திங்கள், 8 நவம்பர், 2010

காதல் பெருமழை!

உனக்காக காத்திருந்த வேளைகளில்
நங்கூரமிட்டிருந்த என் நிமிடக் கப்பல்
உன் வருகையின் கணத்தில்
ஓடத் தொடங்கியிருந்தது உலகம் சுற்றிவர..

இதழ் சுழித்து பார்வை பேசும்
நேரத்தில் கவிந்திருந்த
கோபமும் காணாமல் போனது
வேகக் காற்றில் வெற்றுத் தாளென...

தயக்கங்களால் நிரம்பியிருந்த
நம்மிடைவெளி விரல் ஸ்பரிசங்கள்
தட்டி கவிழ்ந்தோடுகிறது
நம்மை நனைத்தபடி..

சுற்றும் பேச்சுக்கள் யாவிலும்
"நாம்" முன்னிலை, "நீ"  "நான்" படர்க்கை..
ஆடை நுழைந்து தேகம் தீண்டி நழுவும் காற்றில்
நம் காதல் வாசனை..


சிந்தும் இதழ் முத்தங்களால் 
மெல்லத் தொடங்கியிருந்தது 
காதல் பெருமழையொன்று..

                                                         

39 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

சிந்தும் இதழ் முத்தங்களால்
மெல்லத் தொடங்கியிருந்தது
காதல் பெருமழையொன்று..////

மழையால் வந்த கவிதையா....? நல்லா இருக்கு நண்பா...!

RVS சொன்னது…

காதல் முன்னிலை அதன் முன்னால் நீ நான் படர்க்கை சூப்பர். நல்லா வந்திருக்கு..

மங்குனி அமைச்சர் சொன்னது…

கோபமும் காணாமல் போனது///

nice

Chitra சொன்னது…

சிந்தும் இதழ் முத்தங்களால்
மெல்லத் தொடங்கியிருந்தது
காதல் பெருமழையொன்று..

... very romantic!

சந்திரிகை சொன்னது…

உனக்காக காத்திருந்த வேளைகளில்
நங்கூரமிட்டிருந்த என் நிமிடக் கப்பல்
உன் வருகையின் கணத்தில்
ஓடத் தொடங்கியிருந்தது உலகம் சுற்றிவர..


நல்லா இருக்கு

ers சொன்னது…

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

sakthi சொன்னது…

சிந்தும் இதழ் முத்தங்களால்
மெல்லத் தொடங்கியிருந்தது
காதல் பெருமழையொன்று..
அருமை பாலாஜி

அருண் பிரசாத் சொன்னது…

எல்லா கவிதையுமே சூப்பர்

அன்பரசன் சொன்னது…

//இதழ் சுழித்து பார்வை பேசும்
நேரத்தில் கவிந்திருந்த
கோபமும் காணாமல் போனது
வேகக் காற்றில் வெற்றுத் தாளென...//

Nice lines.

சுசி சொன்னது…

அழகான மழை..

எஸ்.கே சொன்னது…

கவிதைகள் அழகு! அருமை! வாழ்த்துக்கள்!

எம் அப்துல் காதர் சொன்னது…

மழை காலத்தில் இப்படியெல்லாம் கவிதை எழுதி எங்களை மிரட்டக் கூடாது தல. அப்படியே சும்மா போத்திக்கிட்டு தூங்கிடனும் ஹா..ஹா..
//தயக்கங்களால் நிரம்பியிருந்த நம்மிடைவெளி //
இதன் வழியாய் சிரிக்கத் தோன்றுமே நண்பா!!
ஹி..ஹி..

ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

சிந்தும் இதழ் முத்தங்களால்
மெல்லத் தொடங்கியிருந்தது
காதல் பெருமழையொன்று..
-- என்ன ஒரு அற்புதமான ஒரு வார்த்தை ப்ரயோகம்!!

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.

Dhosai சொன்னது…

nice

Kousalya சொன்னது…

//உனக்காக காத்திருந்த வேளைகளில்
நங்கூரமிட்டிருந்த என் நிமிடக் கப்பல்
உன் வருகையின் கணத்தில்
ஓடத் தொடங்கியிருந்தது உலகம் சுற்றிவர..//

மிகவும் ரசித்த வரிகள் சகோ.....!

மிச்ச வரிகள் ரொமான்டிக்.....!!

:))

இராமசாமி கண்ணண் சொன்னது…

பின்றீங்க பாலாஜி..

சிவா சொன்னது…

\\ஆடை நுழைந்து தேகம் தீண்டி நழுவும் காற்றில்
நம் காதல் வாசனை..//

செம கலக்கல் பாலா!!! சொக்கா!!! எனக்கு இப்படி எழுத வரலை! வரலை!! வராது!!!!

kutipaiya சொன்னது…

last lines sema romantic!

ஹேமா சொன்னது…

பாலா தொடக்க வர்ணிப்பே அச்த்தல்.நான் நாம் ஆனதில் சந்தோஷமே.மழையின் நெருக்கத்தில் பெருமழை !

Gopi Ramamoorthy சொன்னது…

தன்மை, முன்னிலை, படர்க்கை, தேகம் தீண்டிய காற்றில் காதலின் வாசனை

சூப்பர்

LK சொன்னது…

மிக மிக அழகான , காதலிக்க வைக்கும் வரிகள் பாலாஜி ..

vanathy சொன்னது…

very nice poem.

