வியாழன், 26 ஆகஸ்ட், 2010

நிழல்களின் நடனம்

ஒவ்வொரு இரவிலும் கதைகேளாமல்

தூங்கியதில்லை என் ப்ரிய மகள்..

கதையாரம்பித்த கணத்தில்

எனை நிறுத்தித் தொடரும் பலசமயம்

வெள்ளையானையும் கொம்பு முளைத்த சிங்கமும்

உலவும் அவள் காடுகளில்..

மீன்கள் பறக்கும் மான்கள் நீந்தும்

புலிகள் சிரிக்கும் சில நேரங்களில்..

அவள் 'மம்மு'வில் பங்குண்டு

எல்லா மிருகங்களுக்கும்..

கரடியும் முயலும் அவளுடன்

போகும் வகுப்புகளுக்கு வாகனமேறி..

பாதிக் கதையில் மெல்ல முனகி

தூங்கியபின் இதமாய் பதித்து வெளியேறுகையில்

கட்டிலைச் சுற்றியலையும் காற்றில் தொடங்கும்

அவளுருவாக்கிய மிருகங்களின் நடனம்..


 

9 கருத்துகள்:

சுடர்விழி சொன்னது…

அருமையான கவிதை...


”கட்டிலைச் சுற்றியலையும் காற்றில் தொடங்கும்
அவளுருவாக்கிய மிருகங்களின் நடனம்..”

--நான் ரசித்த வரிகள்...நல்ல கற்பனை.பாராட்டுக்கள்!!

வெறும்பய சொன்னது…

”கட்டிலைச் சுற்றியலையும் காற்றில் தொடங்கும்
அவளுருவாக்கிய மிருகங்களின் நடனம்..”

///

யதார்த்தமாய் சொல்ல முயன்ற கற்பனை வரிகள்...

ரசித்தேன்..

இராமசாமி கண்ணண் சொன்னது…

மிக அருமை...

சௌந்தர் சொன்னது…

நல்ல வரிகள்

எஸ்.கே சொன்னது…

நிழல் விளையாட்டையும் குழந்தை மனதையும் அருமையாக சொல்லியுள்ளீர்கள், வாழ்த்துக்கள்!

Chitra சொன்னது…

அருமை.

Sriakila சொன்னது…

nice feelings & nice words. superb!!

சுசி சொன்னது…

அழகான விளையாட்டு.. அனுபவியுங்கள்.

Balaji saravana சொன்னது…

நன்றி நண்பர்களே!

கருத்துரையிடுக