சனி, 25 செப்டம்பர், 2010

புரிதல்...

வழியில் எதிர்ப்பட்ட
பார்வையற்றவரின் உலகம்
எப்படியிருக்குமென்று அறிய
கண்களை கறுப்புத்துணியால்
கட்டிக்கொண்டு நடக்கிறாய் நீ!

எப்படியும் இன்னும் சில நிமிடங்களில்
கட்டவிழ்ந்துவிடுமென்ற  தைரியத்தில்
சூழும் இருளும் உனக்கு ஒரு
சாகச விளையாட்டாகிறது, அது அவனது
விலக்கமுடியா சிறை என்பதறியாமல்!...
டிஸ்கி : இது பார்வையற்றவரின் மேல் பரிகாசமோ அல்லது பரிதாபமோ என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று வேண்டுகிறேன். சக மனிதனின் வலியை நாம் ( நம்மில் பலர் ) எவ்வாறு மேலோட்டமாக  புரிந்து கொள்கிறோம் என்பதைச் சொல்லுவதாகவே இதை எடுத்துக் கொள்க!

 
 

16 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

சாகச விளையாட்டாகிறது, அது அவனது
விலக்கமுடியா சிறை என்பதறியாமல்!..///

ரொம்ப ரொம்ப உண்மையை சொல்லி இருக்கிங்க அதை விட டிஸ்கி சூப்பர்

ப.செல்வக்குமார் சொன்னது…

//அது அவனது
விலக்கமுடியா சிறை என்பதறியாமல்!...//
உண்மைதாங்க ... அது ரொம்ப கொடுமையானது ..!!

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

உண்மைதான்... ஒரு தற்காலிக இருட்டுக்கே தடுமாறுபவர்கள் நாம் ...

அன்பரசன் சொன்னது…

நல்ல பார்வை.

சிவராம்குமார் சொன்னது…

சூப்பர் பாலா! விலக்க முடியா சிறைங்கிறதுல அந்த கையறு நிலையை ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க!

Chitra சொன்னது…

மற்றவர் துயரங்களை புரிந்து கொள்ளக் கூட நிறைய பேருக்குத் தயக்கம் உண்டு. கவிதையில் கருத்து - அபாரம்!

ஹேமா சொன்னது…

என்னை நானே சிலசமயங்களில் இப்படித் திட்டியிருக்கிறேன்.ஒரு விநாடிகூட இருட்டில் எதுவும் முடியாமல் இருக்கிறதே !

மோகன்ஜி சொன்னது…

பாலா ! மனதில் தைக்கும் வரிகள். அழகான கவிதை.வாழ்த்துக்கள்

சுடர்விழி சொன்னது…

கவிதையின் கருத்து அருமை...தற்காலிக இருட்டுக்கே தடுமாறும் நமக்கு பார்வையற்றவர் துயரம் முழுதும் புரிந்துகொள்ள முடியாதுதான்...அழகான கவிதை

Balaji saravana சொன்னது…

சௌந்தர்
செல்வா
செந்தில் அண்ணா
அன்பரசன்
சிவா
சித்ரா
ஹேமா
மோகன்ஜி
சுடர்விழி...

அனைத்து நண்பர்களுக்கும் நன்றி! :)

சந்திரிகை சொன்னது…

very good

Balaji saravana சொன்னது…

நன்றி ஜீவாம்மா!

மகேஷ் : ரசிகன் சொன்னது…

excellent thala..

மகேஷ் : ரசிகன் சொன்னது…

romba nalla irukku...

Balaji saravana சொன்னது…

நன்றி மகேஷ்

Raja சொன்னது…

நெகிழ்வாய் உணர்ந்தேன்...வாழ்த்துக்கள்...

கருத்துரையிடுக