வெள்ளி, 29 அக்டோபர், 2010

கொடுங்கனவு!


சிரிப்பொலிகள் சதங்கையாடும் 
பூட்டிய வீடுகளின்
அமானுஷ்ய அதிர்வின்
அலைகள் துரத்தும்
பற்றியெரியுமென்
நிர்வாண தேகத்தின்
மயிர் கால்களிலிருந்து
வழியும் பிசுபிசுப்பான
திரவத் துளிகள் 
வழியெங்கும் பெருகியோட
கைகளுக்ககப் படா காற்றின்
கால்கொண்டு விரைந்தோடி
திரும்பவியலா திருப்பத்தில் 
உச்சி மலையின்
குச்சிக் கிளையினின்று
குதிக்கும் கணத்தில்
சுழற்றும் காற்றின்
பேரலறலில் வீரிட்டு விழிக்க
என் தேகம் நனைந்திருந்தது!


               

42 கருத்துகள்:

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

ரொம்ப டெரர்ரான கனவா இருக்கே!

RVS சொன்னது…

தலைப்பும் அருமை. கவிதையும் அருமை. எனக்கே ஜில்லிட்டுப் போச்சுப்பா... ;-)
Excellent!!!

Chitra சொன்னது…

What a nightmare!!!

சிவா சொன்னது…

இன்னா கெனவு பாலா இத்து! மெர்சலா இருக்கு மாமே ! பச்ச உடனே எப்பா! டெர்ரர் கனவு கூட கவிதயா வர்து உனிக்கு!

அருண் பிரசாத் சொன்னது…

ராத்திரி விளக்குமாற பக்கத்துல வெச்சி படுத்டுக்கோங்க காத்து கருப்பு அண்டாது.... ஹா ஹா ஹா

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//நிர்வாண தேகத்தின்
மயிர் கால்களிலிருந்து
வழியும் பிசுபிசுப்பான
திரவத் துளிகள்
வழியெங்கும் பெருகியோட
கைகளுக்ககப் படா காற்றின்//

வார்த்தை கோர்ப்பு அசத்தல்!
ரொம்ப நல்லாருக்கு பாலாஜி!

நர்சிம் சொன்னது…

nice one. வார்த்தைகள் அருமை.

சுசி சொன்னது…

கடவுளே.. இப்டில்லாம் கனவு வரக் கூடாது.

நல்லாருக்குங்க.

பிரசன்னா சொன்னது…

நல்ல கனவு :) பாருங்க Inception-ல வர மாதிரி உங்ககிட்டையும் 'Kick' வேலை செஞ்சிருக்கு..

Balaji saravana சொன்னது…

@ சைவகொத்துபரோட்டா
//ரொம்ப டெரர்ரான கனவா இருக்கே!//

இத தான் எதிர் பார்த்தேன், நன்றி நண்பா! .. :)

@ஆர்விஎஸ்

//தலைப்பும் அருமை. கவிதையும் அருமை. எனக்கே ஜில்லிட்டுப் போச்சுப்பா... ;-)
Excellent!!!//

தலைப்பு உபயம் நம்ம ஆதியண்ணே!
நன்றி அண்ணா!

@சித்ரா
//What a nightmare!!!//
நன்றி சித்ரா

@சிவா
//இன்னா கெனவு பாலா இத்து! மெர்சலா இருக்கு மாமே ! பச்ச உடனே எப்பா! டெர்ரர் கனவு கூட கவிதயா வர்து உனிக்கு!//

நன்றி சிவா!

@அருண்
//ராத்திரி விளக்குமாற பக்கத்துல வெச்சி படுத்டுக்கோங்க காத்து கருப்பு அண்டாது.... ஹா ஹா ஹா//

எக்ஸ்பீரியன்சோ?!
ரைட்டு.. அப்டியே செஞ்சிருவோம் :)

@வசந்த்
//வார்த்தை கோர்ப்பு அசத்தல்!
ரொம்ப நல்லாருக்கு பாலாஜி!//

நன்றி வசந்த்


@ நர்சிம்

//nice one. வார்த்தைகள் அருமை.//

உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அண்ணா!
இதற்குத் தானே ஆசைப் பட்டேன்.. நன்றி தல!

Balaji saravana சொன்னது…

@சுசி
//கடவுளே.. இப்டில்லாம் கனவு வரக் கூடாது.

நல்லாருக்குங்க.//

உங்களை மாதிரி நல்லவங்களுக்கு இந்த மாதிரி கனவு வராது சுசி! :)
பாராட்டுக்கு நன்றி சகோ!

