வெள்ளி, 15 அக்டோபர், 2010

தனிமைச் சாலை!

கொடி மின்னலின் வெளிச்சம் குடித்து
சரிந்து படுத்திருக்கும் பேரிருளில்
தனிமைச் சாலையில் நான்..

தடத்தாளத்திற்கு எதிர்ப்பாட்டெனயான
நிசிக்காற்றில் செவிவழி ஊர்ந்து
உயிரூடுருவும் ஊளைக்குரலொன்று..

அவசர மூச்சுக்களால் மயிர்க்காலின் வழி
பாய்ந்திறங்கும் வியர்வை ; பிழியும் உடைகள்
பரவும் புகையில் நாசியேறி சுவாசம் நிறையும்
பிணமெரியும் வாடை..

ஒத்தை மரம் கடக்க, அரவம் அருவுதலில் 
நினைவு சுற்றத் தொடங்கியது  கேட்ட
கதைகளில் ஆவிமையம் பிடித்து..

மனம் நடுங்கும் குளிரிலும் 
துரத்தவியலாமல் கூடவே பயணித்தது,
துணைக்கழைக்கா பயம்..


 

27 கருத்துகள்:

வெறும்பய சொன்னது…

பயமுறுத்துகிறது..

சௌந்தர் சொன்னது…

அவசர மூச்சுக்களால் மயிர்க்காலின் வழி
பாய்ந்திறங்கும் வியர்வை ; பிழியும் உடைகள்
பரவும் புகையில் நாசியேறி சுவாசம் நிறையும்
பிணமெரியும் வாடை..///

இந்த வரிகள் நல்லா இருக்கு

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

டெர்ரர் கவிதையா இருக்கே!

Balaji saravana சொன்னது…

@ வெறும்பய

//பயமுறுத்துகிறது.//

நன்றி நண்பா!

@சௌந்தர்

//இந்த வரிகள் நல்லா இருக்கு//

நன்றி நண்பா!

@சைவகொத்து பரோட்டா

//டெர்ரர் கவிதையா இருக்கே!//

ஒரு முயற்சி தான் நண்பா!

Chitra சொன்னது…

மனம் நடுங்கும் குளிரிலும்
துரத்தவியலாமல் கூடவே பயணித்தது,
துணைக்கழைக்கா பயம்..


....... I was planning to visit a haunted house, next Friday ( Halloween special) I will remember this one. :-)

பெயரில்லா சொன்னது…

//துரத்தவியலாமல் கூடவே பயணித்தது,
துணைக்கழைக்கா பயம்.//

ஆஹா.. ஆஹா..
எதுகை மோனையா என்னமா எழுதியிருக்கீங்க...

அருண் பிரசாத் சொன்னது…

நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய

சுசி சொன்னது…

பயத்தக் கூட இவ்ளோ அழகா எழுதி இருக்கீங்க..

RVS சொன்னது…

சூப்பெர்ப் தம்பி. //மனம் நடுங்கும் குளிரிலும்
துரத்தவியலாமல் கூடவே பயணித்தது,
துணைக்கழைக்கா பயம்..//
கவிதை... கவிதை...

சுந்தரா சொன்னது…

கொஞ்சம் பயமுறுத்தினாலும் கவிதை சூப்பர்!

naveen (தமிழமிழ்தம்) சொன்னது…

இருட்டை பார்த்து எனக்கு பயம் இல்லை. இருட்டை ரசிப்பேன், இன்று உங்கள் கவிதையை ரசிப்பது போல்.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

எனக்கு மிகவும் பிடித்த கவிதை .. சொற்கள் நடனமாடும் தனிமை சாலை ...

Eeva சொன்னது…

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

நல்லாருக்குங்க

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

நல்ல எழுத்துக்கோர்வைகள்

மோகன்ஜி சொன்னது…

நல்ல கவிதானுபவம் வாய்ந்த படைப்பாளியாய் வருவீர்கள் பாலா!

ப.செல்வக்குமார் சொன்னது…

//நிசிக்காற்றில் செவிவழி ஊர்ந்து
உயிரூடுருவும் ஊளைக்குரலொன்று..//

ஐயோ அண்ணே பயமா இருக்கு ..!!

எஸ்.கே சொன்னது…

நல்ல நடை! அருமையாக உள்ளது!

