வியாழன், 18 நவம்பர், 2010

ஜம்பம்

வெடுக்கென பேப்பர் பிடுங்கும் வெறுப்பும்
பின் கைதிணிக்கும் சாமான் கூடையும்
வரும் பசி தீர்க்கவெனக் கொண்டேன்..

பாத்திரம் கழுவும் நேரத்திலே
பக்குவமாய் பால்கோவா செய்யவும்
பாடம் எடுக்கிறாய் நீ..

நான் துவைக்க கிழியும் ஆடை
கிழியாமல் கறை நீக்கும் கலையை
யாரிடம் கற்றாய்...

பட்டமும் பின் தொடரும் நிர்வாகமும்
பதறுகிறது குழந்தை சமாளிக்கும்
உபாயம் அறியாமல்..

சட்டையில்லாமல் செய்த சமையலின்
வினையை வன்மமாய் உணர்த்தியது
வெடித்த கடுகு...

குனிந்து பெருக்கும்  போது
இடிக்கும் தொப்பை ஆறுமாத
உடற்பயிற்சி  நிறுத்தமெனக் கொள்!

ஒத்துக் கொண்டு சண்டை முடிக்கிறேன்
கோபத்தில் வீசியெறியும் பொருட்களிலும்
பட்டுத் தெறிக்கிறது உன் அன்பென..

டிஸ்கி : இது தங்கமணிகளின் சொல்பேச்சு கேளாமல்  பரேடு வாங்கும் அப்பாவி ரங்கமணிகளுக்கு அன்புடன்  சமர்ப்பணம். :)

பின் குறிப்பு : இது உன் "சொந்த சோகக் கதை"யா வென பின்னூட்டமிட நினைக்கும் அன்பு உள்ளங்களுக்கு, எனக்கு இன்னும் திருமணமாகவில்லை என நினைவு படுத்த விரும்புகிறேன் ;)


    

38 கருத்துகள்:

LK சொன்னது…

ஹஹ்ஹிற.. அருமை பாலாஜி. உங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வாழ்த்துக்கள் (அப்பதான்யா கஷ்டம் தெரியும் )

vanathy சொன்னது…

இந்த கவிதையை படிச்சுட்டு பொண்ணுங்க லைனில் வரப் போறாங்க.

நல்லா இருக்கு.

சந்திரிகை சொன்னது…

பட்டமும் பின் தொடரும் நிர்வாகமும்
பதறுகிறது குழந்தை சமாளிக்கும்
உபாயம் அறியாமல்..

பெண் இல்லாத வீடு இப்படி தான் .எனக்கு ரொம்ப சந்தோசம்

கல்யாணத்துக்கு முன்னாலேயே இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டியே

மருமக கூட சண்டை போட மாட்ட

nis சொன்னது…

//குனிந்து பெருக்கும் போது
இடிக்கும் தொப்பை ஆறுமாத
உடற்பயிற்சி நிறுத்தமெனக் கொள//

hahaha

Kousalya சொன்னது…

//ஒத்துக் கொண்டு சண்டை முடிக்கிறேன்
கோபத்தில் வீசியெறியும் பொருட்களிலும்
பட்டுத் தெறிக்கிறது உன் அன்பென..//

இப்படி சொல்லி தான் சமாளிக்க வேண்டி இருக்கிறது பாலா....! ஆனா கல்யாணத்திற்கு முன்பே சமாளிக்கிறது எப்படின்னு ஐடியா கண்டுபிடிச்சி வச்சிருக்கிற ஒரு ஆளை இப்பதான் கேள்வி படுறேன்...?! :)))

நாகராஜசோழன் MA சொன்னது…

உங்களுக்கு விரைவில் திருமணம் முடிய வாழ்த்துக்கள்.

அமைதிச்சாரல் சொன்னது…

//ஒத்துக் கொண்டு சண்டை முடிக்கிறேன்
கோபத்தில் வீசியெறியும் பொருட்களிலும்
பட்டுத் தெறிக்கிறது உன் அன்பென//

ஹா..ஹா..ஹா.. நல்ல சமாளிஃபிகேஷன்.

விரைவில் திருமணம் முடித்து, மனமொத்த தம்பதிகளாய் வாழ வாழ்த்துக்கள் :-))

சுந்தரா சொன்னது…

அனுபவிச்சமாதிரியே எழுதியிருக்கீங்க :)

கற்பனை நிஜமாகக் கடவது!!!

RVS சொன்னது…

அதி சீக்கிரமே விவாஹப் ப்ராப்திரஸ்த்து !!!!

Balaji saravana சொன்னது…

@ LK
ஹஹ்ஹிற.. அருமை பாலாஜி. உங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வாழ்த்துக்கள் (அப்பதான்யா கஷ்டம் தெரியும் ) //

ஆஹா கொஞ்சம் நிம்மதியா இருக்க விட மாட்டங்களே ;)
நன்றி LK

@வானதி

//இந்த கவிதையை படிச்சுட்டு பொண்ணுங்க லைனில் வரப் போறாங்க.

