செவ்வாய், 5 அக்டோபர், 2010

மன்னாதி மன்னன் - மதுரை திருமலை நாயக்கர்.


அருமை நண்பர் வெறும்பய என்னையும் இந்த தொடர் பதிவுக்கு அழைத்து இருந்தார். அன்னாரின் அன்பை ஏற்று தொடர்கிறேன்.

மதுரையை ஆண்ட மன்னர்கள் ஆயிரமாயிரம் பேர். அம்மை மீனாட்சியின் ஆட்சியையும் சேர்த்து மதுரையை "கடவுளர் ஆண்ட பூமி" எனவும் கூறலாம்.  நான் பிறந்த ஊர் அல்லவா! :)  அவர்களுள் ஒருவரான மன்னர் திருமலை நாயக்கரைப் பற்றிய  தகவல்களை தொகுத்திருக்கிறேன். 
ஏற்கனவே அவரைப் பற்றி நிறைய அறிந்தவர்கள்,  இப்பதிவில் ஏதேனும் தகவல்கள் விடுபட்டிருந்தால் அல்லது தவறிருந்தால்  பின்னூட்டத்தில் பின்னவும் :)

சுமார் 207 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட நாயக்கர் மன்னர்களில் ஏழாவது மன்னராக மதுரையை தலைநகராகக் கொண்டு சிறப்பான முறையில் ஆட்சி நடத்தியவர் மன்னர் திருமலை நாயக்கர். தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்ட நாயக்கர்களின் மதுரை வருகை  இது போன்று இன்னும்  இரண்டு பதிவுகளுக்கு காரணமாகிவிடும் என்பதால் அதை அப்படியே நகர்த்தி வைத்து விட்டு திருமலை நாயக்கரை பற்றி மட்டும் பார்ப்போம்.

கி.பி. 1623 லிருந்து கி.பி.1659 வரை 36 ஆண்டுகள் ஆட்சி புரிந்த திருமலை நாயக்கரின் இயற்பெயர் திருமலை சவுரி நாயனு அய்யுலுகாரு என்பதாகும்.இவர் பிறந்த ஆண்டு கி.பி.1584. தந்தையார் பெயர் முத்துகிருஷ்ணப்ப நாயக்கர். பலதிறன்களும் அரசியல் விற்பன்னமும் திருமலை நாயக்கரின்  சிறப்பு.

திருமலை நாயக்கரின்  அண்ணன் முத்துவீர நாயக்கருக்குப் பின் அரியணை ஏறிய அவர் முதலில் திரிசிரபுரம் என்னும் இன்றைய திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சிசெய்து கொண்டிருந்தார். இளம்பருவத்தில் தொற்றியிருந்த "மார்ச்சளி" நோயினால் உடல்வலிமை குன்றியிருந்தார். காவிரிச் சூழலிலிருந்து மாறி மீனாட்சி சொக்க நாதருக்கு முறையான வழிபாடுகள் செய்யவும், மதுரையை தலைநகராகக் கொண்டால் அந்நோயிலிருந்து விடுபடலாமென மருத்துவன் ஒருவன் கூறிய அறிவுரைஏற்று மதுரையை தன் தலைநகராகக் கொள்கிறார் மன்னர். மருத்துவன் வடிவில் சோமசுந்தரக் கடவுளே வந்ததாகச் செவிவழிச் செய்திகள் உலவுகின்றன.


திருமலை நாயக்கரின் ஆட்சியில் பண்டைய பாண்டிய நாட்டின் பெரும்பகுதியும் திருவிதாங்கூரின் சிலபகுதிகளும் அடங்கியிருந்தது. டெல்லியிலிருந்து சுல்தானின் அச்சுறுத்தல்கள், மைசூரின் மன்னர்களின் படையெடுப்புகள்  இருந்தபோதும் நிலையான போரில்லாத, நீண்ட அமைதியான அரசை மக்களுக்கு அளித்தார். அவரின் ஆட்சியில் செல்வம் செழிக்க ஆரம்பித்தது. பெருகியசெல்வங்களை பல கோவில் திருப்பணிகளுக்கு செலவிட்டார். சைவ - வைணவ ஆலயங்களுக்கு சீரான திருப்பணிகளும் முறையான வழிபாடுகளும் தொடர்ந்திருந்ததைச் சான்றாகச் சொல்லலாம். ஒரு சைவக் கோவிலுக்கு அருகே ஒரு வைணவக் கோவிலையும் அதே சிறப்புடன் பராமரித்து வந்திருக்கிறார். ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள மடவார் வளாகத்தில் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது. அக்கோவிலில் உள்ள பெரிய நாடக சாலை மண்டபம் அவரால் கட்டப்பட்டது தான்.


