திங்கள், 18 அக்டோபர், 2010

நீவிர் பெருமனிதர்!

துப்பி வைக்கும் இடங்களிலெல்லாம்
பரப்பி விட்டுச் செல்கிறீர்
வதந்தியின் துர்நாற்றத்தை..

முதுகு வலிக்கும்  கனத்தை
எங்கும் இறக்காமல் கூனிட்டுச் சுமக்கிறீர்
பொறாமையின் பொதிமூட்டையை..

உம் அவமானத் துப்பல்கள்
வழிந்திடும் என் முகத்தை
எப்படிக் கழுவியும் அடங்கவில்லை
விசுவாசத்தின் எரிச்சல்..

எந்தக் கையும் கொட்டுவதில்லை
பொய்யுரைக்கும் கணத்தில்
நீவிர் பெருமனிதர் பாகையணிவதால்..

என்ன முயன்றும் எழுதி
விழுங்க முடியவில்லை; உம்
துரோகச் செருகலின் கசப்பை..

19 கருத்துகள்:

சந்திரிகை சொன்னது…

என்ன முயன்றும் எழுதி
விழுங்க முடியவில்லை; உம்
துரோகச் செருகலின் கசப்பை..


நிறைய வலி அனுபவித்திருக்கிறேன் . உன்னுள்ளும் இந்த வலியா?

Chitra சொன்னது…

என்ன முயன்றும் எழுதி
விழுங்க முடியவில்லை; உம்
துரோகச் செருகலின் கசப்பை..


......ஒரு நிமிடம், அமைதியாகி விட்டேன்... வார்த்தைகளில் உள்ள வீரியம்......ம்ம்ம்ம் .... !

ப.செல்வக்குமார் சொன்னது…

//எந்தக் கையும் கொட்டுவதில்லை
பொய்யுரைக்கும் கணத்தில்
நீவிர் பெருமனிதர் பாகையணிவதால்..//

யாருமேல இவ்ளோ கோவம் அண்ணா .,
ஆனா நிறைய பேரு இருக்காங்க ..!!

அருண் பிரசாத் சொன்னது…

துரோகிகளை மன்னிக்கவே கூடாது.... கோபம் தெரிக்கிறது

rockzsrajesh சொன்னது…

முறை செய்ய வந்து இருக்கேன். அதன் சார் புதுசா வலைபூ எழுத தொடங்கி இருக்கேன் . எல்லாரும் நம்ப வலைபூவ வந்து படிகன்னும்ன ஏதோ முறை செய்யுற பண்பாடு , கலாச்சாரம் இருக்காமே . பெரியவங்க நெறைய பேரு வலைபூ படிக்கும் போதும் , நெறைய பின்னூட்டங்கள் படிக்கும் போதும் தெரிஞ்சுகிட்டேன் . அதன் முறை செய்ய வந்து இருக்கேன் .

அண்ணாச்சி உங்க பதிவு ரொம்ப சூப்பர் , கலக்கி புட்டிங்க , படிக்கும் போதே செம நகைசுவைய இருக்கு . ரொம்ப நன்றி.
(சரியாய் பண்ணிட்டேன? தெரிலப்பு .. . . )


அன்புடன்

ராக்ஸ் . . . . ( புதுசா ப்ளாக் எழுத வந்து இருக்கேன் )

http://rockzsrajesh.blogspot.com/

rockzsrajesh சொன்னது…

aiyayayo ithu serious ahna pathivu pola irukae , thappa copy paste pannitamo?
vada pochae....

வெறும்பய சொன்னது…

கோபத்தை அடக்கி வைக்காதீர்கள்...

naveen (தமிழமிழ்தம்) சொன்னது…

wowwwwwwwwwwwwwwwwwwwwwww. nice one. how ever the smell goes, however the color of the wall goes, our people wont stop spitting in the walls of the public places, vice versa, ur poem!!!!

V.Radhakrishnan சொன்னது…

:) நல்ல கவிதை.

மோகன்ஜி சொன்னது…

கவிஞனுக்கேயான ரௌத்திரம் வரிகளில்..

சிவா சொன்னது…

ரௌத்திரம் பழக சொன்ன பாரதியின் வீரியம் உங்கள் எழுத்தில் நண்பா....

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

உணர்வுகள் கொப்பளிக்கின்றன, விசுவாசம் அமைதியாக்குகிறது.. கவிதையும்தான் ...

கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…

ரவுத்திரம் பழகு

சுசி சொன்னது…

வார்த்தைகளில் வலியும் கோபமும் தெரிகிறது..
எழுதி விழுங்க வேண்டாம்.. எழுதிக் கொட்டி விடுங்கள்.. அல்லது எழுதித் துப்பி விடுங்கள்.. மனம் அமைதியாக இருக்கும்..

Ananthi சொன்னது…

ரொம்ப அழுத்தமான வரிகள்..
உணர்த்திய அர்த்தங்கள் ஆயிரம்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

உம் அவமானத் துப்பல்கள்
வழிந்திடும் என் முகத்தை
எப்படிக் கழுவியும் அடங்கவில்லை
விசுவாசத்தின் எரிச்சல்..
//

உண்மைதான் பாலாஜி.. பலசமயம் நாமே நம்மைத் தாழ்த்திக் கொள்கிறோம்

Balaji saravana சொன்னது…

ஜீவாம்மா
சித்ரா
செல்வா
அருண்
ராஜேஷ்
வெறும்பய
நவீன்
வி.ராதாகிருஷ்ணன்
மோகன்ஜி
சிவா
செந்தில் அண்ணா
கார்த்திகைப் பாண்டியன்
சுசி
ஆனந்தி
தேனம்மை அக்கா

அனைவருக்கும் என் நன்றிகள் சமர்ப்பணம்!

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//முதுகு வலிக்கும் கனத்தை
எங்கும் இறக்காமல் கூனிட்டுச் சுமக்கிறீர்
பொறாமையின் பொதிமூட்டை//

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க பாலாஜி!

Balaji saravana சொன்னது…

வாங்க வசந்த்
உங்க பாராட்டுக்கு நன்றி :)

கருத்துரையிடுக