செவ்வாய், 30 நவம்பர், 2010

சிதறல்கள் 2

நீ கேட்ட கணத்தில் வரமறுத்த
கவிதைக்கீடாய் இதமணைத்து
தடம்பதித்தேன் இதழ்களில்..
பலநூறு கவிதையென்றாய்..
சேருமிடத்தில் தான்
சிறப்பாகிப் போகிறதெதுவுமென
மீண்டும் மெய்ப்பிக்கிறாய்..
இதழ் சேர்ந்ததால் தானே
முத்தமும் கவிதையென்றானது ..
கடல்மேல் பெய்துபோன
மழைக்கென்ன பெயர் தோழி?

*******************************************************************

தேடித் தேடிக் கோர்த்தும்
எழுத்துச் சரம் தான் மிஞ்சுகிறது
இதழ்முத்தம் சிந்தி போ
கவிதைச் செடியின்
முதல் வார்த்தைப் பூக்கட்டும்..

*****************************************************************

முகத்திலடிக்கும் காற்றும்
குளிர்ந்து போனது
உன் முத்தத்தின்
ஈரத்தை கவர்ந்து கொண்டு....

*****************************************************************

வண்டி நிறுத்தி
வாகாய் நடந்து
வாசல் திறக்கிறாய் நீ!
முண்டியடித்து
முதலாய் நுழைகிறது
உன் ப்ரியம்..

***********************************************************************

                  

36 கருத்துகள்:

LK சொன்னது…

சிதறல்கள் அனைத்தும் அருமை பாலாஜி

Chitra சொன்னது…

அருமையான கவிதைகள். பாராட்டுக்கள்!

சந்திரிகை சொன்னது…

எல்லாமே நல்லா இருக்கு

வண்டி நிறுத்தி
வாகாய் நடந்து
வாசல் திறக்கிறாய் நீ!
முண்டியடித்து
முதலாய் நுழைகிறது
உன் ப்ரியம்..

அருமை

nis சொன்னது…

விரும்பி படித்த கவி வரிகள், super பாலாஜி

vanathy சொன்னது…

super, Sir.

உங்களுக்கு நான் கொடுத்த விருதினை வந்து பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி.
http://vanathys.blogspot.com/2010/11/blog-post_27.html

அன்பரசன் சொன்னது…

//கவிதைக்கீடாய் இதமணைத்து
தடம்பதித்தேன் இதழ்களில்..
பலநூறு கவிதையென்றாய்..//

சிதறல்கள் அனைத்தும் அருமை பாலாஜி.

ஆமினா சொன்னது…

எல்லா கவிதையும் அருமைங்க!!

நல்ல ரசனை

வெறும்பய சொன்னது…

நண்பரே அணைத்து கவிதைகளும் அருமை.. கடைசிக்கவிதை வாசித்து முடித்தும் மனம் விட்டு வெளியேறாமல் அடம் பிடிக்கிறது..

சுந்தரா சொன்னது…

அட,அடைமழைக்குப் போட்டியாய் காதல்மழையா? கவிதைகள் எல்லாமே அருமை :)

நாகராஜசோழன் MA சொன்னது…

அனைத்துக் கவிதைகளும் அருமை!

பெயரில்லா சொன்னது…

சிதறல்கள் அனைத்துமே அருமை..

சே.குமார் சொன்னது…

சிதறல்கள் அனைத்தும் அருமை பாலாஜி.

பெயரில்லா சொன்னது…

அருமையான வரிகள்

வெறும் பய " கருத்திற்கு என் மனமும் தலை சாய்கிறது

RVS சொன்னது…

சிதறு தேங்காய். ;-) அட்டகாசமான கவிதைகள். ;-)

Balaji saravana சொன்னது…

நன்றி LK :)

நன்றி சித்ராக்கா :)

நன்றி ஜீவாம்மா :)

நன்றி Nis :)

விருதுக்கு மிக்க நன்றி வானதி :)

நன்றி அன்பரசன் :)

வாங்க ஆமினா :)
நன்றி

நன்றி ஜெயந்த் :)

நன்றி சகோ :)

நன்றி சோழன் :)

நன்றி இந்திரா :)

நன்றி குமார் :)

நன்றி கல்பனா :)

நன்றி ஆர்விஎஸ் அண்ணா :)

அருண் பிரசாத் சொன்னது…

முத்த மழை பொழிகிறது

பார்வையாளன் சொன்னது…

மீண்டும் மீண்டும் படிக்க வைக்கும் வரிகள்... அருமை

இளங்கோ சொன்னது…

Nice :)

ப.செல்வக்குமார் சொன்னது…

//முகத்திலடிக்கும் காற்றும்
குளிர்ந்து போனது
உன் முத்தத்தின்
ஈரத்தை கவர்ந்து கொண்டு...//

அட அட .., எண்ணமா பீல் பண்ணி எழுதறீங்க அண்ணா .,
ரொம்ப அருமையா இருக்கு ..!!

