வெள்ளி, 3 செப்டம்பர், 2010

முதலிரவன்று!

பாதித்தூக்கத்தில் முழித்துக்கொண்ட
பின்னிரவில் படுக்கையில் புரளும்
பல நினைவுகள்..

கலைந்த போர்வைக்குள்ளே
கலையாத முகம் நீட்டி
பற்கள் காட்டும் சில நினைவுருவங்கள்..

கண்மூடி யோசனை மூடாது
நினைவின் சிறகுகள் அமரும்
நிகழ்வின் பல கிளைகள்...

தொடுக்கும் பூமாலையின்
வரிசையென ஒன்றைத்
தொடரும் மற்றொன்றின் நினைவு...

பயத்தைத் துணைக்கழைத்து
காதல் கைப்பிடித்து
வெறுப்பில் குளித்து
இயலாமையில் நெளிந்து
நிர்பந்தத்தில் மூழ்கும்
சில நினைவுகள்..

தெரியவேயில்லை எந்தவொரு
நினைவின் மீதியின் மிச்சதிலும் கூட..
களைத்துறங்கும் மனைவியின் முகம்!

 

                                                                         

14 கருத்துகள்:

வெறும்பய சொன்னது…

Nice

அருண் பிரசாத் சொன்னது…

ஓகே! ஓகே

Chitra சொன்னது…

நடத்துங்க.... நடத்துங்க.....

பதிவுலகில் பாபு சொன்னது…

நல்லாயிருக்கு..

dheva சொன்னது…

தம்பி.... உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கும் விதம் அருமை....! நிறைய எழுதுப்பா...wonderful flow....!

ஹேமா சொன்னது…

தூக்கத்தில வந்து போறதெல்லம் சாத்தான்களாம்.
அமைதியா இருங்க பாலா.

சுருதிபேதம்..... சொன்னது…

கடைசி வரி முகத்தில் அறைந்தாற்போல் உள்ளது.நன்றாக உள்ளது.

சுசி சொன்னது…

நல்லாருக்கு.

வழிப்போக்கன் - யோகேஷ் சொன்னது…

நல்லா இருக்கு பாலா...

Balaji saravana சொன்னது…

@வெறும்பய

நன்றி நண்பா!


@அருண் பிரசாத்

நன்றி நண்பா!


@Chitra
நடத்திடுவோம் சித்ரா
நன்றி!

@பதிவுலகில் பாபு
நன்றி நண்பா


@dheva
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அண்ணா!
@ஹேமா
நன்றி தோழி!

@சுருதிபேதம்.....
நன்றி நண்பா!


@சுசி
நன்றி சுசி!


@வழிப்போக்கன் - யோகேஷ்
நன்றி யோகேஷ்!

சுடர்விழி சொன்னது…

நல்லா இருக்கு....

Balaji saravana சொன்னது…

@ சுடர்விழி
நன்றி தோழி!

பெயரில்லா சொன்னது…

ÑÐÐÛÐÐ áÞÜÑÐ ÝÐÛÛÐ ØáäÚÚä
ØÝÝäÜ Ôã×Øá ßÐáÚÚØÁ´Ý
ÜØÖÐåäÜ ÐÐåÐÛÐÐè

பெயரில்லா சொன்னது…

baalaa romba nalla irukku
innum ethir parkkiREn
migavum aavalaay

கருத்துரையிடுக