சாதாரண சினிமா ரசிகனாய், உலகப் படங்கள் பார்த்திராத ஒரு சராசரி பிரஜையாய், கொஞ்சம் கற்பனையுடன் இப்பதிவை எழுதுகிறேன்.

ரஜினி : ஒற்றைச் சொல்லில் ஒளிந்திருக்கும் ஒரு சாம்ராஜ்யம்! பல்வேறு விமர்சனங்கள் வரிசை கட்டி வந்தாலும், புகழின் சூரியன் தலைமேல் எப்போதும் ஒளிர்ந்தாலும் எளிமையாய் தன்னைத் தேடிக் கண்டடைய துடிக்கும் ஒரு சாதாரணன். இயக்குனர்களின் நடிகன். இதற்கு மேல் அவரைப் பற்றிச் சொன்னால் அடிக்க வருவீர்கள் ஸோ.. கவுண்டவுன் ஸ்டார்ட்.
கொடுக்கப் பட்டிருக்கும் வரிசை எண் ஒரு வரிசைக்காகவே அன்றி தரத்தை, சிறப்பை அளவிடும் பொருட்டு அல்ல எனக் கொள்க!

10. தில்லு முல்லு - தி எவர் கிரீன் காமெடி 

இரண்டு ரஜினி, இரண்டும் ஒரே ரஜினி என ஆள் மாறாட்டக் கதையில், நகைச்சுவையில் அடித்துத் துவைத்திருப்பார் ரஜினி. தேங்காய் சீனிவாசனைப் புல்லரிக்க வைக்கும் காட்சி ஒரு சின்ன சாம்பிள் மட்டுமே. ஏற்கனவே ரஜினியுன் சேர்ந்து நடித்திருந்தாலும், ரஜினியின் மீதுள்ள நட்பினாலும், பாலச்சந்தரின் மீதுள்ள மரியாதையாலும், ஒரு சிறு வேடத்தில் கிளைமாக்சில் தோன்றுவார் கமல்!

9. ராகவேந்திரா - தி ஸ்பிரிட்சுவல் மேன்

ராகவேந்திரரின் தீவிர பக்தரான ரஜினி அவரின் கதையில் மிகச் சிறப்பாய் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அமைதியான, ஸ்டைல் இல்லாத ரஜினியையும் மக்கள் ரசித்தார்கள்.
8. பாட்ஷா - தி ஒன் மென் ஷோ!

நிறைய ரஜினி ரசிகர்களுக்கு மிகப் பிடித்த படம். பஞ்ச் வசனங்களால் ரசிகனை கட்டிப் போட்ட படம். தங்கைக்காக மருத்துவக் கல்லூரியில் பேசும் ஸ்டைலும், வாயில் ரத்தம் ஒழுக அடிவாங்கியபின் சிரிக்கும் ரஜினியின் முகமும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.

7. படையப்பா - தி லயன் 

பாட்ஷாவை எப்படி மார்க் ஆண்டனி  இல்லாமல் டிபைன் பண்ண முடியாதோ அதே போல் படையப்பாவிற்கு ஒரு நீலாம்பரி! தனக்கு இணையான ஒரு கதாபத்திரத்திற்கு ரம்யா கிருஷ்ணனை செலக்ட் செய்ததே ரஜினி தான். மிக வேகமான திரைக்கதை மற்றொரு சிறப்பு!6. சிவாஜி - தி பாஸ் 

ஒரு ரூபாயில் இழந்த சொத்துக்கள் மீட்கும் சுவாரசியமும், ஷங்கரின் திரைக்கதை உத்தியும், பிரம்மாண்டமும், மொட்டத்தலை ரஜினியும் பெரிய பிளஸ்.5. எந்திரன் - தி ரோபோ 

சிவாஜி தி பாஸ் என்றால் எந்திரன் தி மாஸ், பல விமர்சனங்கள் இருந்த போதிலும் ஒட்டு மொத்தமாக ஒரு நல்ல பொழுது போக்கு படமாக அமைந்தது இது. வில்லன் ரஜினியும் பலநூறு ரஜினியின் சண்டை காட்சிகளும் ரசிகனுக்கு பெரிய விருந்து! இந்தப் படத்தின் வெற்றி ரஜினியை இந்தியாவின் ஐகானாக மாற்றியது.4. ஹரா - தி வாரியர் 

