புதன், 22 செப்டம்பர், 2010

நீ...நான்!

இடைவிடாத தென்றலின் 
அழைப்புக்களுக்கு தலையசைக்காத 
இலைகளென உனைச்  
சுற்றியலையும் என் 
ப்ரியத்தின் கேவல்களுக்கு 
மௌனப் பரிசளிக்கிறாய் நீ!..

பிடித்த விரல் நழுவவிட்டு 
தொலைந்துபோன 
குழந்தையின் தவிப்பென
எனையுதறி உனைச்
சுற்றியலையும் மனத்தால் 
தவித்தலைகிறேன் நான்!..

*******************************************************************************

தோழியருகே இடமில்லாமல் 
என்னருகே நீயமர்ந்து வந்த 
பேருந்துப் பயணத்தில்..
உன்னை முதலாய்ப் 
பார்த்த கணத்திலிருந்து 
நினைவுகள் மீட்டி 
பதற்றமாய் உன்னைச் 
சுற்றிப் பின்னிக்கொண்டிருக்க
எனைக் கவனியாது போல் 
முன்னிருக்கை குழந்தைக்கு 
முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறாய் நீ!..


   

17 கருத்துகள்:

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

இரண்டு கவிதைகளுமே பாராட்டுக்குரியது ...

சுடர்விழி சொன்னது…

அருமை..அருமை...

’எனையுதறி உனைச்
சுற்றியலையும் மனத்தால்
தவித்தலைகிறேன் நான்!..’மனதைத் தொட்டன இந்த வரிகள்...பாராட்டுக்கள் !!

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

எனைக் கவனியாது போல்
முன்னிருக்கை குழந்தைக்கு
முத்தம் கொடுத்துக்கு கொண்டிருக்கிறாய் நீ!..//
எனக்கு பிடிச்ச வரிகள்..

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

பிடித்த விரல் நழுவவிட்டு
தொலைந்துபோன
குழந்தையின் தவிப்பென//
சூப்பர் தலைவரே

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

ப்ரியத்தின் கேவல்களுக்கு
மௌனப் பரிசளிக்கிறாய் நீ!..//
அட்டகாசம்

ப.செல்வக்குமார் சொன்னது…

//பிடித்த விரல் நழுவவிட்டு
தொலைந்துபோன
குழந்தையின் தவிப்பென
எனையுதறி உனைச்
சுற்றியலையும் மனத்தால்
தவித்தலைகிறேன் நான்!..//

ஹய்யோ . உண்மையாவே சிலிர்ப்பா இருக்குதுங்க ..!!

அருண் பிரசாத் சொன்னது…

இரண்டு கவிதையுமே சூப்பர்

அன்பரசன் சொன்னது…

நண்பா ரெண்டுமே சூப்பர்..
அதிலும் அந்த முத்தம் மேட்டரு பிரமாதம்பா.

மோகன்ஜி சொன்னது…

நல்ல கவிதைகள் பாலாஜி.நீங்க கண்டிப்பா பஸ்ல டிக்கெட் வாங்க மறந்து போயிருப்பீங்க!!very nice

Chitra சொன்னது…

very very nice... :-)

ஹேமா சொன்னது…

பாலா...இரண்டுமே மனதைத் தொட்டது.

இரண்டாவது கவிதை நெகிழ்வும் கூட!

sweatha சொன்னது…

வரி செலுத்தும் உங்கள் உரிமைகள் மீட்க ..
வரிகளாக்கி எழுதுங்கள் உங்கள் மனசாட்சியை .. ஜீஜிக்ஸ்.காமில்


சிறந்த எழுத்துக்கு ஒவ்வொரு வாரமும் Rs 500 பெறுங்கள்.
சமுதாய ஆர்வலர்களின் உலக மேடை www.jeejix.com .
பரிசு பெற்ற பதிவுகள் காண http://www.jeejix.com/Post/SubCategory?SCID=163

இராமசாமி கண்ணண் சொன்னது…

ரெண்டும் முத்துக்கள் பாலாஜி.. வாழ்த்துகள் :)

RVS சொன்னது…

Nallaa Irukku.. ;-)

anbudan RVS

Balaji saravana சொன்னது…

கே.ஆர்.பி.செந்தில் அண்ணா
சுடர்விழி
ஆர்.கே.சதீஷ் குமார்
ப.செல்வகுமார்
அருண்
அன்பரசன்
மோகன்ஜி
சித்ரா
ஹேமா
ஸ்வேதா
ராமசாமி கண்ணன்
RVS
பாராட்டிய அனைவருக்கும் மிக்க நன்றி :)

Priya சொன்னது…

இரண்டு கவிதைகளுமே... superb!

Balaji saravana சொன்னது…

நன்றி ப்ரியா!

கருத்துரையிடுக