திங்கள், 22 நவம்பர், 2010

சில பயணங்கள்!

உடைக்கும் தேவைகளற்று
நீளும் மௌன நிமிடங்கள்
தொடரும் சில பயணங்கள்..

வலிய இழுத்துப் பேசும்
உரையாடலின் முற்றுப் புள்ளியை
அவசரமாய் வைக்கத் துடிக்கிறேன்
வார்த்தைகள் எகிறத் துடிக்கும் கணத்தில்...

நேற்றைய தூக்கம் முழுதுமிருந்தும்
இமை மூடாமல், ஜன்னல் காட்சியின்
சிறுபிள்ளை  ஏக்கத்தால்...

சட்டென கவிந்து மேகம் தூவும்
சிறு சாரலும், தூரக் குழந்தைகளின்
விளையாடர்க் காட்சியும்
சோகப் பக்கங்கள் தாண்டிடும்
நினைவுப் புத்தகத்தில்...

சிநேகப் புன்னகையையும்
நாளிதழ் நீட்டலையும் வலிய மறுத்தும்
முகம் நோக்கும் எதிரிருக்கை பயணி..
மனிதர்களுடன் பயணித்தும்
பேசவிழையா பயணங்கள் சில..

இலக்கில்லா பயணங்களில்
துணையாகிப் போகிறது
நீள் மௌனமும்
நிமிடங்கள் தின்னும்
உன் நினைவும்...

                                    

26 கருத்துகள்:

RVS சொன்னது…

//நீள் மௌனமும்
நிமிடங்கள் தின்னும்
உன் நினைவும்...//
அம்சம்.. ;-)

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

பதின்ம வயதின் பயணங்கள் ...

sakthi சொன்னது…

இலக்கில்லா பயணங்களில்
துணையாகிப் போகிறது
நீள் மௌனமும்
நிமிடங்கள் தின்னும்
உன் நினைவும்.

ஆழமான வரிகள் பாலாஜி...

தொடருங்கள்....

sakthi சொன்னது…

சட்டென கவிந்து மேகம் தூவும்
சிறு சாரலும், தூரக் குழந்தைகளின்
விளையாடர்க் காட்சியும்
சோகப் பக்கங்கள் தாண்டிடும்
நினைவுப் புத்தகத்தில்...

ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே.....

சந்திரிகை சொன்னது…

நேற்றைய தூக்கம் முழுதுமிருந்தும்
இமை மூடாமல், ஜன்னல் காட்சியின்
சிறுபிள்ளை ஏக்கத்தால்...


ஒவ்வொரு பயணத்திலும் சிறு பிள்ளை ஆகிறேன் இப்பொழுதும்

அருமை மகனே

பார்வையாளன் சொன்னது…

பயணங்கள் முடிவதில்லை...

அன்பரசன் சொன்னது…

பயணம் அருமைங்க பாலாஜி.

ஹரிஸ் சொன்னது…

:)....:(...

மோகன்ஜி சொன்னது…

பயணங்கள் முடிவதில்லை பாலா! நலம் தானே?

vanathy சொன்னது…

அருமை!

Balaji saravana சொன்னது…

நன்றி ஆர்விஎஸ் அண்ணா

நன்றி செந்தில் அண்ணா

வாங்க சக்தி
நன்றி

நன்றி ஜீவாம்மா

வாங்க பார்வையாளன்
நன்றி

நன்றி அன்பரசன்

வாங்க ஹரிஷ்
நன்றி

வாங்க மோகன் சார்
மிக்க நலம் :)
நன்றி

நன்றி வானதி

Chitra சொன்னது…

மனிதர்களுடன் பயணித்தும்
பேசவிழையா பயணங்கள் சில..


...... எத்தனையோ கருத்துக்களை, இரண்டே வரிகளில் கட்டி வைத்து விட்டீர்களே! பாராட்டுக்கள்!

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

பயனக்காட்சிகளையும் கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள்!

Balaji saravana சொன்னது…

அவ்வரிகளை ரசித்தமைக்கு
மிக்க நன்றி சித்ராக்கா :)

நன்றி சைகொப

எம் அப்துல் காதர் சொன்னது…

// உடைக்கும் தேவைகளற்று
வலிய இழுத்துப் பேசும்
நேற்றைய தூக்கம் முழுதுமிருந்தும்
சட்டென கவிந்து மேகம் தூவும்
சிநேகப் புன்னகையையும்
இலக்கில்லா பயணங்களில்
உன் நினைவும்...//
அருமை நண்பா..

சே.குமார் சொன்னது…

உண்மையை உணர்த்தும் கவிதை. ரொம்ப நல்லாயிருக்கு.

வெறும்பய சொன்னது…

அருமையான வரிகள்...

ஹேமா சொன்னது…

பாலா....கனவிலயே மிதந்தபடிதான் பயணங்களுமோ !

எஸ்.கே சொன்னது…

அருமை!

ப.செல்வக்குமார் சொன்னது…

//சிநேகப் புன்னகையையும்
நாளிதழ் நீட்டலையும் வலிய மறுத்தும்
முகம் நோக்கும் எதிரிருக்கை பயணி..
மனிதர்களுடன் பயணித்தும்
பேசவிழையா பயணங்கள் சில.//

உண்மைதான் அண்ணா ., சில நினைவுகள் நம்மை அவ்வாறு தனிமையை விரும்பச் செய்கின்றன ..!!

VELU.G சொன்னது…

ரொம்ப அருமையான கவிதை

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நிமிடங்கள் தின்னும் நினைவுகள் அருமை

Balaji saravana சொன்னது…

நன்றி அப்துல்

நன்றி குமார்

நன்றி ஜெயந்த்


சில நேரங்களில் மட்டுமே :)
நன்றி ஹேமா

நன்றி எஸ்.கே

முற்றிலும் உண்மை!
நன்றி செல்வா

நன்றி வேலு

நன்றி தேனக்கா

பெயரில்லா சொன்னது…

நீ பயணித்த பயணத்தை பயணிக்கையில் உன் உணர்வுகளுக்கு மனமோ சபாஷ் சொல்லுகிறது பாலா

ரிஷபன் சொன்னது…

கவிதை பயணிக்கிறது.. காட்சிகளும் உணர்வுகளுமாய். அருமை.

Balaji saravana சொன்னது…

நன்றி கல்பனா

நன்றி ரிஷபன்

கருத்துரையிடுக