Balaji saravana சொன்னது…

@சித்ரா
// I was planning to visit a haunted house, next Friday ( Halloween special) I will remember this one. :-) //

நல்லா என்ஜாய் பண்ணுங்க சித்ரா.. ஐயோ நீங்க haunted houseஐ ஜோக் ஸ்பாட்டா மாத்திடுவீங்களே ;)!


@இந்திரா

//ஆஹா.. ஆஹா..

எதுகை மோனையா என்னமா எழுதியிருக்கீங்க...//

நன்றி இந்திரா!


@ அருண்
//நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய//

எதோ நம்மளால முடிஞ்சது.. ஹி ஹி..
நன்றி அருண்!


@சுசி
//பயத்தக் கூட இவ்ளோ அழகா எழுதி இருக்கீங்க.//

செம ரசனை உங்களுக்கு.. நன்றி சுசி.


@ர்வ்ஸ்

//சூப்பெர்ப் தம்பி. //

நன்றி அண்ணா!


@சுந்தரா

//கொஞ்சம் பயமுறுத்தினாலும் கவிதை சூப்பர் //

நன்றி சகோ!


@நவீன்

//இருட்டை பார்த்து எனக்கு பயம் இல்லை. இருட்டை ரசிப்பேன், இன்று உங்கள் கவிதையை ரசிப்பது போல்.//

நன்றி நண்பா!


@கே.ஆர்.பி. செந்தில்


//எனக்கு மிகவும் பிடித்த கவிதை .. சொற்கள் நடனமாடும் தனிமை சாலை //


மிக்க மகிழ்ச்சி அண்ணா. உங்களின் இந்த வார்த்தைக்கு தானே ஆசைப்பட்டேன் அண்ணா :)


@Eeva
தகவலுக்கு நன்றி!


@சதீஷ்
//நல்லாருக்குங்க
நல்ல எழுத்துக்கோர்வைகள்//
நன்றி சதீஷ்

@மோகன்ஜி
//நல்ல கவிதானுபவம் வாய்ந்த படைப்பாளியாய் வருவீர்கள் பாலா!//
உங்கள் வாழ்த்துக்களை ஆசிர்வாதமாயும் எடுத்துக் கொள்கிறேன்!
நன்றி சார்!

@செல்வா
//ஐயோ அண்ணே பயமா இருக்கு ..!//
இதுக்கே பயந்தா எப்படி செல்வா.
இன்னும் கொடூரமெல்லாம் பின்னாடி வருமே :)
நன்றி தம்பி

@எஸ்.கே
//நல்ல நடை! அருமையாக உள்ளது!//
நன்றி எஸ்.கே

Priya சொன்னது…

nice!!!

Balaji saravana சொன்னது…

நன்றி ப்ரியா

சந்திரிகை சொன்னது…

தடத்தாளத்திற்கு எதிர்ப்பாட்டெனயான
நிசிக்காற்றில் செவிவழி ஊர்ந்து
உயிரூடுருவும் ஊளைக்குரலொன்று..

என்னுடைய சிற்றறிவுக்கு எட்டுமாறு எழுத கூடாதா?

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

இப்போ தான் வோட்டு போட்டேன்..அன்னிக்கு மறந்திட்டேன் கிகி

ராம்ஜி_யாஹூ சொன்னது…

nice, the drawing too

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி சொன்னது…

படிக்கும் போது கொஞ்சம் பயமாத் தான் இருந்தது!
பரவாயில்ல...

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃஃஅவசர மூச்சுக்களால் மயிர்க்காலின் வழி
பாய்ந்திறங்கும் வியர்வைஃஃஃஃ
மிகவும் தரமான வரியொன்று வாழ்த்துக்கள்...

Balaji saravana சொன்னது…

@ ஜீவாம்மா
இப்படியெல்லாம் சொன்னா நான் அழுதுடுவேன் :(

@சதீஷ்

//இப்போ தான் வோட்டு போட்டேன்..அன்னிக்கு மறந்திட்டேன் கிகி//

சரி விடுங்கண்ணே .. மறக்கறது மனித இயல்பு தான.. :)

@ராம்ஜி_ யாஹூ

வருகைக்கு நன்றி அண்ணா.
அந்தப் படத்தின் மீது கிளிக்கினால் வரைந்தவரின் வீடு சென்று சேர்க்கும்.. :)

@ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி

உங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி!
தொடர்ந்து உங்களின் திருத்தங்கள் சொல்லுங்க சார்! :)

@ம.தி.சுதா
நன்றி நண்பரே!

கருத்துரையிடுக