திங்கள், 25 அக்டோபர், 2010

ஊடல் பொழுதுகள்

தீண்டும் இன்பத்தில் திளைத்திருந்த 
என் விரல் தூரிகை 
உன் தேக வண்ணமில்லாமல் 
வறண்டிருக்கிறது இப்போது..


வளைகொலுசின்  செல்லச் 
சிணுங்கல்கள் கேளாமல் 
வாடிப் போயிருக்கிறோம் 
நானும் நம் காதற் பொழுதும்..விரும்பிவரும் நேரத்தில் 
விலகிப் போகிறாய் நீ 
கூடற்சரத்தின்  இன்றைய 
முத்து நழுவி விழுகிறது..


உன் இதழ் விரித்துச்  சிரிக்காமல்  
தலை சூடிக்கொள்கிறாய் பூவை
மலரிதழ் விரிக்காமல் 
மொட்டாகவே இருக்கிறது இன்னும்..


தயக்கங்கள் தட்டிவிட்ட 
இடைவெளியின் இருள் நேரத்தில் 
நமை சேர்க்க நாடி வந்து 
காத்திருக்கிறது நட்புத் தென்றல்.. 


கோபிப்பாயெனினும்
மன்னிப்பின் வார்த்தைகள் 
வரிசைப் படுத்துகிறேன் 
ஊடலின் ஜன்னலாவது திற..


  

27 கருத்துகள்:

Ananthi சொன்னது…

///
கோபிப்பாயெனினும்
மன்னிப்பின் வார்த்தைகள்
வரிசைப் படுத்துகிறேன்
ஊடலின் ஜன்னலாவது திற..
////

ஆஹா...(என்னங்க ஊடலா..? )
ரொம்ப அழகா இருக்கு... :-)

Ananthi சொன்னது…

ஹைய்.. நா தான் பர்ஸ்ட்... :-)

Balaji saravana சொன்னது…

வாங்க ஆனந்தி!

//ஹைய்.. நா தான் பர்ஸ்ட்... :-)//

இன்ட்லில சப்மிட் பண்ணின அடுத்த நிமிசத்துல வந்துட்டீங்க!
நன்றி ஆனந்தி! :)

Balaji saravana சொன்னது…

//ஆஹா...(என்னங்க ஊடலா..? ) //

ஆமா லைட்டா :)

//ரொம்ப அழகா இருக்கு... :-) //

நன்றி ஆனந்தி..

Ananthi சொன்னது…

சரி விடுங்க.. லைட்டா தானே... சரியாயிரும்... :-))

(பி. கு: ரொம்ப அபூர்வமா தான், முதல் கமெண்ட் போட எனக்கு வாய்ப்பு கிடைக்கும்.. இன்னிக்கு உங்க போஸ்ட்-ல கிடைச்சது :-)) )

LK சொன்னது…

@ஆனந்தி

வடை உங்களுக்கே. பாலாஜி கவிதை அருமை

சௌந்தர் சொன்னது…

விரும்பிவரும் நேரத்தில்
விலகிப் போகிறாய் நீ
கூடற்சரத்தின் இன்றைய
முத்து நழுவி விழுகிறது..///

இந்த வரி பிடித்து இருக்கு நண்பா

சிவா சொன்னது…

முதல் பாராவே நெத்தி அடி பாலா.... பின்றீங்க!!!

எனக்கெல்லாம் கவிதைன்னு யாரும் எழுதினா புரியவே செய்யாது.... புரிஞ்சதொட மட்டும் இல்லாம இது புடிக்க வேற செய்து... சூப்பர்!!!

சந்திரிகை சொன்னது…

நல்லா இருக்கு .ஆனா என்னவோ இருக்கு

எனக்கு தெரியாம .

