வியாழன், 7 அக்டோபர், 2010

வரம்கொடு..

நகர மறுக்க சபிக்கப்பட்ட
மரமாகவேனும் நீ வரும் வழிகளில்
நிற்க மட்டும்  வரம்கொடு
இலையசைத்துப் ப்ரியத்தின்
தென்றலை திருப்பி விடுகிறேன்...

மறுப்பின் மொழிகளாவது
வீசிச்செல் வீதிகளில்
தேடிப்பிடித்து புழுதி துடைத்து
பத்திரப் படுத்திக் கொள்கிறேன்
ஞாபக அலமாரிகளில்...

ஒருமுறையேனும் திரும்பிப் பார்
உனைக்காண தவமிருக்கும் என்
நிமிட வேர்கள் உன் பார்வையீரத்தில்
சிலநாள் பிழைத்துப் போகட்டும்...

யாருக்கும் தெரியாமலேனும்
கொடுத்துவிட்டுப் போ
என்னிடமிருந்து பிடுங்கிய
உன்னைப் பற்றிய கனவொன்றையாவது...டிஸ்கி : இன்று பிறந்தநாள் காணும் எங்கள் பாசமிகு அண்ணன் தேவா அவர்களின் எண்ணம்யாவும் வெற்றியாய் அமைய இறைவனிடம் வேண்டுகிறேன்!


 

20 கருத்துகள்:

Chitra சொன்னது…

நகர மறுக்க சபிக்கப்பட்ட
மரமாகவேனும் நீ வரும் வழிகளில்
நிற்க மட்டும் வரம்கொடு
இலையசைத்துப் ப்ரியத்தின்
தென்றலை திருப்பி விடுகிறேன்...


...... nice.

தேவா வந்து வரம் கொடுப்பார்! ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

Kousalya சொன்னது…

//தேடிப்பிடித்து புழுதி துடைத்து
பத்திரப் படுத்திக் கொள்கிறேன்
ஞாபக அலமாரிகளில்..//

அடடா அசத்துறீங்களே சகோ....(ஆமா யாருங்க அந்த ப்ரியா....?!)

தேவா உங்களுக்கும் அண்ணனா....?? பதிவுலகத்தில் இருப்பதில் பாதி அவர் தம்பிகள் தான் போல...!!

கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…

நல்லா இருக்கு பாலாஜி..:-)))

அருண் பிரசாத் சொன்னது…

தேவா அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

கவிதை சூப்பருங்க!!

சௌந்தர் சொன்னது…

கவிதை சூப்பர் தேவா அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சந்திரிகை சொன்னது…

மறுப்பின் மொழிகளாவது
வீசிச்செல் வீதிகளில்
தேடிப்பிடித்து புழுதி துடைத்து
பத்திரப் படுத்திக் கொள்கிறேன்
ஞாபக அலமாரிகளில்...

நல்லா இருக்கு மகனே . நான் கேட்பதுவும் அதே .

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

தினசரி கவிதை தாலாட்டுதான் சூப்பர்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

தேடிப்பிடித்து புழுதி துடைத்து
பத்திரப் படுத்திக் கொள்கிறேன்//
ஆஹா..தம்பி இப்படியே பத்து பதிவு போட்டு ஈ புக் பண்ணிடு

Nickyjohn சொன்னது…

அலமாரியில் காலி இடம் ஏதும் உண்டா நண்பா .
கவிதை சூப்பர்

ப.செல்வக்குமார் சொன்னது…

//நகர மறுக்க சபிக்கப்பட்ட
மரமாகவேனும் நீ வரும் வழிகளில்
நிற்க மட்டும் வரம்கொடு//

ஹய்யோ , எப்படித்தான் யோசிக்கிறீங்களோ ..?
கலக்கலா இருக்கு ..!!

ப.செல்வக்குமார் சொன்னது…

//என்
நிமிட வேர்கள் உன் பார்வையீரத்தில்
சிலநாள் பிழைத்துப் போகட்டும்...//

எப்படிங்க இப்படியெல்லாம் , உண்மைலேயே உடம்பு சிலிர்க்கிற மாதிரி இருக்கு .!!

சுசி சொன்னது…

அழகான கவிதை.. வலியைச் சொன்னாலும்..

என்னுடைய வாழ்த்துக்களும்..

ஹேமா சொன்னது…

பாலா...இரண்டாவது பந்தியை மனதில் பதிய வைத்துக்கொள்கிறேன் !

தேவாவுக்கு வாழ்த்துகள் மனதார!

அன்பரசன் சொன்னது…

கவிதை அழகு..
தேவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Balaji saravana சொன்னது…

@சித்ரா
நன்றி சித்ரா!

//தேவா வந்து வரம் கொடுப்பார்! ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...//

வரம் கொடுத்தா சரி.. கவிதை எழுதிக் கொடுத்துட்டாதான் கொஞ்சம் பிரச்சனை!

@கௌசல்யா

நன்றி சகோ..
அவங்களும் ஒரு பதிவர்தான்.. ரசனையும் ஓவியத் திறமையும் நிறையக் கொண்டவர்.
அவரது ப்ளாக் http://enmanadhilirundhu.blogspot.com 

//தேவா உங்களுக்கும் அண்ணனா....?? பதிவுலகத்தில் இருப்பதில் பாதி அவர் தம்பிகள் தான் போல...//
அவர் ஒரு பிக் பாஸ்! :)


@கார்த்திகைப் பாண்டியன்

நன்றி பாண்டியன்..
அடிக்கடி வாங்க!


@அருண்

நன்றி நண்பா!


@சௌந்தர்

நன்றி நண்பா!


@சந்திரிகை

நன்றி ஜீவாம்மா.. இப்போ உங்க வருத்தம் போயிருக்குமே :)


@ஆர்.கே.சதீஷ்

நன்றி சதீஷ்!.

//ஆஹா..தம்பி இப்படியே பத்து பதிவு போட்டு ஈ புக் பண்ணிடு//

அந்தளவுக்கு வர இன்னும் நிறைய தூரமிருக்கு அண்ணே!


@நிக்கி ஜான்

வாங்க நண்பா!
அலமாரியே காலிதான் :(


@செல்வா

மிக்க நன்றி நண்பா!

//எப்படிங்க இப்படியெல்லாம் , உண்மைலேயே உடம்பு சிலிர்க்கிற மாதிரி இருக்கு .!!//

கும்மிக்கு அச்சாரம் இல்லையே ;)


@சுசி

நன்றி சுசி!


@ஹேமா

நன்றி ஹேமா!

//இரண்டாவது பந்தியை மனதில் பதிய வைத்துக்கொள்கிறேன் !//

உங்களுக்கும் பதில் கிடைக்கவே இல்லையா தோழி?


@அன்பரசன்

நன்றி நண்பா!

மோகன்ஜி சொன்னது…

அழகான வரிகள் பாலா! 'ஞாபக அலமாரிகள்'..நயம்!

Balaji saravana சொன்னது…

நன்றி மோகன் சார்!

V.Radhakrishnan சொன்னது…

கவிதை நன்றாக இருக்கிறது. கனவு மட்டும் தானா?

பதிவுலகில் பாபு சொன்னது…

கவிதை நல்லாயிருக்கு..

Balaji saravana சொன்னது…

வாங்க ராதாகிருஷ்ணன்..
முதல்ல கனவாவது கொடுக்கட்டுமே அதான் :)
நன்றி!

நன்றி பாபு!

கருத்துரையிடுக