அதே நேரத்தில் கிருத்துவ மற்றும் முஸ்லிம் அமைப்புக்களையும் ஆதரித்திருந்திருக்கிறார். அவருடைய ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிகளை பாளையப்பட்டுக்களாக  பிரித்து அங்கு பாளையக்காரர்களை ஆட்சியதிகாரத்தில் அமர்த்தினார் நாயக்கர். மொத்தம் 76 பாளையப்பட்டுக்கள் சேர்ந்து திருமலை பேரரசாக திகழ்ந்திருந்தது. அவை இன்றைய  தேனி, நெல்லை,மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் இடங்களில் இருந்திருந்தது. பின்னாளில் வீர பாண்டிய கட்டபொம்மனும், மருது பாண்டிய சகோதரர்களும் இன்ன பிற சிற்றரசர்களும் இப்பாளையக்காரர்களின் வழித்தோன்றலே என்பது செய்தி. 

கோவில் சீர்திருத்தத்தில் அவர் காட்டிய அக்கறை அவரது திறன்களை தெளிவாக்குகிறது. மீனாட்சியம்மன் திருவிழாவை சித்திரை மாதத்திற்கு மாற்றியது, அத்திருவிழவை வெகுசிறப்பாக நடத்தி சைவ - வைணவர்களை ஒன்றென இணைத்தது, வசந்தமண்டபம் கட்டியது, மீனாட்சியம்மன் கோவிலை மிகச் சிறப்பாக எடுத்துக் கட்டியது, தெப்பத் திருவிழாவை உருவாக்கியது என அவர் செய்த சாதனைகள் பல. திருமலை நாயக்கரின் காலத்திற்கு முன்பு வரை மீனாட்சியம்மன் திருவிழா சைவர்கள் மட்டுமே கொண்டாடும் விழாவாக இருந்தது என்பதை இவ்வுடன் நினைவுகூர விழைகிறேன். 

மீனாட்சியம்மன் கோவிலிலுள்ள முக்குருணி விநாயகரின் பெரிய சிலை கோவில் விரிவாக்கத்திற்காக மண்ணெடுக்கும் போது கண்டெடுக்கப்பட்டு, அது கோவிலிலேயே நிறுவப்பட்டிருக்கிறது. மண்ணெடுக்கத் தோண்டிய இடம் இன்றைய மாரியம்மன் தெப்பக்குளமாக சாட்சியென இருக்கிறது.  

இன்றைய மதுரை, திருமலை நாயக்கரின் ஆக்கம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.மதுரையின் தெருக்கள், ஆலயங்கள், அவரது ஆட்சியிலிருந்த ஊர்களிலுள்ள ஏரிகள் எல்லாம் அவரது ஆக்கங்களே. இன்றோ அவ்வேரிகளில் பாதிக்கும் மேல் தூர்வாராமல் குடியிருப்புக்களாக மாறிவிட்டிருக்கின்றன.

அவரது ஆட்சியில் மற்றொரு சிறப்பு மிக்க ஆக்கம் அவரது மாளிகை. திருமலை நாயக்கர் மஹால் என்று இன்றும் பொலிவுடன் விளங்கும் அவரது அரண்மனை கட்டிய பொழுதில் இருந்ததில் நான்கில் ஒரு பகுதியே மிச்சமிருக்கிறது. தற்போது தமிழ் திரைப்படங்களின் சூட்டிங் ஸ்பாடுகளில் ஒன்றென மாறியிருந்தது காலத்தின் கோலம் :(  

எழில் வாய்ந்த இந்த அரண்மனை கி.பி.1639 ஆண்டு இந்தோ- சாரசீனிக் முறைப்படி ஒரு இத்தாலிய பொறியியல் வல்லுனரால் கட்டப்பட்டது. சாரசீனிக் முறை என்பது முஸ்லிம் கட்டடக்கலையாகும்.இதில் சொர்க்க விலாசம் மற்றும் ரங்க விலாசம் என இரண்டு பகுதிகள் இருந்திருக்கின்றன. முன்னதில் திருமலை நாயக்கரும் பின்னதில் அவரது தம்பியும் அவர்களின் வாழ்நாள்வரை இருந்திருக்கிறார்கள். இது தவிர 18 இசைக்கருவிகள் இசைக்கும் இடம், படைகலன் வைக்கும் இடம், பூஜை செய்யும் இடம், அரியணை மண்டபம், தேவியரின் அந்தப்புரம், நாடக சாலை, மலர் வனங்கள், பணியாளர் வசிக்குமிடம் என பல இடங்கள் வடிவமைக்கப் பட்டிருந்தன.


சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு... 


இந்த அரண்மனையிலிருந்து மீனாட்சியம்மன் கோவிலுக்கு சுரங்கப் பாதையொன்று இருந்தது எனவும் காலப்போக்கில் அது அழிந்து விட்டது எனவும் கூறுவர். இன்றும் மீனாட்சியம்மன் கோவிலிலுள்ள பைரவர்  சன்னதிக்கு எதிரேயுள்ள சிறுகிணறு சுரங்கப்பாதையின் வழியென கூறுகின்றனர். 

சீரும் சிறப்புமாக மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் தனது 75  வது வயதில் உயிர்நீத்தார்.உப செய்தியாக,  வீரப் பெண்மணி ராணி மங்கம்மா திருமலை நாயக்கரின் வழித்தோன்றலே! தமிழகத்தையாண்ட பெரும்புகழ் படைத்த மன்னர்களான கரிகால்சோழன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், நரசிம்மபல்லவன், ராஜராஜசோழன், ராஜேந்திரசோழன் இவர்களின் வரிசையில் மன்னர் திருமலை நாயக்கருக்கும் இடமுண்டு என்பது மறுக்க முடியாத வரலாறு.

மீனாட்சியம்மன் கோவிலுக்கோ அல்லது மதுரைக்கோ நீங்கள் செல்லும் பொழுது செம்மையாக ஆண்ட  திருமலை நாயக்கரின் நினைவு ஓரிரு நொடிகள் வந்தாலே இப்பதிவின் நோக்கம் முற்றுப்பெறும்.

இப்பதிவிற்கு உதவிய தளங்களுக்கு நன்றி!    

28 கருத்துகள்:

denim சொன்னது…

மிக நல்ல பதிவு.


http://denimmohan.blogspot.com/

சுடர்விழி சொன்னது…

திருமலை நாயக்கர் பற்றிய பதிவு நல்லா இருக்கு...படங்கள் அருமை...கண்டிப்பாக இனி மதுரைக்குச் செல்லும்போது திருமலை நாயக்கரின் நினைவுகள் மனதை வருடும்.......

அருண் பிரசாத் சொன்னது…

நல்ல பயணுள்ள பதிவு. திருமலைநாயக்கர் மஹால் பார்க்க கண்கோடி வேண்டும்

ப.செல்வக்குமார் சொன்னது…

///ஏற்கனவே அவரைப் பற்றி நிறைய அறிந்தவர்கள், இப்பதிவில் ஏதேனும் தகவல்கள் விடுபட்டிருந்தால் அல்லது தவறிருந்தால் பின்னூட்டத்தில் பின்னவும் :)
//

எனக்கு ஏதும் தெரியாதுங்க .. உங்க பதிவ படிச்சுதான் தெரிஞ்சிக்கணும் .!!

ப.செல்வக்குமார் சொன்னது…

//ஒரு சைவக் கோவிலுக்கு அருகே ஒரு வைணவக் கோவிலையும் அதே சிறப்புடன் பராமரித்து வந்திருக்கிறார்//

அட , உண்மைலேயே நல்லவர் தான் ..!!

ப.செல்வக்குமார் சொன்னது…

//எழில் வாய்ந்த இந்த அரண்மனை கி.பி.1639 ஆண்டு இந்தோ- சாரசீனிக் முறைப்படி ஒரு இத்தாலிய பொறியியல் வல்லுனரால் கட்டப்பட்டது. சாரசீனிக் முறை என்பது முஸ்லிம் கட்டடக்கலையாகும்.//

நம்ப முடியலைங்க . அதவிட அந்த படங்களும் அருமை .. நிச்சயமா மதுரை போகும்போது அங்க போய் பார்க்கணும் ..!!

ப.செல்வக்குமார் சொன்னது…

//நம்ப முடியலைங்க . //
நம்பவே முடியலைங்க ..

