திங்கள், 20 செப்டம்பர், 2010

நட்பின் பகை!


நேற்றிரவு சண்டையிட்டுக் கொண்ட 
நண்பர்கள் அறையில் வேறெதுவும் 
உடைந்து  சிதறியிருக்கவில்லை,
சில கண்ணாடித் துண்டுகளும் 
நட்பின் நம்பிக்கைகளும் தவிர...

தெரு முழித்துக் கொண்டதையும்
பேசித் தீர்க்கவியலாப் பிரச்சனை 
இல்லையெனவும் விலக்கிய
நண்பன் விளக்கினான்..

காலி மதுபுட்டிகளும் 
கவிழ்ந்திருந்த கோப்பைகளும் 
மெலிதாய் சிரித்துக் கொண்டிருந்தன 
நடந்த சண்டைக்கு சாட்சியென...

கைகிழிந்த காயத்தின் வலியும்
புரிதல் செத்த நிமிடங்களும் 
மிஞ்சியிருக்கின்றன
பரஸ்பர மன்னிப்பின் 
வார்த்தைகளை எதிர்நோக்கி!...    


19 கருத்துகள்:

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

சில கண்ணாடித் துண்டுகளும்
நட்பின் நம்பிக்கைகளும் தவிர.//
அருமை..ரொம்ப நல்லாருக்குங்க...ஏதெனும் ஒரு படத்தையும் இணைத்து வெளியிடுவதால் கவிதையும் மெருகேறும்...ஹிட்ஸ் ம் கூடுதலாகும்

dheva சொன்னது…

சிக்ஸர்....!!!!!

நட்பை சொல்லும் உணர்வு பூர்வமான வரிகள் தம்பி... சிம்ளி சூப்பர்ப்!

Chitra சொன்னது…

கைகிழிந்த காயத்தின் வலியும்
புரிதல் செத்த நிமிடங்களும்
மிஞ்சியிருக்கின்றன
பரஸ்பர மன்னிப்பின்
வார்த்தைகளை எதிர்நோக்கி!...


...... இந்த வரிகளில் ஒளிந்து இருக்கும் உணர்வுகள்...... காட்சிகள்.... வலிகள்.......... அருமையாக எழுதி இருக்கீங்க.....

சிவராம்குமார் சொன்னது…

சூப்பர் பாலா! மதுவின் மயக்கத்தில் இது போல் நடக்கும் சண்டைகளும் காலையில் கேட்கப்படும் மன்னிப்புகளும் பல!

அருண் பிரசாத் சொன்னது…

என்ன சின்ன புள்ளதனமா சண்டைபோட்டுட்டு.... கைகுடுத்துக்கோங்க ரெண்டு பேரும்...

நல்ல நச் கவிதை பாலாஜி

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

தண்ணி போடுறப்ப நடக்கிற சண்டைகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடாது என்பது என் அனுபவம் ...

ஆனால் இந்தக் கவிதை ஒரு ரௌத்ர அனுபவம் ..

தியாவின் பேனா சொன்னது…

அருமை

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

தண்ணியில பண்ற கலாட்டா செம சுகமா இருக்கும் காலையில அவனவன் வேலையை பார்க்க போயிடுவாங்க..ராத்திரி உருகி உருகி நட்பின் இலக்கணம் பேசுவாங்க மப்புல

அஹமது இர்ஷாத் சொன்னது…

அருமையான கவிதை பாலாஜி..அசத்துங்க தொடர்ந்து..வாழ்த்துக்கள்

ப.செல்வக்குமார் சொன்னது…

ஆஹா , நட்பு உடைவதற்கான காரணத்தை சொல்லி ,
அப்புறம் மன்னிப்பை எதிர் நோக்கி இருக்கிறோம் அப்படிங்கிறதையும் சொல்லிட்டீங்க .. கலக்கல் ..!!

சௌந்தர் சொன்னது…

நீ நண்பேன்டா.........

சுந்தரா சொன்னது…

நட்பின் வலியை வார்த்தைகளில் அழகாச் சொல்லியிருக்கீங்க.

அருமை.

Balaji saravana சொன்னது…

@ஆர்.கே.சதீஷ்குமார்
அருமை..ரொம்ப நல்லாருக்குங்க...ஏதெனும் ஒரு படத்தையும் இணைத்து வெளியிடுவதால் கவிதையும் மெருகேறும்...ஹிட்ஸ் ம் கூடுதலாகும்//

யோசனைக்கு நன்றி நண்பா! படம் இணைக்க முயல்கிறேன். பட் படத்தால கவிதையும் மெருகேறும்னு சொல்றீங்களே அதெப்படி?! :)


@dheva
//சிக்ஸர்....!!!!!

