வெள்ளி, 1 அக்டோபர், 2010

உருமாற்றம்...

மிக மிருதுவான கைகள் உன்னுடையது
பட்டின் ஸ்பரிசமும் பனிக்காற்றின்
குளுமையும் கொண்டதது...

பிறந்த சிசுவின் பூம்பாத நிறமும்
மல்லிகை மணமும் நிறைந்ததது

மேகத்தினூடே மின்னலென
ரேகைகள் ஓடும் வெளியது...

வீசிநடக்கும்போது விரல்கள்
செய்யும் நடனத்தின் பாவம்...

செதுக்கப் பட்ட நகங்களும்
நடுவிரல் நுனிமச்சமும்
அழகு சேர்த்தது அதற்கு..

கைதவறியுடைந்த பூந்தொட்டிக்காய்
விரல்பதிந்த குழந்தையின்
கன்னம் பார்த்தபின்

கோபச் சாத்தானின்
சவுக்காகிப் போயிருந்தது
உனதிந்த கைகள்..


 

15 கருத்துகள்:

சுசி சொன்னது…

அழகா இருக்கு பாலாஜி..

//விரல்பதிந்த குழந்தையின்
கன்னம் பார்த்தபின்//
:((((

//மேகத்தினூடே மின்னலென
ரேகைகள் ஓடும் வெளியது...//
அழகான உவமை..

ப.செல்வக்குமார் சொன்னது…

//கோபச் சாத்தானின்
சவுக்காகிப் போயிருந்தது
உனதிந்த கைகள்.//

முதல்ல படிக்கும் போது அப்படியே தேவதை மாதிரி வர்ணிச்சு கடிசில இப்படி முடிச்சிட்டீங்க ... நல்லா இருக்கு ..

சந்திரிகை சொன்னது…

கைதவறியுடைந்த பூந்தொட்டிக்காய்
விரல்பதிந்த குழந்தையின்
கன்னம் பார்த்தபின்

சந்திரிகை சொன்னது…

மனம் வலிக்குமே . ......

//கோபச் சாத்தானின்
சவுக்காகிப் போயிருந்தது.........

எப்படி ஆகாமல் இருக்க முடியும் ?

VELU.G சொன்னது…

நல்லாயிருக்குங்க

வெறும்பய சொன்னது…

நல்ல படைப்பு...

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

எதார்த்தமான வாழ்வை கவிதையாக்கி இருக்கிறீர்கள்.. பாராட்டுக்கள் ...

அன்பரசன் சொன்னது…

சூப்பர் பாலா

ஹேமா சொன்னது…

பாலா....வீட்டில நடந்திச்சோ.கவனம் நீங்களும் !

சௌந்தர் சொன்னது…

கைதவறியுடைந்த பூந்தொட்டிக்காய்
விரல்பதிந்த குழந்தையின்
கன்னம் பார்த்தபின்////

நல்லாயிருக்கு

எம் அப்துல் காதர் சொன்னது…

கவிதை அருமை பாஸ்!!

மோகன்ஜி சொன்னது…

பாலா! கவிதை மனசு பூ மாதிரி.. அம்மாவின் விரல் பதிவது குழந்தையின் கன்னத்தில்.. வலியோ உம் இதயத்தில்.. அயர்ந்து விட்டேன் பாலா.. பலமாய் எங்கோ என்னைத் தாக்கி விட்டாய்.

ஈரோடு தங்கதுரை சொன்னது…

நல்ல கருத்துக்கள், வாழ்த்துக்கள் . அப்புறம் , ஜெயா டிவி -ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் . அதையும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டு போங்கள். http://erodethangadurai.blogspot.com/

அஹமது இர்ஷாத் சொன்னது…

நல்லாயிருக்கு பாலாஜி..

Balaji saravana சொன்னது…

நன்றி சுசி

நன்றி செல்வா.. ஆம் நண்பா தலைப்பே உருமாற்றம் தானே!

நன்றி ஜீவாம்மா.. கண்டிப்பா!

நன்றி வேலு

நன்றி நண்பா

அன்புக்கு நன்றி செந்தில் அண்ணா!

நன்றி அன்பரசன்

அன்புக்கு நன்றி ஹேமா.. ஆனா எனக்கு இன்னும் திருமணம் ஆகல அதனால இந்த பிரச்சனையில்லை :)

நன்றி சௌந்தர்

நன்றி அப்துல்

ரசிச்சு படிச்சதுக்கு ரொம்ப நன்றி மோகன் சார்.

நன்றி தங்கதுரை

நன்றி அஹமது

கருத்துரையிடுக