ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

உன் அன்பு!

இதமென்னும் பூங்குழலில்
இசைத்திடும் இனியகீதம்
நீ சொல்லும் மொழிகள்...

வழியெங்கும் வசந்தத்தின்
வடிவங்கள் வடிக்கிறாய்
வார்த்தைகளின் வழி..

எழில்மிகு வனப்புகளின்
ஏற்ற இறக்கங்கள்
கொளுத்தும் மோகத்திரி...

குளிர்ந்து பொழிந்து
சிலிர்ப்பின் வேர்கள் நனைக்கும்
உன் பார்வைத்துளிகள்..

தனிமை இருள்வெளியில்
வண்ணம் வரையும் உன்
அணைத்தவிரல் தூரிகை...

திக்கற்ற காட்டின் வழிப்பாதையென
வாழ்வில்  எப்போதும்
துணைவரும் உன் அன்பு..!


                                                 

11 கருத்துகள்:

இராமசாமி கண்ணண் சொன்னது…

படிக்க படிக்க சொக்க வைக்குது உங்களின் மொழி .. அருமை.. அற்புதம்.. அபாரம்..

வாழ்த்துகள் :)

சிவராம்குமார் சொன்னது…

அருமையான வார்த்தை பிரயோகம்... நன்று!

சுசி சொன்னது…

அழகா இருக்குங்க.

Balaji saravana சொன்னது…

@ இராமசாமி கண்ணன்
வருகைக்கும் முதல் பாராட்டுக்கும் நன்றி!

@ சிவராம்குமார்
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

@சுசி
நன்றி சுசி!

Riyas சொன்னது…

//குளிர்ந்து பொழிந்து
சிலிர்ப்பின் வேர்கள் நனைக்கும்
உன் பார்வைத்துளிகள்..//

கவிதை எல்லா வரிகளும் அருமை..

Chitra சொன்னது…

குளிர்ந்து பொழிந்து
சிலிர்ப்பின் வேர்கள் நனைக்கும்
உன் பார்வைத்துளிகள்..


...beautiful!

pinkyrose சொன்னது…

திக்கற்ற காட்டின் வழிப்பாதையென
வாழ்வில் எப்போதும்
துணைவரும் உன் அன்பு..!

எனக்கு மிகவும் பிடித்த வரிகள் சரவனண்

எம் அப்துல் காதர் சொன்னது…

கவிதை மிக அருமையாய் இழைத்து செதுக்கப் பட்டிருக்கு பாஸ்!! ம்ம்ம் அசத்துங்க இன்னும்...

Balaji saravana சொன்னது…

@ ரியாஸ்
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பா

@ சித்ரா
நன்றி சித்ரா

@ Pinky rose
நன்றி தோழி

@ எம்.அப்துல் காதர்
நன்றி நண்பா!

சுடர்விழி சொன்னது…

ஒவ்வொரு வார்த்தையும் அழகு...பாராட்டுக்கள் !

Balaji saravana சொன்னது…

@ சுடர்விழி
நன்றி தோழி!

கருத்துரையிடுக