நட்பை சொல்லும் உணர்வு பூர்வமான வரிகள் தம்பி... சிம்ளி சூப்பர்ப்!//

நன்றி அண்ணா!


@Chitra
கைகிழிந்த காயத்தின் வலியும்
புரிதல் செத்த நிமிடங்களும்
மிஞ்சியிருக்கின்றன
பரஸ்பர மன்னிப்பின்
வார்த்தைகளை எதிர்நோக்கி!...


//...... இந்த வரிகளில் ஒளிந்து இருக்கும் உணர்வுகள்...... காட்சிகள்.... வலிகள்.......... அருமையாக எழுதி இருக்கீங்க...//

நன்றி சித்ரா :)


@சிவராம்குமார்
//சூப்பர் பாலா! மதுவின் மயக்கத்தில் இது போல் நடக்கும் சண்டைகளும் காலையில் கேட்கப்படும் மன்னிப்புகளும் பல!//

நன்றி சிவா! இப்படி நம்ம எவ்வளவு மன்னிப்பு கேட்டிருப்போம்...:)


@அருண் பிரசாத்
//என்ன சின்ன புள்ளதனமா சண்டைபோட்டுட்டு.... கைகுடுத்துக்கோங்க ரெண்டு பேரும்...

நல்ல நச் கவிதை பாலாஜி//

நன்றி அருண்! அந்த சண்ட அப்பவே முடிஞ்சு போச்சு :)


@கே.ஆர்.பி.செந்தில்
//தண்ணி போடுறப்ப நடக்கிற சண்டைகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடாது என்பது என் அனுபவம் ...

ஆனால் இந்தக் கவிதை ஒரு ரௌத்ர அனுபவம் ..//

உண்மைதான் அண்ணா! இதுவும் ஒரு நிலைக்காகத்தான் :)

நன்றி

@தியாவின் பேனா
//அருமை//
வாங்க தியா! நன்றி

@ஆர்.கே.சதீஷ்குமார்
//தண்ணியில பண்ற கலாட்டா செம சுகமா இருக்கும் காலையில அவனவன் வேலையை பார்க்க போயிடுவாங்க..ராத்திரி உருகி உருகி நட்பின் இலக்கணம் பேசுவாங்க மப்புல//

நிறைய அனுபவமா பாஸ்? :)@அஹமது இர்ஷாத்
//அருமையான கவிதை பாலாஜி..அசத்துங்க தொடர்ந்து..வாழ்த்துக்கள்//

வாழ்த்துக்கு நன்றி நண்பா!


@ப.செல்வக்குமார்
//ஆஹா , நட்பு உடைவதற்கான காரணத்தை சொல்லி ,
அப்புறம் மன்னிப்பை எதிர் நோக்கி இருக்கிறோம் அப்படிங்கிறதையும் சொல்லிட்டீங்க .. கலக்கல் ..!!//

வாங்க செல்வா! நன்றி


@சௌந்தர்
//நீ நண்பேன்டா.........//

நான் எப்பவும் உன் நண்பேன்டா......... நன்றி சௌந்தர்!

@சுந்தரா
//நட்பின் வலியை வார்த்தைகளில் அழகாச் சொல்லியிருக்கீங்க.

அருமை.//

வாங்க சுந்தரா! பாராட்டுக்கு நன்றி!

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நட்பின் நம்பிக்கைகளும் தவிர//

அருமை அருமை பாலாஜி..

Priya சொன்னது…

அருமையான கவிதை!!!

ers சொன்னது…

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

ஹேமா சொன்னது…

நேரமின்மையால் இன்றுதான் பார்க்கிறேன் பாலா.

மயக்கத்தின் நடக்கும் சிறு தவறுகளை மன்னிக்கலாம்.பரவாயில்லை !

Balaji saravana சொன்னது…

@ தேனம்மை லக்ஷ்மணன்
நன்றி அக்கா!

@ப்ரியா
நன்றி ப்ரியா

@ers
தகவலுக்கு நன்றி!

@ ஹேமா..
சண்டையிட்டுக் கொள்வதும் மன்னிப்புகள் கேட்பதும் நட்புக்குள் சகஜம் தான். :)
நன்றி ஹேமா!

Raja சொன்னது…

அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பரே...

கருத்துரையிடுக