சுல்தான் என்று பெயர் வைக்கப் பட்டு பின் ஹரா என மாற்றம் செய்யப் பட்ட இந்தியாவின் முதல் அனிமேசன் படம் என்ற பெருமை பெற்றது. அனிமேசன் ரஜினியும் நிஜ ரஜினியும் சந்தித்துக் கொள்ளும் காட்சியில்  ரசிகர்களின் ஆராவாரம் அரங்கத்தையே அசைத்துப் பார்த்தது.3. எந்திரன் 3 - தி ஹியூமன் மெசின் 

எந்திரன் -1 மற்றும் எந்திரன் -2 வெற்றியைத் தொடர்ந்து மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப் பட்ட எந்திரன் - 3 முந்தைய படங்களின் வசூலை வெளியிட்ட முதல் மூன்று நாட்களிலேயே பெற்று பெரிய சாதனை படைத்தது. ரஜினியின் ஸ்டைலை முப்பரிமாணத்தில் ( 3D ) பார்த்தது பேருவகை!2. ரஜினி - தி சூப்பர் ஸ்டார் 

ரஜினியின் சொந்த வாழ்கையை அடிப்படையாகக் கொண்ட இக்கதையில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். நடித்திருந்தார் என்பதை விட வாழ்ந்திருந்தார் என்பதே மிகப் பொருத்தம்.
எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்த ஒரு படமாகத் திகழ்ந்தது இது. ரஜினியை எப்போதும் விமர்சிக்கும் பல விமர்சகர்களும் இப்படத்தை பாராட்டியது உண்மை!

1. சிவன் - தி டெஸ்ட்ராயர் 


ஆரம்ப காலங்களில் ரஜினியும் கமலும் சேர்ந்து நடித்திருந்தாலும் அவரவர் பாதைகள் தேர்ந்தெடுத்துக் கொண்டபின், நீண்ட வருடங்கள் திரையில் சேந்து நடிக்கவே இல்லை.
அந்தக் குறையை இப்படம் போக்கியது எனலாம். ஒரு வரலாற்று உண்மையை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தால் ஒன்று சேர்ந்த இருவரும் நட்பின் இலக்கணமாய்   இருந்தனர். பல விருதுகள் குவித்த இப்படம் தமிழ்த்திரைப்பட வரலாற்றில் ஒரு அடையாளமாக கருதப்படுகிறது.டிஸ்கி : ரஜினியின் ஒவ்வொரு படமும் அவரின் மற்ற படத்திற்கு எந்தவிதத்திலும் குறைவில்லாதது தான். இங்கு குறிப்பிட்ட கடைசி மூன்று படங்கள் கற்பனை தான் எனினும் அது உண்மையானால் நான் குறிப்பிட்டது போல ரசிகர்களுக்கு பெரிய விருந்து என்பது மறுக்கமுடியாதது தானே?!
இப்பதிவை நான் தொடர் அழைப்பது
ஆர்விஎஸ் அண்ணன் மற்றும் நண்பர் அப்துல் காதர்

படங்கள் தந்துதவிய கூகிளாண்டவருக்கு நன்றி!

                                                                                                                                                          

29 கருத்துகள்:

பாலா சொன்னது…

நண்பரே உங்கள் தேர்வும், அதற்கான கேப்ஷனும் அருமை.

அப்புறம் மீண்டும் ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன். மறுக்காமல் நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள்...

நன்றி...

ம.தி.சுதா சொன்னது…

தங்கள் தொகுப்பும் அருமையாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்...

வெறும்பய சொன்னது…

அருமையான தொகுப்பு..

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அன்பு நண்பர் சதீஷ் என்னை இத்தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்//
புல்லரிக்குதுய்யா...

