வியாழன், 25 நவம்பர், 2010

தலைப்பிடாதது இரண்டு

பழைய நண்பனை
எதிரில் பார்த்து
நலம் நோக்கி
விசாரித்தறிந்து
கடந்த நிகழ்வுகளை
நிகழுக்கிழுத்து
நடந்தபடி பேசி
மறுப்பின் பயனுதவாமல்
டாஸ்மாக் நுழைந்து
நினைவைக் கிளறிக் கொண்டே
முதல்மிடறு உள்ளிறக்க
இறங்கியோடுகிறது
மனைவியிடம் செய்த
சத்தியமொன்று...

*************************************************************************கடைசிவாய் உணவின்போது
வாசல் வந்துவிட்ட ஒருவனை
முழுங்கவும் முடியாது பேசவும் முடியாது
தலையசைப்பால் திருப்பியனுப்பி
தாழிட்டுத் திரும்ப
மென்ற சோறு உள்ளிறங்காதபடி
ஏதோவொன்று முட்டிநின்றது.30 கருத்துகள்:

LK சொன்னது…

இரண்டுமே முத்துக்கள்

KANA VARO சொன்னது…

மனைவியிடம் செய்த
சத்தியமொன்று..\\

Ha haa...
பகிர்வுக்கு நன்றி

இராமசாமி கண்ணண் சொன்னது…

சத்தியமெல்லாம் ரொம்ப தப்பு...

vanathy சொன்னது…

நல்லா இருக்கு. சத்தியம் பண்ணுவது ரொம்......ப தப்பு!!!!

சந்திரிகை சொன்னது…

தண்ணி அடிக்கறது ரொம்ப தப்பு

நம்ம வீட்ல சோற்றுக்கு பஞ்சமா என்ன?

அவனையும் சாப்பிட சொல்லிருக்கலாம்

பாலா சொன்னது…

சத்தியம்தானே திரும்ப செய்திட்டா போச்சு..

நண்பன் ஒண்ணும் தப்பா நினைச்சுக்க மாட்டான்.

பெயரில்லா சொன்னது…

இரண்டுமே அருமை

ஹரிஸ் சொன்னது…

நல்லாருக்கு..

Balaji saravana சொன்னது…

நன்றி LK!

வாங்க வரோ
நன்றி

நன்றி ராமசாமி அண்ணா
சத்தியமெல்லாம் நமக்கு சக்கரைப் பொங்கல் தானே ;)

நன்றி வானதி

ஜீவாம்மா, கவிதையின் உள்ளாடும் பொருளை கவனிங்க!
நன்றி


அதான பண்ணிட்டாப் போச்சு ;)
நன்றி பாலா


நன்றி இந்திரா

நன்றி ஹரிஸ்

இளங்கோ சொன்னது…

இரண்டு கவிதைகளும் அழகு.
நிகழ்வுகளை அழகாய் கவிதைப் படுத்தியிருக்கிறீர்கள்.

Prasanna சொன்னது…

Amazing :)

sakthi சொன்னது…

இரண்டாவது கவிதை ரொம்ப பிடிச்சு இருக்கு பாலாஜி

RVS சொன்னது…

ஒரு பதிவில் இரு கவிதை.,.,,

நல்லா இருக்கு பாலாஜி.. அந்த உள்ளே முழுங்கமுடியாதபடி தடுத்ததே.. அது அருமை... ;-)

சுசி சொன்னது…

இரண்டுமே அசத்தலா இருக்குங்க.

வெறும்பய சொன்னது…

இரண்டுமே அருமை

kavisiva சொன்னது…

இரண்டாவது கவிதை அருமை!

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

இரண்டும் சரியாக பேலன்ஸ் செய்யப்பட்டுள்ளது .. எதார்த்தம் பொருந்திய அன்றாட வாழ்வு ...

எம் அப்துல் காதர் சொன்னது…

சத்தியம் செய்திட்டு சிப்பிட்டு (தள்ளாடி..!!) வந்து யார் மீது மோதிகிட்டீங்க?? ச்சே.. ச்சே ரெண்டு கவிதையும் போட்டு குழப்பிட்டேனோ!! ஹி..ஹி..

அன்பரசன் சொன்னது…

//மனைவியிடம் செய்த
சத்தியமொன்று..//

அப்புறம் என்ன ஒரே அடிதடி தான் போல.

Chitra சொன்னது…

உங்கள் முத்திரையை, இரண்டாவது கவிதையில் பதித்து இருக்கிறீர்கள்.

பார்வையாளன் சொன்னது…

இரண்டுமே அருமை..
இரண்டாவது கூடுதல் அருமை

Balaji saravana சொன்னது…

நன்றி இளங்கோ

நன்றி பிரசன்னா

நன்றி சக்தி

நன்றி ஆர்விஎஸ் அண்ணா

நன்றி சுசி

நன்றி ஜெயந்த்

நன்றி கவிசிவா

மிக்க நன்றி செந்தில் அண்ணா

ஹா ஹா.. :)
நன்றி அப்துல்


லைட்டா தான் நண்பா :)
நன்றி அன்பரசன்

நன்றி சித்ரா

நன்றி பார்வையாளன் :)

VELU.G சொன்னது…

முதல் மிடறும், கடைசி வாய் உணவும் உறுத்திக்கொண்டேயிருக்கிறது

அருமையான கவிதைகள் நண்பரே

Balaji saravana சொன்னது…

நன்றி வேலு

anu சொன்னது…

Very nice flow.Good articleVery nice flow.Good article

ப.செல்வக்குமார் சொன்னது…

//மறுப்பின் பயனுதவாமல்
டாஸ்மாக் நுழைந்து
நினைவைக் கிளறிக் கொண்டே
முதல்மிடறு உள்ளிறக்க
இறங்கியோடுகிறது
மனைவியிடம் செய்த
சத்தியமொன்று.../

கலக்கல் ..!!

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

நல்லாருக்கு

பெயரில்லா சொன்னது…

கால தாமதத்திற்கு மன்னிக்கவும் பாலா

அகத்தின் அழகு முகத்தில் தெரியுமாம்!
அங்ஙனம்
LK சொன்னது போல் தலைப்பு இல்லையெனினும் இரண்டுமே முத்துக்கள் தான்!!!!

ரிஷபன் சொன்னது…

இரண்டுமே மனதில் பதிந்தன..

Balaji saravana சொன்னது…

நன்றி செல்வா

நன்றி சதீஷ்

மன்னிப்பெல்லாம் எதற்கு கல்பனா
நன்றி

நன்றி ரிஷபன்

கருத்துரையிடுக