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

ஆஹா என்ன ஒரு அருமையான் பதிவு

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

ரொம்ப அழகா தொகுத்து இருக்கீங்க..நம்ம சரவணன் எழுத்தா இது..கலக்குங்க பாஸ்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

புகைப்படங்கள் அனைத்தும் அருமை..திருமலை மஹால் காண கண்கோடி வேண்டும்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

இன்றோ அவ்வேரிகளில் பாதிக்கும் மேல் தூர்வாராமல் குடியிருப்புக்களாக மாறிவிட்டிருக்கின்றன.
//
வேதனையான செய்தி.மீண்டும் அந்த காலம் வராதா என ஏங்க வைக்கிறது

ஹேமா சொன்னது…

பாலா....சரித்திரமாய் பதிவு ரசிக்க வைக்கிறது.படங்களைப் பார்க்கவே அற்புதமாய் இருக்கு.எத்தகைய சிற்பக் கைவேலைகள்.
இவைகளைப் பாதுகாத்தாலே எம் பாரம்பரியங்கள் நிலைக்குமே !

Ananthi சொன்னது…

ஆஹா.. படங்களும், உங்கள் தொகுப்பும் அருமை..

///மீனாட்சியம்மன் கோவிலுக்கோ அல்லது மதுரைக்கோ நீங்கள் செல்லும் பொழுது செம்மையாக ஆண்ட திருமலை நாயக்கரின் நினைவு ஓரிரு நொடிகள் வந்தாலே இப்பதிவின் நோக்கம் முற்றுப்பெறும்///

கண்டிப்பாக நீங்க விரும்பியது, போல, நினைவிற்கு வரும்.. :-))

சிவா சொன்னது…

அருமையான பதிவு பாலா! நல்ல இடம்!!!

அன்பரசன் சொன்னது…

நல்ல நல்ல தகவல்கள்.
படங்கள் கூடுதல் பலம்.

denim சொன்னது…

மிக நல்ல பதிவு

http://denimmohan.blogspot.com/

Chitra சொன்னது…

படங்களும் தகவல்கள் தொகுப்பும் அருமை. வாழ்த்துக்கள்! நான் இன்னும் தொடர் எழுதாம ஒப்பேத்திக்கிட்டு இருக்கேன். அவ்வ்வ்.....
(பி.கு. எந்திரன் வச்சு - Facebook ல ஒரு கச்சேரியே முடிச்சாச்சு...... ஹா,ஹா,ஹா,ஹா....)

சௌந்தர் சொன்னது…

தகவலும் படங்களும் சூப்பர்

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

எனக்குப் பிடித்த மன்னர் திருமலை நாயக்கர்.. மிக பயனுள்ள பதிவு.. பாலாஜி

மோகன்ஜி சொன்னது…

திருமலை நாயக்கர் பற்றிய ஏராளமான விவரங்கள் தந்திருக்கிறீர்கள்.தொய்வில்லாத நடையில் உங்கள் பதிவு.. மீதி சரித்திரத்தை படங்கள் சொல்லி விட்டன பாலா!

எம் அப்துல் காதர் சொன்னது…

படங்களும் தகவல்களும் அருமை நண்பா!!

தியாவின் பேனா சொன்னது…

அருமை, பயணுள்ள பதிவு.

சந்திரிகை சொன்னது…

பதிவு நல்லா இருக்கு...படங்கள் அருமை..

Balaji saravana சொன்னது…

டெனிம் மோகன்
சுடர்விழி
அருண்
செல்வா
சதீஷ்
ஹேமா
ஆனந்தி
சிவா
அன்பரசன்
சித்ரா
சௌந்தர்
தேனம்மை லக்ஷ்மணன்
மோகன்ஜி
அப்துல்
தியா
ஜீவாம்மா

அனனவருக்கும் என் நன்றிகள் பல!

மிருணா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Nayakkar சொன்னது…

Very good i appreciate your your job..

S N Janakiraman Naicker சொன்னது…

Thirumalai Nayakkar Palace is having two parts like Swarga Vilasam n Ranga Vilasam, it is not right and it suppose to be Chokka Vilasam n Ranga Vilasam bcoz the Mannar Thirumalai worshiped both Chokkanathar of Madurai n Ranganathar of Trichy. This is my kind suggestion only.

Vetri Matrimony சொன்னது…

Best Nayakkar Matrimony in tamilnadu visit: Nayakkar matrimony

Best Nayakkar Matrimony in tamilnadu visit: நாயக்கர் தி௫மண தகவல் மையம்

கருத்துரையிடுக