திங்கள், 13 செப்டம்பர், 2010

என்னைக் கொஞ்சம் விடுவி!

ஒட்டிவைத்திருக்கும்
உன் இதழ்கள் பிரி
மொழிகளோடு சில
முத்தங்கள் சிந்தட்டும்..

மூடியிருக்கும் இமைகள் திற
உன் நினைப்பில் எரியும்
என்னுருவம் தெரியட்டும்..

உன் இடுப்பேற தவித்து
நிற்கும் என் ஏக்கக் குழந்தையை
மறுக்காமல் கொஞ்சம்
தூக்கிக்கொள்
உயிரையெடுக்கும் அதன்
அழுகை அடங்கட்டும்...

மூடிவைத்திருக்கும்
விரல்கள்பிரி சிறைபட்டிருக்கும்
என்னுலகம் நழுவி
கீழே விழட்டும்...

                          

17 கருத்துகள்:

Chitra சொன்னது…

மூடியிருக்கும் இமைகள் திற
உன் நினைப்பில் எரியும்
என்னுருவம் தெரியட்டும்..


..... அப்படியே காதலில் மூழ்கி, கவிதை முத்து எடுத்து இருக்கீங்க. அருமை.

வெறும்பய சொன்னது…

பேஸ் பேஸ் ரொம்ப நன்னாயிருக்கு...

சிவராம்குமார் சொன்னது…

"உன் இடுப்பேற தவித்து
நிற்கும் என் ஏக்கக் குழந்தையை
மறுக்காமல் கொஞ்சம்
தூக்கிக்கொள்"

சூப்பர் பாலா!

அருண் பிரசாத் சொன்னது…

:) சூப்பரு.... அதுவும் 3வது பாரா அருமை

சுசி சொன்னது…

வாவ்.. அசத்திட்டிங்க..

ஹேமா சொன்னது…

காதல் மயக்கமிருந்தாலும் நிதானமும் இருக்கட்டும் பாலா....கவனம் !

அன்புடன் மலிக்கா சொன்னது…

சூப்பர் கவிதை காதல் தக தகன்னு எரியுது..

சுடர்விழி சொன்னது…

அருமையான கவிதை

“உன் இடுப்பேற தவித்து
நிற்கும் என் ஏக்கக் குழந்தையை
மறுக்காமல் கொஞ்சம்
தூக்கிக்கொள்
உயிரையெடுக்கும் அதன்
அழுகை அடங்கட்டும்...”---என்ன வரிகள் !!!!காதலின் ஏக்கத்தை சுமந்து வந்த கவிதை..வாழ்த்துக்கள் !!

வெறும்பய சொன்னது…

தங்களை தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன்...

http://verumpaye.blogspot.com/2010/09/blog-post.html

சௌந்தர் சொன்னது…

ஒட்டிவைத்திருக்கும்
உன் இதழ்கள் பிரி
மொழிகளோடு சில
முத்தங்கள் சிந்தட்டும்./////

எங்க இருந்து தான் இந்த வார்த்தைகளை வருதோ

Balaji saravana சொன்னது…

சித்ரா
வெறும்பய
சிவராம்குமார்
அருண்
சுசி
ஹேமா
மலிக்கா
சுடர்விழி
சௌந்தர்

அனைவருக்கும் மிக்க நன்றி!

அமைதிச்சாரல் சொன்னது…

ஒவ்வொரு வரியும் காதலின் வலியைச்சொல்கிறது.. அருமை :-)

Balaji saravana சொன்னது…

நன்றி அமைதிச்சாரல்

Vijiskitchen சொன்னது…

நல்ல காதல் கவிதை.

Ananthi சொன்னது…

///மூடியிருக்கும் இமைகள் திற
உன் நினைப்பில் எரியும்
என்னுருவம் தெரியட்டும்..///

உண்மையில் அருமையான வரிகள்...
ஆழ்ந்த உணர்ச்சியின் வெளிப்பாடு..
ரொம்ப நல்ல இருக்குங்க.... :-))

Balaji saravana சொன்னது…

@விஜி
வாங்க விஜி..
நன்றி..

@ஆனந்தி
பாராட்டுக்கு மிக்க நன்றி ஆனந்தி..

Raja சொன்னது…

எனக்கு ரொம்பப் பிடித்தது இது...

கருத்துரையிடுக