புதன், 13 அக்டோபர், 2010

பெருமழைக் காலம்..

ஊருறங்கிய நேரத்தில்
எழுதிச் சென்ற பெருமழையின்
வரிவடிவங்களாயின
தெருவிலோடும் சிற்றோடைகள்..

நேற்றைய வெண்மேகம்
திட்டுக்களாய் சிதறியிருந்தது
ஓட்டிடுக்கிலும் பூந்தொட்டியிலும்
குடைக்காளான்களாய்...

நிறைந்த ஊருணியில்
கரைந்து கலங்கிக் கிடக்கிறது
விடுமுறைநாளின்
விளையாட்டுமைதானமொன்று...

தொடரும் மின்னல்களும் கருத்தமேகங்களும்
காத்துக் கொண்டிருக்கின்றன
பறவைகளடையும் நேரத்திற்கு
மற்றொரு சமரம்புரிய..

முழுதும் காயா என் சட்டையிலும்
ஒட்டிக்கிடக்கின்றதொன்று
ஊரெங்கும் படிந்து கிடக்கும்
பெருமழையின் தீராவாசம்...19 கருத்துகள்:

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

மழையில் நனைந்த உணர்வு!! அழகு!

சந்திரிகை சொன்னது…

நல்ல மழை நானும் நனைஞ்சிட்டேன்

அருண் பிரசாத் சொன்னது…

மண்வாசனை - மழைவாசனை

Chitra சொன்னது…

முழுதும் காயா என் சட்டையிலும்
ஒட்டிக்கிடக்கின்றதொன்று
ஊரெங்கும் படிந்து கிடக்கும்
பெருமழையின் தீராவாசம்...


....... ம்ம்ம்ம்..... இப்பொழுது இங்கே மழை பெய்து கொண்டு இருக்கிறது. இந்த கவிதையை வாசிக்கும் போது, ரம்யமாக இருக்கிறது.

Kousalya சொன்னது…

படிக்கிறப்போது இங்கேயும் மழை தூறுவது போல மண் வாசம் வருகிறது...

//பறவைகளடையும் நேரத்திற்கு
மற்றொரு சமரம்புரிய.//

எனக்கு இந்த வரி கொஞ்சம் புரியலையே சகோ..

ப.செல்வக்குமார் சொன்னது…

கவிதை படிக்கும் போது எனக்கும் மழையில நனையுற மாதிரி இருக்குங்க ..!!
சத்தியமா கலக்கல் ..!!

மின்மினி RS சொன்னது…

மழை காலத்தை கண்முன்னே கொண்டு வந்திருக்கிறீர்கள்.. நல்லாருக்கு..

எம் அப்துல் காதர் சொன்னது…

அங்கங்கே சில 'ஓட்டைகள்' இருக்கின்றன!! இதுக்கு ஏன் சார் இப்படி புருவத்தை ஒசத்துறீங்க? ஹி..ஹி.. அங்கங்கே 'இடைவெளி' விட்டு அழகா எழுதி இருக்கீங்களே 'அதச்' சொன்னனேன். வாழ்த்துகள்!!

சுசி சொன்னது…

அச்சச்சோ.. இன்னும் கொஞ்சம் நனைய விடாம அதுக்குள்ளே கவிதை முடிஞ்சு போச்சே.. :))))

நித்திலம்-சிப்பிக்குள் முத்து சொன்னது…

நல்ல மழை கவிதை. வாழ்த்துக்கள்.

வெறும்பய சொன்னது…

நனைந்து விட்டேன்... நனைத்து விட்டது...

இராமசாமி கண்ணண் சொன்னது…

அருமை பாலாஜி.

funmachine - தமிழமிழ்தம் சொன்னது…

ஊருறங்கிய நேரத்தில் வந்த இம்மழை, இன்னும் பெய்து கொண்டிருகிறது என் மனதில் உங்கள் கவிதையாக!

எஸ்.கே சொன்னது…

மிக அருமை!

Balaji saravana சொன்னது…

நன்றி சைவகொத்துபரோட்டா

நன்றி ஜீவாம்மா..
தலையை நல்லா துவட்டிடுங்க ;)

நன்றி அருண்

நன்றி சித்ரா..
ம் ம்.. அனுபவியுங்கள்.. :)

நன்றி கௌசல்யா
சமரம் = போர்
பறவைகளடையும் நேரம் = இரவு, நேற்றைய இரவு போல் இன்றும் மழை என்பதாக கொள்க!
மின்னலையும் கருத்த மேகங்களையும் ஆயுதம் தாங்கும் வீரர்களென உருவகப்படுத்தி இருக்கிறேன் சகோ!

நன்றி செல்வா

வாங்க மின்மினி.. நன்றி

நன்றி அப்துல்..
உங்கள் கமெண்ட்டை மிகவும் ரசித்தேன் நண்பா!

நன்றி சுசி!
மழை கவிதை மீண்டும் வரும் சகோ.. :)

நன்றி நித்திலம்

நன்றி நண்பா ( வெறும்பய )

நன்றி ராமசாமி அண்ணா

நன்றி தமிழமிழ்தம்

நன்றி எஸ்.கே

பெயரில்லா சொன்னது…

அருமை.
நனைந்து விட்டேன்.

Ananthi சொன்னது…

இங்கும் மழைக்காலம் தான்.. நேற்று கூட, வெளியில் போகும் போது மழையை ரசித்தேன்...
உங்கள் கவிதையையும் ரசித்தேன்.. நன்றி.. :-))

Balaji saravana சொன்னது…

நன்றி இந்திரா!

நன்றி ஆனந்தி!

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//நேற்றைய வெண்மேகம்
திட்டுக்களாய் சிதறியிருந்தது
ஓட்டிடுக்கிலும் பூந்தொட்டியிலும்
குடைக்காளான்களாய்...//

யோவ் அசத்துறயே சூப்பர்!

கருத்துரையிடுக