புதன், 25 ஆகஸ்ட், 2010

பிரிவிற்குப் பின் (அ) கையாலாகாதவன்

நடந்த அவலங்கள் கடந்திட
விழையும் அர்த்தமற்ற
விவரிப்புகளின் வழி..

உறவுச் சிக்கலின் முடிச்சுகளில்
இறுகி ஊசலாடும்  
நம்மாசை உணர்வுகள்..

வாழுமாசை வற்றினும்
வெற்றுயிர் சுமக்கும்
ஈர நிர்பந்தங்கள்..

தடமளித்த கண்ணீரும்
கனவின் பிம்பமும்
மீதமுனக்கு..

சோகம்நீளும் சொற்களும்
தீரா நினைவும்
துணையெனக்கு..

முடிவிலா இரவைத்துணைக்கழைத்து
ஊளையிடும் என் ஊமைக்காதல்.

                                                                 


                                                          

12 கருத்துகள்:

வெறும்பய சொன்னது…

வரிகளில் வலி தெரிகிறது..

நல்லாயிருக்கு...

பரிசல்காரன் சொன்னது…

//வாழுமாசை வற்றினும்
வெற்றுயிர் சுமக்கும்
ஈர நிர்பந்தங்கள்//

இந்த வரிகள் கவர்ந்தன பாலாஜி. மனதின் அழுத்தத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள்!

ஜெரி ஈசானந்தன். சொன்னது…

Awesome.....

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

கையாலாகாமல் போனபின் நீளும் இரவுகளில் இன்னும் இன்னும் கூடிக் கொண்டே இருக்கும் துயரம் ...

சௌந்தர் சொன்னது…

முடிவிலா இரவைத்துணைக்கழைத்து
ஊளையிடும் என் ஊமைக்காதல்.

நல்ல வரிகள்

Chitra சொன்னது…

வாழுமாசை வற்றினும்
வெற்றுயிர் சுமக்கும்
ஈர நிர்பந்தங்கள்..

...... சோகத்தின் வலியை அருமையாக வெளிப்படுத்தும் வரிகள்.

அருண் பிரசாத் சொன்னது…

நல்ல வரிகள்.

எஸ்.கே சொன்னது…

கவிதை நன்று!

Balaji saravana சொன்னது…

@வெறும்பய

//வரிகளில் வலி தெரிகிறது..
நல்லாயிருக்கு... //நன்றி நண்பா!


@பரிசல்காரன்

//வாழுமாசை வற்றினும்
வெற்றுயிர் சுமக்கும்
ஈர நிர்பந்தங்கள்//

இந்த வரிகள் கவர்ந்தன பாலாஜி. மனதின் அழுத்தத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள்!உங்கள் வாழ்த்துக்குமிக்க நன்றி கிருஷ்ணா!


@ஜெரி ஈசானந்தன்.

//Awesome..... //

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே!


@கே.ஆர்.பி.செந்தில்

//கையாலாகாமல் போனபின் நீளும் இரவுகளில் இன்னும் இன்னும் கூடிக் கொண்டே இருக்கும் துயரம் ... //நன்றி அண்ணா!


@சௌந்தர்

//முடிவிலா இரவைத்துணைக்கழைத்து
ஊளையிடும் என் ஊமைக்காதல்.
நல்ல வரிகள் //நன்றி நண்பா!

@Chitra

//வாழுமாசை வற்றினும்
வெற்றுயிர் சுமக்கும்
ஈர நிர்பந்தங்கள்..

...... சோகத்தின் வலியை அருமையாக வெளிப்படுத்தும் வரிகள். //நன்றி சித்ரா!

@அருண் பிரசாத்

//நல்ல வரிகள். //


நன்றி நண்பா!

@எஸ்.கே

//கவிதை நன்று! //


நன்றி எஸ்.கே!

Tamilulagam சொன்னது…

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

மகேஷ் : ரசிகன் சொன்னது…

Nice thala.

வரிகள் ரொம்ப ரிச்’சா இருக்கு.

Balaji saravana சொன்னது…

@ மகேஷ்
நன்றி நண்பா!

கருத்துரையிடுக