புதன், 10 நவம்பர், 2010

நான்!

கல்லிடறிக் கன்னத்தில்
காயம்பெற விழுந்து
காத்திருக்கும் கல்லூரிக்
கன்னிகளின் பெரும்சிரிப்பில்
அவசரமாய் எழுபவனோ..

இரவுப் பணி முடிந்து
கலைந்த தலையும் கண்சொருகும்
தூக்கமுமாய், அதட்டும் குரலில்
பெண்கள் இருக்கை விட்டு எழுபவனோ..

தவறுதலாய் கால்மிதிக்க
ஏச்சுப் பேச்சுக்களால் பிடரிக்
கண்ணுள்ள பெரும்பிராணியாய்
மாறிப் போகிறவனோ..

உயிரொடுக்கி மொழி மறந்து
ஊர் சேர, விரல் நடுங்கி
கண்பார்த்து யாசிப்பவனோ..

அடிக்கும் வெயிலிலும்
அரைகிளாஸ் டீயில்
அரைநாள் பட்டினி
துரத்துகிறவனோ...

வளைந்த மூக்கும் வடிவிலா தேகமும்
கொண்ட என்னை நோக்கி
முகம் சுளித்து இரண்டடித் தள்ளிப் போகையில்
கவனமாய்ப் பாருங்கள்
எனக்குள்ளும் உயிர்த் துடிப்பதை...

44 கருத்துகள்:

சந்திரிகை சொன்னது…

வளைந்த மூக்கும் வடிவிலா தேகமும்
கொண்ட என்னை நோக்கி
முகம் சுளித்து இரண்டடித் தள்ளிப் போகையில்
கவனமாய்ப் பாருங்கள்
எனக்குள்ளும் உயிர்த் துடிப்பதை...

இயந்திர உலகில் மனிதம் மறந்து விட்டது .அருமை

நான் தான் முதல்

பாலா சொன்னது…

எதுக்கு இவ்வளவு பீலிங்கு? விட்டு தள்ளுங்க பாஸ்

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

//வளைந்த மூக்கும் வடிவிலா தேகமும்
கொண்ட என்னை நோக்கி
முகம் சுளித்து இரண்டடித் தள்ளிப் போகையில்
கவனமாய்ப் பாருங்கள்
எனக்குள்ளும் உயிர்த் துடிப்பதை...

செம..!

அருண் பிரசாத் சொன்னது…

கடைசில சூப்பர் டச்...

RVS சொன்னது…

அவலட்சணமான நான்!
நல்லா இருக்கு பாலாஜி! வாழ்த்துக்கள்.

Chitra சொன்னது…

வளைந்த மூக்கும் வடிவிலா தேகமும்
கொண்ட என்னை நோக்கி
முகம் சுளித்து இரண்டடித் தள்ளிப் போகையில்
கவனமாய்ப் பாருங்கள்
எனக்குள்ளும் உயிர்த் துடிப்பதை...


......மனிதாபிமானம்..... சூப்பர்!

எஸ்.கே சொன்னது…

//அடிக்கும் வெயிலிலும்
அரைகிளாஸ் டீயில்
அரைநாள் பட்டினி
துரத்துகிறவனோ...// வறுமையை எவ்வளவு எளிமையாய் சொல்லிவிட்டீர்கள்!

அருமை!

ப.செல்வக்குமார் சொன்னது…

//அடிக்கும் வெயிலிலும்
அரைகிளாஸ் டீயில்
அரைநாள் பட்டினி
துரத்துகிறவனோ...//

சத்தியமா ரொம்ப அருமையா இருக்கு அண்ணா ... இந்த வரிகள் ஹய்யோ ..

ப.செல்வக்குமார் சொன்னது…

//கவனமாய்ப் பாருங்கள்
எனக்குள்ளும் உயிர்த் துடிப்பதை...
/

இதைப்படிக்கும் போது அப்படியே ஒரு சிலிர்ப்பு வருது அண்ணா .. கலக்கிட்டீங்க ..

சுசி சொன்னது…

உயிரின் வலியை அப்படியே சொல்லி இருக்கீங்க.. இந்த நாட்டில எனக்கும் இது பொருந்தும் பாலாஜி..

:(((((

//ஏச்சுப் பேச்சுக்களால் பிடதிக்
கண்ணுள்ள பெறும்பிராணியாய்//

தப்பா எடுத்துக்காதிங்க.. இந்த //பிடதி//, //பெறும்// என்ற சொற்கள் எழுத்துப் பிழையா அல்லது நான் அறியாத புது சொற்களா??