சுசி சொன்னது…

முண்டியடிக்கும் பிரியமும், கவிதை முத்தமும் சூப்பர் :))

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

முத்தம் ஜில்லுன்னு இருக்கு!

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

கடல்மேல் பெய்துபோன
மழைக்கென்ன பெயர் தோழி?

// இது அருமை பாலாஜி

அரசன் சொன்னது…

முகத்திலடிக்கும் காற்றும்
குளிர்ந்து போனது
உன் முத்தத்தின்
ஈரத்தை கவர்ந்து கொண்டு....

// உங்களின் சிதறல்கள் அனைத்தும் அருமை..
ரொம்ப நல்லா இருக்குங்க...//

LK சொன்னது…

உங்களுக்கு ஒரு விருது அளித்துள்ளேன் பெற்றுக் கொள்ளவும்

http://lksthoughts.blogspot.com/2010/11/blog-post_3321.html

ஹேமா சொன்னது…

சிதறல்கள் அன்பாய் ,முத்தமாய் வரிகளில் அழகுகாட்டுகிறது !

Balaji saravana சொன்னது…

நன்றி அருண் :)

நன்றி பார்வையாளன் :)

நன்றி இளங்கோ :)

நன்றி செல்வா :)

மிக்க நன்றி சுசி :)

நன்றி சைகொப :)

மிக்க நன்றி தேனக்கா! :)

வாங்க அரசன்
நன்றி :)

விருதுக்கு மிக்க நன்றி LK :)

மிக்க நன்றி ஹேமா :)

Sriakila சொன்னது…

Supero super!

ரிஷபன் சொன்னது…

//கடல்மேல் பெய்துபோன
மழைக்கென்ன பெயர் தோழி?//

இந்த வரி அப்படியே ஒரு இசையுடன்..
கடைசி வரிகளும்.. அழகான கவிதை அனுபவம்

ம.தி.சுதா சொன்னது…

அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்..

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/

மோகன் குமார் சொன்னது…

கலக்குங்க :))

Gopi Ramamoorthy சொன்னது…

சூப்பர்.

\\கடல்மேல் பெய்துபோன
மழைக்கென்ன பெயர் தோழி?\\

சூப்பர்

\\வண்டி நிறுத்தி
வாகாய் நடந்து
வாசல் திறக்கிறாய் நீ!
முண்டியடித்து
முதலாய் நுழைகிறது
உன் ப்ரியம்..\\

வீடு வரை இடுப்பில் இருக்கும்
குழந்தை வீடு வந்து
இறக்கி விட்டதும் பாய்ந்தோடும்

Balaji saravana சொன்னது…

நன்றி ஸ்ரீஅகிலா

மிக்க நன்றி ரிஷபன்.
உங்கள் ரசனைக்கு என் சல்யூட் :)

நன்றி ம.தி.சுதா

நன்றி மோகன் அண்ணா

மிக்க நன்றி கோபி

சிவகுமாரன் சொன்னது…

செந்தூரப்பூவே & பேசுகிறேன் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. அருமையான தொகுப்பு.

பெயரில்லா சொன்னது…

உங்களுக்கு ஒரு விருது அளித்துள்ளேன் பெற்றுக் கொள்ளவும்
http://kalpanarajendran.blogspot.com/2010_12_01_archive.html

சுபத்ரா சொன்னது…

சூப்பர் கவிதைகள் பி.எஸ். :) கலக்குறீங்க.. ப்ரியம் கவிதை மனதை விட்டு மறையாது.

Balaji saravana சொன்னது…

நன்றி சிவகுமாரன் :)

நன்றி கல்பனா :)

நன்றி சுபா :)

கருத்துரையிடுக