இளங்கோ சொன்னது…

Nice one.. :)

Kousalya சொன்னது…

அடடா சகோ...இங்கேயும் இதே நிலைமைதானா......??! ஓ.கே கவலை படாதிங்க சீக்கிரம் சரி ஆகிவிடும்.......!! ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா சொல்லிப்போம் ......!! :)))

ஊடல என்னங்க லைட், ஸ்ட்ராங்...??
புரியலையே சகோ....? :))

//மலரிதழ் விரிக்காமல்
மொட்டாகவே இருக்கிறது இன்னும்..//

பூ வரைக்கும் தெரிஞ்சு போச்சா.....??

அருண் பிரசாத் சொன்னது…

மெல்லிய காதலில் ஊடலும் காமமும் சேர்த்து தந்து இருகிறீர்கள்... சூப்பர்

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

ஜன்னலை திறந்துட்டாங்களா :)) நல்லா இருக்கு பாலாஜி.

வெறும்பய சொன்னது…

அருமை ஒவ்வொரு வரிகளும்...

naveen (தமிழமிழ்தம்) சொன்னது…

மொட்டாகவே இருக்கிறது இன்னும்.///


பலர் வாழ்கை இவ்வாறே! நன்று மிகவும் நன்று.

திறந்த என் மன ஜன்னலில் உங்கள் கவிதை தென்றலாய் நுழைந்தது!!!!

அன்பரசன் சொன்னது…

//விரும்பிவரும் நேரத்தில்
விலகிப் போகிறாய் நீ //

எப்பவுமே அப்படித்தானே..

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

நினைவுகள் பின்னோக்கி போகின்றன...

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

ஊடலின் ஜன்னலாவது திற..

// ஊடலின் ஜன்னலா.. அழகா இருக்கு..:))பாலா

எஸ்.கே சொன்னது…

அழகான அருமையான கவிதை!

ப.செல்வக்குமார் சொன்னது…

//கோபிப்பாயெனினும்
மன்னிப்பின் வார்த்தைகள்
வரிசைப் படுத்துகிறேன்
ஊடலின் ஜன்னலாவது திற..
//

எப்படி அண்ணா இப்படியெல்லாம் எழுதறீங்க ..,
எனக்கு கவிதையே வர மாட்டேங்குது ..
நல்லா இருக்கு அண்ணா ..!!

Chitra சொன்னது…

விரும்பிவரும் நேரத்தில்
விலகிப் போகிறாய் நீ
கூடற்சரத்தின் இன்றைய
முத்து நழுவி விழுகிறது..

....Lovely!!! :-)

"தாரிஸன் " சொன்னது…

//என் விரல் தூரிகை
உன் தேக வண்ணமில்லாமல்
வறண்டிருக்கிறது//

romba nalla iruku.....
anubavichathaan intha mathiri ezhutha mudium....

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

அருமையாய் இருக்கிறது நண்பரே

மோகன்ஜி சொன்னது…

கடைசி வரி தனித்துமே ஒரு கவிதையாகவே இருந்திருக்கும். கொஞ்சம் தாமதமாய் வந்து விட்டேன்.
அழகு!

Balaji saravana சொன்னது…

ஆனந்தி
LK
சௌந்தர்
சிவா
ஜீவாம்மா
இளங்கோ
கௌசல்யா
அருண்
சைவ கொத்து பரோட்டா
ஜெயந்த்
நவீன்
அன்பரசன்
செந்தில் அண்ணா
தேன் அக்கா
எஸ்.கே
செல்வா
சித்ரா
தாரிசன்
ரமேஷ்
மோகன் சார்..

அனைவருக்கும் என் நன்றிகள் பல! :)

RVS சொன்னது…

தம்பி.. //ஊடலின் ஜன்னல்// இதுதான் தலைப்பு... பின்னிட்டிங்க.. நல்லா இருக்கு .. நான் லேட். ;-)

Balaji saravana சொன்னது…

நன்றி ஆர்விஎஸ் அண்ணா

கருத்துரையிடுக