Prasanna சொன்னது…

முதல் மூன்று பத்திகளில் காட்சிபடுத்திய விதம் அருமை..

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

ம்ம் என்ன சொல்ல பாலாஜி

dheva சொன்னது…

உள்ளுக்குள் இருக்கும் ஒரு ரணம்....உணர்வாய் கவிதையாய்...! இயலாமையில் இருக்கும் ஒரு மனது எப்படி எல்லாம் நினைக்கும்...மனதுக்குள்....வெளுத்து வாங்கி இருக்கப்பா!

செம தம்பி.. சூப்பர்...!

வருணன் சொன்னது…

மிக நல்ல படைப்பு நண்பா. ஆழமான அர்த்தங்களும் அதிகமான வலியும் வெளிப்படுத்தும் வரிகள்... காதலையும் கன்னிகளையும் மாய்ந்து மாய்ந்து வரிகளாக்கும் கவிதைகளினின்று உங்களுடையது தனித்து நிற்கிறது.

வெறும்பய சொன்னது…

//அடிக்கும் வெயிலிலும்
அரைகிளாஸ் டீயில்
அரைநாள் பட்டினி
துரத்துகிறவனோ...// வறுமையை எவ்வளவு எளிமையாய் சொல்லிவிட்டீர்கள்!

அருமை!

பெயரில்லா சொன்னது…

வளைந்த மூக்கும் வடிவிலா தேகமும்
கொண்ட என்னை நோக்கி
முகம் சுளித்து இரண்டடித் தள்ளிப் போகையில்
கவனமாய்ப் பாருங்கள்
எனக்குள்ளும் உயிர்த் துடிப்பதை...

நல்லா இருக்கு பாலா....

இது எனக்கும் பொருந்தும் பாலா.....

kutipaiya சொன்னது…

//வளைந்த மூக்கும் வடிவிலா தேகமும்
கொண்ட என்னை நோக்கி
முகம் சுளித்து இரண்டடித் தள்ளிப் போகையில்
கவனமாய்ப் பாருங்கள்//

நல்லா இருக்கு!!

எம் அப்துல் காதர் சொன்னது…

// வளைந்த மூக்கும் வடிவிலா தேகமும்...
எனக்குள்ளும் உயிர்த் துடிப்பதை... //

மனிதம் ... அருமை நண்பா!!

சிவா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஹேமா சொன்னது…

பாலா...மனிதம் நிறைந்திருக்கிறது அந்த மனிதனுக்குள் !

சிவா சொன்னது…

ஒரு மனிதனுக்கு சமுதாயம் தரும் மரியாதை அவனுடைய தோற்றத்திலும் அவனின் பகட்டிலும் மட்டுமே! மனிதனை மனிதானாய் பார்க்க சொல்லியது உங்கள் கவிதை நண்பா!!! அருமை பாலா!

அன்பரசன் சொன்னது…

//அடிக்கும் வெயிலிலும்
அரைகிளாஸ் டீயில்
அரைநாள் பட்டினி
துரத்துகிறவனோ...//

அருமை

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

அருமை பாஸ்! கவிதையின் வடிவம் புதுசா இருக்கு! சின்ன பாரா வளர்றாரோன்னு இருக்கு!பாராட்டுகள்!

Balaji saravana சொன்னது…

உங்களோட ஆசை நிறைவேறிடுச்சு :)
நன்றி ஜீவாம்மா

ஒரு நிலை வெளிப்பாடு பாலா.. நன்றி!

நன்றி ரமேஷ்!

நன்றி அருண்!

நன்றி ஆர்விஎஸ் அண்ணா!

நன்றி சித்ராக்கா

நன்றி எஸ்கே

நன்றி செல்வா


சுசி.. உங்க வலி புரியுது சகோ.. மிகக் கொடுமையானது அது..

பிடதி - பிடரி ( பிடரிக் கண்ணுள்ள ) அப்படின்னு வந்திருக்கணும்..

பெறும் - பெரும் ( பெரும்பிராணி ) அப்படின்னு வந்திருக்கணும்

இரண்டு தவறையும் திருத்திக்கிறேன் சகோ..

//தப்பா எடுத்துக்காதிங்க..// தப்பாவே எடுத்துக்க மாட்டேன் சகோ எப்பவும்.. உங்களோட திருத்தல்கள் மிக்க பயனுள்ளவை எனக்கு.. :)

நன்றி சுசி!


நன்றி பிரசன்னா

நன்றி தேனக்கா!