@பிரசன்னா
//நல்ல கனவு :) பாருங்க Inception-ல வர மாதிரி உங்ககிட்டையும் 'Kick' வேலை செஞ்சிருக்கு.//

நன்றி பிரசன்னா..
அந்த படம் இன்னும் பாக்கல பாஸ், பாக்கணும்..

சுந்தரா சொன்னது…

படிக்கும்போதே பயம்வருது சரவணன் :)

எவ்வளவு அழகா வார்த்தைகள் வசப்பட்டிருக்குதுன்னு வியந்துபோனேன்!

வாழ்த்துக்கள்!

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

ஓட்டு நான் போட்டுட்டேன்..படம் சூப்பர் எங்கதான் பிடிக்கிறீங்களோ

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

கவிதை வரிகள் கற்பனை குதிரையில் துள்ளி ஓடி வருகின்றன.

ப.செல்வக்குமார் சொன்னது…

//கைகளுக்ககப் படா காற்றின்
கால்கொண்டு விரைந்தோடி
//

இந்த வரிகள் கலகலா இருக்கு அண்ணா .,

வெறும்பய சொன்னது…

ஐயையோ எனக்கு பயமா இருக்கு...

dheva சொன்னது…

சும்மா விளையாடி இருக்க தம்பி....

கடும் கொடும் கனவு கண்ட ஒரு பாதிப்பு கண்டிப்பாய் வாசிப்பளனுக்கு வந்து இருக்கும்!

V.Radhakrishnan சொன்னது…

பிரமாதம்.

மங்குனி அமைசர் சொன்னது…

நல்ல வேலை குதிக்கல .... நல்லா இருக்குங்க

மங்குனி அமைசர் சொன்னது…

இதுக்குத்தான் இருட்ல வெளிய போகாதேன்னு சொல்றது . பாரு காத்து கருப்பு ஏதோ அடிச்சிருக்கு

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நல்ல வேளை குதிக்கலையே..:))

வானம்பாடிகள் சொன்னது…

ரொம்ப நல்லாருக்கு. வார்த்தையாடல் பிரமாதம்.

மோகன்ஜி சொன்னது…

காதலி வரவேண்டிய கனவில்... இப்படியொன்றா?
மிரட்டும் வரிகள். அசத்திட்டீங்க பாலா!

அன்பரசன் சொன்னது…

படத்துலயே மிரட்டிட்டீங்க.

நாகராஜசோழன் MA சொன்னது…

எனக்கும் இந்த மாதிரி கவிதை எழுத சொல்லித் தருவீர்களா?

Balaji saravana சொன்னது…

@சுந்தரா
படிக்கும்போதே பயம்வருது சரவணன் :)
எவ்வளவு அழகா வார்த்தைகள் வசப்பட்டிருக்குதுன்னு வியந்துபோனேன்!
வாழ்த்துக்கள்!//

நன்றி சகோ!

@சதீஷ்
//ஓட்டு நான் போட்டுட்டேன்..படம் சூப்பர் எங்கதான் பிடிக்கிறீங்களோ
கவிதை வரிகள் கற்பனை குதிரையில் துள்ளி ஓடி வருகின்றன.//
எல்லாம் நம்ம கூகிளாண்டவர் கிட்ட இருந்து தான் :)
நன்றி சதீஷ்!

@செல்வா
//இந்த வரிகள் கலகலா இருக்கு அண்ணா .,//
நன்றி தம்பி

@வெறும்பய
//ஐயையோ எனக்கு பயமா இருக்கு..//
குழந்த மனசு உங்களுக்கு :))

@தேவா
//சும்மா விளையாடி இருக்க தம்பி....

கடும் கொடும் கனவு கண்ட ஒரு பாதிப்பு கண்டிப்பாய் வாசிப்பளனுக்கு வந்து இருக்கும்!//

எல்லாம் உங்க ஆசி!
ரொம்ப நன்றி அண்ணா!

@வி.ராதாகிருஷ்ணன்
//பிரமாதம்.//
நன்றி சார்

@மங்குனி
//நல்ல வேலை குதிக்கல .... நல்லா இருக்குங்க
இதுக்குத்தான் இருட்ல வெளிய போகாதேன்னு சொல்றது . பாரு காத்து கருப்பு ஏதோ அடிச்சிருக்கு//
நன்றி மங்குனி!
உங்கள மாதிரி நானும் இனிமே தாயத்து கட்டிக்கிறேன் :)

@தேன் அக்கா
//நல்ல வேளை குதிக்கலையே..:))//
ம் ம்.. நன்றி அக்கா!

