திங்கள், 23 ஆகஸ்ட், 2010

அம்மா!

தேவைக்களவாய் வேலைக்குச்
சரியாய் சமைக்கவே
மாட்டாள் அம்மா..

என் நட்பின் வருகை
நா தித்திப்பில்லாமல்
திரும்புவதேயில்லை..

எதிர்வீட்டு காயத்திரிக்கும்
பக்கத்துவீட்டு ஜோதிக்கும்
அவள்தான் ஊட்டவேண்டும்
மதியங்களில்..

முன் காக்கைக்கும்
பின் நாய்க்கும் வைக்கத்
தவறுவதேயில்லை ஒருநாளும்..

எந்தப் பிச்சைக்காரனும்
வெறுந்தட்டுடன் வீடு
கடப்பதேயில்லை அவள்முன்னால்..

முன்னறிவிப்பின்றி பின்னிரவில்
வீடுசேரும் நாளிலும்
தீர்ந்து போவதேயில்லை
பானைச் சோறும்
அம்மாவின் அன்பும்..

                                  

17 கருத்துகள்:

வல்லிசிம்ஹன் சொன்னது…

அன்பே அம்மா. அவர்களுக்கு வணக்கம்.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

அம்மான்னா ...அம்மாதான்..

அருண் பிரசாத் சொன்னது…

அம்மாவுக்கு இணையாரும் இல்லை...

சௌந்தர் சொன்னது…

பின்னிரவில்
வீடுசேரும் நாளிலும்
தீர்ந்து போவதேயில்லை
பானைச் சோறும்
அம்மாவின் அன்பும்.///

அம்மாவின் அன்பு.....இந்த வரிகள் மிகவும் அருமை

Chitra சொன்னது…

முன்னறிவிப்பின்றி பின்னிரவில்
வீடுசேரும் நாளிலும்
தீர்ந்து போவதேயில்லை
பானைச் சோறும்
அம்மாவின் அன்பும்..


...... so sweet! தாயன்புக்கு ஈடில்லை.
நல்ல கவிதைங்க... பாராட்டுக்கள்!

பெயரில்லா சொன்னது…

என் இனிய நண்பர் பாலாஜிக்கு என் வாழ்த்துக்கள்.

என்னை கவர்தவை
" எந்தப் பிச்சைக்காரனும்
வெறுந்தட்டுடன் வீடு கடப்பதேயில்லை
அவள்முன்னால்.."

உங்கள் பயணம் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பா.சுகந்தராஜ்

ரமேஷ் சொன்னது…

சூப்பர் அதுவும் இறுதி நாலு வரிகள் மிகவும் அருமை...வாழ்த்துக்கள் நண்பரே...

கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…

என்ன ஒரு ஒற்றுமை நண்பா.. நானும் இன்னைக்கு அம்மா பத்திதானே எழுதி இருந்தேன்..

//தீர்ந்து போவதேயில்லை
பானைச் சோறும்
அம்மாவின் அன்பும்..//

அம்சம்..:-)))

jothi சொன்னது…

no compromise moms love

Deepa சொன்னது…

Very nice!

அண்ணாமலை..!! சொன்னது…

அருமையான கவிதைங்க நண்பரே!
அம்மாவைப் பற்றி!

பெயரில்லா சொன்னது…

மிக நல்ல கவிதை பாலாஜி.

வேறிடத்திலிருந்து பின்னூட்டுவதால் இந்த ஆப்ஷனில் வந்திருக்கிறேன்..

-பரிசல்காரன்

Balaji saravana சொன்னது…

வருகை தந்து பாராட்டிய அணைத்து நல்லுள்ள நண்பர்களுக்கும் என் நன்றிகள் பல!

சந்திரிகை சொன்னது…

ஈன்ற பொழுதில் பெரிதுவந்தேன் மகனே

Balaji saravana சொன்னது…

நன்றி ஜீவாம்மா!
உங்களின் ஆசி!

ஹரிஸ் சொன்னது…

என் அம்மாவை நினைவுட்டியது...நன்றி..

Balaji saravana சொன்னது…

@ஹரிஷ்
நன்றி

கருத்துரையிடுக