வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

அவலம்

சிவப்பின் காத்திருப்பில்
மெல்லிய குரல்..

'அண்ணா பூ வாங்கிக்கங்கண்ணா'

'வாங்கி என்ன செய்ய, வேண்டாம்மா'

'அண்ணிக்கு வாங்கிட்டுப்போங்கண்ணா'

'இன்னும் கல்யாணம் ஆகலம்மா'

'அம்மாக்கு வாங்கிக்குடுங்கண்ணா'

'அம்மா பூ வைக்க மாட்டாங்கம்மா'

'வீட்ல சாமி படத்துக்கு போடுங்கண்ணா'

'கடவுள் நம்பிக்கை இல்லம்மா'

'அக்கா தங்கச்சிக்கு   வாங்கிக்கங்கண்ணா'

'எல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுசும்மா'

'மொழம் பத்து ரூபாதாண்ணா வாங்கிக்கங்கண்ணா'

'வேணாம்மா, போ!'

முகம்கவிழ்ந்து பின் சென்றாள்
பச்சை கிடைத்ததும் 
வேகமெடுத்து முன்செல்ல
முகத்திலடித்தது  பூமணம்
அவளின் வறுமை வாசம் சேர்த்து...

                                                                       

9 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

நல்ல கவிதை நண்பா இப்படி பல பேருக்கு நடந்து இருக்கும் அப்படியே கவிதையா வந்து இருக்கு

Balaji saravana சொன்னது…

நன்றி நண்பா!

வெறும்பய சொன்னது…

நல்ல கவிதை நண்பரே அருமையாக சொல்லியிருக்கீங்க...

இராமசாமி கண்ணண் சொன்னது…

நல்லா இருக்குங்க :).. நிதர்சனம்

Balaji saravana சொன்னது…

@ வெறும்பய
நன்றி நண்பா

@ ராமசாமி கண்ணன்
நன்றி அண்ணா

ர‌கு சொன்னது…

உண்மைதான் ரூ.200 ம‌திப்புள்ள‌ ச‌ட்டையை ரூ.600 குடுத்து வாங்குவோம். ஆனா இவ‌ங்க‌கிட்ட‌ ப‌த்து ரூபாய்க்கு க‌ணக்கு பார்ப்போம்...ந‌ல்லா எழுதியிருக்கீங்க‌ பாலாஜி

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

நான் எப்போதும் பூ வாங்கியது இல்லை.. ஆனால் இந்தக் குரல் என் மனதை பிசைகிறது ...

Chitra சொன்னது…

முகத்திலடித்தது பூமணம்
அவளின் வறுமை வாசம் சேர்த்து...


.....யோசிக்க வைக்கவும், மனதை பிசைய வைக்கவும் செய்யும் ஆழமான வரிகள்.

Balaji saravana சொன்னது…

@ ரகு,
நீ சொல்வது முற்றிலும் உண்மை ரகு.
நன்றி நண்பா.

@ கே.ஆர்.பி.செந்தில்
நன்றி அண்ணா!

@ சித்ரா,
நன்றி அக்கா!

கருத்துரையிடுக