@வானம்பாடிகள்
//ரொம்ப நல்லாருக்கு. வார்த்தையாடல் பிரமாதம்.//

மிக்க நன்றி பாலா சார்@மோகன்ஜி

//காதலி வரவேண்டிய கனவில்... இப்படியொன்றா?
மிரட்டும் வரிகள். அசத்திட்டீங்க பாலா!//

அடுத்த கனவுல வந்திடுவாங்க சார் :))
நன்றி!


@அன்பரசன்
//படத்துலயே மிரட்டிட்டீங்க.//

நன்றி அன்பரசன்@நாகராஜசோழன்

//எனக்கும் இந்த மாதிரி கவிதை எழுத சொல்லித் தருவீர்களா? //

நானே இப்பதான் கத்துகிட்டு இருக்கேன் பாஸ் :)
வருகைக்கு நன்றி நண்பா!

சந்திரிகை சொன்னது…

படுக்க போகும் போது கண்டதையும் நினைக்காம கடவுள நினை

என்னை போல சின்ன பிள்ளைகள பயமுறுத்தாத

Ananthi சொன்னது…

ஆஹா... ஒரே திகில் படம் பார்த்த எப்பெக்ட் ஆகி போச்சுங்க..

நீங்க குதிச்சீங்களோ இல்லையோ.. அந்த உணர்வு வந்து போச்சு.. :-))

உண்மையில் அருமை..!!

சௌந்தர் சொன்னது…

உச்சி மலையின்
குச்சிக் கிளையினின்று
குதிக்கும் கணத்தில்
சுழற்றும் காற்றின்
பேரலறலில் வீரிட்டு விழிக்க
என் தேகம் நனைந்திருந்தது!////

எப்படி நனைந்திருந்தது fan போடலையா...?

Balaji saravana சொன்னது…

@ஜீவாம்மா
ரைட்டு.. செஞ்சுடுவோம் :)

@ஆனந்தி
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஆனந்தி!

@சௌந்தர்
//எப்படி நனைந்திருந்தது fan போடலையா...?//

Fan போட்டும் அவ்ளோ வியர்வை ஏன்னா அவ்ளோ பயம் பாஸ்!
நன்றி சௌந்தர் :)

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

புது பதிவு போடுப்பா

Raja சொன்னது…

இருட்டுன்னாலே உச்சா போய்விடும் ஆளு நான்...கவிதை வேறு படித்திருக்கிறேன்...தூக்கம் வரலைன்னா நீங்க தான் பொறுப்பு...அப்புறம் பாலா...கவிதைகள் படித்தேன்...ரொம்பவும் பிடித்திருக்கிறது...தொடர்ந்து வாசிக்கிறேன்...வாழ்த்துக்கள் நண்பரே...

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

அபாரம்... மிகுந்த பாராட்டும்..வாழ்த்தும்..

எம் அப்துல் காதர் சொன்னது…

//பேரலறலில் வீரிட்டு விழிக்க
என் தேகம் நனைந்திருந்தது! //

இதை படித்த உடன் தான் திரும்ப நினைவு வந்தது... நாம் படித்துக் கொண்டிருக்கிறோம் என்று.

செதுக்கப்பட்ட வார்த்தைகள்)):

"HAPPY DEEPAWALI BOSS"

LK சொன்னது…

நல்லா மிரட்டறீங்க பாலாஜி

Balaji saravana சொன்னது…

@ராஜா
வாங்க ராஜா..
கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே!

@செந்தில் அண்ணா
மிக்க நன்றி அண்ணா.. :)

@அப்துல்
நன்றி நண்பா!

@LK
நன்றி Lk!

பிரஷா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பிரஷா சொன்னது…

உச்சி மலையின்
குச்சிக் கிளையினின்று
குதிக்கும் கணத்தில்
சுழற்றும் காற்றின்
பேரலறலில் வீரிட்டு விழிக்க
என் தேகம் நனைந்திருந்தது!////

அருமை நண்பரே..

Balaji saravana சொன்னது…

வாங்க பிரஷா.. நன்றி

ரிஷபன் சொன்னது…

கனவு கலைந்தபின்னும் கூட மிரட்சி போகாத நிலை.. அப்படியே வார்த்தை மிரட்டலாய்.

Balaji saravana சொன்னது…

மிக்க நன்றி ரிஷபன்

சுபத்ரா சொன்னது…

கனவு கொடுமை.. கவிதை அருமை.. வார்த்தைப் பிரயோகம் மிக அருமை.

கருத்துரையிடுக