புதன், 1 செப்டம்பர், 2010

அந்நாளின் மழை!

தனிவழி போன பாதையில் 
துணையென வந்து
வீடு சேர்த்தது அந்நாளின் மழை..

உன்வரவால் வசந்தங்கள் பூத்த 
நாளின் மலர்ப்பனியாகிப் போனதது..

மண்வாசமும், ஒருகுடையில் நடக்கும்போது
உன்வாசமும் தந்ததது...

அலையடிக்கும் கரையில் ஆடிக்களைத்தபோது 
குதூகலத்தின் குரலென கொட்டித்தீர்த்ததது..

மார்கழிப் பின்னிரவில் மையல் நீளும் 
பொழுதில் மோகத்தின் சாரலென ஆனதும்..  

இதழ்வருடி மேனியூர்ந்து தடம் பதித்த நாளின்
உயிர்த் துளியாகிப் போனதுமது..

ஓரிரவில் உனைத்தூக்கிப் போனபின்
இழப்பின் கண்ணீராய்ச்  சிந்தியதும்  இம்மழை தான்!

                                                                                                     

13 கருத்துகள்:

Ananthi சொன்னது…

//ஓரிரவில் உனைத்தூக்கிப் போனபின்
இழப்பின் கண்ணீராய்ச் சிந்தியதும் இம்மழை தான்!////

:((((

வெறும்பய சொன்னது…

:((((

சுடர்விழி சொன்னது…

கவிதை அருமை...மழையும் காதலும் மனதை நனைத்தது..

மதுரை சரவணன் சொன்னது…

//ஓரிரவில் உனைத்தூக்கிப் போனபின்
இழப்பின் கண்ணீராய்ச் சிந்தியதும் இம்மழை தான்!//

கவிதை அருமை. வாழ்த்துக்கள்

Chitra சொன்னது…

ஓரிரவில் உனைத்தூக்கிப் போனபின்
இழப்பின் கண்ணீராய்ச் சிந்தியதும் இம்மழை தான்!......அழகிய வரிகளில், ஒரு மெல்லிய சோகம்!

சௌந்தர் சொன்னது…

ஓரிரவில் உனைத்தூக்கிப் போனபின்
இழப்பின் கண்ணீராய்ச் சிந்தியதும் இம்மழை தான்!///

இந்த வரிகளின் சோகம் தெரிகிறது

VELU.G சொன்னது…

ரொம்ப நல்லாயிருக்குங்க வரிகள்

சே.குமார் சொன்னது…

கவிதை அருமை...மழையும் காதலும் மனதை நனைத்தது..

அஹமது இர்ஷாத் சொன்னது…

கவிதை வரிகள் நல்லாயிருக்கு..

இராமசாமி கண்ணண் சொன்னது…

அருமையா எழுதிருகீங்க பாலாஜி.. வாழ்த்துகள் :)

Balaji saravana சொன்னது…

நன்றி ஆனந்தி.

நன்றி வெறும்பய.

நன்றி சுடர்விழி

நன்றி மதுரை சரவணன்

நன்றி சித்ரா

நன்றி சௌந்தர்

நன்றி வேலு.G

நன்றி சே.குமார்

நன்றி அஹமது இர்ஷாத்

நன்றி ராமசாமி கண்ணன்

Priya சொன்னது…

சோகமானதாக தெரிந்தாலும் அழகாக இருக்கிறது உங்களின் இந்த கவிதை!

Balaji saravana சொன்னது…

நன்றி ப்ரியா

கருத்துரையிடுக