நல்லா இருக்கு. //

வாங்க வானதி..
ரைட்டு.. ஆப்பு ரெடி அப்படின்னு சொல்றிங்க :)
நன்றி வானதி

@ஜீவாம்மா

//பெண் இல்லாத வீடு இப்படி தான் .எனக்கு ரொம்ப சந்தோசம்

கல்யாணத்துக்கு முன்னாலேயே இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டியே

மருமக கூட சண்டை போட மாட்ட //

எல்லாம் உங்க ட்ரெயினிங் தான் ;)
நன்றி ஜீவாம்மா

@nis

//ஹஹஅஹா //

இதத் தான் நான் எதிர் பார்த்தேன்...
நன்றி!

@கௌசல்யா

//இப்படி சொல்லி தான் சமாளிக்க வேண்டி இருக்கிறது பாலா....! ஆனா கல்யாணத்திற்கு முன்பே சமாளிக்கிறது எப்படின்னு ஐடியா கண்டுபிடிச்சி வச்சிருக்கிற ஒரு ஆளை இப்பதான் கேள்வி படுறேன்...?! :))) //

சில ரங்கமணியோட புலம்பல்ஸ் கேட்டாலே ஐடியா தானா வரும் சகோ..

நன்றி சகோ!

@சோழன்

ஏன் பாஸ் கொஞ்ச நாள் நிமதியா இருந்துட்டு போறேனே..
நன்றி பாஸ்!

@அமைதி சாரல்

//ஹா..ஹா..ஹா.. நல்ல சமாளிஃபிகேஷன்.

விரைவில் திருமணம் முடித்து, மனமொத்த தம்பதிகளாய் வாழ வாழ்த்துக்கள் :-)) //

ஆஹா வர்றவங்க எல்லாருமே எனக்கு வாழ்த்து சொல்ல ஆரம்பிச்சுட்டாங்களே.. அவ்...
நன்றி சாரல்!

@சுந்தரா

//அனுபவிச்சமாதிரியே எழுதியிருக்கீங்க :)


ஆஹா போற போக்குல கொளுத்திப் போட்டுட்டு போறிங்களே சகோ ;)

//கற்பனை நிஜமாகக் கடவது!!! //

இது வேறயா.. ரைட்டு
நன்றி சகோ!


@ஆர்விஎஸ் அண்ணா

அண்ணா நீங்களுமா?
நான் உங்களோட நிலைமைய சொன்னா எனக்கே திருப்பி விடுறீங்களே.. அவ்...
நன்றி!

இளங்கோ சொன்னது…

//பட்டுத் தெறிக்கிறது உன் அன்பென..//
Nice line.

//எனக்கு இன்னும் திருமணமாகவில்லை என நினைவு படுத்த விரும்புகிறேன்//
:)

எஸ்.கே சொன்னது…

அன்பின் வடிவங்கள்!:-)

அருண் பிரசாத் சொன்னது…

பெண்ணீயவாதி பாலாஜி வாழ்க

Balaji saravana சொன்னது…

@இளங்கோ
வாங்க இளங்கோ
நன்றி

@எஸ்கே
//அன்பின் வடிவங்கள்!:-) //

மிக்க நன்றி நண்பா!

@ அருண்
//பெண்ணீயவாதி பாலாஜி வாழ்க //

ஆஹா.. இப்படி பட்டைய கட்டி விடுறீங்களே நண்பா.. அவ்..

Prasanna சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு.. தீர்க்க தரிசனம் ஜாஸ்தி உங்களுக்கு :)

ப.செல்வக்குமார் சொன்னது…

///நான் துவைக்க கிழியும் ஆடை
கிழியாமல் கறை நீக்கும் கலையை
யாரிடம் கற்றாய்...///

இந்த வரிகள் கலக்கலா இருக்கு அண்ணா ..!!

ப.செல்வக்குமார் சொன்னது…

//பட்டமும் பின் தொடரும் நிர்வாகமும்
பதறுகிறது குழந்தை சமாளிக்கும்
உபாயம் அறியாமல்..//

இது செம ., ஆனா உண்மைதான் என்னதான் ஆண்கள் பெரிய ஆள இருந்தாலும் குழந்தைகளை கவனிப்பதில் பெண்களை overtake.பண்ண முடியாது ..

ப.செல்வக்குமார் சொன்னது…

//பின் குறிப்பு : இது உன் "சொந்த சோகக் கதை"யா வென பின்னூட்டமிட நினைக்கும் அன்பு உள்ளங்களுக்கு, எனக்கு இன்னும் திருமணமாகவில்லை என நினைவு படுத்த விரும்புகிறேன் ;)///

இது உங்க சொந்தக் கதையா அண்ணா ..?!! நான் நீங்களே சொந்தமா எழுதினதா அந்த அர்த்தத்துல கேட்டேன் .. ( எப்படி டிஸ்கி போட்டாலும் வம்பிளுப்போர் சங்கம் )

ரிஷபன் சொன்னது…

சரளமாய் கோர்வையாய் வார்த்தைகள்..
அழகுக் கவிதைக்கு ஒரு ஷொட்டு

அலைகள் பாலா சொன்னது…

nalla irukku...

