புதன், 20 அக்டோபர், 2010

என்னைக் கொஞ்சம் கவனி!

தோட்டத்துச் செடிகளுக்கெல்லாம்
நீரூற்றும் போது சற்று விரல் தெளித்துப்போ
என் காதல் விதைக்கும்...

தெருநாய் பெறும் உன் வாஞ்சையின்
ஓரத்தையாவது பிய்த்துக்கொடு எனக்கு
வாழும் நாளெல்லாம் சுற்றி வருவேன் உன்னை...

கைக்குட்டையை உதறிச்செல் ஒருதரம்
உன் முத்தங்கள் சேர்ந்த  காற்றை
சிறைபிடித்து சுவாசம் நிறைத்துக் கொள்கிறேன்..

சிறுபுன்னகையாவது இட்டுப் போ இக்கணம்
முட்டி நிற்கும் இக்கவிதையின்
அடுத்தவரி அர்த்தமாகட்டும்...

பானைச் சோறனைத்தும் கேட்கவில்லை
பருக்கையாகவாவது சிந்திவிட்டுப்போ
உன் ப்ரியங்களை...


 

28 கருத்துகள்:

புதிய மனிதா. சொன்னது…

nice lines...

Chitra சொன்னது…

சிறுபுன்னகையாவது இட்டுப் போ இக்கணம்
முட்டி நிற்கும் இக்கவிதையின்
அடுத்தவரி அர்த்தமாகட்டும்...


...... அழகு.

அருண் பிரசாத் சொன்னது…

காதல் பொங்கி வழியுது

தியாவின் பேனா சொன்னது…

கைக்குட்டையை உதறிச்செல் ஒருதரம்
உன் முத்தங்கள் சேர்ந்த காற்றை
சிறைபிடித்து சுவாசம் நிறைத்துக் கொள்கிறேன்..

சிறுபுன்னகையாவது இட்டுப் போ இக்கணம்
முட்டி நிற்கும் இக்கவிதையின்
அடுத்தவரி அர்த்தமாகட்டும்...

\\

என்னை மட்டும் ரொமான்ஸ் என்று சொல்லிவிட்டு நீங்கள் அருமையாக
சூப்பர் கவிதை

ப.செல்வக்குமார் சொன்னது…

//கைக்குட்டையை உதறிச்செல் ஒருதரம்
உன் முத்தங்கள் சேர்ந்த காற்றை
சிறைபிடித்து சுவாசம் நிறைத்துக் கொள்கிறேன்.//

இது கலக்கலா இருக்குது அண்ணா .,

சௌந்தர் சொன்னது…

சிறுபுன்னகையாவது இட்டுப் போ இக்கணம்
முட்டி நிற்கும் இக்கவிதையின்
அடுத்தவரி அர்த்தமாகட்டும்.////

ம் காதல்... காதல்...

சுசி சொன்னது…

//கைக்குட்டையை உதறிச்செல் ஒருதரம்
உன் முத்தங்கள் சேர்ந்த காற்றை
சிறைபிடித்து சுவாசம் நிறைத்துக் கொள்கிறேன்.. //

அழகான வரிகள்.

சிவா சொன்னது…

பாலா! அழகு... அப்படியே காதல் பொங்கி வழியுது....

பிரசன்னா சொன்னது…

Very nice..

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

கவலையை விடுங்க, கல் மனதும் கரைந்து விடும் இதை படித்த பின்பு :)) ரொம்ப நல்லா இருக்கு பாலாஜி.

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

அசத்தலா இருக்குங்க கவிதை

RVS சொன்னது…

//தெருநாய் பெறும் உன் வாஞ்சையின்
ஓரத்தையாவது பிய்த்துக்கொடு எனக்கு
வாழும் நாளெல்லாம் சுற்றி வருவேன் உன்னை...
//
என்ன வாலாட்டியா? நல்லா இருக்கு பாலாஜி. ;-) ;-)

சே.குமார் சொன்னது…

Kathal vazhiyum azhagiya kavithai.

Priya சொன்னது…

அழகான வரிகள்.

Kousalya சொன்னது…

//நீரூற்றும் போது சற்று விரல் தெளித்துப்போ
என் காதல் விதைக்கும்..//

அடடா.....விதை சீக்கிரம் முளைக்கட்டும்....என் வாழ்த்துக்கள் சகோ ....!!

:)

அன்பரசன் சொன்னது…

//பானைச் சோறனைத்தும் கேட்கவில்லை
பருக்கையாகவாவது சிந்திவிட்டுப்போ//

நல்ல வரிகள்.

Balaji saravana சொன்னது…

புதிய மனிதா
சித்ரா
அருண்
தியாவின் பேனா
செல்வா
சௌந்தர்
சுசி
சிவா
பிரசன்னா
சைவகொத்து பரோட்டா
ப்ரியமுடன் ரமேஷ்
ஆர்விஎஸ் அண்ணா
குமார்
ப்ரியா
கௌசல்யா சகோ
அன்பரசன்

அனைவருக்கும் என் நன்றிகள் பல..

மோகன்ஜி சொன்னது…

பாலா! நல்ல கவிதை !!

மங்குனி அமைசர் சொன்னது…

nice

Saran சொன்னது…

பின்னீட்டீங்க பாலா. எத்தனை ஸ்கூல் பசங்க இத காப்பி அடிக்க போறானுங்களோ...

Balaji saravana சொன்னது…

நன்றி மோகன் சார்!

வாங்க மங்குனி :)
நன்றி

வாங்க சரண்.. நன்றி..

naveen (தமிழமிழ்தம்) சொன்னது…

wonderfully constructed and executed Balaji sir. Innum neraya venum, engal manam magila. (Active X not working)

ரிஷபன் சொன்னது…

இக்கவிதையின்
அடுத்தவரி அர்த்தமாகட்டும்...
அசத்தியது இந்த வரி.

மகேஷ் : ரசிகன் சொன்னது…

வரிகள் நல்லாயிருக்கு..

சந்திரிகை சொன்னது…

சிறுபுன்னகையாவது இட்டுப் போ இக்கணம்
முட்டி நிற்கும் இக்கவிதையின்
அடுத்தவரி அர்த்தமாகட்டும்...


எனக்கு பிடிச்சிருக்கு

சுந்தரா சொன்னது…

//பானைச் சோறனைத்தும் கேட்கவில்லை
பருக்கையாகவாவது சிந்திவிட்டுப்போ
உன் ப்ரியங்களை...//

அருமை!!!

Thanglish Payan சொன்னது…

Arumai.......

Ikkanam mutti nikkim ...migavum arumai...

Balaji saravana சொன்னது…

நன்றி நவீன்

வாங்க ரிஷபன்..
நன்றி

நன்றி மகேஷ்

நன்றி ஜீவாம்மா

நன்றி சுந்தரா

வாங்க பாலா ( Thanglish payan)
நன்றி!

கருத்துரையிடுக