Balaji saravana சொன்னது…

@சௌந்தர்
//மழையால் வந்த கவிதையா....? நல்லா இருக்கு நண்பா...//

காதலால் வந்த மழை! ;)
நன்றி நண்பா

@ஆர்விஎஸ்
//காதல் முன்னிலை அதன் முன்னால் நீ நான் படர்க்கை சூப்பர். நல்லா வந்திருக்கு..//

நன்றி அண்ணா

@மங்குனி

//கோபமும் காணாமல் போனது///

Nice//

நன்றி அமைச்சரே!

@சித்ரா

//very romantic!//

நன்றி சித்ராக்கா..

@ஜீவாம்மா

//நல்லா இருக்கு//

நன்றி ஜீவாம்மா..

@ஈஆர் எஸ்
தகவலுக்கு நன்றி

@சக்தி
//அருமை பாலாஜி//

நன்றி சக்தி

@அருண்
//எல்லா கவிதையுமே சூப்பர்//

நன்றி நண்பா

@அன்பரசன்

Nice lines.

நன்றி நண்பா

Balaji saravana சொன்னது…

@சுசி
//அழகான மழை..//

நன்றி சுசி

@எஸ்.கே
//கவிதைகள் அழகு! அருமை! வாழ்த்துக்கள்!//

நன்றி நண்பா

@அப்துல்
//மழை காலத்தில் இப்படியெல்லாம் கவிதை எழுதி எங்களை மிரட்டக் கூடாது தல. அப்படியே சும்மா போத்திக்கிட்டு தூங்கிடனும் ஹா..ஹா..//

ரைட்டு :)

இதன் வழியாய் சிரிக்கத் தோன்றுமே நண்பா!!
ஹி..ஹி//

சரியாய் புரிஞ்சிக்கிட்ட நண்பா.. :)

@ஆர்.ராமமூர்த்தி
//என்ன ஒரு அற்புதமான ஒரு வார்த்தை ப்ரயோகம்!!

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.//


மிக்க நன்றி சார்!

@Dhosai

//Nice//

நன்றி ரவி!

@கௌசல்யா

// மிகவும் ரசித்த வரிகள் சகோ.....!

ரசனைக்கு நன்றி சகோ..

மிச்ச வரிகள் ரொமான்டிக்.....!! :)) //

மிக்க நன்றி சகோ ;)

@ராமசாமி கண்ணன்

//பின்றீங்க பாலாஜி..//

மிக்க நன்றி அண்ணா

Balaji saravana சொன்னது…

@சிவா
//செம கலக்கல் பாலா!!! சொக்கா!!! எனக்கு இப்படி எழுத வரலை! வரலை!! வராது!!!!//

ஹா ஹா.. நன்றி சிவா.. நீங்க தான் விமர்சனத்துல பின்றீங்களே பாஸ்! :)

@குட்டிப்பையா

//last lines sema romantic!//

வாங்க சீதா
நன்றி!

@ஹேமா

//பாலா தொடக்க வர்ணிப்பே அச்த்தல்.நான் நாம் ஆனதில் சந்தோஷமே.மழையின் நெருக்கத்தில் பெருமழை !//

வாங்க ஹேமா..மிக்க நன்றி

@கோபி

//சூப்பர்//

வாங்க கோபி.. ரசிப்புக்கு நன்றி பாஸ்!

@LK

//மிக மிக அழகான , காதலிக்க வைக்கும் வரிகள் பாலாஜி //

மிக்க நன்றி LK!

@வானதி

//very nice poem.//

வாங்க வானதி..
மிக்க நன்றி!

வெறும்பய சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
வெறும்பய சொன்னது…

அழகான வரிகளில் அருமையான கவிதை..

ப.செல்வக்குமார் சொன்னது…

நல்ல இருக்கு அண்ணா .,

/உனக்காக காத்திருந்த வேளைகளில்
நங்கூரமிட்டிருந்த என் நிமிடக் கப்பல்
உன் வருகையின் கணத்தில்
ஓடத் தொடங்கியிருந்தது உலகம் சுற்றிவர..//

இந்த வரிகள் அருமை ..

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//சுற்றும் பேச்சுக்கள் யாவிலும்
"நாம்" முன்னிலை, "நீ" "நான்" படர்க்கை..
ஆடை நுழைந்து தேகம் தீண்டி நழுவும் காற்றில்
நம் காதல் வாசனை..//

பட்டாசு பாஸ்! இன்னும் நிறைய காதல் வரிகள் புதுசா இருக்கு...

Balaji saravana சொன்னது…

நன்றி ஜெயந்த்

நன்றி செல்வா

நன்றி வசந்த்

Ananthi சொன்னது…

காதல் பெருமழை
கலக்கல் தான் போங்க..

ஓகே ஓகே.. நடக்கட்டும்... :-))

Balaji saravana சொன்னது…

நன்றி ஆனந்தி

ரிஷபன் சொன்னது…

படிப்பவர் மனசிலும் அதே பிரவாகம்.. சாத்தியமானது கவிதையின் வெற்றி.

Balaji saravana சொன்னது…

நன்றி ரிஷபன்..

அமைதிச்சாரல் சொன்னது…

மழை நனைத்துச்செல்கிறது அனைவரையும்..

vinu சொன்னது…

nallaairrukungaa

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

தங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியிருக்கிறேன் நண்பரே.
நன்றி!
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_07.html

Cool Boy கிருத்திகன். சொன்னது…

அருமையான பதிவு தரமாகவே தொடர வாழ்த்துக்கள்

Balaji saravana சொன்னது…

வாங்க அமைதிச் சாரல்
மிக்க நன்றி

வாங்க வினு
நன்றி

வாங்க பன்னிக்குட்டி சார்.
அறிமுகத்துக்கு மிக்க நன்றி பாஸ் :)

வாங்க கிருத்திகன்
நன்றி

கருத்துரையிடுக