திங்கள், 16 ஆகஸ்ட், 2010

பதின்மம்

எப்போதும் பதின்மர்கள் வேண்டும்
மரத்திலேறி காய் பறிக்க
சாமிக்கு முன் பந்தம் பிடிக்க
கயிறு கட்டி வரிசை மடக்க
சைக்கிளேறி செய்தி சேர்க்க
இன்ன பிறவுக்கும்...

தெருக் கடக்கும் எந்தப் பெண்ணும்
தப்பிப்பதேயில்லை
வலிக்காத கிண்டல்களிலும்
அலறாத சீட்டிகளிலிருந்தும்..

சிறார்களின் பெருமிதமும்
அக்காக்களின் அரவணைப்பும்
குன்ற விடுவதேயில்லை
குறுகுறுப்பை..

வீடு தெரியா நட்பு கொணரும்
காரணிகளாகும்
புகையும், பகையும்..

அரசாங்கத் தேர்வுகள்
அச்சுறுத்தினாலும்
ரெட்டைஜடை தாவணித்
துரத்தல்கள் குறைவதில்லை..

வாழ்வின் புரிதலில்
நுழையும் வாசல்களாகும்
பதின்மத்தின் கடைசிப்படிகள்..

                                                           

12 கருத்துகள்:

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

பிரமாதம்.. பதின்மத்தின் கூறுகள் ..

அதிலும் கடைசி புரிதல் அருமை ... பாராட்டுக்கள் தம்பி ,,

Jey சொன்னது…

பதிமத்தின் நினைவுகள் அருமை.

வெறும்பய சொன்னது…

வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது பதின்மத்தின் நினைவுகளை...

அருண் பிரசாத் சொன்னது…

பதின்மத்திற்கு என்னை கொண்டு சென்று விட்டீர்கள். வாழ்த்துக்கள்

தேவன் மாயம் சொன்னது…

பதின்மத்திலேயே இருக்க ஆசை!!

Balaji saravana சொன்னது…

@கே.ஆர்.பி.செந்தில்,
முதல் வாழ்த்துக்கு நன்றி அண்ணா!

@Jey
மறக்கவே முடியாத நினைவுகள்..
நன்றி Jey

@வெறும்பய
//வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது பதின்மத்தின் நினைவுகளை//
கண்டிப்பாக நண்பா, முடிந்த மட்டும் சொல்லியிருக்கிறேன்.
நன்றி.

@அருண் பிரசாத்
வாழ்த்துக்கு நன்றி அருண்.

@தேவன் மாயம்
வருகைக்கு நன்றி சார்!

Priya சொன்னது…

அழகான நாட்கள் அது!

//வாழ்வின் புரிதலில்
நுழையும் வாசல்களாகும்
பதின்மத்தின் கடைசிப்படிகள்.. //...நைஸ்!

Chitra சொன்னது…

அடடா...... அசத்தல்! பதின்ம காலத்தை, அசை போட்டு எழுதியது தெரிகிறது. நல்லா இருக்குதுங்க.

Balaji saravana சொன்னது…

@Priya,
வாங்க ப்ரியா! நன்றி.

@Chitra,
நன்றி சித்ரா!

சுடர்விழி சொன்னது…

பதின்ம காலத்தை அசை போட வைத்த கவிதை ...பாராட்டுக்கள்

பெயரில்லா சொன்னது…

// தெருக் கடக்கும் எந்தப் பெண்ணும்
தப்பிப்பதேயில்லை
வலிக்காத கிண்டல்களிலும்
அலறாத சீட்டிகளிலிருந்தும்.. //

அருமை, அருமை, நண்பா!!!

Balaji saravana சொன்னது…

@சுடர்விழி
//பதின்ம காலத்தை அசை போட வைத்த கவிதை//
சிறு முயற்சி!
நன்றி தோழி .

@மிதுன்,
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பா!

கருத்துரையிடுக