மிக்க நன்றி தேவா அண்ணா!

வாங்க வருணன்.. மிக்க நன்றி நண்பா!

நன்றி ஜெயந்த்

நன்றி கல்பனா

நன்றி சீதா

நன்றி அப்துல்

நன்றி ஹேமா

நன்றி சிவா

நன்றி அன்பரசன்

நன்றி வசந்த்!

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

கவிதையின் பத்திகளை கடைசி வரியில் சரியாக பாலன்ஸ் செய்தமைக்கு மிகுந்த பாராட்டுக்கள் தம்பி ..

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

யோவ் கலக்கிட்டய்யா..சூப்பரா இருக்கு...

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

நச் வரிகளோடு நல்ல எடிட்டிங் லைன்..சூப்பர் பஞ்ச்..கவிதை...

ers சொன்னது…

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

கார்த்திக் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கார்த்திக் சொன்னது…

வளைந்த மூக்கும் வடிவிலா தேகமும்
கொண்ட என்னை நோக்கி
முகம் சுளித்து இரண்டடித் தள்ளிப் போகையில்
கவனமாய்ப் பாருங்கள்
எனக்குள்ளும் உயிர்த் துடிப்பதை...

நண்பா, உள்ளத்தின் அருமையான வெளிப்பாடு. ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், உடல் அமைப்புகள் மாறுபட்டாலும் உள்ளம் ஒன்றே என்பதை சிறப்பாக கூறியுள்ளாய். வாழ்த்துக்கள்.

Kousalya சொன்னது…

மிக சிறந்த உணர்வு தாங்கிய வரிகள்...! ரொம்ப பிடிச்சிருக்கு சகோ.

சௌந்தர் சொன்னது…

வளைந்த மூக்கும் வடிவிலா தேகமும்
கொண்ட என்னை நோக்கி
முகம் சுளித்து இரண்டடித் தள்ளிப் போகையில்
கவனமாய்ப் பாருங்கள்
எனக்குள்ளும் உயிர்த் துடிப்பதை..////

உன்னை பற்றி யார் என்ன சொன்னா யார் அவங்க சொல்லு இப்போ என்ன பண்றேன் பாரு

கவிதை காதலன் சொன்னது…

நமக்கு இந்த அளவுக்கு அறிவுபூர்வமா யோசிக்க தெரியலை நண்பா.. கொஞ்சம் பொறாமையா இருக்கு. அருமையான கவிதை..

Balaji saravana சொன்னது…

மிக்க நன்றி செந்தில் அண்ணா!

நன்றி சதீஷ்

நன்றி கார்த்திக்

நன்றி சகோ

அன்புக்கு மிக்க நன்றி நண்பா..
விடு விடு அவங்கள நானே பார்த்துக்கிறேன் ;)
நன்றி சௌந்தர்

வாங்க கவிதை காதலரே!
நன்றி பாஸ்!

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

பைனல் டச்(சிங்) கலக்கல் பாலாஜி.

Ananthi சொன்னது…

ஆரம்பம் முதல் கடைசி வரை ரசிக்கும் தன்மை குறைந்து விடாமல் அழகான வரிகள்..!!

கடைசி வரிகள்.....நச்சுன்னு இருக்குங்க..!! :-)) வாழ்த்துக்கள்..

polurdhayanithi சொன்னது…

aama kathal perusuthan pola?
polurdhayanithi

சிநேகிதி சொன்னது…

அருமையாக இருக்கு

சே.குமார் சொன்னது…

அழகான வரிகள்..!

விந்தைமனிதன் சொன்னது…

என்னய்யா இவ்வளவு ஃபீலிங்கு!

அஹமது இர்ஷாத் சொன்னது…

umm.

http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_17.html

Balaji saravana சொன்னது…

நன்றி சைகொப!

நன்றி ஆனந்தி

வாங்க தயாநிதி, நன்றி

நன்றி சிநேகிதி

நன்றி குமார்

வாங்க விந்தை மனிதன்
ஒரு நிலைப்பாடு அதற்குத் தான் நண்பா!
நன்றி!

அறிமுகத்துக்கு மிக்க நன்றி அஹமத்

ரிஷபன் சொன்னது…

கடைசியில் கவித்துவம் மனிதத்துவமாகி மகத்துவம் பெற்று விட்டது.. அருமை.

Balaji saravana சொன்னது…

வாங்க ரிஷபன்
கருத்துரைக்கு மிக்க நன்றி

கருத்துரையிடுக