புதன், 15 செப்டம்பர், 2010

கொல்லும் சொல்!கொல்லும் சொல்!


ஒரு சொல்
போதுமானதாயிருக்கிறது
சில தருணங்களில்..
கண்ணீரைப் பீறிட வைக்க
தீராக்கோபம் கொளுத்த
ப்ரியத்தின் அணைப்பை சந்தேகிக்க
அவிழ்க்கமுடியா முடிச்சுகளிட
மனக்காயத்தில் விரல்சுண்டும்
வலியுயர்த்த..
நமக்கிடையேயான
தொடும் இடைவெளியை
பேரண்டத்தின் பெருவெளியாக்க...
சட்டென!


சட்டென நிகழ்ந்துவிடுகிறது சில..
ஓர் அலட்சியப் பார்வை
ஒரு புறக்கணிப்பின் தள்ளல்
ஒரு பிரிதலின் இடைவெளி...
பறந்துகொண்டிருக்கும்
உறவின் மெல்லிய நம்பிக்கை
நூல் அறுபட...

                                            

23 கருத்துகள்:

பாலா சொன்னது…

//நமக்கிடையேயான
தொடும் இடைவெளியை
பேரண்டத்தின் பெருவெளியாக்க...

அருமையான வரிகள்...
வாழ்த்துக்கள்

Chitra சொன்னது…

கண்ணீரைப் பீறிட வைக்க
தீராக்கோபம் கொளுத்த
ப்ரியத்தின் அணைப்பை சந்தேகிக்க
அவிழ்க்கமுடியா முடிச்சுகளிட
மனக்காயத்தில் விரல்சுண்டும்
வலியுயர்த்த..
நமக்கிடையேயான
தொடும் இடைவெளியை
பேரண்டத்தின் பெருவெளியாக்க...


..... Great!!!

வெறும்பய சொன்னது…

அருமையா இருக்கு நண்பா ...

சௌந்தர் சொன்னது…

சட்டென நிகழ்ந்துவிடுகிறது சில..
ஓர் அலட்சியப் பார்வை////

உண்மை

அருண் பிரசாத் சொன்னது…

சட்டென நிகழ்ந்துவிடுகிறது ...

நல்லா இருக்கு

siva சொன்னது…

ஒரு பிரிதலின் இடைவெளி...
பறந்துகொண்டிருக்கும்
உறவின் மெல்லிய நம்பிக்கை
நூல் அறுபட...

hm great...

சுசி சொன்னது…

"கொல்லும் சொல்" கொன்னு போடுதுங்க பாலாஜி..

Priya சொன்னது…

முதல் ஒண்ணு (கொல்லும் சொல்)மிக பிரமாதமா இருக்கு.. தலைப்பும் நல்லா இருக்கு!

இராமசாமி கண்ணண் சொன்னது…

அருமைங்க பாலாஜி.

சிவராம்குமார் சொன்னது…

நல்லா இருக்கு... சில சமயம் நாம கோவத்திலே சொல்ற சொல் நம்மளை ரொம்ப காலத்துக்கு வருத்த பட வைக்கும்

அன்பரசன் சொன்னது…

வாவ் நைஸ் பாலாஜி

மதுரை சரவணன் சொன்னது…

//மனக்காயத்தில் விரல்சுண்டும்
வலியுயர்த்த..
நமக்கிடையேயான
தொடும் இடைவெளியை
பேரண்டத்தின் பெருவெளியாக்க...//


இரண்டும் அருமை. வாழ்த்துக்கள்

யாதவன் சொன்னது…

கூறிய விதம் அருமை நண்பரே...

ஹேமா சொன்னது…

பாலா...அனுபவித்து எழுதிய வரிகள்.நானும்கூட !

Ananthi சொன்னது…

///மனக்காயத்தில் விரல்சுண்டும்
வலியுயர்த்த..///

அருமையா எழுதுறீங்க.. வாழ்த்துக்கள்.. :-))

Balaji saravana சொன்னது…

@பாலா
நன்றி நண்பரே!

@ சித்ரா
வாங்க சித்ரா.. நன்றி

@வெறும்பய
நன்றி நண்பா

@சௌந்தர்
நன்றி நண்பா

@அருண்
நன்றி அருண்

@சிவா
நன்றி நண்பா

@சுசி
நன்றி சுசி

@பிரியா
நன்றி பிரியா

@ராமசாமி கண்ணன்
நன்றி அண்ணா

@சிவராம்குமார்
நன்றி நண்பா

@அன்பரசன்
நன்றி அன்பு

@மதுரை சரவணன்
நன்றி சரவணன்

@யாதவன்
வாங்க யாதவன்.. நன்றி நண்பரே

@ஹேமா
நன்றி தோழி

@ஆனந்தி
வாங்க ஆனந்தி.. நன்றி

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

சட்டென!


சட்டென நிகழ்ந்துவிடுகிறது சில..

ஓர் அலட்சியப் பார்வை
ஒரு புறக்கணிப்பின் தள்ளல்
ஒரு பிரிதலின் இடைவெளி...
பறந்துகொண்டிருக்கும்
உறவின் மெல்லிய நம்பிக்கை
நூல் அறுபட...//

எக்ஸலண்ட் பாலா..

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

வணக்கம் தம்பி,
தொடரும் வேலைப்பளுவால் உங்கள் பதிவுகளை படிக்க முடியவில்லை.. இப்போதுதான் மொத்தமாக படிக்கிறேன்... மேலும் நான் பதிவேற்றுவதும் மீள் பதிவுகள்தான்..

கூடிய விரைவில் பணிச்சுமை குறைந்து மீண்டும் வருவேன்.. உங்கள் அன்புக்கு என் நன்றிகள் ....

Balaji saravana சொன்னது…

@ தேனம்மை லெக்ஷ்மணன்
நன்றி அக்கா!

@ கே.ஆர்.பி.செந்தில்
உங்கள் அன்பிற்கு நன்றி அண்ணா!
பணிச்சுமை குறைந்து விரைவில் வாருங்கள்!

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அருமையான சொல்லாடல்கள்..பட்டைய கிளப்புறீங்க்...அடிக்கடி எழுதுங்க..

சந்திரிகை சொன்னது…

கண்ணீரைப் பீறிட வைக்க
தீராக்கோபம் கொளுத்த
ப்ரியத்தின் அணைப்பை சந்தேகிக்க

சொல் கொல்லும் பாலாஜி.அருமை

Balaji saravana சொன்னது…

நன்றி சதீஷ்

நன்றி ஜீவாம்மா!

பயணமும் எண்ணங்களும் சொன்னது…

ஒரு சொல்
போதுமானதாயிருக்கிறது
சில தருணங்களில்..
கண்ணீரைப் பீறிட வைக்க
தீராக்கோபம் கொளுத்த

=---------------


மிக அருமை...


கொல்லும் சொற்கள்..

புரளிகள்... காயப்பட்டேன்..சமீபத்தில்

http://punnagaithesam.blogspot.com/2010/09/blog-post_28.html

கருத்துரையிடுக