புதன், 8 செப்டம்பர், 2010

திசைமாறிய கனவுகள்!

கலைந்து கிடக்கும் கனவிலெல்லாம்
ஒளிந்து கிடக்கிறது ஏதோவொன்று
நிகழாக் கணத்தின் ஏக்கப் பிம்பமென
மாற்றிக்காட்டும் கடந்த நிகழ்வென...


நனவின் இடைவெளித் தருணம் 
முயன்று தோற்கிறது இணைக்க
முன்கனவின் நிலையில்லா நிலையையும்
பின்கனவின் தொடர்பில்லா தொடர்பையும்...


கனவின் மீதேறிப் பயணித்த புரவியொன்று
திக்குத் தெரியாமல் தவித்தலைகிறது
பெருங்கூட்டின் வெளித்திடலில்
திசைமாறிப் போன கனவுகள் காணாமல்...


விழிக்கும் நிலைவரை தொடர்ந்திருந்தும் 
தொங்கி நிற்கிறது துறட்டிகளில்
தோலுரித்த முண்டங்களென
நேற்றைய கனவுகள்...


                                                                             

15 கருத்துகள்:

Chitra சொன்னது…

கனவின் மீதேறிப் பயணித்த புரவியொன்று
திக்குத் தெரியாமல் தவித்தலைகிறது
பெருங்கூட்டின் வெளித்திடலில்
திசைமாறிப் போன கனவுகள் காணாமல்...

...... simply superb! அசத்திட்டீங்க!

அருண் பிரசாத் சொன்னது…

நல்லா இருக்குங்க...

பதிவுலகில் பாபு சொன்னது…

Nice..

சிவராம்குமார் சொன்னது…

//விழிக்கும் நிலைவரை தொடர்ந்திருந்தும்
தொங்கி நிற்கிறது துறட்டிகளில்
தோலுரித்த முண்டங்களென
நேற்றைய கனவுகள்...//

என்னத்தை சொல்ல! எப்படி சொல்ல!! சூப்பர்!!!

ஹேமா சொன்னது…

கனவின் தேடல் ஒவ்வொரு வரிகளிலுமே அசத்தலாய் வந்திருக்கிறது பாலா.

pinkyrose சொன்னது…

கவிதைகள் ஆழ ஆழ அழகுதான்

Balaji saravana சொன்னது…

@ சித்ரா
//..... simply superb! அசத்திட்டீங்க! //

நன்றி சித்ரா!

@ அருண்

//நல்லா இருக்குங்க..//

நன்றி நண்பா!

@ பாபு

//Nice..//

நன்றி நண்பா!

@ சிவராம்குமார்

//என்னத்தை சொல்ல! எப்படி சொல்ல!! சூப்பர்!!!//

மிக்க நன்றி சிவா!


@ஹேமா


//கனவின் தேடல் ஒவ்வொரு வரிகளிலுமே அசத்தலாய் வந்திருக்கிறது பாலா//

நன்றி தோழி!

Balaji saravana சொன்னது…

@ Pinkyrose
//கவிதைகள் ஆழ ஆழ அழகுதான்//

நன்றி Pinky

வெறும்பய சொன்னது…

நல்லா இருக்குங்க...

சுசி சொன்னது…

அசத்திட்டிங்க..

Rajkumar சொன்னது…

உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் தமிழில் பின்னூட்டமிடும் வசதியை ஏற்படுத்தித் தரும் கமெண்ட் பகுதியில் தமிழ் தட்டச்சுப் பலகை அமைக்கும் முறை இப்போது வந்து விட்டது, உங்கள் வலைமலரில் இந்த தொழில் நுட்பத்தை அமைத்து அதிக பின்னூட்டங்களைப் பெறுங்கள் மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் 

சௌந்தர் சொன்னது…

நல்ல வரிகள்

Balaji saravana சொன்னது…

@வெறும்பய
நன்றி நண்பா!

@சுசி
நன்றி சுசி..

@ராஜ்குமார்
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி ராஜ்..

@சௌந்தர்
நன்றி நண்பா..

சுடர்விழி சொன்னது…

கனவுகளின் தேடலை அருமையாக வெளிப்படுத்தி இருக்கீங்க...

Balaji saravana சொன்னது…

@ சுடர் விழி,
நன்றி தோழி!

கருத்துரையிடுக