வியாழன், 19 ஆகஸ்ட், 2010

அவசரம்

ஒழுங்கின்மையின்  பெருக்கல் குறியென
வழிமறிக்கும் வாகனங்கள்
ஒவ்வொரு சாலை விளக்கிலும்..
கேளாமல் செய்தவுதவி
பெற்றுத் தந்ததேயில்லை
சிறு புன்னகையை..
தோன்றுமிடத்திலெல்லாம்
வரிசையுடைக்கும் சிலபேர்..
அவதியின் காலடியில் நசுங்கும்
நம் நன்றி சொல்லும் நிமிடங்கள்...
கால் மிதித்தலில் கவனமாய் திரும்பிக்கொள்ளும்
காணா முகமும் மன்னிப்பின் வார்த்தைகளும்..
முந்திச் செல்லும் முயற்சியில் எப்போதும்
முன்னிருப்பவர் மேல்  முட்டி நிற்கின்றன
நம் அவசர அலட்சியங்கள்..

                                                    

11 கருத்துகள்:

க.பாலாசி சொன்னது…

அது சரிதான்... இந்த அவரசரத்ததான் எங்கயும் போட்டு மிதிக்கமுடியல...

அருண் பிரசாத் சொன்னது…

சென்னைல இப்படிதான் வாழ பழகிக்கனும் பாஸ்

வெறும்பய சொன்னது…

இயற்கை இல்லாமல் எல்லாமே செயற்க்கையாகிப் போன இந்த உலகத்தில் அனைத்தும் அவசரத்தின் அலட்சியங்களே...

சௌந்தர் சொன்னது…

அவசரம் கவிதை நல்லயிருக்கு பஸில் போய் பாருங்கள் எத்தனை கால் மீதி தான் கிடைக்கும் அதற்க்கு பரிசு சாரி என்ற வார்த்தை

Balaji saravana சொன்னது…

@க.பாலாசி
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி என் பெயரோனே!

@அருண் பிரசாத்
சென்னை மட்டுமல்ல நண்பா தமிழகத்தின் பல இடங்களிலும் தான்!

@வெறும்பய
உண்மை நண்பா!

@சௌந்தர்
சில நேரம் அந்த சாரி கூட சொல்லாமல் முகம் திருப்பிக்கொள்வோர் சிலர்.
நன்றி நண்பா!

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

முந்திச் செல்லும் முயற்சியில் எப்போதும்
முன்னிருப்பவர் மேல் முட்டி நிற்கின்றன
நம் அவசர அலட்சியங்கள்..//

உண்மைதான் பாலாசி..சரியா சொல்லி இருக்கீங்க

ஹேமா சொன்னது…

பாலா....அவசரம் எப்போதுமே அவசரமாய்த்தான் !

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

ஆமாமாம்...

எம் அப்துல் காதர் சொன்னது…

அருமையான கவிதை!! நிஜத்தை சொன்னது!!

Balaji saravana சொன்னது…

நன்றி தேனம்மை லெக்ஷ்மணன்!

நன்றி ஹேமா!

நன்றி கே.ஆர்.பி.செந்தில் அண்ணா!

நன்றி எம் அப்துல் காதர்!

விமலாதித மாமல்லன் சொன்னது…

http://madrasdada.blogspot.com/ விருப்பமும் நேரமும் இருப்பின் படித்துப்பார்க்கவும்

கருத்துரையிடுக