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

ரஜினியின் ஒவ்வொரு படமும் அவரின் மற்ற படத்திற்கு எந்தவிதத்திலும் குறைவில்லாதது தான்.//
இது பாயிண்ட்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

சிவப்பு ரஜினி படம் சூப்பர்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

ஒவ்வொரு படத்திற்க்கும் கொடுத்திருக்கும் கொடுத்திருக்கும் துணை தலைப்பு கலக்கல்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

புது மாதிரியான விமர்சனம்..ஹரா விமர்சனம் எழுதுன.. மொத ஆளு நீங்கதான் என்ற சரித்திர நாயகன் விருதை தட்டி செல்கிறீர்கள்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அப்புறம் மீண்டும் ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன். மறுக்காமல் நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள்//
மறுபடியும் இன்னொரு ரவுண்ட் ஆரம்பிக்கிறீங்களா

ப.செல்வக்குமார் சொன்னது…

கடைசி மூன்று படங்கள் நல்லா இருக்கு ..! ஹி ஹி ஹி ..

நாகராஜசோழன் MA சொன்னது…

முதல் மூன்று படங்களையும் பார்க்க நான் ரொம்ப ஆவலாக உள்ளேன்!

KANA VARO சொன்னது…

அவரு தான் Super Star ஆச்சே!

sakthi சொன்னது…

நானும் ரஜினி ரசிகை தான் பாலாஜி!!

கற்பனை சூப்பர்!!!!

நல்ல தொகுப்பு!!!

பெயரில்லா சொன்னது…

கற்பனை அருமை.

பட்டியலும் அருமை.

RVS சொன்னது…

தம்பி டாப் டென் எழுதமுடியுமா தெரியலை.. ஆனா கண்டிப்பா ரஜினி பத்தி எழுதறேன்.. நன்றி ;-)

ஹரிஸ் சொன்னது…

ஆஹா.... அந்த மூன்று படங்களுக்கு இயக்குனர் நீங்களா?.

Chitra சொன்னது…

நீங்களும் pure ரஜினிடேரியன் தானா? சேம் ப்ளட்!

Priya சொன்னது…

அருமையான தொகுப்பு!

vanathy சொன்னது…

சூப்பர். நல்ல தேர்வுகள், தல.

எஸ்.கே சொன்னது…

மிக நல்ல தொகுப்பு!

R.Gopi சொன்னது…

லிஸ்ட்ல இருக்கற கடைசி 3 படங்கள் நிஜமாவே பட்டைய கிளப்புது தல....

பெயரில்லா சொன்னது…

அருமையான தொகுப்பு பாலா !!!!!

ரிஷபன் சொன்னது…

படங்களும் கமெண்ட்ஸும் அருமை..

Balaji saravana சொன்னது…

கண்டிப்பாக எழுதுகிறேன் பாலா
நன்றி

நன்றி ம.தி.சுதா

நன்றி ஜெயந்த்

நன்றி சதீஷ் :)

நன்றி செல்வா

நானும் தான் நண்பா :)
நன்றி

நன்றி varo

Balaji saravana சொன்னது…

நான் ஒரு சினிமா ரசிகன் தான் சக்தி :)
நன்றி

நன்றி இந்திரா

கண்டிப்பா எழுதுங்க அண்ணா
நன்றி

உங்களுக்கு ரொம்ப குறும்பு ஹரிஸ் :)
நன்றி

முன்பே சொன்னது போல் நான் ஒரு சினிமா ரசிகன் தான் சித்ராக்கா ;)
நன்றி

நன்றி ப்ரியா

நன்றி வானதி

நன்றி எஸ்.கே

நன்றி கோபி

நன்றி கல்பனா

நன்றி ரிஷபன்

சிவா என்கிற சிவராம்குமார் சொன்னது…

உண்மை பாலா! கடைசி மூன்றும் நடந்தால் ஒவ்வொரு ரசிக்கணும் அதுதான் தீபாவளி!

எம் அப்துல் காதர் சொன்னது…

தல எல்லாத்தையும் நீங்க எழுதிப்புட்டு அவ்வ்வ்வ்..!!

தொடருகிறேன்...நண்பா.. நன்றி!

ஹேமா சொன்னது…

பாலா.....ரஜனி வர வர ரொம்ப அழகாயிட்டு வாறார் !

Balaji saravana சொன்னது…

நன்றி சிவா

அழைப்பை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி நண்பா

ஆமாம் ஹேமா.. :)
நன்றி

கருத்துரையிடுக