செவ்வாய், 28 செப்டம்பர், 2010

நிகழாத் தூக்கம்..

வலிய இழுத்துப் பிடித்த உறக்கமொன்று
பாதிக் கனவில் கரைந்து  போனது
திறக்கவியலா  கண்ணெரிச்சலும்
கடக்கவியலாத் தொலைவொன்றுமாய்...

வெளியேறும் தணல் மூச்சுக்களில்
மெல்லப் புகையத் தொடங்கியிருந்தது
தூக்கம் சிறை வைக்கத் தெரியா
தலையணையும் வெண்பஞ்சு மெத்தையும்...

அறைதப்பிப் போன தூக்கம்
துரத்திப் பிடிக்கவியலாமல்
சுற்றிக் கொண்டிருந்தது நினைவு
இதயம் கிழித்த வலியொன்றில் ...

எண்திசை நீண்டு காத்திருக்கும் கனவுகள்
தூக்கவாசல் திறப்பிற்காய்
கனவுகளின் காவலனாகிப் போனாலும்
உறக்கத் தாழுடைத்து உள்ளேறும்
வழியேதும் உண்டோ?


 

16 கருத்துகள்:

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

இழுத்து பிடித்து ரசித்த கனவுகள் விடியலில் மாயமாகும் மர்மம் ...

அருண் பிரசாத் சொன்னது…

வாவ்... அருமை

சௌந்தர் சொன்னது…

சுற்றிக் கொண்டிருந்தது நினைவு
இதயம் கிழித்த வலியொன்றில் .////

இந்த வரிகள் நல்லா இருக்கு

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

வெளியேறும் தணல் மூச்சுக்களில்
மெல்லப் புகையத் தொடங்கியிருந்தது
தூக்கம் சிறை வைக்கத் தெரியா
தலையணையும் வெண்பஞ்சு மெத்தையும்...//
அய்யோ வீடே எரிஞ்சு போச்சா

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

இதயம் கிழித்த வலியொன்றில் ...
//
சும்மா நச்ச் வரிப்பா

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

உறக்கத் தாழுடைத்து உள்ளேறும்
வழியேதும் உண்டோ//
ம்ம்ம்

ப.செல்வக்குமார் சொன்னது…

///வெளியேறும் தணல் மூச்சுக்களில்
மெல்லப் புகையத் தொடங்கியிருந்தது
தூக்கம் சிறை வைக்கத் தெரியா
தலையணையும் வெண்பஞ்சு மெத்தையும்...//

ஆஹா , தூக்கம் களைந்து விட்டது அப்படிகிரத அழகா சொல்லிருக்கீங்க ..! கலக்கல் ..

ப.செல்வக்குமார் சொன்னது…

//அறைதப்பிப் போன தூக்கம்
துரத்திப் பிடிக்கவியலாமல்
சுற்றிக் கொண்டிருந்தது நினைவு
இதயம் கிழித்த வலியொன்றில் ...//

எப்படியெல்லாம் எழுதறாங்க ., ஏன் எனக்கு மட்டும் கவிதை வரவே மாட்டேங்குது ..?!?

சந்திரிகை சொன்னது…

ஓம் சாந்தி.
இப்போதுதான் மொத்தமாக படிக்கிறேன்..கருத்துரை சொல்ல எனக்கு தெரியவில்லை

ரொம்ப நல்லா எழுதுற .வாழ்த்துக்கள்.

மோகன்ஜி சொன்னது…

பாலா! தூக்கம் தொலைத்த இரவின் நீளம் ரொம்பவே.. நல்ல கவிதை பாலா!

ஹேமா சொன்னது…

கனவைத்தான் திட்டுவோம்.பாலா ..நீங்கள் கனவு வாராத தூக்கத்தைத் தேடித் திட்டுவதாய் !ரசித்தேன்.

Ananthi சொன்னது…

//வெளியேறும் தணல் மூச்சுக்களில்
மெல்லப் புகையத் தொடங்கியிருந்தது
தூக்கம் சிறை வைக்கத் தெரியா
தலையணையும் வெண்பஞ்சு மெத்தையும்...///

தூக்கம் தொலைத்து விட்டால்.. அதை தொட விளையும் நீண்ட ராத்திரி தான்..
ரொம்ப அழகா இருக்குங்க.. பகிர்வுக்கு நன்றி :-))

Thusharini சொன்னது…

அறைதப்பிப் போன தூக்கம்
துரத்திப் பிடிக்கவியலாமல்
சுற்றிக் கொண்டிருந்தது நினைவு
இதயம் கிழித்த வலியொன்றில்

surperb
நல்ல கவிதை பாலா!

சுடர்விழி சொன்னது…

தூக்கம் தொலைத்த நீண்ட இரவுகளின் வெம்மையை ரொம்ப அருமையாக சொல்லி இருக்கீங்க...பாராட்டுக்கள் !!

Balaji saravana சொன்னது…

நன்றி செந்தில் அண்ணா
நன்றி அருண்
நன்றி சௌந்தர்
நன்றி சதீஷ்
நன்றி செல்வா
நன்றி ஜீவாம்மா
நன்றி மோகன்ஜி
நன்றி ஹேமா
நன்றி ஆனந்தி
நன்றி ஹரிணி
நன்றி சுடர்விழி

Raja சொன்னது…

இது பிரமாதமான கவிதை...வாழ்த்துக்கள் பாலா...

கருத்துரையிடுக