திங்கள், 11 அக்டோபர், 2010

சிதறல்கள்!

பரிசுத்தம்..

கண்மூடி உதடுகுவித்து
விரைவாய் கன்னம் சிவந்து
மெலிதாய் முத்தமிட்டாய் என்னை

ஆழ்கடலில் மேலெழுந்த
முத்துச்சிப்பி பெற்ற
வான்மழையின் முதல் துளி போல்.

*********************************************

எத்தனை முறை விரட்டினாலும்
மீண்டும் வந்தமர்கின்றது
என்மனச் சுவரில்
உன் நினைவுப் பறவை..

*********************************************

ப்ரியம்..

உன் ப்ரியத்தின் கைகளால்
நட்ட பதியன்களில்
பூத்துச் செழிக்கிறது
முட்களில்லாத ரோஜாக்கள்...

********************************************

உன்ப்ரியத்தின் வருகை பார்த்ததும்
உயிர் பயத்தில் கொல்லைப்புற
சுவரேறி தப்பிச் செல்கிறது 
என் வெறுப்பின் சாத்தான்...

********************************************


மழை...

துளியாக விழுகிறது
மண்ணில்..
ஏதோ நிறைகிறது
மனதில்..

********************************************

காதல்..

ஒன்றும் ஒன்றும்
ஒன்றெனப்படுவது..


********************************************

இன்று..

நேற்றைய வேலைகளும்
நாளைய கனவுகளும்
சுமக்கும் மற்றொரு நாள்..

*******************************************

எப்போதும் மறுதலிப்பெனும்
ஒருவழிப் பாதையில் செல்லாதே..
உன்னை பற்றிச் சென்ற மனது
திரும்பி வர தடுமாறுதே...

*******************************************
   

15 கருத்துகள்:

சந்திரிகை சொன்னது…

நேற்றைய வேலைகளும்
நாளைய கனவுகளும்
சுமக்கும் மற்றொரு நாள்..

நேற்றை போல இன்றும் .........................நாளையும் கூட

Chitra சொன்னது…

எத்தனை முறை விரட்டினாலும்
மீண்டும் வந்தமர்கின்றது
என்மனச் சுவரில்
உன் நினைவுப் பறவை..


.....எல்லாமே நல்லா இருக்குதுங்க.....
"நினைவு பறவை" : ரொம்ப ரொம்ப பிடித்து இருந்தது. :-)

அருண் பிரசாத் சொன்னது…

நினைவுப்பறவை, காதல் - இரண்டும் சூப்பர்

ப.செல்வக்குமார் சொன்னது…

//எத்தனை முறை விரட்டினாலும்
மீண்டும் வந்தமர்கின்றது
என்மனச் சுவரில்
உன் நினைவுப் பறவை..//

இது கலக்கலா இருக்குங்க ..!!
மற்றவையும் நல்லா இருக்கு .

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

துளியாக விழுகிறது
மண்ணில்..
ஏதோ நிறைகிறது
மனதில்//
சூப்பரா இருக்கு நண்பா

எஸ்.கே சொன்னது…

அருமையாக உள்ளது! வாழ்த்துக்கள்!

சுசி சொன்னது…

முத்தமும், நினைவுப் பறவையும், நாளெல்லாம் நினைவிருக்கும்..

funmachine - தமிழமிழ்தம் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
funmachine - தமிழமிழ்தம் சொன்னது…

என் முதல் பதிவு: உங்கள் வரிகள் காதலிக்காதோரையும் காதலிக்க தூண்டும். அருமை.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

பரிசுத்தமான பிரியம் சுமந்த காதல் மழைத்துளியாய் இன்று ...

ஹேமா சொன்னது…

பாலா....மழையாய் இன்று...அருமை !

Balaji saravana சொன்னது…

நன்றி ஜீவாம்மா

நன்றி சித்ரா

நன்றி அருண்

நன்றி செல்வா

நன்றி சதீஷ்

நன்றி எஸ்.கே

நன்றி சுசி

நன்றி தமிழமிழ்தம்


//பரிசுத்தமான பிரியம் சுமந்த காதல் மழைத்துளியாய் இன்று ..// :)

நன்றி செந்தில் அண்ணா..

நன்றி ஹேமா!

சுந்தரா சொன்னது…

அத்தனையும் அழகான கவிதைகள் சரவணன்.

அதிலும் நினைவுப்பறவை அருமை!

வள்ளுவன்வாசுகி சொன்னது…

http://valluvankathal.blogspot.com/

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

எத்தனை முறை விரட்டினாலும்
மீண்டும் வந்தமர்கின்றது
என்மனச் சுவரில்
உன் நினைவுப் பறவை..//

அருமை.. சரவணா...

என்னோட பதிவை பாருங்க.. லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலருக்கு உங்க படைப்புக்களை இன்றோ ., நாளையோ அனுப்புங்க..

கருத்துரையிடுக