எம் அப்துல் காதர் சொன்னது…

ரொம்ப கற்பனையிலேயே வாழ வேண்டாம் நண்பா!!

எம் அப்துல் காதர் சொன்னது…

ஹி..ஹி..பயந்துட்டீங்களா..!! கொஞ்சம் நிஜத்தை எழுதியமைக்கும்..வாழ்த்துகள்!!

அன்பரசன் சொன்னது…

//குனிந்து பெருக்கும் போது
இடிக்கும் தொப்பை ஆறுமாத
உடற்பயிற்சி நிறுத்தமெனக் கொள்!//

:)

அன்பரசன் சொன்னது…

ஒரு மார்க்கமாதான் போயிட்டிருக்கு.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

ஒரிஜினல் இப்படி இருக்காது ( கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் இந்த மாதிரி கவிதை எழுதுங்க)

ஹேமா சொன்னது…

கவிதை சொன்ன விஷயங்கள் நல்லதே.ஏன்...வீட்ல உதவி செய்தா குறைஞ்சா போய்டுவீங்க.ஆனா சொன்ன விதம்தான் பாவமா....சிரிப்பா வருது பாலா !

Priya சொன்னது…

புலம்பல்ஸ்..... நல்லா இருக்கு!

Balaji saravana சொன்னது…

நன்றி பிரசன்னா

//எப்படி டிஸ்கி போட்டாலும் வம்பிளுப்போர் சங்கம் //

ஹா ஹா..

நன்றி செல்வா...

நன்றி ரிஷபன்

நன்றி பாலா

நன்றி அப்துல்

நன்றி அன்பரசன்

அண்ணா அது ஒரு நகைச்சுவைக்காக எழுதினேன்.. மற்றபடி வேறொன்றும் நோக்கமல்ல
நன்றி செந்தில் அண்ணா

//ஆனா சொன்ன விதம்தான் பாவமா....சிரிப்பா வருது பாலா ! //
மேலே சொன்னது போல ஒரு நகைச்சுவைக்காக தான்..
நன்றி ஹேமா

நன்றி ப்ரியா

Gopi Ramamoorthy சொன்னது…

'சுப சீக்ரஸ்ய'

அப்புறம் 'Marriage is the triumph of one's hope over everybody else's experience' அப்படின்னு Erich Segal ஒரு நாவலில் சொல்லி இருக்கிறார்.

vasan சொன்னது…

Marriages are made in HEAVEN. After that, the same world changed otherwise.

நர்சிம் சொன்னது…

nice one boss.

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

விரைவில் இவை நனவாக வாழ்த்துக்கள் பாலாஜி.

சுருதிரவி..... சொன்னது…

கவிதை நன்று.சீக்கிரமே நனவாக வாழ்த்துக்கள்..

பஞ்சவர்ணசோலை சொன்னது…

கவிதை நல்லாருக்கு!!

வாழ்த்துகள்

Balaji saravana சொன்னது…

வாங்க கோபி
நன்றி!

வாங்க வாசன்
நன்றி

வாங்க தல!
பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி பாஸ் :)

நன்றி சைகோப

நன்றி சுருதிரவி

வாங்க பஞ்சவர்ண சோலை
நன்றி!

பெயரில்லா சொன்னது…

கவிதை அருமை... கடைசிவரிகள் அருமையிலும் அருமை..

ஐயோ!! பாலா உன் வரிகள் எனை
ஆச்சிரியமுட்டிகிறது.....
தமிழ் மனம் தமிழ்நாடு- ன் எல்லை தாண்டும் போது உச்சமடைவதை அறியமுடிகிறது உன் வரையில்...

வாழ்த்துக்கள் பாலா

சுபத்ரா சொன்னது…

//கோபத்தில் வீசியெறியும் பொருட்களிலும்
பட்டுத் தெறிக்கிறது உன் அன்பென..//

Fantastic!!

டிஸ்கி சூப்பர் :-)

//பின் குறிப்பு : இது உன் "சொந்த சோகக் கதை"யா வென பின்னூட்டமிட நினைக்கும் அன்பு உள்ளங்களுக்கு, எனக்கு இன்னும் திருமணமாகவில்லை என நினைவு படுத்த விரும்புகிறேன் ;)//

Is this a new method of Proposal??? ;-)

Balaji saravana சொன்னது…

மிக்க நன்றி கல்பனா

வாங்க சுபத்ரா
ஆஹா.. அப்டியெல்லாம் இல்ல! நம்புங்க ப்ளீஸ் ;)
வருகைக்கு நன்றி சுபத்ரா

கருத்துரையிடுக